Sunday, 28 August 2016

புதிய வரலாறு படைத்தது இஸ்ரோ... ‘ஸ்கிராம்ஜெட்’ பரிசோதனை வெற்றி...

புதிய வரலாறு படைத்தது இஸ்ரோ...

ஸ்கிராம்ஜெட்பரிசோதனை வெற்றி...

Successful Flight Testing of ISRO's 

Scramjet Engine 

Technology Demonstrator 




 ஆக்ஸிஜனைக் கொண்டு இயங்கும் 'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்த்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்
இன்றைய பரிசோதனை இஸ்ரோவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து காலை 6 மணியளவில் 'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினை விஞ்ஞானிகள் வெற்றிகரமான பரிசோதித்தனர்.
இந்த ராக்கெட்டானது வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இயங்குவது ஆகும்.



இந்த சோதனைக்காக 2 ஸ்கிராம்ஜெட் இன்ஜின்கள், 3,277 கிலோ எடை கொண்ட 
ஆர்ஹெச்-560 என்ற ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
 ராக்கெட் ஏவப்பட்ட 50-வது விநாடியில் இந்தச் சோதனை வெற்றி அடைந்தது
ஆர்ஹெச்-560
ஆர்ஹெச்-560 

வழக்கமாக ராக்கெட்கள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக ராக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள டாங்கிகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து அனுப்பப்படும்

'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி, வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இத்தகைய ராக்கெட் என்ஜின்கள் பறக்கும், எடை குறையும், திறன் அதிகரிக்கும்



இதன்மூலம் விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறையும். தற்போதைய நிலவரப்படி, ஒருகிலோ எடை கொண்ட பொருளை விண்ணில் செலுத்த 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிறது. ஆனால், இன்றைய ராக்கெட் பரிசோதனை வெற்றி மூலம் வரும் காலத்தில் இந்த செலவு வெகுவாகக் குறையும். எனவே, இது இஸ்ரோ வரலாற்றில் மேலும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே,  இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை ஸ்கிராம்ஜெட் இன்ஜின் கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்துள்ளது.





"வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.


 ராக்கெட் ஏவப்பட்ட 55வது விநாடியில் சோதனை வெற்றிப்பெற்றது.
ஏடிவி ராக்கெட்லிப்ட் -ஆஃப் போது 3.277 கிலோ எடை



சோதனை முயற்சியில் ராக்கெட், வளிமண்டலத்தில் 70 கி.மீ. தூரம் செலுத்தப்பட்டு, 
பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 320 கி.மீ. தொலைவில் 
வங்கக் கடலில் திட்டமிட்டபடி விழுந்தது

7 விநாடிகளில் திரவ ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எரியூட்டப்பட்டது. ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எரியூட்டப்பட்ட நிகழ்வு எதிர்பார்க்கப்பட்ட 5 விநாடிகளை காட்டிலும் அதிகம்.




 
இந்தியா மீத்திமிசுத்தாரை இயந்திரத்தின் விமான சோதனை நிரூபிந்த நான்காவது நாடு.
 
ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி"

உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான "மறுபயன்பாட்டு ராக்கெட் " இது என்பது கூடுதல் தகவல்.

இஸ்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது மீத்திமிசுத்தாரை பொறிகள் ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும்வளிமண்டல காற்றிலிருந்து ஆக்சிஜனை ஆக்சிஜனூக்கியாக பயன்படுத்துகிறது.

விமானத்தில் மீத்திமிசுத்தாரை பொறிகள் அதன் எதிர்கால விண்வெளி போக்குவரத்து முறையை நோக்கி இஸ்ரோவின் முயற்சி ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்

முன்னதாக இந்த ராக்கெட் என்ஜின் சோதனை பல நாட்களுக்கு முன்னரே நடத்தப்பட திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் மாயமான ஏஎன் 32 விமானத்தை தேடும் பணிக்காக வங்கக் கடலில் ஏராளமான கப்பல்களும், விமானப்படை விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்ததால் இஸ்ரோ இந்த ராக்கெட் சோதனையை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.


"ஸ்கிராம்ஜெட் ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்
ராக்கெட் என்ஜின் சோதனை இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட்.

கலாமின் கனவுத் திட்டம்



‘ஸ்கிராம்ஜெட்’ இன்ஜின் சோதனை வெற்றி குறித்து விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் சிவன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஹைட்ரஜனை எரிபொருளாகவும், ஆக்சிஜனை எரியூக்கியாகவும் கொண்ட ஸ்கிராம்ஜெட் இன்ஜின் சோதனையின்போது ஒளியைவிட 6 மடங்கு வேகத்தில், 5 விநாடிகள் மட்டுமே தற்போது இயக்கிப் பார்க்கப்பட்டது. இனிவரும் காலங்களில் அதிக விநாடிகளுக்கு இயக்கிப் பார்க்கும் சோதனை நடத்தப்படும். ஸ்கிராம்ஜெட் இன்ஜின் மூலம் ராக்கெட்டை செலுத்துவது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுத் திட்டம் ஆகும்.

பயன்கள் என்ன?

ஸ்கிராம்ஜெட் இன்ஜினை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக, 400 டன் எடை கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் 85 சதவீத எடை, எரிபொருளாகத்தான் இருக்கும். அதிலும், 70 சதவீதம் ஆக்சிஜன் கொள்கலனின் எடையாகும். எனவே, அந்த எடையைக் குறைக்கும் விதமாக வளிமண்டல ஆக்சிஜனை உறிஞ்சி எரிபொருளை எரிக்கும் தொழில்நுட்பத்தை ஸ்கிராம்ஜெட் இன்ஜின் கொண்டுள்ளது.


இதன்மூலம், ஆக்சிஜன் கொள் கலனின் எடை குறைவதோடு, அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ராக்கெட்கள் மூலம் செலுத்த இயலும். மேலும், ராக்கெட்டை ஏவும் செலவும் பெருமளவில் குறையும். அதுமட்டுமின்றி, மறு பயன்பாட்டு விண்கலம் உருவாக்கத்துக்கும் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் சோதனை பெரும் உதவியாக இருக்கும்.



ஸ்கிராம்ஜெட் இன்ஜினைஸ்பேஸ் பிளேன்’ (Space Plane) எனப்படும் அதிவேக விமானங்களில் பயன்படுத்தும் போது ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு சில மணி நேரங்களில் பயணம் மேற்கொள்ள முடியும். இதன்மூலம், பயண நேரம் குறையும்.

Karthikkn





 
 




 
 



No comments:

Post a Comment

Ads Inside Post