இந்திய விளையாட்டு ஆணையத்தின்
தலையெழுத்தை மாற்றுவது யார்?
ஊழல், பாலியல் புகார்... விளையாட்டு வீரர்களை
இந்திய விளையாட்டு உலகத்தின் இதயம் 'சாய்'. SPORTS AUTHORITY OF INDIA என்பதின் சுருக்கமே 'சாய்'. 'சாய்'தான் இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களையும், விளையாட்டு வீரர்கள் களையும் உருவாக்கி வரும் ஒரு அமைப்பு.
இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு, அரசின் சார்பில் பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டது போல விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 1961-ல் உருவான தேசிய விளையாட்டு நிறுவனம், பின்னாளில் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு மையமாக மாறியது. அதன் பிறகு 1984-ல் இந்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் கீழ் இணைந்து, இந்திய விளையாட்டு ஆணையமாக உருப்பெற்றது.

'சாய்' SAI அமைப்பை கட்டுப்படுத்துவது யார்... யார்?
இந்த ஆணையம் முழுக்க முழுக்க, மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் தலைவராக விளையாட்டுத் துறை அமைச்சரும், துணைத் தலைவராக துணை அமைச்சர் அந்தஸ்தில் ஒருவரும், உறுப்பினர்களாக ஏழு பேர் பஞ்சாப், தமிழ்நாடு, ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு அடுத்து லோக்சபா எம்.பி இருவரும், ராஜ்ய சபா எம்.பி ஒருவருமாக மூவர் இருப்பார்கள். இவர்களுக்கும் அடுத்தபடியாக ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் செகரட்டரி, இயக்குநர் பதவிகளில் இருப்பார்கள்.
மேலும் ரயில்வே, ஒலிம்பிக் சங்கம், இந்திய கலாசார சங்கம், இந்திய பல்கலைக்கழகங்களின் தலைவர், சி.ஐ.ஐ தலைவர், எஃ.ஐ.சி.சி.ஐ என மொத்தம் 22 அமைப்புகளை சேர்ந்தவர்கள் 'சாயில் இடம்பெற்று உள்ளனர். இவற்றில் ஆதிக்கம் செலுத்துவது பெரும்பாலும் பெறு நிறுவன அதிபர்களே! இப்படியான ஆணையம்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.
இதுவரை என்ன சாதித்து இருக்கிறது சாய்?
11 இடங்களில் விளையாட்டு சம்பந்தமான படிப்புகள் என்று ஆரம்பித்து பெங்களூரு, காந்திநகர், சண்டிகர்,கொல்கத்தா, இம்பால், கவுகாத்தி, போபால், லக்னோ, சோனா பேட் என்று இந்தியா முழுவதும் ஒன்பது ரீஜனல் சென்டர்களை வைத்துக்கொண்டு, 130 கோடி இந்திய மக்களின் விளையாட்டுகளை தீர்மானித்து வருகிறது.
இவ்வளவு பெரிய மக்கள் தொகைக் கொண்ட இந்திய நாடு, ஏன் இன்னமும் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை என்பதற்கான பதில் இதற்குள்ளேயே அடங்கி இருக்கிறது.
“கடந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் 1643 கோடி ரூபாயை விளையாட்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கினார்கள். இந்த ஆண்டு 1,592 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த பணத்தை வைத்துக்கொண்டு விளையாட்டு மேம்பாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது" என்கிறார்கள் விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும்
உலக ஒலிம்பிக் போட்டியும்,
இந்தியாவின் பதக்கப் பட்டியல்களும்
1900-ம் ஆண்டு உலக ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வாங்கிய இந்தியா , அதன் பிறகு பதக்கம் வென்றது 1952-ல்தான். மல்யுத்தத்தில் பதக்கம் கிடைத்தது. அதன் பிறகு 1996-ல்தான் லியாண்டர் பயஸ் வெண்கலம் வாங்கினார். அதனைத் தொடர்ந்து ஒற்றை எண்ணிக்கையிலேயே பதக்கம் வென்று வருகிறோம்.
