Tuesday 21 June 2016

இன்று சர்வதேச யோகா தினம் ( யோகா என்றால் என்ன?- ஒரு அலசல் ,பார்வை)

யோகா ஒரு மெய்யுணர்வு: இன்று சர்வதேச யோகா தினம்:


சர்வதேச யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் 
(சூன் 21 - JUNE-21) ஆம் நாள் கொண்டாடப்படும் என  ஐக்கியநாடுகள் அவை  அறிவித்துள்ளது

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.
2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது
முதல்முறையாக ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காகஇந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்குஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்


யோகா என்றால் என்ன?- ஒரு அலசல் ,பார்வை




யோகா என்றால் என்ன? - சித்தர் பார்வை

 

யோகா என்பது இணைதல் ,சேர்த்தல் , கூடல் என்று பொருள்படும் . அதிர்ஷ்டம் அல்லது சிறு முயற்சியில் பெரிய பலன் பெறல் என்று அர்த்தம் . உபாயம் என்று கூறுவார்கள் .
இன்று உலகம் முழுவதும் பலவித யோகா பின்பற்றப்படுகிறது .
அவை 


  • பக்தியோகம் 
  • கர்மயோகம் 
  • ஹட யோகம் . 
அஷ்டாங்க யோகம் அல்லது வாசி யோகம் அல்லது குண்டலியோகம் அல்லது ராஜ யோகம் அல்லது கிரியா யோகம் அல்லது லய யோகம் .

  • புத்தமத விபாசன 
  • ஜைனர்களின் யோகா 
  • சுபியிசம் 
  • சன்னி தியானம்
  • கிறிஸ்தவ தியானம் 
  • சீக்கியர் யோகமுறை . 
  • சக்கர தியானம்
இந்த யோகா முறைகளில் மதம் சாராது பிரபஞ்சம முழுவதும் மனித குலத்திற்கு நன்மை தரும் யோகா முறை தமிழ்ச் சித்தர்களின் அஷ்டா ங்க யோகம் என்ற வாசி யோகம் .
வாசியோகம் 
இறைவன் ஓம் என்ற பெருவெடிப்பாக வெடித்தான் . அப்பொழுது அகர , உகார , மகார, நாத, விந்து என்ற பஞ்ச வித்துகள் உருவாகின . அதில் மண் , நீர் , நெருப்பு , காற்று ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள் உருவானது . பஞ்ச பூதங்களால் இந்த பிரபஞ்சம் உருவானது. அதில் நான்குவகை யோனி வழியாக ஏழு வகை உயிர் இனங்கள் தோன்றின . அதில் மனிதன் 96 தத்துவங்களுடன் இறைவனின் மாறுபட்ட உருவாக தோன்றினான். இவை அனைத்து இணைப்புகளால் உருவானது . இதை இது இறைவனின் யோக மாயை என்பார்கள் .
மனிதனாகப் பிறந்தவர், தன்னுள் இருக்கும் இறைவனை அறிந்து, மீண்டும் இறைவனோடு இணைதல் மனிதப்பிறவியின் முடிவு . இதுவே முக்தி , மோட்சம் , ஞானம் . இந்தத் தொழில் நுட்பத்தைச் சொல்லுவது அஷ்டாங்க யோகம் . இதன் பிற பெயர்கள் வாசியோகம் ,குண்டலினி யோகம் , ராஜா யோகம் . இதனைச் சிறிது மாற்றிச் செய்வது கிரியா யோகம் . வாசியோகத்தின் உயர் நிலை சிவயோகம் அல்லது சிவராஜ யோகம் அல்லது சிவத்தவம் . இதன் பகுதி மௌன யோகம் , சாக்கிய யோகம் அல்லது உயிரின் சித்து . 
அடிப்படை வாசியோகம் இந்த வலைத் தலத்தில்"யோகாபழகு" என்னும் பகுதியில் கட்டணம் இன்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது
இந்த யோகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் : 
காயசித்தி என்ற இளமையுடன் வாழும் நீண்ட ஆயுள்.

