Friday 12 August 2016

பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... அது தமிழரின் அடையாளம்

அழிந்து வரும் தமிழரின் அடையாளம்

உலகின் மூத்த மொழி தமிழ்.  தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான்.  இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது



நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை கற்பத்தரு என போற்றினர். மகாராஷ்டிரா பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர், டாக்டர். மகாபல் என்பவர் பனைமர பாறைகளை (Fossiles) ஆராய்ந்து பனைமரங்கள் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்று நிருபிக்கிறார். பனை, ஒரு மரம் என்று பொதுவாக  தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ளபடியும், 
இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச்சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற்பெயர் (பொராசஸ் பிலபெலிபேரா) (Borassus flabellifera) என்பதாகும். 

 தமிழகத்தின் மாநில மரம் - பனைமரம்


இந்து புராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற,ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு. தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக்  கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை மரம்.

நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனை மரத்தை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.இதன் உச்சியில்,கிட்டத்தட்ட 30 - 40 விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

ஒரு காலத்தில் பனைமரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது. இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது.அரசும்,மக்களும் பனை மரங்களில் இருந்துகிடைக்கும் உணவுப் பொருள்களை முறையாக சந்தைப்படுத்தாததால் இதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.


புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது.
மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.
கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் பனம் வரிச்சலாகவும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது.
பல சங்க இலக்கிய நூல்கள் கிடைக்கப் பெற்றது ஓலைச்சுவடி என்று சிறப்பித்து கூறும் பனை ஓலையால்தான். திருவள்ளுவர் என்றதும் நம் நினைவில் தோன்றுவது ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் ஏந்திய திருவள்ளுவரைத்தான். ஒரு வேலை பனை இல்லை என்றால் சங்கத்தமிழ் நூல்களும் பல வரலாற்றுக் குறிப்புகளும் நமக்கு கிடைக்காமலேகூட போயிருக்கலாம்.
சங்க காலத்தில் செய்திப் பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர். தோல் பொருள்கள் பிளாஸ்டிக் பொருள்களின் வரவுக்கு முன்னால் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட உதவும் தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை நம் முன்னோர் செய்து பயன்படுத்தினர். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருள்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை. இன்றும்கூட சில கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் கொடுப்பார்கள்.
பனை விசிறி
பனை விசிறி

மின்சார வரவுக்கு முன்னால் வெயில் காலங்களில் பனை விசிறிக்கு நமக்கு பெரிதும் உதவின. நிறைய விளையாட்டு பொருள்கள் செய்ய பனை பயன்படுகிறது. பனையில் நொங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் செய்து சிறுவர்கள் விளையாடினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. வெயில் காலங்களில் அற்புதம் பனை நொங்கு. தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி போன்ற நொங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு சிறந்த குளிர் பானமாகவும், தாதுப் பொருள்கள், விட்டமின்கள், நீர்சத்துக்களைக் கொண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.
முளைத்து கிழங்கு விட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்சத்துக்கள். தாதுப் பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பதனீர் ஒரு சிறந்த குளிர்ச்சிபானமாகும். பதனீரைக் காய்ச்சி பனைவெல்லம் (கருப்பட்டி) செய்யப்படுகிறது.

கருப்பட்டி
கருப்பட்டி

 பனைவெல்லம் ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்
இந்தியாவில் இனிப்பின் தேவை மிகவும் அவசியமானது.பல பண்டிகைகளிலும் இனிப்பு வழக்கப்ப்டுவது வாடிக்கை.முன்பு கரும்பு வெள்ளம், தென்னை, பனை கருப்பட்டி,முதலியவை இனிப்பிற்காக உபயோகபடுதப்பட்டது.தென்னிந்தியாவில் பெரும்பாமையான மக்கள் பனை வெல்லத்தையெ பயன்படுத்தினார். 