குழு விளையாட்டுகளை எடுத்துக்கொண்டால், 1928 ம் ஆண்டு ஹாக்கியில் தங்கம் வென்றோம். தொடர்ந்து 1932, 36, 48, 52, 56, 64 மற்றும் 1980 என்று எட்டு தங்கப்பதக்கங்கள் பெற்றோம். இதுதவிர, வெள்ளிப் பதக்கம் ஒன்றும், வெண்கலப் பதக்கம் ஒன்று கிடைத்தன. இதுதவிர காமன்வெல்த் போட்டிகள், ஆசியன் கேம்ஸ் என்று பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளிலும் நமது பங்களிப்பு குறிப்பிடும்படியாக இல்லை என்பதுதான் உண்மை.

இப்பொழுது என்ன நடக்கிறது சாயில்?
ஒலிம்பிக்கிலும், சர்வதேச விளையாட்டுகளிலும் நம்மால் சோபிக்க முடியாமல்போக என்ன காரணம், சாய் என்னதான் செய்துகொண்டிருக்கிறது? இதுபற்றி சாய் சென்டர்களில் பயிற்சி எடுத்து வரும் மாணவர்களிடம் கேட்டோம்.
தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசினார்கள் அவர்கள்.
''சாயில் அட்மிசன் வாங்குவது முதல் உள்ளே வருவது வரை எல்லா விஷயத்திலும், இங்கு பவர்புல்லாக கோலோச்சும் ஆசாமிகளை பல்வேறு வழிகளிலும் திருப்திப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். விளையாட்டு வீரர்களுக்கு உணவு, உடை, விளையாட்டுச் சாதனங்கள் வாங்குவது என்று அன்னைத்திலும் ஊழல்தான். எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இதுபற்றியெல்லாம் பேசாமல் இருந்து வருகிறோம். இதைவிட பெரியக் கொடுமை விளையாட்டுத் துறையிலும் புகுந்துவிட்ட அரசியல். அரசியல்வாதிகளின் உறவினர்களின் தலையீடு, தொழிலதிபர்களின் சிபாரிசு போன்ற விஷயங்களும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் திறமையான விளையாட்டு வீரர்கள் முன்னுக்கு வரமுடியாத நிலைமை.

அதேபோல், ஒரு விளையாட்டு மாணவனை அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை என்றால், அவனின் எதிர்காலம் அவ்வளவுதான். அந்த மாணவன் எவ்வளவு திறமையான ஆளாக இருந்தாலும் அவனை போட்டிகளில் பங்கெடுக்க விடாமல் விலக்கி வைத்து விடுவார்கள் .ஒரு வருடத்திற்குள் அந்த மாணவன் சாய் சென்டரை விட்டு அவனாகவே வெளியேறும்படி செய்துவிடுவார்கள். அப்படி மன ரீதியாக வெறுத்து ஒதுங்கியவர்களின் பட்டியல் பெரிது.'' என்கிறார்கள் வேதனையுடன்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா சாயில்?
இந்த ஆணையத்தில் பெண் விளையாட்டு வீர்ர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தோம். அதுகுறித்து கிடைத்த தகவல்களும் அதிர்ச்சிகரமானவை.
" பெண் கோச்சுகளுக்குப்பதிலாக பெரும்பாலும் ஆண் கோச்சுகளே வருகிறார்கள். அவர்களில் ஒருசிலர் நல்லவர்களாக இருந்தாலும் பெரும்பாலானோர், குறுநில மன்னர்களாகவே நடந்துகொள்வார்கள். அவர்களின் சில விஷயங்களுக்கு வீராங்கனைகள் உடன்பட்டால் மட்டுமே அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்; இல்லையெனில் புறக்கணிக்கப்படுவார்கள். பல்வேறு ஏழ்மையான பெண்கள், நடுத்தர வர்க்க பெண்கள்தான் இவர்களின் டார்க்கெட். அவர்களின் அத்துமீறல் குறித்து தெரிவிக்கப்பட்ட புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. சாயின் தலைமை இடமான டெல்லிக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள் எழுத்துப் பூர்வமாக சென்றிருக்கின்றன.
சமீபத்திய உதாரணம், தமிழ்நாட்டில் மாயவரத்தில் உள்ள சாய் சென்டரில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சில கோச்சுகள், அங்குள்ள 16 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்களுக்கு பல்வேறு வகையிலும் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அவர்களின் பெற்றோர்களிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்கள் சாய்சென்டரை முற்றுகையிட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பெண்கள் விளையாட்டுத் துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.'' என்று புலம்புகிறார்கள்.