நோய்கள் நீங்கப்பட்ட உடல் .
அளப்பரிய ஆற்றல் 
அமானுஷ்ய சக்திகள் . அஷ்டமா சிததிகள் 
தானே இறைவன் போல் படைத்தல் , காத்தல் , அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்கள் செய்தல் . 
உலகவாழ்வில் கிடைப்பது :
அனைத்து செல்வங்கள் பெறல் .
இல்லற வாழ்வில் வெற்றி 
தொழில் வெற்றி . 
மன அமைதி, மனஅழுத்தம் நீங்கல் 

முடிவு எடுக்கும் திறன் .
நீதி நிலைநாட்டல் 
அறிவுக் கூர்மை . 
உயர் ஞாபக சக்தி 
மக்களை ஈர்த்தல் 
செல்வாக்கு பெறல் 
முயற்சியில் வெற்றி 
எதிரியை வெல்லல்


வாசி யோகம் சார்ந்த பிற யோகம்

பரியங்க யோகம் = ஆணும் பெண்ணும் சேருதல் . 
சூரிய யோகம் = சூரியனுடன் சேர்ந்து சூரிய சக்தி பெறல் . 
சந்திர யோகம் = சந்திரனுடன் சேர்ந்து சந்திர சக்தி பெறல் . 

மௌனயோகம் =மனிதன் பிரபஞ்ச வெளியில் இருக்கும் இறைவனோடு இணைதல் 
சாக்கிய யோகம் = மூச்சுக் காற்றை வெளிவிடாமல், சுவாசத்தை தன்னுள் நிறுத்தி சமாதி நிலை அடைதல் . இதுவே உயிரின் சித்து .
 
SURYA NAMASKAR
SURYA NAMASKAR

யோகா என்றால் என்ன? -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

காலத்தின் உள்ளிருந்து மீண்டும் எழுவதற்கு யோகா ஒரு முழுமையான பயன்பாட்டுக் கருவி. மிகவிரைவான இன்றைய வாழ்வியலில் மிக அதிக அளவு மக்கள் தங்களது ஆழ்ந்த கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றனர். வாழ்க்கையில் இதற்கு மேல் ஏதேனும் 
இருக்கிறதா? வாழ்க்கையின் நோக்கம் என்ன? உண்மையில் வெற்றி என்பது என்ன?
 
இவற்றுக்கெல்லாம் விடை காண்பது எளிதல்ல. அவ்வாறு கண்டறிந்தாலும் அவற்றினை திருப்தியுடன் ஒருவர் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவற்றுக்கெல்லாம் நிலையான விடை இருந்தால், மொத்த விஷயமுமே இந்நேரம் முடிந்திருக்கும்.
 
இக்கேள்விகள் அனைத்தும், ஒருவர்மிக கவனமாக மீண்டும் மீண்டும்உள் நோக்கிச் செல்ல வழிவகுக்கும் ஒரு பாதையாகும்.மருத்துவ முறை பல்வேறு தரப்பு மக்களுக்கும் ஆறுதலைத்தரும் யோகா, காலச்சோதனையை வென்ற பழமையான இந்திய மருத்துவ முறையாகும். 35 ஆண்டுகளுக்குமுன்னர் வாழும் கலை துவங்கப்பெற்ற போது, ஹிப்பிகளால் மட்டுமே பின்தொடரப் பட்டயோகா இன்று பெருமளவில் பிரபலமாகியுள்ளது. அனைத்துக் கண்டங்களிலும் கோடிக்கணக்கான மக்களால் இன்று யோகப் பயிற்சி செய்யப் படுகிறது. மாறிக்கொண்டிருக்கும் இன்றைய உலகமக்களின் விருப்பதேர்விற்கு ஏற்றபடி தன்னை பொருத்தியமைத்து கொள்ள துவங்கியது. இது, ஆச்சாரமான நாடுகளில் கூட உலகளாவிய மற்றும் மதச்சார்பற்ற சான்றுகளை நிறுவி, பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றில் ஈடுபாடுள்ள மக்களும் யோகப் பயிற்சிசெய்ய உதவியுள்ளது.
தத்துவம் யோகாவின் ஆரோக்கிய தத்துவம் அதன்எட்டு உறுப்புக்களைச் சுற்றி அமைந்திருக்கின்றது. துரதிருஷ்டவசமாக, மக்கள் அவற்றை எட்டு படிகள், ஒன்றன்பின்
  ஒன்றாகத் தான் செய்யவேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்தஉறுப்புக்கள் வரிசை முறையில் இல்லை; அவை முழுமையின் பகுதிகள் ஆகும். இந்தஎட்டு 
உறுப்புக்களும் ஒரு நாற்காலியில் உள்ள நான்கு கால்கள் போன்றவை. 

