Friday 12 August 2016

உலக நாடுகளுக்கு மத்தியில் அதிரடி கிளப்பும் - இஸ்ரோ

  ஸ்பேஸ் டெக் வளர்ச்சியில் களம் குதித்துள்ள

இஸ்ரோவின் அடுத்த திட்டம் என்ன..?




தற்போது விண்வெளிக்கு செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தெரிந்ததே. இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ்(space-x) நிறுவனம் தயாரித்த மறுபயன்பாட்டு அம்சம் கொண்ட ராக்கெட், கடந்த மாதம் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையின்போது 11 சிறிய செயற்கைகோள்களை சுமந்து சென்று விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்திவிட்டு, மீண்டும் பூமிக்கு திரும்பியது. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக கருதப்படும் இந்த சோதனை, அதனை புதிய கோணத்தில் பயணிக்க செய்திருக்கிறது. இந்தநிலையில், இதேபோன்றதொரு மறுபயன்பாடு கொண்ட ராக்கெட்டை இந்தியாவும் உருவாக்கி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த ராக்கெட்டின் புரோட்டோடைப் மாடல் சோதனை செய்யப்பட உள்ளது.
இந்த புதிய விண்வெளி வாகனத்தின் சிறப்புத் தகவல்களை இப்பொழுது பார்போம்

அவதார்:AVATAR

AVATAR (Aerobic Vehicle For Transatmospheric Hypersonic Aerospace Transportation)
 (AVATAR - INDIA)

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்து வரும் இந்த புதிய மறுபயன்பாட்டு ராக்கெட்டுக்கு, அவதார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதாவது, AVATAR (Aerobic Vehicle For Transatmospheric Hypersonic Aerospace Transportation) என்பதன் சுருக்கமே அவதார்


ஸ்பேஸ்பிளேன் (SPACE PLANE)

INDIAN SPACE PLANE
INDIAN SPACE PLANE - (RLV)


இதனை ஸ்பேஸ்பிளேன் அல்லது விண்வெளி விமானம் என்ற பொது பெயரில் அழைக்கின்றனர். இதுதவிர, Reusable Launch Vehicle [RLV] என்றும் குறிப்பிடப்படுகிறது

1998ம் ஆண்டு பெங்களூரில நடந்த ஏரோ இந்தியா98 என்ற கண்காட்சியில், இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக் கழக்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு அமெரிக்காவில் நடந்த சர்வதேச மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டது
இதைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் இதற்கான வடிவமைப்பு பணிகளை செய்தது. இதற்கான எஞ்சின் மற்றும் எரிபொருள் தொழில்நுட்ப சோதனைகளும் தொடர்ந்து நடந்தன
கடந்த 2012ம் ஆண்டு இந்த திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியது. ஆர்எல்வி வாகனத்தின் புரோட்டோடைப் தயாரிப்பு அறிவிக்கப்பட்டது. இதற்காக, 5ல் ஒரு பங்கு வடிவம் கொண்ட புரோட்டோடைப் தற்போது சோதனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 1.5 டன் எடை கொண்ட இந்த வாகனம் 70 கிமீ உயரம் வரை செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது
இதனை சாதாரண விமானங்கள் போன்றே வானில் ஏற்றி, இறக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமான ஓடுபாதைகளை வைத்தே இந்த ஸ்பேஸ்பிளேனை செலுத்த முடியும்
மேலே ஏறுவதற்கான முதல் நிலையில் டர்போ- ராம்ஜெட் எஞ்சினும், மேலே எழும்பி பறக்கத் துவங்கியவுடன் மேக் 4 என்ற ஒலியைவிட பன்மடங்கு வேகத்தில் ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் உதவியுடன் இயங்கும். வளிமண்டலத்தை தாண்டிய பிறகு, சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜனை, ஹைட்ரஜனுடன் எரித்து கிடைக்கும் அபரிமிதமான சக்தியை பயன்படுத்தி, இறுதிக்கட்ட தூரத்தை கடக்கும்

தும்பா ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் ஸ்பேஸ்பிளேன் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது 5 கிமீ தூரம் கொண்ட ஓடுபாதை தேவைப்படும். ஆனால், அந்த விசேஷ ஓடுபாதை இல்லாத காரணத்தால், கடலில் தரையிறக்கப்பட்டு, மீண்டும் அதனை மீட்டு வந்து மறுபயன்பாட்டுக்கு ஏற்றதாக சில பணிகளை செய்ய வேண்டியிருக்கும்

