Monday 13 June 2016

உலக இரத்ததான தினம்-World Blood Donors day

ஒவ்வொரு நாளும் விபத்துக்களின் 
எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது நம் கண்முன் தெரிகிறது. மேலும் பிரசவ பெண்களுக்கு மற்றும் குழந்தைகள் இருதய அறுவைச் சிகிச்சை சிறுநீரக அறுவைச் சிகிச்சை போன்றவைகளுக்காக நாள் தோறும் இரத்தம் தேவைப்படுகிறது.  எனவே நாம் இரத்ததானம் செய்தால் மட்டுமே அவர்களின் உயிர்களைக் கப்பாற்ற முடியும்.

ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும்.இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது. இதனைத்தான் தானம் என்கிறோம்.ரத்தம் என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் என எந்த காரணத்திற்காகவும் ரத்தம் தேவைப்படலாம். அப்பொழுது ரத்த தானம் செலுத்த விரும்புபவரை தேடி அவரிடம் இருந்து ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்துவது என்பது இயலாத காரியம்.எனவே தான் ரத்த வங்கிகள் செயல்படத் துவங்கின. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று அதனை பாதுகாத்து, ரத்தம் தேவைப்படும்போது அதனை அவர்களுக்குக் கொடுத்து உதவும் ஒரு அமைப்புதான் ரத்த வங்கியாகும்.
:
ரத்தம் என்பது என்ன?




ரத்தத்தில் மூன்று விதமான செல்கள் இணைந்திருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் ஆகியவையாகும்.ரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும். பின்னர் அப்பகுதிகளில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.வெள்ளை அணுக்கள் படை வீரர்களைப் போன்று செயல்படுவார்கள். உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பது, வேறு ஏதேனும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை அழிப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் என்ன செய்யும் என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நாமே உணர்ந்திருப்போம், நமக்கு ஏதேனும் சிறய காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் 5 நிமிடங்களிலேயே வெளியே வந்த ரத்தம் உறைந்து மேலும் ரத்தக் கசிவு நிறுத்தப்படுகிறது. ரத்தத்தை உறைய வைக்கும் மிக முக்கிய வேலையை செய்யும் செல்கள் பிளேட்லெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா என்ற செல்கள் குளுகோஸ், கொழுப்பு, புரதம், நொதிப்பு மற்றும் ஹார்மோன்களை சுமந்து செல்லும் அமைப்பாக செயல்படுகின்றன.
ரத்தத்தின் வகைகள்:

ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான்.அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.ஒவ்வொருவரும் தங்களது ரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் ஏ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெறலாம். இது எல்லா வகை ரத்தத்திற்கும் பொருந்தும்.ஆனால் ஏதாவது மிகுந்த நெருக்கடியான நேரங்களில் வேண்டுமானால் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓ வகை ரத்தத்தை அவருக்கு செலுத்தலாம். அதேப்போன்று ஏபி ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் அளிக்கலாம்.


யாரக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்?
« A குரூப்: இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத் தான் கொடுக்க வேண்டும்.

« B குரூப்: இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும்.

« AB குரூப்: இவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம்.

« O குரூப்:  இவர்களுக்கு O குரூப் இரத்தம் தான் கொடுக்க வேண்டும்.

‘ஆர்எச்’ என்று சொல்கிறார்களே அது என்ன?


இரத்தத்தில் கி,ஙி,ளி வகையைத் தவிர, பார்க்க வேண்டிய மற் றொரு ஆன்டிஜனும் இருக்கிறது. ரிசங் என்ற ஒரு குரங்கிலிருந்து இந்த ஆன்டிஜன் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு ஆர் எச் என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்எச், இரத்த சிவப்பு அணுக்களின் தோலின் மேல் சிலருக்கு இருக்கும். சிலருக்கு இருக் காது. இதைக் குறிப்பிட A+ மற்றும் A என்று பயன் படுத்துகிறார் கள்.

யார் யார் இரத்த தானம் செய்யலாம்?

« நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

« 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

« குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

« இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண் டும்.

எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடம்.

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?

20 நிமிடம்.

இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக் கப்படுகிறது?

350 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. எடுக்கப் படு கிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.

இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழி த்து உடலில் உற்பத்தி ஆகும்?

10 லிருந்து 21 நாட்களில்.

இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயி ரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத் தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே!

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்ற ரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.

சின்னச்சின்ன உடல்நலக் கோளாறு கள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

« சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

« ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்க லாம்.

« ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மரு ந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

« குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

« அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

« குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்தி ய பிறகு கொடுக்கலாம்.

« பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழி த்துக் கொடுக்கலாம்.

« சிறிய அறுவை சிகிச்சை செய்து கொ ண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

« பல் அறுவை சிகிச்சை செய்து கொண் டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்க லாம்.

« பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

« இதய நோய்கள் _ வேண்டாம்.

« இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

« வலிப்பு நோய் _ மருந்து சாப்பி ட்டுக் கொண்டு இருந்தால் வேண் டாம். மருந்து நிறுத்தி 2 வருடங் கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

« தடுப்பூசி போட்டுக் கொண்டவர் கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

« நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

« மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

« மலேரியா _ 3 மாதங்களுக் குப் பிறகு.

« காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.

மாத்திரைகளை சில காரணங் களுக்காகச் சாப்பிடுகிறவர் கள் இரத்த தானம் செய்யலாமா?

« சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிற வர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

« ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகி றவர்கள் கொடுக்க வேண்டாம்.

« நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக் குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்க லாம்.

« இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக் க வேண்டாம்.

« ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

« இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜி டாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இர த்த தானம் செய்யக் கூடாது.

இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

« நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.

« ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.

3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

« இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணி நேரம் எடுக்க வேண்டாம்.

இரத்த தானம் யாருக்கானது.?

இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலாசீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்ததானம் தேவைப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய ரத்தசோகை நோய்.

கருவிலுள்ள குழந்தையின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மாறாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படுகிறது. இந்நோய் தாக்கிய 3 -4 வயது குழந்தைகளுக்கு 6 வாரங்களுக்கு ஒரு தடவையாவது ரத்ததானம் கொடுக்க வேண்டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.

இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின்றனர். விபத்து ஏற்பட்டு இரத்தமிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன்படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைப் போல, ரத்ததானம் செய்து பல உயிர்களை வாழச் செய்யலாம். மேலும் ரத்ததானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறைவு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஹீமோபிலியா :

இரத்தம் தொடர்பான வியாதிகளில் ஒன்று ஹீமோபிலியா. இது பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது. இது மரபு அணு சார்ந்த பிறவிக் கோளாறு. இதனால் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் எளிதில் உறையாமல் இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இரத்தம் உறையச் செய்யும் செயல் முறைகளில் 8வது காரணி இல்லாமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இரத்தத்தின் உறையும் தன்மையில் ஏற்படும் குறைபாடு நோயான ஹீமோபிலியாவை மாற்றுமுறை மருத்துவமான ஹோமியோபதி மூலம் பெருமளவு கட்டுப்படுத்த இயலும். இதற்கு பயன்படும் முக்கியமான ஹோமியோபதி மருந்து: பாஸ்பரஸ் இரத்தம் கசியும் வியாதிகள் அனைத்தும் ஹீமோபிலியா அல்ல. இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.



Kartikkn

No comments:

Post a Comment

Ads Inside Post