Sunday, 21 August 2016

சாக்‌ஷி சாதனையில் லலிதாவை மறந்து விடவேண்டாம்.! தோற்றாலும் லலிதாவின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது....!


சாக்ஷி சாதனையில் லலிதாவை மறந்து 
விடவேண்டாம்...!



சாக்ஷி  மலிக்க்கின் சாதனைக்கும் தீபாவின் முயற்சிக்கும் சற்றும் சளைத்தல்ல லலிதா பாபரின் சாதனை. 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்ச்சேஸ் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்று வரை முன்னேறி சாதனை படைத்தவர்தோல்வியை சந்தித்தாலும், இந்தியா போன்ற ஒரு நாட்டில் இருந்து ஒலிம்பிக் தடகளத்தில் இறுதிச் சுற்று வரை முன்னேறுவதே தங்கம் வென்றதற்கு சமம்தான்.


இதற்கு முன், மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி உஷா  இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். அதற்கு பிறகு லலிதா பாபரால்தான், அத்தகைய உயரத்தை எட்டியவர்.



கடந்த 1989ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலம்,சதாரா மாவட்டத்தில் உள்ள மோகி என்ற குக்கிராமத்தில் லலிதா பாபர் பிறந்தார்ஏழ்மையான விவசாயக் குடும்பம். சதாராவோ, வறட்சியின் பிடியில் தவிக்கும் ஒரு பகுதி. பள்ளி செல்ல வேண்டுமென்றால் கூட, 4 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். லலிதா பள்ளிக்கு ஓடியே போவார். திரும்ப ஓடியே வருவார். பள்ளிக்கு ஓடி ஓடியே தடகள வீராங்கனையாக மாறிய ஒரே வீராங்கனை லலிதா பாபராகத்தான் இருக்க வேண்டும்.



சதாராவில் வறட்சி காரணமாக லலிதாவின் குடும்பத்தில் வறுமை. அப்போதெல்லாம் மாரத்தன் போட்டிகளில் வெல்பவர்களுக்கு மகராஷ்ட்ராவில் கொஞ்சம் அதிகமாகவே பரிசுகள் கிடைத்தது. ஓட்டத்தில் ஆர்வம் கொண்ட லலிதா, குடும்ப வறுமையை போக்க மாரத்தன் ஓட ஆரம்பித்தார். பரிசாக அவ்வப்போது கொஞ்சம் ரொக்கம் கிடைத்தது. ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்துவது போல, ஊர் ஊராக சென்று ஓடியே சம்பாதித்தார். குடும்பத்தினரின் பாரம் கொஞ்சம் குறைந்தது. புகழ்பெற்ற மும்பை மாரத்தானில் மட்டும் தொடர்ந்து 3 முறை லலிதா சாம்பியன் ஆகியுள்ளார்.




தொடர்ந்து ஸ்டீபிள்சேஸை லலிதா தேர்வு செய்து, தேசிய அளவில் பல சாதனைகள் படைத்தார். கடந்த 2009ம் ஆண்டு ரயில்வேயில் வேலை கிடைத்தது. அதற்கு பிறகுதான், லலிதாவால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.

எல்லா தடகள வீரர்களைப் போலவே லலிதாவுக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு. அதற்காக மைதானத்திலேயே தவம் கிடப்பார்முயற்சிக்கும் கடும் உழைப்புக்கும் பயனும் கிடைத்து வந்தது

இன்ஷியான் ஆசியப் போட்டியில் 9:35.37 விநாடிகளில் இலக்கினை கடந்து வெள்ளி வென்றார். அடுத்து நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். ஆனால் பெய்ஜிங்கில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப்பில் 8வது இடமே பிடிக்க முடிந்தது.

 
அதற்காக லலிதா துவண்டுப் போகவில்லை. ரியோ ஒலிம்பிக்கிற்காகத் தன்னை தீரத்துடன் தயார் செய்தார். ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார்.
ரியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றுக்கு லலிதா தகுதி பெற்ற போது, எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது. லலிதா எப்படியும் ஏதாவது ஒரு பதக்கத்தை வெல்வார் தேசத்தின் ஏக்கத்தை தீர்ப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஒலிம்பிக் பெரியகளம். இறுதிச் சுற்றில் மொத்தம் 18 பேர் பங்கேற்றனர். பஹரைன் வீராங்கனை ரூத் ஜெபட் தங்கமும் கென்ய வீராங்கனை ஹைவின் வெள்ளியும் அமெரிக்காவின் எம்மா வெண்கலமும் வென்றனர். லலிதாவால் 10வது இடமே பிடிக்க முடிந்தது. டைமிங் 9:22.74



ஓடி முடிந்ததும் ''இந்த பீல்ட் கொஞ்சம் டஃப்தான். பதக்கம் வெல்வது சாதாரண விஷயம் இல்லை. 10வது இடம் பிடித்து கூட வருத்தமளிக்கவில்லை. டைமிங்தான் வருத்தமளிக்கிறது'' என்றார் லலிதா.

தோற்றாலும் லலிதாவின் முயற்சியை பாராட்டாமல் 
இருக்க முடியாது....!




No comments:

Post a Comment

Ads Inside Post