சமீபத்தில் கேரள மாநிலம் அலப்பியில் உள்ள சாய் சென்டரில், நான்கு பெண் விளையாட்டு வீரர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்கள். அதில் அபர்ணா என்கிற பெண் பரிதாபமாக இறந்தார். தெரஷா ஜேக்கப், சபிதா சந்தோஷ் , ஷில்பா ஆகிய மூன்று பெண்களும் ஆபத்தான நிலையில் இருந்து காப்பற்றப்பட்டார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. பதறிப்போன விளையாட்டுத்துறை அமைச்சரும் சாய் நிர்வாகிகளும், கேரளாவுக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநில அரசின் தலையீடு இல்லாதவாறு விசாரணைகளை செய்து வந்தனர்.
சம்பந்தப்பட்ட பெண்கள் நால்வரும், தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வாங்கியவர்கள். அவர்களின் எதிர்காலம் பெரிய அளவில் இருக்கும் என்று கேரள மாநிலமே நம்பியது. ஆனால், தற்கொலைக்கு துணியும் அளவுக்கு அவர்களை ஆளாக்கிய சூழல் என்ன என்பது புரியாத புதிர்தான்.
" நால்வரும் மது அருந்தினார்கள். சீனியர் தட்டிக்கேட்டதால் விசாரணைக்குப் பயந்து நால்வரும் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர்'' என்று அங்கு பணி புரியும் கோச் ராகிணி மீடியாக்களிடம் சொன்னார். ஆனால் இந்தக் குற்றசாட்டை மறுக்கிறார்கள், அங்கிருக்கும் சில வீரர்கள்.
" தற்கொலை செய்து கொண்ட அபர்ணாவும், தற்கொலை செய்ய முயன்ற மற்ற மூன்று பெண்களும் இளம் வயது வீரர்கள். இளமை துடிப்புடன் இருப்பார்கள். சமீபத்தில் கேரளாவில் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடந்தபோது, 'சாயை' சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர் அபர்ணாவை தனியாகச் சந்தித்து, சர்வதேச விளையாட்டுக்கு அழைத்துச் செல்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அபர்ணாவும் அதை நம்பியுள்ளார். அதையடுத்து விடுமுறை நாள் ஒன்றில், கேரளாவில் உள்ள கெஸ்ட் ஹவுசுக்கு தனியாக அழைத்திருக்கிறார் முக்கியப் புள்ளி. ஆனால், அவரது உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட அபர்ணா அதைத் தவிர்த்துவிட்டார். அதனால் அபர்ணாவை டார்க்கெட் செய்து, தொடர்ந்து பல்வேறு வகையில் டார்ச்சர் செய்திருக்கிறார்கள். அதனால் மனமுடைந்து இருந்தார் அபர்ணா. எனினும் வெளியில் எவரிடமும் இதைப்பற்றி அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.
இதுபோலதான் மற்ற மூன்று பெண்களுக்கும் வேறு வேறு நபர்களால் தொந்தரவுகள் தொடர்ந்தன. நால்வரும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தற்கொலை நாடகம் நடத்த முடிவெடுத்தார்கள். இதன் மூலம் பிரச்னையை வெளிஉலகத்துக்கு கொண்டுசெல்லலாம் என்பது அவர்கள் திட்டம். ஆனால் அது விபரீதத்தில் முடிந்துவிட்டது. ஒருவர் நிஜமாகவே பலியாகிவிட்டார். பிரச்னையும் வேறு திசைநோக்கிச் சென்றுவிட்டது'' என்று வேதனையுடன் பகிர்ந்துகொள்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள்.
இதுபோலதான் இந்தியா முழுவதும் சாய் சென்டர்களின் நிலைமை. பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள் மிக மிகக் குறைவு. தவிர பல்வேறு பயிற்சியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படுவதால், அவர்கள் பல்வேறு ஊழல் முறைகேடுகள், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறார்கள். வெளியே பிரச்னை தெரிந்தால், அப்படியே கமுக்கமாக வேலையை விட்டு வெளியே போய் விடுகின்றனர். அதன் பிறகு புகார் கூறிய மாணவர்கள் கட்டம் கட்டப்பட்டு அவர்களின் நிலைமை வேறு மாதிரி ஆகிறது. இதுதான் இன்றைய சாயின் நிலை.

