சாக்ஷி மாலிக்
யார்? வாகை சூடியது எப்படி?
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய சாக்ஷி மாலிக் எப்படி ஜெயித்தார், என்ன சாதனைகள் படைத்திருக்கிறார் என்பதையும் அவரது பயோடேட்டாவையும் பார்க்கலாம்.
அரியானா மாநிலம் ரோட்டாக் மாவட்டத்தில் உள்ள மோக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சாக்ஷி மாலிக். 1992-ம் ஆண்டு
செப்டம்பர் 3-ந்தேதி பிறந்தார். பெற்றோர்: சுக்பிர்-சுதேஷ், சகோதரி சுவாதி,
சகோதரர் சச்சின்.
வயது: 23, உயரம்:
162 சென்டிமீட்டர், எடை: 58 கிலோ
ரியோ ஒலிம்பிக்கில் சாதித்தது எப்படி?
பதக்கத்துக்கு முத்தமிட, ஒரே நாளில் அதாவது 8 மணி நேரத்தில் 5 வீராங்கனைகளுடன் மல்லுகட்டியிருக்கிறார்.
தகுதி சுற்று: ஜோஹன்னா மேட்சனுடன் (சுவீடன்) வெற்றி (5-4)
பிரதான முதலாவது சுற்று: மரியானா செர்டிவாராவுடன் (மால்டோவா) சமன் (5-5). பிறகு எச்சரிக்கை புள்ளியை தவிர்த்து அதிகமான புள்ளிகளை எடுத்ததன் அடிப்படையில் வெற்றி அறிவிப்பு.
கால்இறுதி: வலெரியா கோப்லோவாவுடன் (ரஷியா) தோல்வி (2-9)
‘ரெபசாஜ்’ நேரடி 2-வது சுற்று: ஒர்கோன் புரேவ்டோர்ஜியுடன் (மங்கோலியா) வெற்றி (12-3)
ரியோ ஒலிம்பிக்கில் சாதித்தது எப்படி?
பதக்கத்துக்கு முத்தமிட, ஒரே நாளில் அதாவது 8 மணி நேரத்தில் 5 வீராங்கனைகளுடன் மல்லுகட்டியிருக்கிறார்.
தகுதி சுற்று: ஜோஹன்னா மேட்சனுடன் (சுவீடன்) வெற்றி (5-4)
பிரதான முதலாவது சுற்று: மரியானா செர்டிவாராவுடன் (மால்டோவா) சமன் (5-5). பிறகு எச்சரிக்கை புள்ளியை தவிர்த்து அதிகமான புள்ளிகளை எடுத்ததன் அடிப்படையில் வெற்றி அறிவிப்பு.
கால்இறுதி: வலெரியா கோப்லோவாவுடன் (ரஷியா) தோல்வி (2-9)
‘ரெபசாஜ்’ நேரடி 2-வது சுற்று: ஒர்கோன் புரேவ்டோர்ஜியுடன் (மங்கோலியா) வெற்றி (12-3)
‘ரெபசாஜ்’ வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம்: அய்சுலு டைனிபிகோவாவை (கிர்கிஸ்தான்) சாய்த்து (8-5) பதக்கத்தை சூடினார்.
அது என்ன ‘ரெபசாஜ்’ (repechage round) ?
மல்யுத்தத்தில் தோல்வி அடைவோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது தான் ‘ரெபசாஜ்’ முறை. அதாவது இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வீரர் அல்லது வீராங்கனைகளிடம் முந்தைய ஆட்டங்களில் தோல்வி அடைவோர் மட்டும் ‘ரெபசாஜ்’ மூலம் மீண்டும் ஒரு முறை விளையாடும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். இந்த முறையில் அதிகபட்சமாக வெண்கலம் வெல்ல முடியும். இவ்வாறு வாய்ப்பு பெறுபவர்கள் படிப்படியாக முன்னேறினால், கடைசியில் அரைஇறுதியில் தோற்று காத்திருப்போரிடம் வெண்கலப் பதக்கத்துக்காக கோதாவில் குதிக்க வேண்டும்.
