Friday 18 November 2016

தமிழர்களின் வறட்சி கால நீர் சேமிப்பு முறை..ஊருணி

தமிழனின் வறட்சி கால நீர் சேமிப்பு முறை...ஊருணி



இனி வரும் காலங்களில் வறட்சியை சமாளிக்க தமிழர்களின் பழமையான நீர் சேமிப்பு முறையை பரவலாக தமிழ்நாட்டில்  அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த  முற்படவேண்டும். 
தமிழ்நாட்டில் மழைப்பொழிவு குறைவான வறண்ட மாவட்டங்களிலும்  குறிப்பாக ராமநாதபுரம், மாவட்டத்தில் இப்பண்டைய கால நீர் சேமிப்பு முறை மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதன் பெயர் "ஊரணி" (ஊருணி)


#ஊருணி_நீர்நிறைந்_தற்றே_உலகவாம்
#பேரறி_வாளன்_திரு
(#குறள்-215)

The wealth that wise and kind do make is like water that fills like a lake  
(kural-215)
விளக்கம் :
(பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்)
 2000 வருடங்களுக்கு முன்பே ஐயன் வள்ளுவர் ஊருணியின் பெருமைபாடிவிட்டார் ...

ஊருணி_என்றால்_என்ன?


ஊருணி=ஊர்+உண்+இ
(ஊரார் நீர் உண்ணும் நிலை)
"ஊருணி" அல்லது "ஊரணி"

ஊரணி என்பது மழைப்பெழிவுக்காலங்களில் பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை தேக்க பொது வெளியில் குளம் போன்று
தோண்டி வறட்சி காலங்களில் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு  அமைப்பாகும். 
ஊருணி என்பது ஊறும் நிலத்தடி நீரைக் கொண்டதல்ல ,மழை நீரைக் கொண்டது. 
அதாவது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்(RAIN WATER HARVESTING) ஒரு பெரும் நிலப்பரப்பில் பொழியும் மழை நீரைச் சேமித்து ஊருணிக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதற்கு ஏற்றார்போல ஊருணி இருக்கும் இடத்தைத்  தேர்ந்தெடுக்கவேண்டும். மழை நீர் ஓடிவந்து சேரும் பாதைகளை உருவாக்கவேண்டும்.
 சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம்மழைநீர் சேகரிப்பு முறை கையாளப்பட்டு வருகிறது.
ஊருணியின் வடிவமைப்பானது அப்பகுதியின் மழை பொழிவின் அளவு, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த் தேவை இது  போன்ற விவரங்களை உள்ளடக்கியது அதை பொறுத்தே  அதன்  ஆழம், நீள, அகலங்கள்  வடிவமைக்க பட்டிருக்கும்
ஊருணியில் ஓரிடத்தில் கிணறு ஒன்றும் அமைக்கபட்டிருக்கும்  . மழைபொழிவு குறைவாக இருக்கும்போது ஊருணி வற்றிவிட்டாலும் அந்தக் கிணறிலிருந்து நீர் கிடைக்கும். 

வறட்சி காலங்களில்,  விளைநிலங்களுக்கான பாசனத்திற்கும் , மக்களின் குடிநீர் தட்டுப்பாடு போன்ற அத்தியாவசியமான பிரச்சினைகளுக்கும், மேலும் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க என பல்வகை நோக்கிற்காக உருவாக்கப்பட்டவை, 
அவற்றில் பல இன்று கைவிடப்பட்டும், பயன்படுத்த இயலாத நிலையிலும் உள்ளன.
முறையாக அமைக்கப்பட்ட இந்த ஊரணிகள்  பருவமழை காலங்களில் மழைநீர்  சேகரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஏதுவானதாகிறது. 
இதனால்  விளைநிலங்களுக்கு , நீர் பாசனத்திற்கான செலவும், குடிநீருக்காக அவதிகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீருக்காக  பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஊரணியிலிருந்து எடுக்கப்படும் நீரானது கலங்களாகவும் சற்று சேறு கலந்ததுமாக இருக்கும்இதை சுத்தப்படுத்தவும் இயற்கையான வழியே கையாளப்பட்டு வருகிறது,




மண்பானையில்  #தேத்தாங்கொட்டை (#strychnos_potatorum)
கொண்டு பானையின் உட்புறம் தேய்கப்பட்டு நீர் நிரப்பப்படும் சில மணி நேரங்களுக்குள் பயன்பாட்டுக்கு ஏதுவான தெளிவான நீர் கிடைக்கபெறும்.

ஆனால் தற்போது இராமநாதபுரம் போன்று சில மாவட்டங்களில்  மானியம் வழங்கப்படுவதால், நவீன மயத்து டன் அவர்அவர் தேவைக்கு  ஏற்ப சிறிய அளவிலான நீர் சேமிப்பு கிடங்கு அமைத்து கொள்கின்றனர்.


இதே போன்று இந்தியாவில்  வறட்சியான இடங்களிஇல் நீர் பற்றாக்குறையை சமாளிக்க பல வழிகள் கையாளப்பட்டு வருகிறது 



மேலும் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும்
 நீர் நிலைகள் பல 

அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
கடல் (Sea) - சமுத்திரம்.
கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
கால் (Channel) - நீரோடும் வழி.
கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.


கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம்.ஆவி என்றும் கூறப்படும்.
பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.





இயற்கையைப் பாதுகாப்பதில் நமது மூதாதையர்களுக்கு முரணாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். 
அனைவரும் தனி மனித ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் , இயற்கை மீதான ஒரு விழிப்புணர்வு, ஒரு பற்று,ஒரு ஆர்வம்  அனைவருக்கும் வேண்டும்,
வளத்தை அழித்து, தமக்குச் சொந்தம் அற்ற நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோமானாவை எனத் தெரிந்துகொண்டும், பலர் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர். இயற்கையை உதாசீனப்படுத்தத் தொடங்கியதிலிருந்து ஏராளமான அழிவுகளை நாம் சந்தித்தும், அவற்றிலிருந்து 
நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவே இல்லை. 
இயற்கையாகக் கிடைத்த ஏராளமான செல்வங்களை  இழந்து விட்டோம்......