'இந்த நிலையில் எப்படி இந்தியா சர்வதேச அளவில் பதக்கங்கள் வாங்க முடியும்... ஒலிம்பிக் போக முடியும்? 'என்றார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலையெழுத்தை மாற்றுவது யார்?
அறைக்குச் சென்றால்தான் அடுத்த
மேட்சுக்கு வாய்ப்பா?
குத்துச்சண்டை போட்டியில் விளையாடும் இளம்பெண் ஒருவரை, அவருக்கு பயிற்சியாளராக வருபவர், படுக்கைக்கு அழைக்கும் காட்சி சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். நிழலில் மட்டுமல்ல, நிஜத்திலும் நம் இந்தியாவின் பெரும்பாலான விளையாட்டு வீராங்கனைகள் சந்திக்கும் பிரச்னைகளும் வலிகளும் மிக அதிகம். இதையே மிக தத்ரூபமாக பதிவுசெய்திருப்பார்கள் அந்த திரைப்படத்தில்!
இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைவியாக இருந்த
இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைவியாக இருந்த
சோனா சவுத்ரி, தனது ஓய்வுக்குப்பிறகு, சுயசரிதை எழுதினார்.
‘கேம் இன் கேம்’ எனும் தலைப்பிலான அந்தப் புத்தகத்தில், இந்தியக் கால்பந்து அணியில் பெண்களுக்கு எதிராக நிலவும், பல்வேறு பாலியல் தொந்தரவுகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
“இந்திய கால்பந்து அணியின் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். சகலவிதத்திலும் அவர்களை ‘அட்ஜஸ்ட்’ செய்தால்தான் விளையாட்டுக்குத் தேர்வு செய்வோம் என்று மிரட்டுவார்கள். அதேபோல் வெளியிடங்களுக்கு விளையாடச் சென்றால், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளின் அறைகளில்தான் தங்கியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்’’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை அந்த புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் மட்டுமல்ல, மாவட்ட அளவில் விளையாடும் வீராங்கனைகளுக்கும் இதே நிலைமைதான். விளையாட்டுத் துறையில் இந்திய பெண்கள் நுழைவது 1970-களுக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியது. தடகளத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்த காலங்களில், நகர்ப்புற பெண்களிடையே விளையாட்டு ஆர்வம் அதிகரித்தது. அதன் விளைவாக பெண்களுக்கு என்று தனி பயிற்சி மையங்களும், பயிற்சியாளர்களும் உருவானார்கள். தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. சாதிக்கத் துடித்தப் பெண்களை, போகப் பொருளாக பார்க்கத் துவங்கிய நிலையும், அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிட்டன.
இன்றைக்கும் விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் சத்தம் இல்லாமல் தொடர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமே நிலவி வந்த பாலியல் சீண்டல்கள், இப்போது இரண்டாம் நிலை நகரங்களிலும் பரவி, அதிரவைக்கிறது.

தமிழகத்தின் வட மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிறு வயது முதல் ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் உடையவர். பள்ளிக் காலத்தில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர், அதன்பிறகு விளையாட்டு இடஒதுக்கீட்டின் மூலம் சென்னையின் புகழ்பெற்ற கல்லூரியில் இணைந்தார். கல்லூரியில் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் தீவிரம் காட்டியவர், தென்னிந்திய விளையாட்டு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றார்.
தொடர்ந்து, 'தனது அடுத்த இலக்கு இந்திய அளவிலான போட்டியில் வெற்றி பெறுவது' என முடிவு செய்தவர், பயிற்சியின் தீவிரத்தை அதிகரித்தார். அதற்காக தடகளத்தில் புகழ்பெற்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெறச் சென்றார். அவரிடம் இவரைப்போலவே வேறு இரண்டு பெண்களும் பயிற்சிப் பெற்று வந்தனர்.