பனை வெள்ளம்
பனை வெள்ளம்
அக்காலகட்டத்தில் பனையேறிகளின் வாழ்க்கை மிக செழிப்பாக இருந்தது.குறிப்பாக சொல்வதென்றால் 200 வருடங்களுக்கு முன்பு பனையேறிகள் செல்வந்தர்களாய், நாகரீகம் மிக்க சமுதாயங்களாய், சமுதாய அந்தாஸ்த்துடையவர்களாய் இருந்தனர். கிட்டத்தட்ட 843 மேற்பட்ட பனைசார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் கடந்த 150 வருடங்களாய் பனைத்தொழில் நசிவடைந்து வருகிறது. 

அரசின் தவறான வெள்ளை சர்க்கரை கொள்கை:

ஆங்கிலேயர் காலத்தில் முதன் முதலாய் பனை ஏறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக லைசென்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் கிழக்கிந்திய கம்பெனியில் பியறுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் லைசென்ஸ் முறை நடைமுறையில் இருந்தது.
அதேநேரம் ஆங்கிலேர்கள் வந்த பின் கரும்பிலிருந்து வெள்ளை சர்க்கரையை சுக்ரோஸ் சை பிரிதெடுத்து தேநீர்,கேக், முதலியவற்றிற்கு பயன்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் வெள்ளை சர்க்கரை வாடை இல்லாமலும் இருந்தது. அதற்கென கரும்பிளிருக்கும் இரும்பு, செம்பு, முதலிய பல தாதுக்கைளை அகற்றப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்தபின், அரசின் தவறான கண்ணோட்டத்தின் விளைவாக கரும்பு உற்பத்தி, கரும்பு ஆலைகளின் நிர்மாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மிகப்பெரியபணப்பயிராக உருவெடுத்தது. இதனை காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா கடுமையாக எதிர்த்தார். மிகவும் வடிவமைக்கப்பட்ட தொழிச்சாளைகளாக உருவெடுத்தது கரும்பு - சர்க்கரை உற்பத்தி. கடந்த ஐம்பத்து வருடங்களில் இந்தியாவில் கரும்பின் பரப்பு இரண்டு மடங்காகவும், உற்பத்தி ஆறு மடங்காகவும் உயர்ந்துள்ளது. உலகில் பிரசிலுக்கு அடுத்து அதிகம் கரும்பு இந்தியாவில் உற்பத்தியாகிறது .இந்தியாவில் உத்திர பிரதேசம், மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழகத்தில் அதிகம் கரும்பு உற்பத்தியாகிறது.


கரும்பு நீர் தேவை அதிகம் கொண்ட நீண்ட நாள் பயிர்.கரும்பிற்கு வணிக வரவேற்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் நீரிலாதவர்கள் கூட ஆள் துளை கிணறுகள் தோண்டி கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.தென்னிந்தியாவில்
 கட்டுபாடட்ட்ற கரும்பு சாகுபடிநிலத்தடி நீரிணை கேள்விக்குறியாக்கியுள்ளது.கரும்பிலிருந்து பிரேசில் எரிபொருள் தயாரிப்பதால்நாமும் தயாரிக்க வேண்டும் கரும்பிற்கு விலையை கூட்ட வேண்டும் என்று போராடும் விவசாயிகளை காண்டால் அச்சமாக இருக்கிறது. நிலவும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க பலர் கரும்பை விரும்புவதால் நிலத்தடி நீரின் நிலை , நிலத்தின் தன்மை இன்னும் மோசமாகும் சூழல் நிலவுகிறது. கடந்த 2007ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறையினால் நிலத்தடி நீர் இல்லாத கருப்பு ஒன்றியங்களாக வரையறை செய்யப்பட்ட பெரும்பாலான ஒன்றியங்களின் அந்தநிலைக்கு பின்னால் கரும்பு உற்பத்தி என்ற வணிக நோக்கம் அரசு அறியாதது அல்ல.


பிரேசிலில் 16 % எரிபொருள் கரும்பின் "எத்தனால்"கொண்டு பெறப்படுகிறது. பிரேசிலில் நீருக்கு பஞ்சமில்லை. அமேசான் காடுகளில் பெய்யும் மழையே போதும் கரும்பு வளர. இங்கு அப்படியா? நிலத்தடி நீரை இரையாக்கினால் கரும்பு வளரும் கரும்பு வளர்ந்தால் எரிபொருள் தயாரிக்கலாம். எரிபொருள் தேவை என்பது பூர்த்தி செய்ய முடியாத ஒன்று. அதற்காக நாம் கரும்பை பயிரிட்டு வாழ்வாதாரங்களை காவு கொடுக்க வேண்டுமா?என்று சற்றே யோசிக்க வேண்டும். இன்றைய சந்தப்பவாத காசுக்காக, நிலையான செல்வங்களான நீர் நில வளங்களை, இழந்து விடக்கூடாது.