சாக்ஷி மாலிக்குக்கு கால்இறுதியில் ‘செக்’ வைத்த ரஷியாவின் வலெரியா கோப்லோவா இறுதிசுற்றை எட்டியதால், சாக்ஷிக்கு மறுவாழ்வு கிட்டியது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அமர்க்களப்படுத்திய சாக்ஷி மாலிக், ஒரே நாளில் தேசத்தின் நாயகியாக உச்சத்துக்கு சென்று விட்டார்.
சாதனைகள் என்னென்ன?
* நவீன ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மல்யுத்தம் 1896-ம் ஆண்டு முதல் இருந்தாலும் பெண்களுக்கான மல்யுத்தம் 2004-ம் ஆண்டு தான் அறிமுகம் ஆனது. மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற அரிய மகிமையை சாக்ஷி மாலிக் பெற்றுள்ளார்.
* கர்ணம் மல்லேஸ்வரி (பளுதூக்குதல்), மேரிகோம் (குத்துச்சண்டை), சாய்னா நேவால் (பேட்மிண்டன்) ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பெண்மணிகள் ஆவர். இந்த பட்டியலில் சாக்ஷியும் இணைந்துள்ளார்.
* சாக்ஷியின் பதக்கத்தால் மல்யுத்தத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 5 ஆக (1952-ம் ஆண்டு கே.டி.ஜாதவ், 2008, 2012-ம் ஆண்டுகளில் சுஷில்குமார், 2012-ம் ஆண்டு யோகேஷ்வர் தத்) உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் தனிநபர் விளையாட்டில் அதிக பதக்கங்களை பெற்றுத்தந்த விளையாட்டாக தற்போது மல்யுத்தம் திகழ்கிறது.
ரியோ
ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது.
மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப்
பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்தார்.
இதன்மூலம்
ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்ற சரித்திர சாதனையையும் படைத்தார் ஹரியாணாவைச் சேர்ந்த சாக்ஷி.
காலிறுதியில்
சாக்ஷி மாலிக் மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான
மல்யுத்தப் போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை
வீழ்த்தினார்.
இந்தச்
சிலிர்ப்பூட்டும் ஆட்டத்தில், முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்ஷி பின்
தங்கியிருந்தார். மீண்டு எழுந்த அவர் பின்னர் தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி
8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்
ஆட்டநேரம்
முடிய சில நொடிகளே இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் எடுத்த மூன்று புள்ளிகளே
2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வெல்ல காரணமாக இருந்தது.
முன்னதாக,
மங்கோலிய வீராங்கனை ஆர்கோன் என்பவரை 12-3 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தியதன்
மூலம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியில்
அவர் விளையாடிய விதமே எதிர்பார்ப்புகளை எகிறவைத்தது.
ஆரம்ப
சுற்றுகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய சாக்ஷி, காலிறுதிப் போட்டியில்
ரஷ்யாவின் வெலேரியா கோப்லோவாவிடம் 9-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி அல்லது
தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், வெண்கலத்துக்கான சுற்றுகளில்
அசத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
ரியோ
ஒலிம்பிக் தொடங்கி 12 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவின் பதக்க தாகத்தை சாக்ஷி
தீர்த்து வைத்துள்ளது மகிழ்வுக்குரியது.
சாக்ஷி
மாலிக்: ஹரியாணாவில் இருந்து ரியோ வரை:
ஹரியாணா
மாநிலம் ரோட்டக்கை சேர்ந்த ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்
புதன்கிழமை ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப்
பதக்கம் வென்று தந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ரியோ
ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும்,
ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற
பெருமையும் பெற்றுள்ளார்.
அதேபோல்,
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும்
பெற்றுள்ளார். முன்னதாக, யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் ஒலிம்பிக்
மல்யுத்தத்தில் பதக்கம் வென்றவர்கள் ஆவர்.