ஒரு நாள் இரவு பயிற்சியாளரிடம் இருந்து இந்தப் பெண்ணுக்கு போன். “நான் இப்போது காரை எடுத்துக்கொண்டு உன் ஹாஸ்டலுக்கு வருகிறேன். நீ என்னுடன் என் வீட்டுக்கு வரவேண்டும்’’ என்றார் பயற்சியாளர். அதிர்ந்துபோன வீராங்கனை, “ இந்த நேரத்தில் எதற்காக...?’’ என்று தயங்கித் தயங்கி கேட்க, “நீ என் காரில் ஏறினால்தான், உன்னை ஆல் இந்தியா போட்டிக்கு பரிந்துரை செய்வேன்” என்று மிரட்டல் தொனியில் பதில் வந்தது பயிற்சியாளரிடம் இருந்து. முதலில் அதிர்ச்சிக்கு ஆளான அந்தப் பெண், பிறகு சுதாரித்துக் கொண்டார். துணிச்சலுடன், ‘‘அப்படியொன்றும் ஆல் இந்தியா போட்டிகளில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று முகத்தில் அடித்தாற்போன்று பதில்சொல்லிவிட்டு, போனைத் துண்டித்தார் அந்நப் பெண்.
அதன்பிறகு, அவருடைய தடகள வாழ்வில் தொடர் சரிவுதான். திறமை இருந்தும் வாய்ப்பு அளிக்கப்படாமல் ஓரம்கட்டப்பட்ட அந்த வீராங்கனை, இன்று தனது அடையாளத்தைத் தொலைத்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இன்னொரு சம்பவம் தென்மாவட்டத்தில் நிகழ்ந்தது.
தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின், விளையாட்டுத் துறையில் பணி புரியும் பேராசிரியர் ஒருவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவற்றில், 'வெளி மாவட்டங்களுக்கு விளையாடச் செல்லும்போது வீராங்கனைகளிடம் அத்து மீறுகிறார்' என்று வந்த புகார்கள் அதிகம்.
தன்னிடம் பயின்ற விளையாட்டுத்துறை ஆய்வு மாணவி ஒருவரை, “என்னை அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே இங்கு ஆய்வு பட்டம் வாங்கமுடியும்’’ என்று மிரட்டியே தனது ஆசைக்கு இணங்கவைத்தவர், பிறகு ஒருகட்டத்தில், " உன்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்கிறேன்’’ என்று ஆசைவார்த்தை கூறி, அந்த மாணவியை முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டாராம். அவர் தொடர்ந்து விளையாடுவதற்கும் தடை விதித்துவிட்டாராம் அந்தப் பேராசிரியர்.
இவரை மட்டுமல்ல, இன்னும் பல மாணவிகளைச் சீரழித்த அந்தப் பேராசிரியர், முன்னாள் தடகள வீரர் என்பதுடன், தமிழக தடகளச் சங்கத்திலும் முக்கிய பொறுப்பிலும் உள்ளார் என்பதுதான் கொடுமை!

இவ்வளவு ஏன், அகில இந்திய அளவில் ஹாக்கி விளையாட்டில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ஒருவர், தன்னிடம் பயிற்சியில் ஈடுபட்ட பெண்களிடம் அத்துமீறி நடந்து சர்சசையாகியது. மஹாராஷ்ட்ர மாநிலத்தில், வீராங்கனை ஒருவர், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பயிற்சியாளருக்கு 'பளார்' விட்ட சம்பவமும் உண்டு.
ஆக, பெண்களை எளிதாக தங்கள் இச்சைக்கு ஆட்கொள்ளும் நிலை எல்லா துறைகளிலும் உண்டு என்றாலும், விளையாட்டுத் துறையில் மிக அதிகம்.
ஆக, பெண்களை எளிதாக தங்கள் இச்சைக்கு ஆட்கொள்ளும் நிலை எல்லா துறைகளிலும் உண்டு என்றாலும், விளையாட்டுத் துறையில் மிக அதிகம்.
5 shocking incidents of harassment and sexual abuse of Indian female
athletes
1. Women hockey players allege sexual harassment by chief
coach, 2010
For everyone’s information, Hockey is the national game of
India. But the game or more specifically the organisation running it, Hockey
India (HI), has been in the news for all the wrong reasons. In 2010, a few
members of Indian Women’s Hockey team complained of being sexually harassed by
the then chief coach Maharaj Krishan Kaushik. The scenario came to light when
Th. Ranjitha Devi sent an email to HI. She mentioned about being subjected to
sexual harassment and that she was eventually not considered for inclusion in
the team for not acceding to the coach’s ‘demands’. It was also noted that
Kaushik used his reputation of having coached the Men’s 1998 Bangkok Asian
Games gold medal-winning side to the fullest to save himself.
