Thursday, 4 August 2016

ஜி.எஸ்.டி மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

'எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி மசோதா ஒருமனதாக நிறைவேறியது!'


ரக்கு மற்றும் சேவை வரிஜி.எஸ்.டி. ) மசோதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது.

மத்திய, மாநில அரசுகள் தற்போது தனித்தனியாக விற்பனை வரியை வசூலிக்கின்றன. சரக்கு மற்றும் சேவைத் துறைகளில் நாடு முழுவதும் விதிக்கப்படும் பல்வேறு விதமான வரிவிதிப்பு முறைகளை நீக்கிவிட்டு ஒரே வரிவிதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த வரி விதிப்பை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை கடந்த ஆண்டு மே மாதம் பா... தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அமலுக்கு வந்தால் கார்கள், இரு சக்கர வாகனங்கள், பெயிண்ட், சிமெண்டு, மின்விசிறி, வாட்டர் ஹீட்டர், ஏர்கூலர் உள்ளிட்ட பொருட்களின் விலையும், திரையரங்கு கட்டணமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சரக்கு வாகனங்கள், செல்போன்கள், ஜவுளி, தங்க நகைகள் உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டாக மாநிலங்களவையில் இந்த மசோதா முடங்கிக் கிடந்தது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவில் சில முக்கிய திருத்தங்களை செய்யும்படி கேட்டுக்கொண்டன. காங்கிரஸ் வற்புறுத்தியபடி ஒரு சதவீத கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டது. இதுதவிர மேலும் 5 முக்கிய திருத்தங்களும் செய்யப்பட்டன. நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை தாக்கல் செய்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசும்போது, ''இது அரசியல் சாசனத்தின் 122–வது சட்டதிருத்த மசோதா ஆகும். இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறைக்கு வழி கிடைக்கும். ஜி.எஸ்.டி. மசோதாவில் வரி விதிப்புகளில் அதிகபட்ச சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பலரும் இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

நாட்டின் தற்போதைய நிலைக்கு இந்த வரிவிதிப்பு முறை மிகவும் அவசியம் ஆகும். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார சந்தைகளை ஒரே சீரானதாக ஆக்க முடியும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். வரி ஏய்ப்பு நடப்பதும் வெகுவாக குறைக்கும். மாநில அரசுகள் இதன் மீது அதிகாரம் பெற முடியும். மேலும், வரிக்கு வரி விதிக்கப்படும் நிலையும் இல்லை என்கிற சூழலும் உருவாகும்.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஒருமித்த ஆதரவை திரட்டுவதற்கான, கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த மசோதா சபையின் தேர்வுக் குழுவின் குறிப்புரைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அவ்வப்போது மாநில நிதி அமைச்சர்களுடன் இதுபற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" என்றார்.

இதை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஜி.எஸ்.டி. மசோதா குறித்த கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, ஜி.எஸ்.டி. மசோதாவில் தமிழக அரசு வலியுறுத்திய மாற்றங்களை மத்திய அரசு ஏற்கவில்லை என கூறி தொடர்ந்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் .தி.மு.. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பின்போது சபையில் இருந்த 203 உறுப்பினர்களும், மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். யாரும் மசோதாவுக்கு எதிராக வாக்கு அளிக்கவில்லை. மேலும், ஒரு சதவீத கூடுதல் வரியை நீக்குதல் உள்ளிட்ட அரசு கொண்டு வந்த 6 திருத்தங்களுக்கும் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, தற்போது மாநிலங்களவையில் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அங்கு ஆளும் பா... கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் மசோதா எளிதில் நிறைவேறிவிடும். அதன்பின், குறைந்தபட்சம் 50 சதவீத மாநில சட்டசபைகளில் இந்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்த பின்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment

Ads Inside Post