2002-ல்
இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்ஷி கிளாஸ்கோ
காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014-ல் நடந்த ஆசிய
போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
'12 ஆண்டு
உழைப்பின் பலன்'
ரியோவில்
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக் மகிழ்ச்சி
"ஒலிம்பிக்
மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என
சற்றும் எதிர்பார்க்கவில்லை!"
ஒலிம்பிக்
போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், தனது 12
ஆண்டு கடின உழைப்பின் பலனாக வெற்றி கிட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.
ரியோ
ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது.
மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக்
வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்திருக்கிறார்.
தனது
வெற்றி குறித்து அவர் கூறும்போது, "எனது 12 வருட கடின உழைப்புக்கு கிடைத்த
வெற்றி இது. கடந்த முறை லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கீதா முதல்முறையாக
மல்யுத்த போட்டிக்கு தகுதி பெற்றார். நான் இப்போது பதக்கம் வென்றிருக்கிறேன்.
ஒலிம்பிக்
மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என
சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் மல்யுத்தப் போட்டிகள் நிறைவடையவில்லை. மற்ற
வீரர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.
போட்டியில்
சிறப்பாக தாக்குப்பிடித்த சாக்ஷி தனது விளையாட்டு நுட்பங்கள் குறித்து
கூறும்போது, "நான் இறுதி நொடி வரை போராடினேன். ஐந்து நிமிடங்கள் எதிரியை
தாக்குப்பிடித்தால் வெற்றி வசமாகும் எனத் தெரியும். இறுதிச் சுற்றில் என் முழு
பலத்தையும் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் விளையாடினேன்.
எனது
வெற்றியை என்னுடைய மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களது எதிர்பார்ப்புக்கு
ஏற்ப செயல்படுவேன்" என்றார்.
ரோட்டக்
முதல் ரியோ வரை: சாக்ஷியின்
ஒலிம்பிக் சாதனையும் 15 தகவல்களும்!
* கால்
இறுதியில் சாக்ஷி மாலிக் 2-9 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவின் வெலெரியா
கோப்லோவாவிடம் தோல்வி கண்டார். வெலெரியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால்
'ரெபிசேஜ்' சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு சாக்ஷிக்கு கிடைத்தது. இந்த சுற்றில்
அவர், மங்கோலிய வீராங்கனை ஆர்கோன் புர்வித்ஜை 12-3 என்ற கணக்கில் வீழ்த்தி
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
* வெண்கலப்
பதக்கத்துக்கான போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோ வாவை
வீழ்த்தினார் சாக் ஷி. இந்த ஆட்டத்தில் முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்ஷி பின்
தங்கியிருந்தார். கடைசி கட்ட விநாடிகளில் மீண்டு எழுந்த அவர் கடுமையாக போராடி 8-5
என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். ஒலிம்பிக் போட்டிகள்
தொடங்கி 13 நாட்கள் ஆன நிலையில் இந்தியாவின் பதக்க ஏக்கத்தை சாக்ஷி தீர்த்து
வைத்துள்ளார்.
* 4-வது
வீராங்கனை: ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த 23
வயதான சாக்ஷி மாலிக் ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்தவர். ரியோ ஒலிம்பிக்கில்
பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி
வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற 4-வது வீராங்கனை என்ற பெருமையும் அவர்
பெற்றுள்ளார். இதற்கு முன்னர் பளு தூக்குதலில் கர்ணம் மல்லேஷ்வரி,
குத்துச்சண்டையில் மேரிகோம், பாட்மிண்டனில் சாய்னா நெவால் ஆகியோர் பதக்கம்
வென்றுள்ளனர்.
*
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற 4-வது இந்தியர் என்ற பெருமையையும்
பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜே.டி.ஜாதவ், யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார்
ஆகியோர் பதக்கம் வென்று கொடுத்துள்ளனர். இதில் சுஷில் குமார் 2008-ல் வெண்கலப்
பதக்கமும், 2012-ல் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
* 2002-ல்
இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்ஷி கிளாஸ்கோ
காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தோஹாவில் 2014-ல்
நடைபெற்ற ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
* தற்போது
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், ரியோ
ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்ற நிலையில் பதக்கப் பட்டியலில்
தற்போது 70-வது இடத்தில் உள்ளது.