2. National-level gymnast, coach booked for sexual
harassment during Asian Games 2014
In yet another shocking incident of sexual harassment,
gymnastics coach Manoj Rana and gymnast Chandan Pathak were booked for
allegedly sexually harassing a female gymnast at the Indira Gandhi Indoor Stadium
while attending a national camp for the Asian Games 2014.
The 29-year-old woman gymnast revealed that vulgar and
indecent remarks were made about her clothes by the two. The Gymnastic
Federation of India (GFI) promised strict action against Rana and Pathak if
they were found guilty of the charges.
3. Andhra Cricket Association (ACA) secretary asks for
sexual favours for inclusion in team, 2009
In a shocking incident, the women’s team accused the Andhra
Cricket Association (ACA) secretary V Chamundeshwarnath of asking for sexual
favours in order be selected. Following complaints of sexual harassment by
women cricketers, the ACA sacked the secretary and the police booked a
case against him. This shameful act came to light when six women cricketers
met State Home Minister P Sabitha Indra Reddy and explained the situation to
her.
Bronze medallist E Thulasi alleged that the Tamil Nadu Boxing
Association (TNBA) secretary A K Karunakaran misbehaved with her while
asking her to ‘cooperate’ if she wished to be selected for important
events—including the National Games. Karunakaran was arrested along with his
assistant but a lot of boxers from the association condemned the charges. E
Thulasi maintained that she was not selected for an upcoming tournament despite
good performance, as she refused the official’s sexual advances.
5.
Promising female boxer commits suicide at stadium, 2009
A budding talent who could have made India proud in the boxing
ring like Mary Kom chose to end her life following the continuous onslaught of
harassment by her coach. Twenty-one-year-old S Amaravathi consumed poison at
Hyderabad’s Lal Bahadur Stadium for not being able to cope with constant
altercations with her coach Omkar Yadav. An inquiry was ordered,
but hostel authorities denied the charge saying the medal-winning pugilist
was suffering from low self-esteem.
'எல்லா பயிற்சியாளர்களையும் குறைசொல்லி
விட முடியாது'
இந்நிலையில் வீராங்கனைகள் முன்வைக்கும் பாலியல் தொந்தரவு புகார்கள் குறித்து ஹாக்கி பயிற்சியாளர் ஒருவரிடம் கேட்டபோது “ விளையாட்டுத் துறைக்கு பெண்கள் வருவது வரவேற்கத்தக்கது. பல்வேறு சாதனைகளை இன்று பெண்கள்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த பாலியல் தொந்தரவு அவர்களுக்கு தொல்லையாக இருப்பது உண்மைதான். எனினும் ஒட்டுமொத்தமாக எல்லா பயிற்சியாளர்களையும் குறைசொல்லிவிட முடியாது. வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம். இந்தியாவில் நகர்ப்புறங்களில் விளையாடும் வீராங்கனைகளுக்கு இது போன்ற தொந்தரவுகள் அதிகம்.
அதே சமயம் பயிற்சியாளர்களுடன் ஒருசில பெண்கள் கடைப்பிடிக்கும் தவறான அணுகுமுறையும் போக்கும், மற்ற அனைத்து பெண்களையும் பாதிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கும் பயிற்சியாளரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. கடுமையான நடவடிக்கைகள் மூலம்தான் இதனை தடுக்கமுடியும். தொந்தரவுக்கு ஆளாகும் வீராங்கனைகள் புகார் தருவதற்கு துணிந்து முன்வர வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு விடிவு ஏற்படும்“ என்றார்.
இதனிடையே ‘பாலியல் மற்றும் பல்வேறு தொல்லைகள் குறித்து புகார் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானாந்த சோனாவால் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலான விஷயம்.
'பயிற்சியாளர் கவனக்குறைவால்போட்டியில் பங்கேற்கமுடியவில்லை! - தமிழக வீராங்கனைகள் வருத்தம்
பயிற்சியாளர் கவனக்குறைவால் எங்களுக்கு இந்திய சீருடை வழங்கப்படாமல் வீராங்கனைகள் பலர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதாக துருக்கியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தமிழகம் திரும்பிய வீராங்கனைகள், வேதனை தெரிவித்து உள்ளனர்.
சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் துருக்கியில் உள்ள டிராப்சோன் நகரில் கடந்த 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு பிரிவில் 10 மாணவ-மாணவிகள் உள்பட இந்தியாவில் இருந்து 149 பேர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு போட்டிகள் நடந்த சமயத்தில், துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டு குண்டுவெடிப்பு மற்றும் கலவரங்கள் நடைபெற்றன. இதனால், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலை கொண்டனர். அவர்களது வேண்டுகோளின்படி இந்திய வீரர்களை பாதுகாப்பாக தாயகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 149 பேரும் நேற்று துருக்கியில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். அதன் பின்னர், அங்கிருந்து தமிழகத்தை சேர்ந்த தமிழ்செல்வி, பிரியதர்ஷினி, ஹேமமாலினி, சான்ட்ரா பெரோசா மார்ட்டின், அஷீத்குமார், நவீன், பூபேஷ்வர், மணிராஜ் ஆகிய 8 பேர் விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் அஷீத்குமார், ''துருக்கியில் குண்டுவெடிப்பு சம்பவங்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குண்டுவெடித்த இடத்திற்கும் போட்டிகள் நடந்த இடத்திற்கும் சுமார் 800 கி.மீ. தூரம் இருந்தது. எங்களுக்கு நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் விளையாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு இந்திய சீருடைகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. இதனால் நிறைய பேர் பங்கேற்க முடியாமல்போனது. வருங்காலத்தில் இந்த குறைகள் ஏற்படாமலிருக்க விளையாட்டுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் வருத்தத்துடன்.
இன்னொரு வீராங்கனையான சான்ட்ரா பெரோசா மார்ட்டின் கூறும்போது, ''கடந்த முறை இந்திய பெண்கள் அணிக்கு இந்திய சீருடைகள் வழங்காததால் பாதிக்கப்பட்டனர். எனவே இந்த முறை டெல்லியில் பயிற்சியில் இருந்தபோதே இந்திய சீருடைகள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பயிற்சியாளர்களிடம் பலமுறை தெரிவித்தோம். அவர்கள் துருக்கியில் உரிய சீருடைகள் கிடைக்கும் என தெரிவித்தனர். ஆனால் போட்டிகள் தொடங்கும் வரை எங்களுக்கு இந்திய அணியின் சீருடை வழங்கப்படாததால் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் நான், தமிழ்செல்வி, கேரளாவை சேர்ந்த ரோஸ்லின், கோவையை சேர்ந்த சமயஸ்ரீ ஆகியோர் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இந்த போட்டிக்காக ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து உள்ளோம். பயிற்சியின்போது நாங்கள் சிறப்பாக ஓடினோம். நாங்கள் பங்கேற்காததற்கு இந்திய விளையாட்டுத் துறையின் கவனக்குறைவுதான் காரணம். நாங்கள் கலந்து கொண்டு இருந்தால் நிச்சயம் ஒரு பதக்கத்தையாவது வென்று இருப்போம்" என்றார் வேதனையுடன்.

விளையாட்டுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்திய பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
நாசிக் அருகே தலீக்கோன் என்ற சிறிய கிராமம். மாலை 5 மணியளவில் ஒரே பரபரப்பு...எதிர்பார்ப்பு. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் தொலைக்காட்சி முன் தவம் கிடந்தனர். மின்சாரமும் அவ்வப்போது தடைபட்டுக்கொண்டிருந்தது. கிராம மக்களுக்கோ ஒரே எரிச்சல். ''இனிமேல் மின்சாரம் தடைபட்டால் நடப்பதே வேறு '' என ஒருவர் மின் வாரியத்துக்கு போனில் பேசி எச்சரிக்கை விடுத்தார்
ஒலிம்பிக்கில், படகு வலித்தல் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் தத்து பபன் பொகனல்லின் சொந்த கிராமத்தில், நேற்று நடந்த உண்மைச் சம்பவம் இது. நான்கு வருடங்களுக்கு முன், மகாராஷ்ட்ராவின் மராத்வாடா பகுதியில் கடுமையான வறட்சி. மக்கள் கூட்டம் கூட்டமாக பிழைப்புத் தேடி இடம்பெயருகின்றனர். தத்துவின் தந்தை ஒரு வெங்காய விவசாயி. அவரது உயிரை வறட்சியும் புற்றுநோயும் பறித்துக் கொள்கின்றன.