இன்று வெல்லத்தில் செய்யும் அதிரசம், எள்ளுருண்டை,கொழுக்கட்டை, போன்ற சமாச்சாரங்கள் மாறி வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்புகள் சமூகத்தில் மேலோங்கின. இத்துடன் பால் உற்பத்தி தேசியமயமானபின் இந்தியாவில் பால் இனிப்பு வகைகள் பல்கி பெருகின. இன்று கரும்பின் வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்துவோர் 99 % ஆகும்.அதனால் தான் இன்றுஇந்தியாவே நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியில்உலகில் முதலிடம் வகிக்கிறது. .

போதாகுறைக்கு கரும்புஆலைகள் 
 மொலாசசிலிருந்து சாராயம் காய்ச்சி மக்களின் கெடுக்கும் அவலமும் இந்த கரும்பினால் ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் கரும்பு சாராய வியாபாரம் அரசாங்கமே எடுத்து நடுத்தும் அவலம் கொடி கட்டி பறக்கிறது. 
பனையேறிகள் வாழ்வும், தென்னை விவசாயமும் நலிந்து கரும்பினை கொண்டு வளர்க்கும் இந்த கலாச்சாரம் பல குடியினரது வாழ்வாதாரத்தை கெடுப்பதுடன், ஒட்டு மொத்த மனிதனின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது என்பது ஐயமின்றி தெளிவாகிறது. பனைத்தொழிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியதில் அரசின் தவறான வெள்ளை சர்க்கரைக்காதரவான கொள்கையே என்றால் மிகையில்லை.

தமிழகத்தில் பனைத்தொழில்:

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம். ஆனால் தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும், தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்) பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.தமிழ்நாட்டில் மாநில மரமாக போற்றப்படும் பனை மரங்கள் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்கள் இருந்தன. தற் போது 30 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பனை மரங்கள் விறகு உள்ளிட்ட தேவைகளுக்காக வெட்டப்படுவது தவிர்க்கப் பட வேண்டும்.

பனையேறும் தொழிலாளர்களின் இன்றைய நிலை:


கிராமப்புற தொழில்களில் மிக முக்கியமான தொழிலாய் உள்ள பனைத்தொழிலை ஊக்குவிக்க,பனைத்தொழிலாளர்களை பாதுகாக்க அரசு தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்ற கருத்து பரவலாய் உள்ளது. தமிழகத்தில் உள்ள பனைகளில் 14% பனைகள் மட்டுமே தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால், பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. பனைத்தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பு அதிகம். ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை கீழ் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.இத்தொழிலை அரசு ஊக்குவிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட10இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பை பெறுவர்.

நவீன கண்டுபிடிப்புகளோ, இயந்திர கருவிகளோ பனைத்தொழிலில் புகுத்தப்படவில்லை. மாறாக 17ம் நூற்றாண்டில் பனைத்தொழில் நடைபெற்றதோ அவ்வாறுதான் இன்றும் நடைபெறுகிறது. அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.

பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரண்டு வகையினராய் பிரிக்கலாம். முதல்வகையினர் சொந்தமாய் பனைகளை வைத்துக்கொண்டு, சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்களை போல பனைத்தொழிலை செய்பவர்கள். இரண்டாம் வகையினர் பனைகளை குத்தகைக்கு எடுத்தோ, வார முறையிலோ பனைத்தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள்.மொத்தத்தில் இரண்டாம் தரப்பினரே தொழிலில் அதிகம்.அவர்களின் தினசரி சிக்கலே இன்றும் பனைத்தொழிலின் சிக்கலாய் உள்ளது. இவர்கள் நிலம் வைத்துள்ளவர்களிடம் கூடுதல் வட்டிக்கு வாங்கி பணத்தை கொண்டுதான் குத்தகைக்கு எடுக்கின்றனர். தொழில் நேரத்தில் கருப்பட்டியை பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

பனைத்தொழிலை மீட்டெடுக்க:

எனவே, பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மாநில மரம் என்ற வகையிலும்,தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம். பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது, பனையில் இருந்து கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம். 

பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை


ஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில்,கேரளம்,கோவா,மும்பை தொடக்கம் முதல் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உள்பட சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

1960-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் பனை மரங்கள் வரை இருந்தனவாம். அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும், நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.அண்மைக் கணக்கெடுப்பு ஒன்றின்படி,30 லட்சம் பனைகள் இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.

இலங்கையில் இருந்து பதனீர், கள் போன்றவை பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.


கள்
கள்


தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மாற்றுப் பானமாக பதநீரைப் பருகலாம்.பதநீர் விற்பனையை அதிகரித்து,அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.

பனையிலிருந்து கட்டடங்களுக்கு வேண்டிய பல கட்டடப் பொருள்கள் மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருள்களையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களில் எல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலை உயர அடித்தளமாக விளங்குகிறது.

பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பதனீர்-180 லிட்டர், பனை வெல்லம் -25 கிலோ,பனங்கற்கண்டு -16 கிலோ, தும்பு -11.4 கிலோ, ஈக்கு - 2.25 கிலோ,விறகு- 10 கிலோ,ஓலை- 10 கிலோ, நார்- 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.

பனையிலிருந்து கிடைக்கும் பல உப உணவுப்பொருள்களில் மனிதர்களின் உணவும்,விலங்குகளின் உணவும் அடங்கும். கட்டடப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள்,வீட்டு உபயோகப் பொருள்கள் என பல பொருள்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

முற்காலத்தில் பனை ஓலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன.இன்றும் பல பழைய நூல்களைப் பனை ஓலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். அன்றைய காலனி ஆதிக்க நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் முதல் பிரதி ஓலைச்சுவடிகள் இந்தியாவால் மீட்க முடியாமல் சிறைபட்டுக் கிடக்கின்றன.

ஓலைச்சுவடிகள்
ஓலைச்சுவடிகள்


அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள், தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான்.

பனைத்தொழில் அன்றும் இன்றும்:

 இதுபோல தமிழுக்கும்,தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம். தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்,தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்)பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும். உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால், பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை. இதன் விளைவால் களைச்செடிகளாகி வருகின்றன கற்பகத்தருக்கள்.

 21-ம் நூற்றாண்டின் இறுதியில் பனை மரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.எனவே,பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு.

 மாநில மரம் என்ற வகையிலும்,தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற  வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை. பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம்.

பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது, பனையில் இருந்து கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம். பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.

பனையேறுதல்:



பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகசுடு வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகசுடு முதல் மார்ச் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது.
பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர்.

80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள்.



பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும் நீரகம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, எரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. இது சத்துள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது என்றும் ஈரல் நோய்க்கு ஏற்ற மருந்தென்றும் கருதப்படுகிறது. 25% குறையாத பதனீர் நேரடியாகவே நுகரப்படுகிறது. மீதம் உள்ளவை வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தின் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்கப்படுகிறது. அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

தமிழகத்தில் அழியும் நிலையில் 

பனைத்தொழில்:



சிவகங்கை மாவட்டத்தில் பெருவாரியான மக்களால் குடிசைத்தொழிலாக செய்யப்பட்டு வந்த பனை ஓலைத்தொழில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது. காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இந்த பனை மரங்களை மூலப்பொருளாக கொண்டு பல்வேறு சிறு தொழில்கள் மற்றும் கைத்தொழில்கள் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டு வந்தது. இதில் குறிப்பிடத்தக்கது பனை ஓலையைக்கொண்டு நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் அழகு பொருள்கள் செய்வதாகும். இந்த பொருள்கள் விரைவில் அழியும் தன்மை கொண்டதால் மண்வளத்திற்கோ, இயற்கை வளத்திற்கோ எந்த பாதிப்பும் இருப்பதில்லை. 