ஒருகாலை இழுத்தால், முழுநாற்காலியும் நகரும். யோகாசனம் முக்கியம் தான் என்றாலும், பிராணயாமம், தியானம் இன்றி யோகா இல்லை. ஒருசிறிய 
அளவிலான தியானம் ஒருவரது வாழ்க்கையையே மாற்றப் போதுமானதாகும்.சிறைகளில் நடைபெறும் நமது பயிற்சித்திட்டங்களில் இதைப் பார்த்திருக்கிறேன். தியான அனுபவத்தைப் பெற்ற கைதிகளின் முழு சிந்தனை, செயல்முறை, மற்றும் நடத்தை முறை மாற்றம் அடையும். அவர்கள் பழிவாங்கும் உணர்வு, மற்றும்கோபம் ஆகியவற்றை எளிதாகக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமாக சமூகத்திற்கு பங்களிக்க விரும்பும் அகிம்சை பாதையில்வரத் துவங்குவர்.
 
தியானம் (6வதுஉறுப்பு) யாமங்கள் (1வது உறுப்பு )மற்றும் நியமங்கள் (2வதுஉறுப்பு ) இவையிணைந்து ஒருவரது வாழ்க்கையில் வெளிப்படுகிறது. யோகா மூலம், மக்கள் மன அழுத்தம், பதட்டம், பணிக்களைப்பு, போதைக்கு அடிமையாதல், துாக்கமின்மை போன்ற பல நோய்களிலிருந்து நிவாரணம் அடைந்திருக்கின்றனர்.
சக்தி வாய்ந்த கருவி உலக மக்களுக்கு யோகா ஒரு சக்திவாய்ந்த கருவி. எனவே ஆதாரபூர்வமான அதை முன்வைக்கவும், மற்றும் தவறான கருத்துக்களை அகற்றவும் உதவுவதற்காக நமக்கு தகுந்தஆசிரியர்கள் வேண்டும். முழுமையான அதன் துாய வடிவில் உள்ள யோகா, நவீன வாழ்க்கையின் அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணத்தைஆராய்ந்து அகற்ற முடியும் என்னும் ஞானத் திறனைக் கொண்டிருக்கிறது.
இன்று மிகப் பெரிய நோய்களில் ஒன்று மன அழுத்தம். மிககுறைந்த நேரத்தில் அதிகமாக. பணிச்சுமையை ஏற்கும் போது மன அழுத்தம் ஏற்படுகிறது. பணியைக் குறைப்பதும் நேரத்தை அதிகரிப்பதும் சாத்தியமற்றவை. எனவே நமக்கு உள்ள ஆற்றல் நிலையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. யோகாகுறைந்தபட்ச நேரத்தில் அதிகபட்ச ஆற்றலை உருவாக்குகிறது.
அதிக செயலாற்றல் ஒருசில நிமிடங்கள் செய்யும் தியானம் ஒரு சில மணி நேரம் துாக்கத்திற்கு ஒப்பான ஓய்வை வழங்க முடியும். யோகா வழங்கும் ஆழமான ஓய்வினால் ஒருவர், அதிகசெயலாற்றலுடன் கூர்மையான விழிப்புணர்வுடன் முடிவுகள் எடுப்பதில் உள்ளுணர்வுடன் விளங்க முடியும். அதன்பின்னர் அற்ப விஷயங்களில் சிக்கி அமிழ்ந்து போகாமல் பெரிய பிரச்னைகளை எதிர்கொண்டு, பிறருக்காக அவற்றைத் தீர்க்கும் வலிமை படைத்தவராகிறார்.
யோகா என்பது ஒரு பயிற்சி மட்டுமல்ல, அதுமொத்த வடிவுலகையும் கடக்கும் ஒரு மெய்யுணர்வு நிலையாகும். இன்றைய உலகில் ஒருவரது ஆழமான
 
ஆற்றல்களை கண்டுணர்ந்து காக்கும் ஒரு வழியாகும்.


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்நிறுவனர்,  வாழும் கலை அமைப்பு










- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்நிறுவனர், 
வாழும் கலை அமைப்பு





YOGA POSES
YOGA POSES

YOGA POSES
Yoga Poses


கேள்வி :யோகா என்றால் என்ன? – (சத்குரு)
சத்குரு யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது முழுப்பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கீறீர்கள். யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது, மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல. எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணரும்போது யோகா என்று சொல்கிறோம். அதை அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் சரி, அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல முடியும்

கேள்வி :யோகா என்பது எல்லோருக்குமானதா? யோகாவைக் கற்றுக் கொள்ள உள்ள நிபந்தனைகள் என்ன? (சத்குரு )

நிச்சயமாக இது எல்லோருக்கும் ஆனதுதான். ஏனென்றால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ, உணர்ச்சியின் மூலமாகவோ, தங்கள் உடலின் மூலமாகவோ, தங்களின் சக்தியின் மூலமாகவோ ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதை நாம் சற்றே முறைப்படுத்த மட்டுமே முயன்று கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்தால் அவர்களின் முயற்சிகள் பலனுடையதாக இருக்கும். மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. பன்னெடுங்காலமாகவே இங்கிருக்கும் ஒரு முறை தான் யோகா. ஈஷா யோகா என்றால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும், உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் உங்களுடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருந்தால் அதுதான் யோகா. எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.