ஒரு ஸ்பேஸ்பிளேனை 100 முறை வரை விண்ணில் செலுத்தி செயற்கைகோள்களை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்த முடியும். இதனால், ராக்கெட் தயாரிப்பு செலவு வெகுவாக குறையும். ஏற்கனவே, உலக அளவில் குறைந்த செலவில் செயற்கைகோள்களை செலுத்தும் பெருமை இஸ்ரோவுக்கு உண்டு
வரும் 2025ம் ஆண்டு முதல் ஸ்பேஸ்பிளேன் தயாரிப்பு நிலைக்கு கொண்டு சென்று விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இது மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அதற்கு அடுத்து விண்வெளி வீரர்கள் பயணித்து திரும்புவதற்கான ஸ்பேஸ்பிளேனை உருவாக்கும் திட்டமும் இந்தியாவிடம் உள்ளது

ஸ்பேஸ் டெக் (Space Tech) எனப்படும் விண்வெளி தொழில்நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளையும் சாதனைகளையும் தொடர்ச்சியாக அதே சமயம் வெற்றிகரமாக நிகழ்த்திக்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றொரு ஸ்பேஸ் டெக் வளர்ச்சியில் களம் குதித்துள்ளது..!

இம்மாதத்தில் மீத்திமிசுத்தாரை அல்லது மீயொலிவேக எரிதல் திமிசுத்தாரை எனப்படும் ஒருவகை திமிசுத்தாரை, காற்றெரி தாரை என்ஜீனான ஸ்க்ராம்ஜெட் என்ஜீன் (Scarmjet Enjine) மாதிரியை உருவாக்கி இஸ்ரோ சோதனை செய்ய இருக்கிறது.


தற்போது அரை மீட்டர் அகலம் மற்றும் 45 கிலோ எடையளவில் உருவாக்கம் பெற்றுள்ள மாதிரியானது பின்னாளில் இரண்டு நிலைகளில் உருவாக்கம் பெற்று இந்தியாவின் கனவு ராக்கெட் சக்தியாக வளர இருக்கிறது.
இவ்வகை என்ஜீன்களில் எரிதல், சூப்பர்சோனிக் வேகத்திலேயே நடைபெறுகிறது. அதிவேகத்தில் செல்லும்போது காற்றை அமுக்குதல் மற்றும் எதிர்முடுக்கம் கொடுத்து எரித்து உந்துவிசையை ஏற்படுத்துகிறது..
இதன்மூலம் மீத்திமிசுத்தாரைகள், திமிசுத்தாரைகளைவிட பன்மடங்கு அதிக வேகத்தில் சிறப்பாகச் செயல்புரியக்கூடும். கோட்பாட்டளவில் இவற்றின் அதிகபட்ச வேகம் மாக் 12 (மணிக்கு 9,100 மீட்டர் - மணிக்கு 5,000 கிலோமீட்டர்) முதல் மாக் 24 (மணிக்கு 18,000 மேட்டர் - மணிக்கு 29,000 கிலோமீட்டர்) எனுமளவில் இருக்கும்..!




இப்போது இருக்கும் ராக்கெட்களை விட குறைந்த செலவில் அதே சமயம் அதிக திறனுடன் செயற்கைக்கோள்கள் மற்றும் அதை அமைப்புகளை விண்வெளிக்குள் அனுப்ப அவைகள் உதவும்..!
திரவ அல்லது கடுங்குளிர் அமைப்புகள் கொண்ட வழமையான ராக்கெட் அமைப்புகளை விட இவைகள் மிக நம்பகமானதாக இருக்கும் என்கின்றன உந்துவிசை விஞ்ஞானிகள்.

கடந்த மார்ச் 2010-இல், ஒரு மந்தமான மீத்திமிசுத்தாரை இயந்திர தொகுதியை சோதனை உயர் தொழில்நுட்ப வாகன
(ATV-D-01) ( ஏடிவி - டி 01 ) என்ற பெயர்கொண்ட சோதனை ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சோதனை இஸ்ரோவினால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
ATV-D-01
ATV-D-01- 2010
ATV-D-01
ATV-D-01-2010
.

இம்முறை நடக்கப் போகும் ஸ்க்ராம்ஜெட் என்ஜீன் சோதனையானது ஐந்து வினாடிகள் அளவிலான தக்க வைக்கும் சக்தி கொண்டிருக்கும் வண்ணம் இஸ்ரோ எதிர்பார்க்கிறது



இஸ்ரோவின் மீத்திமிசுத்தாரை எஞ்சின் முயற்சியும் வெற்றியில் முடிவதோடு, பிற உலக நாடுகளுக்கு மத்தியில் அதிரடி கிளப்பும் என்பதில் சந்தேகமே வேண்டாம்..!


  இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்டான

      ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)

 வெற்றிகரமாக விண்ணில் ஏவிய பரிசோதனை வெற்றி


ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)

           ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)



விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ராக்கெட்டுக்கள் இப்படி வீணாவதை தவிர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய ராக்கெட்டுக்களை பயன்படுத்தி வருகிறது. பால்கன் 9 உள்ளிட்ட நாசாவின் ராக்கெட்டுக்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரக் கூடியவை.


இந்நிலையில், இதேபோல் மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை பொருத்தி விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி வருகின்றனர். 


ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)

          ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)





பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும், இந்த வகை ராக்கெட்டுகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். அவை செயற்கைக்கோள்களை அதன் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி விட்டு, விண்ணிலேயே வெடித்துச் சிதறிவிடும். இதை தவிர்ப்பதற்காக மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் (மறுபயன்பாடு விண்வெளி செலுத்து வாகனம்) வகையில் (Reusable launching vehicle -technology demonstrator ) ‘ரீயூசபிள் லாஞ்சிங் வெகிகிள்- டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்’ (ஆர்.எல்.வி-டிடி) 


ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)
என்ற பெயரில் புதிய ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இதற்காக முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஆர்.எல்.வி டிடி என்கிற ராக்கெட்டை தயாரித்துள்ள இஸ்ரோ,அந்த ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் ஏவுதளத்தில் வெற்றிகரமாக செலுத்தியது
அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற. வளர்முக நாடுகளின் மீள் பாவனை விண்வெளி ஓடப் பரிசோதனைகள் ஒவ்வொன்றாக அரங்கேறி வரும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது.

ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)

அதாவது இந்தியா தனது மீள் பாவனை செய்யக் கூடிய முதலாவது மாடல் ராக்கெட்டு இனை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இது இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும்.

அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த ஆர்.எல்.வி. டி.டி. ராக்கெட்டை முதன்முறையாக இந்தியா சோதனை செய்துள்ளது. ரூ.95 கோடியில் மறுபயன்பாட்டு மாதிரி ராக்கெட்டை உருவாக்கி உள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். விண்ணில் செலுத்தப்பட்ட மறுபயன்பாட்டு ராக்கெட், 17 மீட்ட நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது. 70 கி.மீ. விண்ணில் சென்று மீண்டும் பூமிக்கு திரும்புகிறது ஆர்.எல்.வி. டி.டி. ராக்கெட்.
 


ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)


''ஆர்.எல்.வி டிடி ராக்கெட் தற்போது முதல்முறையாக தொழில்நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்படுகிறது. இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகு, செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்படும்.

அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த வகை ராக்கெட் முழுக்க முழுக்க இந்தியாவில் முதன் முறையாக இந்திய விஞ்ஞானிகளின் 5 வருட முயற்சியில் தயாரிக்கப்பட்டது. இது 70 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்பும். இந்த ராக்கெட் பூமியை வந்தடைந்த பிறகு அதனுடைய ஆய்வு தொடர்ந்து நடைபெறும்"

இப்பரிசோதனை மூலம் விண்வெளிப் பாவனைக்கான ராக்கெட்டுக்களின் தயாரிப்பு செலவும் அதன் கழிவுகளும் வெட்டப் பட்டு இரு வழிகளிலும் நண்மை ஏற்பட கை கூடியிருப்பதாகவும் தமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி அடைந்திருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் விண்வெளி ஆய்வுகளின் ஜாம்பவானாக விளங்கிய அமெரிக்கா மீள் பாவனை விண் ஓடங்களின் தொடர் விபத்துக்களால் ஸ்தம்பிதம் அடைந்தது. இதனால் கடந்த 5 வருடங்களாக சர்வதேச விண்வெளி ஆய்வு ஓடமான ISS இற்கு ரஷ்ய விண் ஓடங்களையே (சோயுஷ்) நாசா பாவித்து வருகின்றது. எனினும் சிறியளவிலான மற்றும் வினைத் திறன் மிக்க விண் ஓடங்களைத் தயாரிப்பதில் ரஷ்யா(Roscosmos), ஜப்பான்(Jaxa) மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான (ESA) ஆகியவை முனைப்புக் காட்டி வருகின்றன.
எனினும் விண்ணில் புவி ஈர்ப்பு வளையத்துக்கு வெளியே ராக்கெட்டு மூலம் சென்று பின்னர் மறுபடி திரும்பி வரக் கூடிய விண் ஓடங்களை Elon Musk’s இனது SpaceX மற்றும் Jeff Bezos’s இனது Blue Origin ஆகிய கம்பனிகளே வெற்றிகரமாகத் தயாரித்துள்ளன. இதனால் ரஷ்யாவும் ஜப்பானும் இக்கம்பனிகளில் இணைந்துள்ளன
இவற்றை அடுத்து இந்தியா தான் அடுத்த நாடாக இந்த சவாலை வெற்றிகரமாக சந்தித்துள்ளது.