 நீரை சேமிப்போம்..!! 
சுற்றுச்சூழலைக் காப்போம்…!!! 
வரும் தலைமுறைக்கு வளமான
 சூழலைத் உருவாக்குவோம்.!!!
இயற்கையை போற்றுவோம் .


ka6thikkn


Saturday 22 October 2016

பெர்முடா முக்கோணம் வரலாறு (HISTORY OF BERMUDA TRIANGLE)

பெர்முடா முக்கோணம்  வரலாறு

 (HISTORY OF BERMUDA TRIANGLE) 


பொதுவாக, விமான விபத்துகள் ஏற்படப் பல காரணங்கள் உண்டு. விமானத்தில் எரிபொருள் தீர்ந்துபோவது, இயந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்படுவது, நடுவானில் மற்றொரு விமானத்தின் மீது மோதிவிடுவது, நடுவழியில் மலை அல்லது உயரமான கட்டிடங்கள் மீது மோதுவது, விமானி தூங்கிவிடுவது, விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டளைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விபத்தில் சிக்குவது, புயல் - மழையில் சிக்குவது, பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வெடிவைத்துத் தகர்க்கப்படுவது என்று பல காரணங்களைப் பட்டியலிடலாம். ஆனால், விபத்து ஏன் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமாக எதுவுமே கிடைக்காமல் - ஏன் விமானமே சிக்காமல் - நடந்த விபத்துகள் பல உண்டு. , விமானங்கள் மட்டுமல்ல பல கப்பல்களும் இதனுள் அடக்கம் அப்படி விடுவிக்கப்படாத மர்மங்களுள் ஒன்று தான் இந்த  பெர்முடா முக்கோணம் (BERMUDA TRIANGLE) (சாத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) பெர்முடா முக்கோணம் (BERMUDA TRIANGLE) (சாத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வடஅட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு தளர்வாக வரையறுக்கப்பட்டப் பகுதி, அங்கே நிறைய வானூர்திகளும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

 அமெரிக்க கடற்படையின் படி, இம்முக்கோணம் இல்லை என்றும் பெயர் புவியியல் பெயர்கள் அமெரிக்க வாரியம் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர் களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்
நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிறைய அதிகாரப்பூர்வ முகவாண்மைகளும் பதிவு செய்துள்ளன
இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; இன்னும் சிலர் அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கின்றனர். புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒர் இடம்; [சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு ஆகியவை தான் பல பிரபலமான எழுத்துப் படைப்புகளில் முக்கோண எல்லைகளாக குறிப்பிடப்படுகின்றன. விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது.
இந்தப் பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாகஅமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன. பொழுதுபொக்கு வானூர்திகள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு நிறைய வர்த்தக மற்றும் தனியார் வானூர்திகள் செல்கின்றன.
முக்கோணக் கதையின் வரலாறு

முக்கோண சிந்தனையை எழுத்தில் வெளிப்படுத்திய பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை என்றால் ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட செய்தியைத்தான் குறிப்பிட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பின், ஃபேட் இதழ் 'நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது.பல வானூர்திகள் மற்றும் கப்பல்கள் தொலைந்து போனதை இஃது எழுதியிருந்தது. பிளைட் 19 என்னும் அமெரிக்க கடற்படையின் குண்டு வீசும் ஐந்து வானூர்திகள் கொண்ட ஒரு கூட்டம் ஒரு பயிற்சி நடவடிக்கையின்போது தொலைந்து போனதும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது
                                      
. இப்போது மறைவுகள் நிகழும் பிரபலமான முக்கோணப் பகுதிக்கு வரைபடமிட்டது சாண்டின் கட்டுரைதான்.அமெரிக்கன் லெஜன் இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட் 19 பற்றிய செய்தியை மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது."நாங்கள் இப்போது எங்கிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை" என்று வானூர்தி ஓட்டி கூறியதாக அச்செய்தி தெரிவித்தது. கப்பற்படை விசாரணைக் குழுவின் அதிகாரிகள் வானூர்திகள் "செவ்வாய்க்கு பறந்து போனதாய்" கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டுரை தான் பிளைட் 19 காணாமல் போன சம்பவத்துடன் அமானுட விஷயங்களை இணைத்து எழுதப்பட்ட முதல் கட்டுரை. ஆனால் வின்சென்ட் காடிஸ் என்கிற மற்றுமொரு ஆசிரியர் 1964 பிப்ரவரியில் அர்கோசிஇதழில் எழுதும்போது தான், பிளைட் 19 காணாமல் போனதை பிற மர்மமான தொலைதல்களுடன் இணைத்து அவற்றை "மரண பெர்முடா முக்கோணம்" (ஆரம்பத்தில் தலைப்பு நம்பிக்கையிழக்கச் செய்யும் நீர்ப்பரப்பு என்கிற வகையில் இருந்தது) என்னும் ஈர்க்கும் தலைப்பின் கீழ் எழுதினார்.அடுத்த ஆண்டில் அந்த கட்டுரையை விரிவுபடுத்தி, கண்ணுக்குத் தெரியாத வெளிகள் , என்னும் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் ஒன்று எழுதினார்.ஜான் வாலஸ் ஸ்பென்சர் (லிம்போ ஆஃப் தி லாஸ்ட் , 1969); சார்லஸ் பெர்லிட்ஸ் (தி பெர்முடா டிரையாங்கிள் , 1974);ரிச்சார்டு ஒயினர் (தி டெவில்'ஸ் டிரையாங்கிள், 1974),ஆகியோரின் மற்ற பல படைப்புகளும் வெளியாயின. எல்லாமே எக்கெர்டினால் கோடிட்டுக் காட்டப்பட்ட அதே அமானுட விஷயங்களில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டன.
அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு நூலகரும் தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்டரி: சால்வ்டு (1975) புத்தக ஆசிரியருமான லாரன்ஸ் டேவிட் குசெ தான் இந்த போக்கினை மறுதலித்தார். குசெவின் ஆய்வு பெர்லிட்ஸ் பதிவுகளுக்கும் ஆரம்ப சம்பவங்களில் பார்த்தவர்கள், இருந்தவர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களிடம் இருந்தான கூற்றுகளுக்கும் இடையில் இருந்த எண்ணற்ற துல்லியமின்மைகளையும், குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது. 