கேள்வி :என்னால ஒரு நிமிஷம் கூட கண்ண மூட முடியலயே, என் மனம் என் கட்டுப்பாட்டுலேயே இல்லை, எனக்கு போய் தியானம் வருமா?

இதுபோன்ற கேள்விகள் இல்லாமல் தியானம் கற்றுக் கொள்ள வந்தவர்கள் வெகு குறைவு. ஆனால் அனைவருக்கும் தியானம் சாத்தியமே என்கிறார் சத்குரு


கேள்வி :தியானம் என்றால் ஆசையற்ற நிலையா, எண்ணங்கள் அற்ற நிலையா? (சத்குரு)

கண்களை மூடிக் கொண்டு அமர்வதை தியானம் என்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய முடியும். சிலவற்றின் மீது கவனத்தைக் குவிக்க முடியும், ஒரு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும். இப்படி பல விஷயங்கள் உள்ளன. ‘நீங்கள்என்பது என்ன? தற்போதைய நிலையில் உங்களுக்கு உடல் இருக்கிறது, எண்ண ஓட்டங்கள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளைத் தான்நான்என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா? இந்த உடலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் பிறக்கும் போது இவ்வளவு சிறிதாக இருந்தீர்கள். இப்போது இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறீர்கள். எப்படி? சாப்பாட்டின் மூலமாகத்தான், இல்லையா? எனவே உடல் என்பது ஒரு சாப்பாட்டுக் குவியல்தான். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு தான் இங்கே ஒருவித உடலாக அமர்ந்திருக்கிறது. மனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? மனம் என்பது நீங்கள் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சுவைத்த, தொட்டதன் மூலமாக பதிந்த பதிவுகளின் குவியல்தான். ஐம்புலன்களின் மூலமாக சேர்ந்தவற்றை மனம் என்கிறீர்கள். எனவேமனம்என்று நீங்கள் சொல்வதும் உண்மையில் உங்கள் மனமல்ல. இவை வெளியிலிருந்து சேகரமாகும் பதிவுகள் தான். உங்கள் உணர்ச்சியென்பது நீங்கள் உங்கள் தலையில் சேகரித்து வைத்துள்ளவற்றின் வெளிப்பாடுதான். எனவே தியானம் என்பதன் நோக்கம் எது நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களை தனியே பிரித்தெடுப்பதுதான். இந்த உடல் என்பது உணவின் குவியல், இது நீங்கள் அல்ல. எனவே தியானத்தில் அமர்ந்திருக்கும் போது, நான் உடல் அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறீர்கள். மனம் என்பதும் வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல் தான். எந்தவிதமான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களோ உங்கள் குடும்பம், பெற்றோர், சென்று வந்த பள்ளி, செய்யும் வேலை என்பவற்றைப் பொறுத்தே உங்கள் மனம் இருக்கிறது. இது உங்கள் மனமல்ல. இது நீங்கள் சமூகச்சூழலின் மூலம் சேகரித்த ஒன்று. எனவே நீங்கள் மனமல்ல என்ற தெளிவான இடைவெளியைக் காண்கிறீர்கள். எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்குள் உடலின் மூலமாகவோ மனதின் மூலமாகவோ தான் வருகிறது. பலவிதமான துன்பங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் தாங்களாகவே எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல, நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு. வெளியிலிருந்து சேகரித்த உடல், மனம் இவற்றுக்கும் உங்களுக்கும் இடையில் தெளிவான இடைவெளியை உணர்ந்து நீங்கள் தியானத்தன்மையில் இருந்தால், அவை இரண்டையும் எப்படி உபயோகப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வீர்கள், அவ்வளவுதான். ஆனால் அதுவே நீங்களல்ல. உங்கள் அனுபவத்தில் இந்த இரண்டோடும் அடையாளம் கொள்ளாமல் இருந்தால், துன்பம் என்பதே இருக்காது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம். ஒருவர் விருப்பத்தோடு இருந்தால் நிச்சயம் இது சாத்தியம். இந்த சூழ்நிலையை நமக்குள் எப்படி உருவாக்குவது என்பதற்கு ஒரு முழு விஞ்ஞானமே உள்ளது. எனவே இதை நாம் எல்லாவகையான மக்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். குற்றவாளிகள், கிராமமக்கள், படிக்காதவர்கள், மெத்தப் படித்தவர்கள், தொழில்துறைத் தலைவர்கள் என பலருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். வெளிச்சூழ்நிலை என்று வரும்போது நமது திறமை என்பது வித்தியாசப்படுகிறது. நான் செய்வதை நீங்கள் செய்ய முடியாது. நீங்கள் செய்வதை நான் செய்ய முடியாது. வெளிச்சூழல் திறன் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுகிறது. ஆனால் உள்நிலையைப் பொறுத்தவரை, எல்லோரும் ஒரேவிதமான திறனுடன் இருக்கிறோம். நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா, இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது. தியானம் எனும் போது எல்லோருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. ஒருவர் அதற்கான விருப்பம் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? யார் அதை வேண்டாமென சொல்லப் போகிறார்கள்? எல்லோருக்கும் அதுதான் தேவை. ஆனால் பலருக்கும் இதைப்பற்றி தெரியவில்லை என்பதுதான் விஷயம். எனவே நமது வேலை, தியானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான். இது ஏதோ மலைக் குகைகளுக்கு செல்வதைப் பற்றியல்ல; இமயமலைக்குச் சென்று அமர்வதைப் பற்றியல்ல; இது, துன்பங்களில் இருந்து முற்றிலுமாய் விடுபட்டு வாழக் கற்றுக் கொள்வது. நீங்கள் விரும்பும் விதமாக வாழ்வோடு விளையாட முடியும். ஆனால் வாழ்க்கை உங்கள் மீது ஒரு சிறு தழும்பைக் கூட ஏற்படுத்தாது. தற்போது வாழ்வின் போக்கில் மக்கள் காயம்பட்டுக் கிடக்கிறார்கள். அப்படி என்னதான் செய்துவிட்டார்கள்? தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவும், ஒரு நாள் இறந்து போகவும் எவ்வளவு வலியையும் வேதனையையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்? ஏனென்றால், இன்னமும் உயிர்த்தன்மையோடு எப்படி தொடர்பு கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு மனிதன் தியானநிலையில் இருந்தால் அந்த மனிதனுக்கு துன்பம் என்பதே இருக்காது. தியானநிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் போக்குகள் அவரைத் தொடாமல் அவரது வாழ்வில் அவர் விரும்பியதைச் செய்யலாம்.