* பரிசு
மழை: நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை தேடித் தந்த சாக்ஷிக்கு ரூ.2.5 கோடி
பரிசு வழங்க உள்ளதாக ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு அரசுப்
பணியும் வழங்க உள்ளதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது.
*
விளையாட்டு அமைச்சகத்தின் விருது வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம்,
ரயில்வே அமைச்சகம் சார்பில் ரூ.60 லட்சம், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் ரூ.20
லட்சம், ஒலிம்பிக் நல்லெண்ண தூதர் சல்மான்கான் வழங்கும் ரூ.1,01,000 ஆகிய பரிசுத்
தொகையையும் சாக் ஷி பெற உள்ளார். மொத்தம் ரூ.3.50 கோடி பரிசுத்தொகையை அள்ள உள்ளார்
சாக்ஷி
.
* ரயில்வே
அமைச்சகம் பரிசுத் தொகையுடன் சாக் ஷிக்கு பதவி உயர்வும் வழங்க உள்ளது. சாக் ஷி
தற்போது வடக்கு ரயில்வேயில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக்கில்
வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் பதவி சாக் ஷிக்கு
வழங்கப்பட உள்ளது.
* சாக்
ஷியின் பயிற்சியாளர் குல்தீப் மாலிக்குக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.10 லட்சம்
பரிசுத்தொகை வழங்க உள்ளது.
* பாராட்டு
மழை: பதக்கம் வென்ற சாக்ஷிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து
வருகின்றன. ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,
இந்த வெற்றி யின் மூலம் இந்தியர்களை சாக் ஷி பெருமைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்
.
*
ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சாக் ஷியின் வெற்றி
இளம் வீரர்களுக்கு உந்துதலாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய
விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
* ராகுல்
டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சேவக், தோனி, அபிநவ் பிந்த்ரா, சுஷில் குமார்,
மேரி கோம், விஜேந்தர் சிங், ககன்நரங், விவிஎஸ் லட்சுமண், அனில் கும்ப்ளே, அஸ்வின்,
ரூபிந்தர்பால் சிங், ஸ்ரீஜேஷ், ஹீனா சித்து, ஜூவால கட்டா உள்ளிட்ட விளையாட்டு
வீரர்களும் சாக் ஷிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
* ரியோ
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தது குறித்து சாக்ஷி
கூறும்போது, “எனது 12 ஆண்டு கால கடின உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த பதக்கம்.
இதற்காக பகல், இரவாக கடும் உழைப்பை கொடுத்துள்ளேன். லண்டன் ஒலிம்பிக்கில் எனது
சீனியர் கீதா போகத் முதல் முறையாக விளையாட தகுதி பெற்றிருந்தார். ஆனால் அவர் பதக்க
நிலையை எட்டவில்லை.
ஒலிம்பிக்
மல்யுத்தத்தில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனையாக நான் திகழ்வேன் என
ஒருபோதும் நினைத்ததில்லை. களத்தில் உள்ள நமது மற்ற மல்யுத்த வீரர்களும் சிறப்பாக
செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
போட்டியின்
கடைசி நிமிடம் வரை பதக்கம் உன்னுடையது தான் என்று என் உள்மனது கூறிக் கொண்டே
இருந்தது. அந்த பதக்கம் எனக்காக காத்திருக்கிறது என்பதை அறிந்த நான், எதைப்
பற்றியும் கவலைப்படவில்லை. மல்யுத்தம் என்பது 6 நிமிடங்கள் தான்.
எந்த நொடியிலும்
எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கடைசி 8 விநாடியில் அதை என்னுடையதாக
மாற்றினேன்" என்றார்.
No comments:
Post a Comment