பல சம்பவங்களில் தொடர்புபட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்படாமல் போனதை குசெ சுட்டிக் காட்டினார். உலகம் சுற்றும் படகுப்பயணியான டொனால்டு குரோஹர்ஸ்ட் தொலைந்து போன சம்பவத்தை இதற்கொரு உதாரணமாய் காட்டினார். இச்சம்பவத்தை பெர்லிட்ஸ் ஒரு மர்மம் என கூறியிருக்க, இதற்கு மாறான உண்மைக்கு தெளிவான சான்று இருந்தது. மற்றுமொரு உதாரணம், அட்லாண்டிக் துறைமுகத்தில் இருந்து தாது-கப்பல் ஒன்று மூன்று நாட்கள் அடையாளமின்றி தொலைந்து போனதாக பெர்லிட்ஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் பசிபிக் கடலில் இருந்து அதே பெயரிலான கப்பல் ஒரு துறைமுகத்தில் இருந்து மூன்று நாட்கள் சுவடில்லாமல் தொலைந்திருந்தது. முக்கோணத்தின் மர்மத்திற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவங்களில் பெரும் சதவீதம் அதற்கு வெகு வெளியே நிகழ்ந்தவை என்றும் குசெ வாதிட்டார். பல சமயங்களில் அவரது ஆராய்ச்சி எளிமையானது. சம்பவம் நடந்த தேதிகளில் வெளியான பொதுவான செய்தித்தாள்களை பார்ப்பார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை போன்ற பொருத்தமான நிகழ்வுகளை, வாகனங்கள் தொலைந்த கதைகளில் குறிப்பிடாதவற்றை கண்டறிவார்.
குசெ இவ்வாறு முடிவுக்கு வந்தார்:
·         ஒப்பீட்டளவில் பார்த்தால், கடலின் வேறு எந்த பகுதியினையும் விட இந்த பகுதியில் தொலைந்து போகும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு பெரியது அல்ல.
·         வெப்பமண்டல புயல்கள் அதிகமாக நிகழும் ஒரு பகுதியில், நிகழ்ந்திருக்கக் கூடிய தொலைதல்களின் எண்ணிக்கை வரம்புகடந்ததாகவும் இல்லை, மர்மமானதாகவும் இல்லை; தவிர, பெர்லிட்ஸ் மற்றும் பிற ஆசிரியர்கள் இத்தகைய புயல்கள் குறித்து குறிப்பிடக் கூட பலசமயங்களில் தவறுகின்றனர்.
·         எண்ணிக்கையே துல்லியமற்ற ஆய்வு மூலம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. ஒரு படகு காணாமல் போனதாக தகவல் வந்தால் பதிவாகும், ஆனால் அது கடைசியில் (தாமதமாக) துறைமுகத்திற்கு திரும்பியிருந்தால் அது பதிவு செய்யப்படாமல் போயிருக்கும்.
·         சில சம்பவங்கள் உண்மையில் நிகழவேயில்லை. புளோரிடாவின் டேடோனா கடற்கரையில் 1937 ஆம் ஆண்டு ஒரு விமான விபத்து நூற்றுக்கணக்கானோர் பார்க்க நிகழ்ந்ததாக கூறப்பட்டது; ஆனால் உள்ளூர் செய்தித்தாள்களைப் பார்த்தால் அப்படி எதுவுமேயில்லை.
·         பெர்முடா முக்கோணத்தின் புராணம் என்பது ஒரு கட்டுக்கதையான மர்மம்....இது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ தவறான கருத்துகள், பிழையான காரணங்கள், மற்றும் பரபரப்பு ஏற்படுத்தும் எழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்திய கட்டுரை ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்

பெர்முடா முக்கோணம் குறித்து பல சந்தேகங்கள்


"தி பெர்முடா டிரையாங்கிள்" என்னும் ஜான் சிம்மன்ஸ் தயாரித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெர்முடா முக்கோண பகுதியில் அசாதாரணமான பெரும் எண்ணிக்கையில் கப்பல்கள் மூழ்கினவா என்று கடல் காப்பீடு நிறுவனமான லாயிட்'ஸ் ஆஃப் லண்டன் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. லாயிட்'ஸ் ஆப் லண்டன், அங்கு பெரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் மூழ்கியிருக்கவில்லை என்று கண்டறிந்தது.
அமெரிக்க கடலோரக் காவல்படையின் பதிவுகள் அவர்களது முடிவை உறுதிப்படுத்துகின்றன. உண்மையில், இந்த பகுதியில் வழக்கமாகச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் காணாமல் போனதாகக் கூறப்படும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதாகும்
கடலோரக் காவல்படையும் அதிகாரப்பூர்வமாக இந்த முக்கோணம் குறித்து பல சந்தேகங்கள் கொண்டுள்ளது. முக்கோணம் குறித்து எழுதும் ஆசிரியர்களால் எழுதப்பட்ட பல சம்பவங்களுக்கு முரண்படுகிற பல ஆவணத் தொகுப்புகளை தங்களின் விசாரணைகள் மூலம் சேகரித்து, வெளியிடுவதாகவும் அது தெரிவிக்கிறது. 1972 ஆம் ஆண்டில் மெக்சிகோ வளைகுடாவில் வி.ஏ.ஃபாக் என்னும் கப்பல் வெடித்து மூழ்கிய இத்தகையதொரு சம்பவத்தில், கடலோரக் காவல்படை இந்த சிதறல்களை படம் பிடித்ததோடு பல உடல்களையும் மீட்டது ஒரு முக்கோணக் கதை ஆசிரியரோ, தனது அறையில் ஒரு காபி கோப்பையுடன் அமர்ந்திருந்த கேப்டன் தவிர மற்றவர்கள் மாயமானதாகக் கூறியிருந்தார்.
பிபிசி தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தி கேஸ் ஆஃப் பெர்முடா டிரையாங்கிள் என்னும் அத்தியாயத்தில் இது குறித்து மிகவும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது. "நாங்கள் உண்மையான மூலங்களுக்கு அல்லது சம்பந்தப்பட்ட மக்களிடம் போனால், மர்மம் கரைந்து போய் விடுகிறது. விஞ்ஞானம் முக்கோணம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை ஏனென்றால் முதலில் இந்த கேள்விகளே உண்மையானதல்ல. ...உலகின் மற்ற எங்கும் போலத்தான் இங்கும் கப்பல்களும் விமானங்களும் செயல்படுகின்றன."
எர்னஸ்ட் டேவ்ஸ் மற்றும் பேரி சிங்கர் ஆகிய ஆய்வாளர்கள், மர்மங்களும் அமானுடங்களும் எவ்வளவு பிரபலமானவையாகவும் ஆதாயமளிப்பவையாகவும் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். பெர்முடா முக்கோணம் போன்ற தலைப்புகளில் ஏராளமான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. அமானுடத்திற்கு ஆதரவான சில விஷயங்கள் பல சமயங்களில் தவறாக வழிநடத்துகின்றன அல்லது துல்லியமற்றவையாக இருக்கின்றன, இருப்பினும் அதன் உற்பத்தியாளர்கள் அதனை தொடர்ந்து சந்தைப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களால் நிரூபிக்க முடிந்தது. அதற்கேற்றாற்போல, சந்தையும் முக்கோண மர்மத்தை ஆதரிக்கும் புத்தகங்கள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு சாதகமாக இருக்கிறது, சந்தேகம் எழுப்பும் நல்ல ஆய்வு விடயங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக, இப்பிராந்தியத்தின் எந்த நிலப்பரப்பில் செல்லும் வாகனங்களும் அல்லது நபர்களும் காணாமல் போனதற்கு எந்த சான்றும் இல்லை. முக்கோணத்திற்குள் அமைந்திருக்கும் ஃப்ரீபோர்ட் நகரம் ஒரு பெரும் கப்பல்துறைமுகத்தையும் வருடத்திற்கு 50,000 விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையத்தையும் கையாள்கிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிகழ்வுகளை விளக்குவதற்காக முக்கோணம் குறித்த எழுத்தாளர்கள் ஏராளமான அமானுட கருத்துகளை பயன்படுத்தியுள்ளனர். புராணவகை தொலைந்த கண்டமான அட்லாண்டிஸில் இருந்து எஞ்சியிருக்கும் நுட்பம் தான் இது என்று ஒரு விளக்கம் கூறுகிறது. சிலசமயம், பஹாமாஸில் பிமினி தீவில் உள்ள பிமினி பாதை என்று அழைக்கப்படும் கடலுக்கடியிலான பாறை உருவாக்கம் அட்லாண்டிஸ் கதையுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இந்த பகுதி சில வரையறைகளின்படி முக்கோணத்திற்குள் அமைகிறது. ஆவியூடாடும் எட்கர் கெய்ஸின் கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அட்லாண்டிஸ் ஆதாரம் 1968 ஆம் ஆண்டு கண்டறியப்படும் என்று அவர் கணித்துக் கூறியது, பிமினி பாதையின் கண்டுபிடிப்பைத் தான் குறித்ததாகக் கொண்டனர். நம்புபவர்கள் இதனை ஒரு பாதை, சுவர் அல்லது வேறு கட்டமைப்பின் உருவாக்கம் என்று சொல்கிறார்கள், ஆயினும் மண்ணியல் ஆய்வாளர்கள் இதனை இயற்கையாக அமைந்தது என்கிறார்கள்.
பிற எழுத்தாளர்கள் இந்த நிகழ்வுகளுக்கு வெளிக்கிரகவாசிகளை காரணம் காட்டுகிறார்கள். இந்த கருத்தினை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது அறிவியல் புனைவுத் திரைப்படமான 'க்ளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃப் தி தேர்டு கைன்ட்'' என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தினார்.
புகழ்பெற்ற மொழியியலாளரும் அமானுட நிகழ்வுகள் குறித்த பல்வேறு புத்தகங்களின் ஆசிரியருமான சார்லஸ் பெர்லிட்ஸ், இந்த அசாதாரண விளக்கத்துடன் உடன்பட்டார். முக்கோணப் பகுதியில் நிகழும் தொலைதல்களுக்கு அமானுட அல்லது விளக்கமுடியாத சக்திகள் தான் காரணம் என்று அவர் கூறினார்.

