Saturday 11 June 2016

திருவாரூர் -ஆழித்தேர்

திருவாரூர் -ஆழித்தேர்


தேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் 
அடுத்த வார்த்தை என்ன ?
 சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர் பார்க்கணுமேநாலு யானை உயரம்அவ்வளவு பிரம்மாண்டம் என்றெல்லாம் சொல்வார்கள்நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்றால் இல்லை நிறைய பேர் சொல்லி கேள்விதான் என்று எதற்க்காக கடவுளை தேரில் எடுத்து வருகின்றனர்வேறு வாகனங்கள் இல்லையாதிருவாரூர் தேரின் சிறப்பம்சம் என்னஅப்படி என்ன ஆச்சர்யம் அதில்இன்றைய அதன் நிலை என்ன....... என்றெல்லாம் மனதில் எழும் கேள்விகள் தமிழர்களின் கலாசாரத்தின் மேல் மதிப்பையும்மரியாதையையும் கொண்டு வநம்
திருவாரூர்சோழர்களின் ஐந்து தலைநகரங்களில் (உறையூர்பழையாறைதஞ்சாவூர்கங்கை கொண்ட சோழபுரம்ஒன்றுமுதலாம் குலோத்துங்க சோழன் இங்குதான் ஆட்சி செய்தான்சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜாமுத்துசாமி தீட்சிதர்ஸ்யாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் இது ! திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறதுஇதன் பெயர் காரணம் தெரிய வேண்டும் என்றால்...... திருவாரூர் = திரு+ஆரூர் 
திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் 
ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது
என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியதுதிருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம் என்பது...... திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டுவரம் பெற்று
 திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (திருவாரூர் 
திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.
தமிழில் "தேர்என்று வழங்கப்பெறும் சொல் வடமொழியில் "இரதம்என்று அழைக்கப்படுகிறதுதேர் என்ற சொல் தமிழில் "உயர்ந்தஎன்ற பொருளைக் குறிக்கும்இரும்பினால் ஆக்கப்பட்டதும்எளிதிற் செல்லத்தக்க உருளைகளையுடையதும்பரியங்க இருக்கையுடையதும்தாமே தூக்கி அசையத்தக்க படிகளையுடையதும்நடுவமைந்த இருக்கையில் 
அமர்ந்து நடத்தத்தக்க தேர்ப்பாகனையுடையதும்அம்புவாள் முதலிய போர்க்கருவிகளையுடையதுமான நடுவிடத்தையுடையதும்விரும்பியதும்விரும்பிய வண்ணம் நிழலைச் செய்வதும்அழகுமிக்கதும் சிறந்த 
குதிரைகளையுடையதுமானது "தேர்என்றும் , பல சக்கரங்கள்ஆர்,
 தட்டுபார்கொடிஞ்சிகூம்புகிடுகுமுதலிய உறுப்புகளால் ஆக்கப்பட்டு இரண்டு முதல் பல குதிரைகளால் இழுக்கப்படுவது "இரதம்என்றும் பொருள் விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி. "இரதம்என்ற சொல்லிற்குப் புணர்ச்சிதேர்பல்சாறுஅன்னரசம்சுவைஇனிமைவாயூறு நீர்வண்டுபாதரசம்இரசலிங்கம்பாவனைஅரைஞாண்மாமரம்கால்உடல்வஞ்சி மரம்வாகனம்எழுதுவகைஅனுராகம்நீர்வலிநஞ்சுஇத்திஏழுவகைத் தாதுக்களில் ஒன்று என்ற 25 வகைப் பொருட்களைத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறதுதேர் என்பது 
"உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச்
செல்லப்படும் கோபுரம் போன்ற மேல் அமைப்பையும்பெய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்என விளக்கம் தருகிறது கியாவின் தற்காலத் தமிழ் அகராதிதிருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும்இதனை 'ஆழித்தேர்என்று அழைக்கின்றனர்.