கேள்வி :தியானத்தின் பலன்கள் என்ன? (சத்குரு)

 பொதுவாக ஒவ்வொரு மனிதரும் விரும்புவது ஆரோக்கியத்தையும் அமைதியையும் சந்தோஷத்தையும்தான். ஆரோக்கியம் என்பதை நிச்சயமாக உருவாக்கிக் கொள்ளமுடியும். தியானம் என்ற தன்மை நமக்குள் வந்துவிட்டால், அமைதியும் சந்தோஷமும் இயல்பானவை ஆகிவிடும். தியானம் என்பது செயல் அல்ல, அது ஒரு நிலை. வாழ்க்கையே தியானநிலையில் இருக்கவேண்டும் என்பது தான் நம் நோக்கம். ஏதோ பத்து நிமிடங்களுக்கு கண்ணை மூடி அமர்வதைப் பற்றி நாம் பேசவில்லை. எதைச் செய்தாலும் தியான நிலையில் செய்வதைப் பற்றி பேசுகிறோம். இந்தத் தன்மையையே நமது வாழ்வில் கொண்டுவர விரும்புகிறோம். அப்படி நடந்தால் ஆரோக்கியமாக இருப்பது, அமைதியாக இருப்பது, ஆனந்தமாய் இருப்பது என்பதெல்லாம் முயற்சியின்றி நடக்கும். தியானத்தின் தன்மை அப்படிப்பட்டது. ஒரு மனிதன் இப்படி இருந்தால் அவனது உடல், மன செயல்பாடுகள் ஒருமுகப்பட்டும் கூர்மையுடனும் இருக்கும். ஒரு மனிதர் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் போது மட்டுமே அவரது புத்திசாலித்தனம் சிறந்த முறையில் செயல்படும்.


சத்குரு ஜகி வாசுதேவ்






சத்குரு ஜகி வாசுதேவ்ஈஷா அறக்கட்டளை  



yoga poses 


YOGA POSES
YOGA POSES 

KARTHIKKN

No comments:

Post a Comment

Ads Inside Post