பல முக்கோண நிகழ்வுகளில் கூறப்படும் பதப் பிரயோகங்களில் ஒன்று திசைகாட்டி பிரச்சினைகள். அசாதாரணமான காந்த அலைகள் இப்பகுதியில் இருக்கலாம் என்று சிலர் சித்தாந்தப்படுத்தினாலும்,அத்தகைய அலைகள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை. காந்த துருவங்களுடன் தொடர்புபட்ட இயல்பான காந்த மாறுபாடுகளை மட்டும் திசைகாட்டிகள் கொண்டுள்ளன. உதாரணமாக, அமெரிக்காவில் காந்த (திசைகாட்டி) வடக்கும் புவியியல்ரீதியான (உண்மையான) வடக்கும் எங்கு ஒன்றாக அமைந்திருக்கிறது என்றால் விஸ்கோன்சின் தொடங்கி மெக்சிகோ வளைகுடா வரையிலான ஒரு கோட்டிலுள்ள இடங்களில்தான். கடல்பயணதாரர்களுக்கு இது பல நூற்றாண்டுகளாகத் தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு அந்த அளவு பொதுஅறிவு இருக்காது என்பதால், அவர்கள் முக்கோணம் போன்ற ஒரு பெரும் பகுதியில் திசைகாட்டி "மாறுவதில்" ஏதோ மர்மம் இருப்பதாக நினைக்கிறார்கள்.

திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள் இரண்டு வகையாக இருக்கலாம்: போர் நடவடிக்கைகள், கடற்கொள்ளை நடவடிக்கைகள். எதிரிகளின் பதிவுக் குறிப்புகள் பல சம்பவங்களின் போது சோதிக்கப்பட்டிருக்கின்றன; பல கப்பல்கள் மூழ்கியதற்கு உலகப் போர்களின் போதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்கள் காரணமாகக் கூறப்பட்டு பல்வேறு உத்தரவு பதிவுப் புத்தகங்களில் ஆவணப்பட்டிருக்கின்றன. இந்த வகையினதாகக் கூறப்படும் இன்னும் பல சம்பவங்களுக்கான காரணங்கள் நிரூபிக்கப்படாதவை.