எந்தவிதமான நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் பிரமாண்டமான கோவில்களும்தேர்களும் மனித உழைப்பினால் மட்டுமே அமைக்கப்பட்டனஅப்போது செய்யப்பட்ட தேர்களில்  மிகப்பெரியது திருவாரூர் தேர்ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள்அதனால் தான் கடலை ஆழி என்கிறார்கள்சுனாமியை ஆழிப் பேரலை என்கிறார்கள்பரந்து விரிந்த பிரமாண்டமான தேராக இயந்திர உதவிஇல்லாமல் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வீதிவலம் வர பல நாட்கள் ஆகும். 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆழித்தேர் வித்தகனை என்று திருநாவுக்கரசர்  தேவாரத்தில் பாடியுள்ளார்.  அத்தகைய சிறப்புடையது திருவாரூர் 
தேர்.அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடிவிமானம் 12 அடிதேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும்தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . இரும்பு அச்சுக்கள்சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும்சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றனதிருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள்சக்கரங்கள்மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டனஇரும்புக் கயிறுஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவைவடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை.
ஊர் பெருமைதேர் என்றால் என்னதிருவாரூர் தேர் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள்ஆனால் ஏன் தேரில் இறைவனை வலம் வர செய்ய வேண்டும் ? இறைவனின் மூலவிக்கிரகம் எழுந்தருளியிருக்கிற இடம்மூலஸ்தானம் அல்லது கருஅறை என்று சொல்லுவார்கள்கர்ப்பகிரஹம் என்கிற பெயராலும் அழைப்பர்மூலவரின் எழுந்தருளித் திருமேனி (விழாக்காலத்தில் பவனி வருபவர்தான் உற்சவர்உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழாதேர் கோயிலின் கருவறை போன்றே தேரும் உபபீடம்அதிட்டானம்பாதம்விமானம் போன்ற உறுப்புகளால்   அமைந்திருப்பதால் "கோயிலின் மறுவடிவம்என்றும், "நகரும் கோயில்என்றும் அழைக்கப்படுகிறது.  இத்தேர் சதுரம்அறுகோணம்பதின்கோணம்பன்னிரண்டுகோணம்வட்டம்நீள்வட்டம்
நீள்சதுரம்எண்கோணம்முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் 
அமைக்கப்படுகிறது.தேர்அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள்அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள்தோரணங்கள் முதலியவற்றால் அலங்கக்கப்பட்டிருக்கும்தேரினை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என மானசாரமும்விட்டுணு தத்துவ சம்கிருதையும் இலக்கணம் வகுத்திருக்கின்றனமானசாரம் தேரின் அமைப்பு முறையையும்அதில் படிமங்கள் அமையவேண்டிய இடங்களையும் வரையறை செய்கின்றதுவிட்டுணு தத்துவ சம்கிருதை "இரத நிர்மாணப்படலம்முழுவதும் தேர் செய்யும் நியதிகளை விளக்குகிறதுதேர் செய்ய உறுதியும் வலிமையும் கொண்ட இலுப்பை மரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இறைவன் திருவீதி உலா வரும் வாகனமாகத் திகழும் தேர்சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறதுஒவ்வொரு கோயில்களிலும் உள்ள தேர்களில் அந்தத் திருத்தலத்தின் புராணச் செய்திகளுடன் தொடர்புடைய திருவுருவங்கள் சிற்பமாக இடம்பெறுகின்றனமானசாரம் என்ற நூல் தேரில் 
இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம்யானைமுதலைபூதகணம்யக்சிநாகம்பிரம்மாவிஷ்ணுசண்முகன்சரஸ்வதிகணபதிதுர்க்கைதேவதைசிறு தெய்வங்கள்அரசன்அர்ச்சகர்கள்பிராமணர்பக்தர்கள்துவாரபாலகர்கின்னரர்நாகர்கருடன் போன்றவற்றைக் கூறுகிறதுதேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள்குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும்வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளனசில தேர்களில் சைவம்வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளனதமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும்சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும்தேரின் அச்சுப் பகுதியில் கணபதிமுருகன்பூத கணங்கள் 
ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும்அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர்தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும்மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும்சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும்தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள்இசைக் கருவிகளை 
மீட்டுவோர்அட்டதிக் பாலகர்கள்கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.