 

பனை ஓலையைக் கொண்டு முறம், பல்வேறு வடிவிலான கூடைகள், கைப்பை, பாய்கள், தொப்பி, தரைவிரிப்புகள், குழந்தைகளுக்கான பந்து, கிளுகிளுப்பை உள்ளிட்ட விளையாட்டுப்பொருள்கள், அழகுபொருள்கள் என சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பொருள்கள் செய்யப்பட்டு வந்தது. குடிசை தொழிலாக மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த தொழிலில் பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டு வந்தனர். வருவாய்க்காக மட்டும் இல்லாமல் பல்வேறு கலை உணர்வுகளை உணர்த்துவதற்காகவும், பொழுதுபோக்காகவும் பனைத் ஓலைத் தொழில் செய்யப்பட்டு வந்தது. செட்டிநாட்டு சீர்வரிசைகளில் இந்த பொருள்களுக்கு தனி இடம் உண்டு.
 








சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட பனை ஓலைபொருள்களை இப்போதும் செட்டிநாட்டுப்பகுதி சீர் வரிசைகளில் பார்க்கமுடியும். ஆனால் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வரவுக்குப்பின் கடந்த 25 ஆண்டுகளாக படிப்படியாக நலிந்து வந்த இத்தொழில் தற்போது முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. தற்போது ஒருசில செட்டிநாட்டு ஊர்களில் மட்டுமே பனைஓலை பொருள்கள் செய்யப்படுகிறது. பனை மரங்கள் அதிகமாக உள்ள இந்த மாவட்டத்தில் மண் மற்றும் இயற்கை வளங்களுக்கு கேடு விளைவிக்காத பனைஓலை பொருள்கள் செய்யும் தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை தேவை என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
 

இது குறித்து பனைஓலை பொருள்கள் செய்யும் கணேசன் கூறுகையில், “ சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது ஓலைகள் வெட்டுவதற்குக்கூட ஆட்கள் கிடைப்பதில்லை. பல வருடங்களுக்கு முன்புவரை இத்தொழிலில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துவோம். ஆனால் இப்போது போதிய அளவு வருமானம் கிடைப்பதில்லை. கோவில்களிலும், திருவிழாக்களிலும் மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். எங்கள் தலைமுறைக்குப்பிறகு இந்த பொருள்கள் செய்வதற்கு ஆட்கள் கிடையாது” என்றார்.

பயன்கள்:



மனித சமுதாயத்திற்கு இவ்வளவு பயன்களை அளித்த பனை மரங்கள் இன்று மனிதனின் பார்வையில் பயனற்று நிற்கின்றன.
பனைச்சட்டங்களும் ஓலைக்குடிசைகளும் மாறி காங்கிரிட் வீடுகளாக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் மாறி குருந்தகடானது. கருமையான பனம் கருப்பட்டியை விட்டு வெள்ளை சீனியை விரும்புகின்றோம். இன்றைய நாகரிக வளர்ச்சியில் காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால் பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனைமரங்களே விளங்குகின்றன.
கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால் பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனை மரங்களே விளங்குகின்றன.
கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் இரவில் வாழ்க்கை நடத்தும் பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பகல் பொழுதில்
ஓய்வெடுக்கவும், எதிரிகளிடமிருந்து ஒளிந்துகொள்ள உதவும் ஒரு முக்கிய இடமாகவும் பனையே விளங்குகிறது.
பனையின்வேர் பகுதிகளில் எறும்புகளும், பூச்சிகளும் பல சிறு செடிகளும் வாழ்கின்றன. பனையின் வேர்ப்பகுதியில் விழும் தாவரங்களின் விதைகள் பனையைச் சுற்றியும் ஒட்டியும் வளர்கின்றன. இயற்கையில் ஆலமரங்களும் அரச மரங்களும் பெரும்பாலும் பனையை ஒட்டி வளர்பவையே.
பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன. பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.
பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன. பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.
பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. மேலும் உயரப் பறக்கும் பறவைகளான பருந்துகளுக்கும் வான்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது. பனை ஓலையின் நுனியில் தூக்கணாங்குருவிகள் தங்களின் சிறப்புமிக்க கூடுகளைப் பெருமளவு அமைத்து கூட்டாக வாழ்கின்றன. பகல் பொழுதில் வயல்களில் இருக்கின்ற பூச்சிகளையும், கூட்டுப்புழுக்களையும் உண்டு விவசாயத்திற்கு பல நன்மைகளைச் செய்கின்றன.


ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளருமாதலால் பல உயிரினங்களுக்கு இருப்பிடங்களாகவும் கூடுகளை அமைத்து தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் பனை விளங்குகிறது.
"இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற வாசகம் நடமாடும் கறுத்த யானைக்கு மட்டுமல்ல என்றும் நிலையாக கறுத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும்.
ஒரு பனை உயிர்நீத்து தலை வீழ்ந்த போதிலும் பனையின் பட்டுப்போன மரப்பகுதி பல பறவைகளுக்கு கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சுகள் வளர்க்கச் சிறந்த பாதுகாப்பான இடமாக இருப்பதால் பல பறவைகள் ஓர் மாடி வீட்டில் வசிப்பது போல கூட்டமாக வாழ்கின்றன. தற்போது அருகி வரும் உயிரினங்களான பச்சைக் கிளிகள், பனங்காடைகள், வானம்பாடிகள், மைனாக்கள், ஆந்தைகள், வெளவால்கள், உடும்பு, மரநாய் போன்றவற்றின் கடைசி இருப்பிடம் பனைதான்.
இப்படி எண்ணற்ற சிறப்புகளை நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றி வாழ்கின்றப் பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பனையைக் காப்போம்!


அரிதாகிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களின் அழிவைத் தடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வறட்சியைத் தாங்கிக்கொண்டு தானாகவே முளைத்து வளரக்கூடிய பனைமரம் அதிக உறுதியுடையவை என்பதால் கட்டிடங்களுக்கான மர வேலைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பனையிலிருந்து பதநீர், கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கூழ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், பனந்தும்பு, தூரிகைகள், அலங்காரப் பொருட்கள், பாய், கூடை போன்ற பனையோலைப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருப்பதால் இவர்களுக்கு தமிழ்நாடு கதர் வாரியத் துறையினர் உதவி செய்கின்றனர்.
பனை சார்ந்த தொழில்கள் முழுமையாக முடங்கியதால் தற்போது தமிழ்நாட்டின் அடையாளமான பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை தமிழக அரசு தடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராமதீர்த்தார் கூறியது:
தமிழ்நாட்டில் இருந்த சுமார் 5 கோடி பனை மரங்களில் 50 சதவீதம் தென்மாவட்டங்களில்தான் இருந்தன. இவற்றில் இருந்து உணவு மற்றும் உணவல்லா பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பனை சார்ந்த தொழில்களால் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
தற்போது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை அரசு கைவிட்டதால் மரங்களுக்கு ஆபத்து வந்துவிட்டது. முன்பெல்லாம் முதிர்ச்சி அடைந்த மரங்கள் மட்டும் வீடு கட்டுவதற்காக வெட்டப்பட்டன. ஆனால், தற்போது செங்கல் சூளைகளுக்காக மரம் ரூ.200-க்கு வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழ்நாட்டின் அடையாளமான பனைமரம் அரிதான ஒன்றாக மாறிவருகிறது. இதைத் தடுக்க வேண்டும். நாட்டின் தேசிய மரமான ஆலமரத்துக்கு முக்கித்துவம் கொடுத்து மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஆலமர போத்துகள் நடப்பட்டதைப் போல, குளம், ஏரிக் கரையோரங்களில் பனைவிதைகளை விதைக்கவும், தேவையின்றி பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் கதர்வாரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.



பனை என்பது வெறும் மரம் 

மட்டுமல்ல.... 

தமிழரின் அடையாளம்.


KARTHIKKN

2 comments:

  1. We are urgently in need of KlDNEY donors for the sum

    of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors

    are to reply via the sum of $500,000.00 USD, Email

    for more details: Email: healthc976@gmail.com

    ReplyDelete
  2. இந்த கருத்து எல்லாருக்கும் தெரிவிக்கின்றேன்

    ReplyDelete

Ads Inside Post