ஒரு கப்பல் அல்லது சிறு படகை நடுக்கடலில் முற்றுகையிட்டு கொள்ளையிடுவது தான் கடற்கொள்ளை என்று வரையறுக்கப்படுகிறது. இது இன்று வரை நடந்து வரும் ஒரு நடவடிக்கையாகும். சரக்கு திருடும் கடற்கொள்ளை மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மிகவும் சாதாரணமாக நிகழ்கிறது. அதே சமயத்தில் மருந்து கடத்தல்காரர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு சொகுசுப் படகுகளை கடத்துகிறார்கள். கரீபியனில் ஊழியர்கள் மற்றும் படகுகள் கடத்தலிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். கரீபியன் பகுதியில் கடற்கொள்ளை என்பது சுமார் 1560கள் தொடங்கி 1760கள் வரை சாதாரண நிகழ்வுகளாக இருந்தது. எட்வர்டு டீச் பிளாக்பேர்டு மற்றும் ஜீன் லபிதே ஆகியோர் பிரபல கடற்கொள்ளையர்களில் அடங்குவர்.
வளைகுடா நீரோடை என்பது மெக்சிகோ வளைகுடாவில் தோன்றி, பின் புளோரிடா நீரிணைப்பு வழியாக, வட அட்லாண்டிக் கடல் வரை செல்லும் கடல் ஓடையாகும். இது கடலுக்குள் இருக்கும் ஒரு ஆறு போன்றது. ஒரு ஆறு போலவே, இது மிதக்கும் பொருட்களை சுமந்து செல்கிறது. சிறு விமானம் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் படகு எந்திரக் கோளாறினால் நின்று விட்டாலோ அது தெரிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து நீரோடை வழியே சுமந்து செல்லப்படும். இது தான் விட்ச்கிராஃப்டு படகுக்கு டிசம்பர் 22, 1967 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. கடற்கரையில் இருந்து ஒரு மைல் (1.6 கிமீ) தூரத்தில் மியாமி மிதவை குறியீடு அருகே இப்படகு பழுதடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடலோரக் காவல்படை கப்பல் அங்கு சென்றபோது அது அந்த இடத்தில் இல்லை.
விமானம் அல்லது கப்பல் காணாமல் போவதற்கு அதிகாரப்பூர்வ விசாரணைகளின் போது கூறப்படும் காரணங்களில் மிக அதிகமானது மனிதத் தவறாகும்.வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, மனிதர்கள் தவறு செய்வார்கள் என்பது அறிந்ததே. இது பெரும் துயரச் சம்பவத்தில் சென்று முடிகிறது. இதற்கு பெர்முடா முக்கோணப் பகுதி இழப்புகள் விதிவிலக்கல்ல. உதாரணமாக 
வி.ஏ.ஃபாக் 1972 ஆம் ஆண்டில் தொலைந்து போனதற்கு ஆவியாகும் பென்ஸின்|பென்சீன் கழிவை சுத்தப்படுத்துவதற்கு முறையான பயிற்சி இல்லாதிருந்ததை கடலோரக் காவல் படை ஒரு காரணமாக சுட்டிக் காட்டியது  வர்த்தக அதிபரான ஹார்வே கனோவர் தனது பயணப் படகான ரெவோனோகை இழந்ததற்கு மனிதப் பிடிவாதமும் காரணமாய் இருந்திருக்கலாம், ஏனென்றால் அவர் தெற்கு புளோரிடாவில் ஜனவரி 1, 1958 அன்று புயலின் விளிம்பில் படகைச் செலுத்திக் கொண்டிருந்தார். ஆய்வு செய்வதற்கு உடைந்த வாகனம் கிடைக்காது போய்விடுவதால் பல இழப்புகள் இன்னும் தீர்மானத்திற்கு வர முடியாததாகவே தொடர்கின்றன. இது பல அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் காட்டப்படும் ஒரு உண்மையாகும். 

              

வெப்ப மண்டலச் சூறாவளிகள் வெப்பமண்டல கடல் பகுதியில் பரவலாய்க் காணப்படும் சக்திவாய்ந்த புயல்களாகும். இது ஆயிரக்கணக்கான உயிர்களின் இழப்பிற்கும் பில்லியன்கணக்கான டாலர்கள் சேதாரத்திற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. 1502 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கோ டி போபடில்லாவின் ஸ்பெயின் குழுக் கப்பல்கள் மூழ்கியது தான் சூறாவளிப் பேரழிவின் முதல் பதிவு செய்யப்பட்ட சம்பவம். இந்த புயல்கள் கடந்த காலத்தில் முக்கோணம் தொடர்பான ஏராளமான சம்பவங்களுக்கும் காரணமாய் அமைந்திருக்கின்றன.

மீத்தேன் ஹைட்ரேட்டுகள் METHANE HYDRATES

சில தொலைதல்களுக்கான விளக்கம் கரையோரப் பகுதி அடுக்குகளில் பரந்த மீத்தேன் ஹைட்ரேட் (இயற்கை எரிவாயுவின் ஒரு வடிவம்) மீது மையம் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், நீரின் அடர்த்தியை குறைப்பதினால் குமிழிகள் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு கொண்ட கப்பலை மூழ்கச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து எழும் எந்த உடைந்த பாகங்களும் துரிதமாக வளைகுடா நீரோடையால் சிதறச் செய்யப்படுகின்றன. திடீர் மீத்தேன் வெடிப்புகள் (சில சமயங்களில் "சேறு எரிமலைகள்" என அழைக்கப்படுகின்றன) கப்பல்கள் மிதப்பதற்கு தேவையான மிதவைத் தன்மையை வழங்க முடியாத சகதி நீர் பிராந்தியங்களை உருவாக்கலாம் என்கிற ஒரு அனுமானம் வைக்கப்படுகிறது. இது உண்மையாய் இருந்தால், ஒரு கப்பலை சுற்றி உருவாகும் இத்தகையதொரு பகுதி கப்பல் வெகு துரிதமாக எச்சரிக்கையின்றி மூழ்கக் காரணமாகி விடும்.

அமெரிக்க நிலவியல் துறை ஆய்வு வெளியீடுகள், கடலுக்கடியான ஹைட்ரேட்டுகள் உலகெங்கிலும் பெரும் சேகரங்களாக இருப்பதாக கூறுகிறது. தென்கிழக்கு அமெரிக்க கடற்கரையை ஒட்டிய ப்ளேக் ரிட்ஜ் பகுதியிலும் இச்சேகரங்கள் மிகுதியாய் காணப்படுகின்றன. ஆயினும், பெர்முடா முக்கோணப் பகுதியில் கடந்த 15,000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுகளின் பெரும் வெளியீடுகள் எதுவும் இருந்ததாக விபரமில்லை என்று அவர்களது ஆய்வறிக்கைகளில் இன்னொன்று தெரிவிக்கிறது.