1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 
திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியதுஇது இன்று நாம் காணும் தேராகும்பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம்
 நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம்
 தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் 
தொடங்கியதுபல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறதுஇது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறதுஇந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும்சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது
சுமார் 24 மீட்டர் கொண்ட நான்கு மிகப் பெரிய வடங்கள் தேரை இழுக்க பயன்படுத்தப்படுகின்றனசில ஆண்டுகளுக்கு முன் வரைதேரிழுக்கதிருவாரூருக்கு அருகில் உள்ள வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலையிலிருந்து ஆட்களை அழைத்து வரப்படுவார்கள்நவீனயுகத்தில்பெல் நிறுவன பொறியாளர்களின் மேற்பார்வையில் ஹைட்ராலிக் முறைகள் பொருத்தப் பட்டுமுன்னால் இரண்டு புல்டோசர்கள் இழுக்கபின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள்ஒரு காலத்தில் மனித சக்தியால் இழுக்கப் பட்ட தேரை நிலைக்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனதாம்
ஆழித் தேரின் சிறப்பம்சம்வளைவுகளில் திரும்புவதுஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு தேர் திரும்புவதை காண்பது கண் கொள்ளாக் 
காட்சி
தேர் சக்கரங்களுக்கு அடியில் கிரீஸ் தடவப்பட்ட மிகப் பெரிய இரும்பு தகடுகளை வைத்துநின்ற நிலையிலேயே (முன் நகராமல்தேர் திரும்புவதை வெளி நாட்டவர்களும் கண்டு வியப்பார்கள்தேர் திரும்பும்  
ஒரு வேளை தேர் பாதையிலிருந்து விலகி சென்று விட்டால்தேரின் பாதையை மாற்ற லாரி மற்றும் ட்ராக்டர்களில் ஸ்லீப்பர்
கட்டைகள் மற்றும் முட்டு கட்டைகள் கூடவே கொண்டுவரப்படும்.
அஸ்தத்தில் கொடியேற்றிஆயில்யத்தில் தேரோட்டிஉத்திரத்தில் தீர்த்தம்” என்பது 27 நாட்கள் நடைபெறும் திருவாரூர் பங்குனி உத்திர திருவிழாவின் சாராம்சம்அதாவது மாசி மாதம் (பிப்ரவரிஅஸ்த நட்சித்தரமன்று கொடியேற்றிபங்குனி (மார்ச் இறுதி/ஏப்ரல் முதல் வாரம்ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் ஒட்டிபங்குனி உத்திர நட்சத்திரன்று சுவாமி தீர்த்தம் கொடுப்பது ஐதீகம்.
தியாகேசர்ஆழித் தேருக்கு எழுந்தருளுவதற்க்கு முன்னால்தேவாசரிய மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்க்கு கொண்டு வரப்படுவார்அங்கிருந்து தேரோட்ட தினத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தேருக்கு கொண்டுவரப்படுவார்முறைப்படி எல்லாம் நடந்தால்அடுத்த ஒரு வாரத்திற்க்குள்சுவாமி யதாஸ்தானம் வரவேண்டும்பணம் சம்பாதிக்கும் கும்பல்கள தங்கள் வேலையை காட்ட தொடங்கியதன் விளைவுகடந்த சில ஆண்டுகளாக எல்லாம் மாறி போய்விட்டது.
தொண்ணூறுகளின் இறுதிவரை ஐதீக முறைப்படி நடைபெற்று வந்த பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆழித் தேரோட்ட திருவிழாஅதற்க்குப் பின்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைக்கு மாறி அவர்களுக்கு ஏற்ற நாட்களில்அவர்களுக்கு ஏற்றார் போல் நடத்தப்படும் சடங்காக மாறிப் போனதுதான் சோகம்.
கடந்த பல ஆண்டுகளாகவேதேரோட்டத் திருவிழாகுறிப்பிட்ட பங்குனி ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடைபெறுவது இல்லைபள்ளி/கல்லூரி தேர்வு சமயமாக இருப்பதால்திருவிழாவை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்அதுவரை சுவாமிஆயிரங்கால் மண்டபத்தில் மாதக் கணக்கில் தேவுடு காக்க வேண்டிவரும்.
பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாகப் போகக் கூடாது என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் கிடையாதுஅப்படி அக்கறை ஏதாவது இருந்தால் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மட்டார்கள் அல்லவாஇதை விட பல்லாயிரம் மக்கள் கூடும் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில்தான் நடக்கும் என்பது குறிப்பிடதக்கதுபள்ளி நாட்களில் நடத்தினால் திருவிழாக் கூட்டம் குறைந்துஅவர்களுக்கு வருமானம் இல்லையாம்.
இந்து அமைப்புகள் மட்டும் ஐதீக முறைப்படி குறிப்பிட்ட நாளில் தான் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று போராடி வருகிறார்கள்ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில்இந்து அமைப்புகள்தாங்களே செலவு செய்து சப்பரம் போன்ற ஒன்றை இழுத்து வருவார்கள்அரசு நிர்வாகம் தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகித்துஅவர்க்ளை ராஜ வீதிகளில் வரவிடாமல் செய்யும்இந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது.
அடுத்ததுதேரோட்டத்திற்க்கு நாள் குறித்துவிட்டுதேரை முன்னதாகவே கட்டி வைத்து விட்டுசுவாமியை தேருக்கு கொண்டு வந்து 
ஒரு வாரம் பத்து நாட்கள் வைத்துபார்வையாளர்களை தேரில் 
ஏறவைத்து அதற்க்கு கட்டணம் வசூலித்து காசு பார்த்து 
கொண்டிருக்கிறார்கள்.
ஆழித் தேரோட்டம் நடைபெறும் நாட்கள் சகலவிதமான பொருட்களும் கிடைக்கும் திருவிழா வியாபாரம்பெரிய கோவிலின் நான்காம் பிரகாரத்தில் (ஆயிரங்கால் மண்டபத்தின் முன்கொடி கட்டி பறக்கும்.
இத்தனைக்கும் தியாகேசப் பெருமான் ஒன்றும் பஞ்சபராரி அல்லபல கோடி ரூபாய் சொத்து உள்ளதமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒன்றுகோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தனஇன்று என்னவானது என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம்சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால் நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது.

 திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் வரும் 16ம் தேதி நடைபெறுவதையொட்டி சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நடந்ததுதிருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்கதாகவும்சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் தியாகராஜ சுவாமி கோயில் திகழ்கிறதுஇக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரியதுதேரில் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2010ம் ஆண்டிற்கு பின்னர் தேரோட்டம் நடைபெறவில்லைதேரை புதுப்பிப்பதற்காக கடந்த திமுக ஆட்சி காலத்தில் ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டதுநான்கரை ஆண்டுகள் வரை கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் துவங்கி முடிவடைந்ததுகடந்தாண்டு அக்டோபர் 26ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடந்ததுவரும் 16ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளதுஇக்கோயிலுக்கு சொந்தமான 
சண்டிகேஸ்வரர் தேர் ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிதாக செய்யப்பட்டுள்ளதுவரும் 16ம் தேதி காலை 7.30மணிக்கு சுவாதி நட்சத்திரம்மிதுன லக்னத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதுவரும் 15ம் தேதி காலை 6மணிக்கு விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேரோட்டம் நடக்க உள்ளதுகடந்த 8 ஆம் தேதி புதன்கிழமை காலை தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்து முடிந்தது. . திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்தேர் கீழவீதிதெற்குவீதி உள்பட 
முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது
மேலும் விநாயகா தேர் மற்றும் சுப்ரமணியர் தேரோட்டம் வரும் 15 ம் 
தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்ளும்,
ஆழித்தேர்மறுநாள்  16ம் தேதி காலை 7.30மணிக்கு சுவாதி நட்சத்திரம்மிதுன லக்னத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது.
அம்பாள் தேர்,சண்டிகேஸ்வரர் தேர் ஆழித்தேர் வடம் பிடிக்கப்படும்.
தெப்பத் திருவிழா வரும் ஜூலை மாதம் 2,3 மற்றும் 4 ஆம் தேதி என
 மூன்று நாட்களும் இரவு 7 மணி முதல் தெப்பத் திருவிழா நடைபெறுகிறதுநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசு துறை அலுவலர்களுக்கு பல்வேறு பணிகள் 
ஒதுக்கப்பட்டு  முன்னேற் பாடுகள் நடைபெற்று வருகிறது .

கார்த்திகேயன்

No comments:

Post a Comment

Ads Inside Post