ஆர்.எல்.வி டிடி (RLV-TD) (Mini space shuttle)

சிறிஹரிகோட்டாவின் சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து சுமார் 23 அடி நீளமான இந்த விண் ஓடத்தை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு விஞ்ஞானிகள் செலுத்தி இருந்தனர். பூமியின் தரையில் இருந்து 56 Km உயரத்தில் RLV-TD என்ற குறித்த விண் ஓடத்தை விட்டு HS9 என்ற ராக்கெட்டு விலகியது. பின்னர் தனது பூஸ்டரின் உதவியுடன் 65 Km உயரத்தை அடைந்த இந்த ஓடம் பூமியின் வளி மண்டலத்துக்குள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் இறங்கியது.
இதன் போது ஏற்படும் கடும் வெப்பத்தால் வெடித்துச் சிதறாது வெப்ப சமநிலை கருவியின் உதவியுடன் பூமியை நோக்கி விரைந்த குறித்த ஓடம் சிறிஹரிகோட்டாவில் இருந்து 450 Km தொலைவில் வங்களா விரிகுடா கடலில் பத்திரமாக இறங்கியது. 


இந்த வெற்றி இந்திய விண்வெளி மையமான ISRO இஸ்ரோவின் ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ராக்கெட், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் முதல்படி மட்டுமே ஆகும். இது, இறுதி வடிவம் பெறுவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். இறுதி வடிவ ராக்கெட், தற்போது உள்ளதை விட 6 மடங்கு பெரிதாக இருக்கும்.
 
ஏவும் செலவு குறையும்



இது, 1980-ம் ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்ட எஸ்.எல்.வி- 3 ராக்கெட்டை போன்ற எடையில் இருக்கும். முதலில் பூமியில் இருந்து ராக்கெட்டை போல ராக்கெட் புறப்படும். அதன்பின் விண்ணில் 70 கி.மீ. தூரத்தை தொட்டதும், ஆர்.எல்.வி.யின் பூஸ்டர் பிரிந்து ராக்கெட் தனியாக பறக்கும் தன்மை கொண்டது.
 
ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளதால், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான செலவு 10 மடங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

அதற்கான முதல் அடியை தான் தற்போது எடுத்து வைத்துள்ளோம். விஞ்ஞானிகளின் 5 ஆண்டுகால கடின உழைப்பில் ரூ.95 கோடி செலவில் உருவான, இந்த ராக்கெட் பூமிக்கு திரும்பும் போது உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது.
 

இதற்காக விண்கலத்தின் வெளிப்புறத்தில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாங்கும் ஓடுகள் வேயப்பட்டுள்ளதால் மிக பாதுகாப்பாக தரை இறங்கியது. இது இஸ்ரோவின் அடுத்த சாதனையாகும்.



மீத்திமிசுத்தாரை (Scramjet)



மீத்திமிசுத்தாரை (மீயொலிவேக எரிதல் திமிசுத்தாரை) (Scramjet) எனப்படுவது ஒருவகை திமிசுத்தாரை, காற்றெரி தாரைப் பொறியாகும்; இதில் எரிதல் மீயொலிவேகத்திலேயே நடைபெறுகிறது. திமிசுத்தாரைகளைப் போலவே, 
இவையும் அதிவேகத்தில் செல்லும்போதுதான் காற்றை
அமுக்கு, எதிர்முடுக்கம் கொடுத்து எரித்து உந்துவிசையை ஏற்படுத்துகிறது; 


ஆனால் திமிசுத்தாரைகளில் காற்று, குறையொலிவேகத்துக்கு எதிர்முடுக்கம் செய்யப்படுகிறது - மீத்திமிசுத்தாரைகள் அந்தளவுக்கு காற்றை எதிர்முடுக்கம் செய்யாமல் மீயொலிவேகத்திலேயே எரித்தலை நிகழ்த்துகின்றன. இதன்மூலம் மீத்திமிசுத்தாரைகள், திமிசுத்தாரைகளைவிட பன்மடங்கு அதிக வேகத்தில் சிறப்பாகச் செயல்புரியக்கூடும்: கோட்பாட்டளவில் அவற்றின் அதிகபட்ச வேகம் மாக் 12 (9,100 mph; 15,000 km/h) முதல் மாக் 24 (18,000 mph; 29,000 km/h) எனுமளவில் இருக்கும்.

KARTHIKKN

No comments:

Post a Comment

Ads Inside Post