கடலுக்கடியில் மீத்தேன் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ள மற்ற பகுதிகளில் பெர்முடா முக்கோணம் போன்ற சம்பவங்கள் நிகழவில்லை என்பதும், நீருக்கடியிலான எரிவாயு குமிழிகள் விமானங்கள் மறைந்து போனதற்குக் காரணமாக முடியாது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
உலகின் பல கடல்களில், முரட்டு அலைகள் கப்பல்கள் மூழ்குவதற்கும் எண்ணெய் கப்பல்கள் கவிழ்வதற்கும் காரணமாய் அமைந்துள்ளன.இந்த அலைகள் மர்மமானவையாக கருதப்படுவதோடு சமீப காலம் வரை ஒரு மூடநம்பிக்கையாகவும் கருதப்பட்டு வந்தது.ஆயினும், முரட்டு அலைகள் காணாமல் போன விமானத்திற்கு காரணமாக முடியாது

முக்கோணப் பகுதிக்குள் நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிடப்படும் சில குறிப்பிடத்தக்க சம்பவங்கள்

பிளைட்-19 (FLIGHT-19)


பிளைட் 19 என்பது குண்டு வீசும் விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும். இது டிசம்பர் 5, 1945 அன்று அட்லாண்டிக் மீது பறக்கையில் மறைந்து போனது. போர்க்கப்பலில் இருந்தான விமான பாதை, கிழக்கே 120 மைல், வடக்கே 73 மைல்கள் பின் மீண்டும் இறுதியாக 120 மைல் பயணத்தில் கடற்படை தளத்திற்கு திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவை திரும்பவில்லை. விமானம் அசாதாரண நிகழ்வை சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக் காட்டியதாகவும், விமானம் பறந்தது ஒரு அமைதியான நாளில் அனுபவப்பட்ட விமானியான லெப்டினென்ட். சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. "புரியாத காரணங்கள் அல்லது விளைவுகளால்" நிகழ்ந்ததாக கடற்படை அறிக்கை இந்த விபத்து குறித்து கூறுவது குழப்பத்தை அதிகப்படுத்துவதாக இருக்கிறது. டெய்லரின் தாய் தனது மகனின் மரியாதையைக் காப்பாற்றுவதற்காகவே, அவர்களை "புரியாத காரணங்கள்" என்று எழுதச் செய்ததாக நம்பப்படுகிறது. உண்மையில் டெய்லர் அவர் இருந்ததாக நினைத்த இடத்தில் இருந்து வடமேற்கில் 50 கிமீ தூரத்தில் இருந்தார்.

இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன கப்பலுக்கு உதவ 13 பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கான கப்பல்படை விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்குப் பின் அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை. பின்னர், புளோரிடா கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்தவர்கள் இந்த விமானம் ரோந்தில் இருந்திருக்கக் கூடிய அந்த தருணத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததை கண்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் இந்த கதையில் அடிப்படை உண்மைகள் துல்லியமானவையாக இருக்கின்றன, ஆனால் முக்கியமான சில விவரங்கள் இல்லாமலிருக்கின்றன. சம்பவம் நடந்து முடிந்த சமயம் காலநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது.

அத்துடன் டெய்லருக்கும் பிளைட் 19 விமானக் கூட்டத்தின் பிற விமானிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் குறித்த கடற்படை அறிக்கைகள் மற்றும் எழுதப்பட்ட பதிவுகள் காந்தப் பிரச்சினைகள் இருந்ததாய் சுட்டிக் காட்டவில்லை.

மேரி செலஸ்டி MARY CELESTE

1872 ஆம் ஆண்டில் 282 டன்கள் எடை கொண்ட இருதூண்கப்பல் மேரி செலஸ்டி மர்மமான முறையில் தொலைந்து போனது. பல சமயங்களில் இச்சம்பவம் தவறாக முக்கோணத்துடன் இணைத்துக் கூறப்படுகிறது. கப்பல் போர்ச்சுகல் கடலோரத்தில் தொலைந்திருந்தது. இந்த சம்பவம் அநேகமாக மேரி செலஸ்டி என்னும் அதே பெயரிலான 207 டன் துடுப்புக் கப்பல் 1864 ஆம் ஆண்டில் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று பெர்முடா கடலோரத்தில் தரை தட்டி பின் விரைவாக நீருக்குள் மூழ்கிய சம்பவத்துடன் குழப்பப்பட்டிருக்கலாம்
இந்த சம்பவம் குறித்த பல "உண்மைகள்" உண்மையில் மேரி செலஸ்டி என்னும் ஆர்தர் கோனான் டாயிலின் "ஜே. ஹபகுக் ஜெப்சனின் வாக்குமூலம்" (உண்மையான மேரி செலஸ்டி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கற்பனை சேர்க்கப்பட்டது) என்னும் சிறுகதையில் வரும் கற்பனைக் கப்பலில் இருந்து உதித்தவை என்று குசெ குறிப்பிடுகிறார்.

எலன் ஆஸ்டின்( ELLEN AUSTIN)

1881 ஆம் ஆண்டில் எலன் ஆஸ்டின் ஒரு அநாதையாக வந்த கப்பலைக் கண்டார். அதில் மீட்பு ஊழியர்களை நிறுத்தி, அதனுடன் சேர்ந்து நியூயார்க் வர முயற்சி செய்தார். இந்த அநாதைக் கப்பல் திரும்பவும் மீட்பு ஊழியர்கள் இன்றி தோன்றியதாகவும், திரும்பவும் இரண்டாவது முறையாக மீட்பு ஊழியர்களுடன் காணாமல் போனதாகவும் சிலர் விவரிக்கின்றனர்.

யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ் (USS CYCLOPS)

அமெரிக்க கடற்படை வரலாற்றில் போர் சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. 1918, மார்ச் 4 ஆம் தேதிக்கு பிந்தையதொரு காலத்தில் பார்படோஸ் தீவுகளில் இருந்து கிளம்பிய யுஎஸ்எஸ் "சைக்ளோப்ஸ்" என்னும் கப்பல் ஒரு சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் காணாமல் போனது. எந்த ஒரு ஒற்றை கருத்திற்கும் வலுவான ஆதாரமில்லை எனினும், பல்வேறு சுதந்திரமான கருத்துகள் உலவுகின்றன. சிலர் புயல் காரணம் என்கிறார்கள், சிலர் எடையால் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்த இழப்புக்கு போர்க்கால எதிரி நடவடிக்கை தான் காரணம் என்கிறார்கள்.


தியோடோசியா பர் அல்ஸ்டான்

தியோடோசியா பர் அல்ஸ்டான் என்பது முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியான ஆரான் பர்ரின் மகளாவார். அவர் காணாமல் போனதுடன் முக்கோணத்திற்கு தொடர்பு இருப்பதாய் சில சமயங்களில் கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டிசம்பர் 30, 1812 அன்று சென்ற பேட்ரியாட் கப்பலில் அவர் ஒரு பயணியாக இருந்தார். அதற்குப் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. கடற்கொள்ளை மற்றும் 1812 ஆம் ஆண்டுப் போர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று காரணமாய் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே போல் முக்கோணத்திற்கு நன்கு வெளியே டெக்சாஸ் பகுதியில் அவர் இருந்ததாகக் கூறப்படும் ஒரு கருத்தும் நிலவுகிறது.

ஸ்ப்ரே (S.V SPRAY)

எஸ்.வி. ''ஸ்ப்ரே என்னும் ஒரு அநாதையாய் நின்ற மீன்பிடி படகினை கடல் பயணக் கப்பலாக மாற்றிய ஜோஸ்வா ஸ்லோகம் என்பவர், அதனை 1895 மற்றும் 1898 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதல்முறையாய் உலகெங்கும் தனியாளாக சுற்றிவரும் தனது சாதனை முயற்சியை நிறைவு செய்யப் பயன்படுத்தினார்.
1909 ஆம் ஆண்டில், ஸ்லோகம் வினியார்டு ஹேவனில் இருந்து வெனிசூலாவுக்கு பயணத்தை துவக்கினார். அவரையும் சரி ஸ்ப்ரேயையும் சரி அதற்குப் பின் காணவில்லை.
அவர்கள் காணாமல் போன போது பெர்முடா முக்கோண பகுதியில் இருந்தார்கள் என்பதற்கோ, அல்லது அமானுட நடவடிக்கை இருந்ததற்கோ சான்று எதுவும் இல்லை.

கரோல் ஏ. டீரிங்

1919 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஐந்து கலக்கூம்புகள் கொண்ட பாய்மரக் கப்பலான கரோல் ஏ. டீரிங் வடக்கு கரோலினாவின் கேப் ஹட்டராஸ் அருகே ஜனவரி 31, 1921 வாக்கில் அநாதையாய் முழுக்க தரை தட்டிக் கிடந்தது. அந்த சமயத்தின் வதந்திகளும் இன்ன பிறவும் டீரிங் கடற்கொள்ளைக்கு பலியாகி இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டின. மருந்துக் கடத்தல் தடை சமயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்பட்டதுடன் இச்சம்பவத்திற்கு தொடர்புபட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அத்துடன் ஏறக்குறைய அதே சமயத்தில் காணாமல் போன எஸ்.எஸ்.ஹெவிட் என்னும் இன்னொரு கப்பலுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன.

ஸ்டென்டெக் STANDEC

ஆர்ஜென்டீனாவின் போனஸ் அயர்ஸ் நகரிலிருந்து சிலியில் உள்ள சான்டியாகோ விமான நிலையத்துக்கு 1947 ஆகஸ்ட் 2-ல் ரெஜினால்ட் குக் ஒரு விமானத்தை ஓட்டிச்சென்றார். ஆண்டீஸ் மலைத் தொடரின் மீது பறந்த அந்த விமானம், சான்டியாகோ போய்ச் சேரவே இல்லை. ஆனால், விமானி ‘மோர்ஸ் கோட்’ என்ற தந்தி மொழியில் ‘ஸ்டென்டெக்’ (STENDEC) என்றொரு தகவலை அனுப்பினார். அதற்கு என்ன பொருள் என்று இன்றுவரை வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றனர். நாசவேலையால் விமானம் வெடித்தது என்றும் வேற்றுக்கிரகவாசிகள் தாக்கிவிட்டார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள். பனிப் பொழிவுகளின் ஊடே பறந்தபோது, பனிக்கட்டிகள் அதை அழுத்தி மலையில் புதைத்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்கப்பட்டது.
டக்ளஸ் டிசி-3

டிசம்பர் 28, 1948 அன்று, டக்ளஸ் டிசி-3 விமானம் ஒன்று பூர்டோ ரிகோவின் சான் ஜூவானில் இருந்து மியாமி நோக்கி பறந்து செல்கையில் மறைந்து போனது. விமானம் அல்லது அதில் பயணித்த 32 பேர் குறித்த எந்த சுவடும் அதற்குப் பின் கிடைக்கவில்லை. பயணிகள் விமானத்துறை வாரிய விசாரணையில் இருந்து தொகுக்கப்பட்ட ஆவணத்தில், விமானம் காணாமல் போனதற்கான ஒரு சாத்தியமுள்ள குறிப்பு கிடைத்தது. ஆனால் இது முக்கோண எழுத்தாளர்களால் அதிகம் தொடப்படவில்லை. சான் ஜூவானில் இருக்கும் போது விமானத்தின் மின்கலங்கள் சோதிக்கப்பட்டபோது அவை மின்னூட்டம் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் மறுமின்னூட்டம் செய்யாமலேயே மீண்டும் விமானத்தில் கொண்டு வைக்க விமான ஓட்டி உத்தரவிட்டார். இது ஒருவேளை முழுமையான மின்சார துண்டிப்புக்கு இட்டுச் சென்றதா இல்லையா என்பது ஒருபோதும் அறியப்படாதது.

ஸ்டார் டைகர் மற்றும் ஸ்டார் ஏரியல்

அசோரஸின் சான்டா மரியா விமான தளத்திலிருந்து பெர்முடாவுக்கு 1948 ஜனவரி 30-ல் ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகருக்கு  புறப்பட்ட அந்த விமானத்தில், இரண்டாவது உலகப் போரில் தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் சர் ஆர்தர் கானிங்காம் உள்பட 25 பயணிகள் அதில் இருந்தனர். அப்போது பருவநிலை சரியாக இல்லாததால், பலத்த காற்றில் சிக்கிவிடாமல் இருக்கக் குறைந்த உயரத்தில் பறந்து செல்ல முடிவுசெய்யப்பட்டது. இந்த விமானத்துக்கு வழிகாட்டி விமானம் ஒன்றும் முன்னால் பறந்தது. சுமார் 12 மணி நேரம் பறக்க வேண்டிய நீண்ட பயணம் அது. பின்னால் சென்ற விமானம் பாதையைவிட்டு விலகிப் பறந்தது. பெர்முடா செல்வதற்கு முன்னதாக பெருங்காற்றில் சிக்கியது. காணாமல் போனது. வழிகாட்டி விமானம் போய்ச் சேர்ந்துவிட்டது. பின்னால் சென்ற விமானத்தின் சிதைவுகளைக் கூடக் காணவில்லை.
இதேபோல, பெர்முடாவிலிருந்து ஜமைக்காவுக்கு 1949 ஜனவரி 17-ல் புறப்பட்டது அந்த விமானம். புறப்பட்டபோது நீலவானில் எந்த மழை மேகமும் இல்லை. காற்றிலும் ஏதும் கோளாறு இல்லை. விமானம் எந்தத் தொல்லையும் இல்லாமல்தான் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களுக்கெல்லாம் விமான நிலையங்களுடன் தொடர்புகொள்வதில் அடுத்தடுத்துப் பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. 20 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் எங்கே போனது, என்ன ஆனது என்று எவருக்குமே தெரியவில்லை. சுமார் ஒரு வார காலம் தேடிப்பார்த்துவிட்டு, தன் முயற்சியைக் கைவிட்டது  இரண்டுமே தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் இயக்கிய ஒரே ரக பயணிகள் விமானங்கள் ஆகும்.
பெர்முடாவில் 1948,1949-ல் நடந்த இரு விபத்துகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டு விமானங்களுமே பி.எஸ்.ஏ.ஏ. நிறுவனத் தயாரிப்புகள். “போர்ப் பயிற்சி பெற்ற ஒரு நாசக்காரரே இந்த இரு விபத்துகளுக்கும் காரணம். இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர வேண்டாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார்” என்று பி.எஸ்.ஏ.ஏ. நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டான் பென்னட் குற்றம்சாட்டினார். இதிலும் மர்மம் விலகவில்லை.

எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன்

எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன் என்னும் முன்பு கந்தகம் சுமந்து இப்போது எண்ணெய் சுமந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று புளோரிடா பாதைகள் அருகே 39 ஊழியர்களுடன் தொலைந்து போனது. 1963, பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு அதில் இருந்து எந்த தகவலும் இல்லை.மரைன் சல்பர் குவீன் தான் வின்சென்ட் கேடிஸ் 1964 ஆம் ஆண்டில் எழுதிய அர்கோசி இதழ் கட்டுரை[யில் குறிப்பிடப்பட்ட முதல் வாகனம் ஆகும். ஆனால் அவர் அதில் "காணமுடியாத இடத்திற்கு சென்று விட்டது" என்று விட்டு விட்டார். ஆனால் கடலோரக் காவல் படையின் அறிக்கை கப்பல் மோசமாகப் பராமரிக்கப்பட்ட வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது என்பதோடு, அது கடலுக்குள் செல்ல உகந்த கப்பல் அல்ல என்பதால் கடலுக்குள்ளேயே சென்றிருக்கக் கூடாது என்று அறிவித்தது.

ரய்ஃபுகு மரு

முக்கோணப் பகுதியில் 1921 ஆம் ஆண்டில் மிகப் பிரபல சம்பவம் ஒன்று நிகழ்ந்தது (சிலர் அதற்கு சில வருடங்கள் கழித்து என்கிறார்கள்). ஜப்பானிய கப்பலான ரய்ஃபுகு மரு (சிலர் இதனை ரய்குகே மரு என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள்) அப்படியே அனைத்து பாகங்களும் மொத்தமாக மூழ்கிவிட உள்ளே சென்று விட்டது. முன்னதாக அது "கத்திக்கூம்பு போல் இப்போது அபாயம் தெரிகிறது, விரைவாய் உதவிக்கு வாருங்கள்!" என்பது போன்ற அபாய சமிக்ஞை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. "கத்திக்கூம்பு" என்பது அநேகமாக நீரலைக் கூம்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. உண்மையில், கப்பல் முக்கோணப் பகுதிக்கு அருகிலேயே இல்லை. அத்துடன் "கத்திக்கூம்பு" என்கிற வார்த்தையும் கப்பலின் அபாய சமிக்ஞையில் இல்லை.

கன்னிமரா IV

1955, செப்டம்பர் 26 அன்று பெர்முடாவின் தெற்கே அட்லாண்டிக் பகுதியில் ஒரு சொகுசுப் படகு கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. கடலில் இருந்த சமயத்தில் மூன்று சூறாவளிகள் தாக்கியும் படகு தப்பித்துக் கொண்டது, ஆனால் அதில் இருந்த ஊழியர்கள் மாயமாகி விட்டார்கள் என்று இந்த சம்பவக் கதைகளில் பொதுவாகக் கூறப்படுகிறது  1955 ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளி பருவ பட்டியல்களோ ஆகஸ்டு இறுதிவாக்கில் பெர்முடா அருகில் "எடித்" என்னும் ஒரே ஒரு புயல் மட்டுமே வந்ததாகக் குறிப்பிடுகிறது. மற்ற புயல்களில் "புளோரா" கிழக்கே வெகு தொலைவில் வந்தது, "கேதி" படகு மீட்கப்பட்ட பின் தான் வந்தது."எடித்" இந்த படகை கட்டுப்பாடிழந்து கடலுக்குள் போகச் செய்ய நேர்ந்த சமயத்தில் கன்னிமரா IV காலியாகத் தான் இருந்தது. துறைமுகத்தில் தான் நின்று கொண்டிருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது


பொதுவாக, இப்படிப்பட்ட விபத்துகளின்போது நம்பக்கூடியதும் நம்ப முடியாததுமாகப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று, வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் ஒருபுறமிருந்தாலும், இன்னும் மர்ம விமான விபத்துகள் தொடர்வதன் மூலம் நமக்குச் சுட்டிக்காட்டப்படுவது ஓர் உண்மையைத்தான். தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறிவிட்டதாக நாம் கூறிக்கொண்டாலும், அதன் போதாமை உள்ள வெற்றிடம் இன்னும் பெரியதாக இருக்கிறது என்பதே அந்த உண்மை!
 இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் 
விலகியதாக தகவல்!.


பெர்முடா பகுதியில் மாயமாகி வரும் விமானங்கள், கப்பல்கள் குறித்த மர்மத்திற்கு, விஞ்ஞானிகள் தற்போது விடை கண்டுபிடித்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது 
என்ன காரணம் என்ற ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.


இந்நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தி வந்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை அவிழ்த்து உள்ளனர். இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில் நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர்.

இது குறித்து ஸ்டீவ் மில்லர் என்ற கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் கூறுகையில், “பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பெரும்பாலான நேரம் மேகங்கள் சீரற்ற நிலையில் பரவி இருக்கும்.

ரேடார் செயற்கைக் கோளை பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் என்ன நடக்கிறது என ஆய்வு செய்யபட்டது. அப்போது கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படும் காற்று வெடி வெடிகுண்டுகள், [Air bombs] போல் கடல் மட்டத்தில் இருந்து மேல் எழும்பி மீண்டும் கடலை நோக்கி கீழே விழுகிறது” என்றார்.



எனவே, இந்த காற்று வெடிகுண்டுகளால்தான் அப்பகுதியில் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
 KARTHIKKN

Ads Inside Post