குடும்பத்துக்கு தத்துதான் மூத்த மகன். ஏற்கனவே தந்தையின் மருத்துவச் செலவுக்காக, இருந்த கொஞ்ச நஞ்ச நிலத்தையும் விற்றாகி விட்டது. தத்து தந்தையின் இறுதிச்சடங்குக்கு கூட கிராம மக்கள்தான் உதவியிருக்கின்றனர். கையில் சல்லிக் காசு இல்லாத நிலையில், குடும்ப பாரம் தத்து மீது விழுந்தது..சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார் தத்து. நெடு நெடுவென 6 அடி 4 இன்ச் உயரத்தில் தத்து இருப்பார். ராணுவம் அடைக்கலம் கொடுத்தது. தத்துவின் உயரத்தையும் கை, கால்களின் நீளத்தையும் அளந்த ராணுவ அதிகாரி ஒருவர், 'படகு வலிக்க சரியான ஆள் கிடைத்திருக்கிறார்' என அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.உண்மையைச் சொல்லப் போனால் அதுவரை தத்துவுக்கு நீச்சல் கூடத் தெரியாது. தண்ணீரைக் கண்டால் கூட பயம்.

வாழ்க்கையில் சோகம் இருக்கலாம். ஆனால் சோகமே வாழ்க்கையானால் என்ன செய்வது?. தத்து இரண்டாவது ரகம். கடந்த மார்ச் மாதம், தென் கொரியாவில் ஒலிம்பிக் படகு வலித்தலுக்கான தகுதி சுற்றுப் போட்டியில் பங்கேற்க, தத்து தென்கொரியா சென்றிருந்தார். அந்த சமயத்தில், தத்துவின் தாயார் விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்தார். சுமார் 3 மாத காலம் கோமாவில் இருந்தார். ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தத்துவின் தாயார் வீடு திரும்பினார்.
தாயாரின் சிகிச்சைக்காக தத்துவுக்கு வீட்டை விற்க வேண்டிய நிலை. இப்போது ஓலைக் குடிசை ஒன்றில் தத்துவின் குடும்பம் தஞ்சம் புகுந்திருக்கிறது. வீட்டில் டி.வி கூட கிடையாது. அவரது தாயாருக்கு மேற்கொண்டும் சிகிச்சைத் தேவைப்படுகிறது. ஆனால், தத்துவின் கையில் பணமில்லை. ஒலிம்பிக் படகு வலித்தல் பயிற்சிக்காக அரசு ரூ. 5 லட்சம் மட்டும் ஒரு முறை வழங்கியுள்ளது. அது பயிற்சிக்கு கூட போதவில்லை. இத்தகைய கடினச் சூழலில்தான் ரியோவில் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் தத்து.
அண்மையில் பிரபல எழுத்தாளர் ஷோபா டே, இந்திய ஒலிம்பிக் வீரர்கள் குறித்த சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை வெளியிட்டார். அதில் ''டீம் இந்தியாவின் இலக்கு இதுதாதன். ரியோவில் ஊர் சுற்றுவார்கள். செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். இதுவெல்லாம் பணத்தை வீண் செய்யும் வேலை'' என சகட்டு மேனிக்கு கருத்து கூறியிருந்தார். ஒலிம்பிக் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஷோபா டேவின் இந்த கருத்து விளையாட்டு வீரர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அரசியல் தலையீடும், தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பும் வழங்கும் தேர்வாளர்களுக்கு மத்தியில் இருந்துதான் தத்து போன்ற ஒலிம்பிக் வீரனும் உருவாகி வந்திருக்கிறான் என்பது ஷோபா டே போன்றவர்களுக்குத் தெரியுமா... தெரியாதா என்று நமக்குத் தெரியவில்லை!
இந்திய வீரர்களுக்கு 'எகனாமி' கிளாஸ்... மேலாளர்களுக்கு 'பிசினஸ்' கிளாஸ்!
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் - வீராங்கனைகளுக்கு பிரேசில் செல்ல எகனாமி கிளாசும், மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டும் வழங்கப்பட்டதாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெற்றிருக்கும் ஒரே வீராங்கனை டூட்டி சந்த். 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனை டுட்டி சந்த். கடந்த இரு வருடங்களுக்கு முன், இவரது உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாகக் கூறி, போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்தது இந்திய தடகளச் சங்கம் .
சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட்டு வெற்றி பெற்றார் டூட்டி சந்த். பின்னர் கடுமையான பயிற்சிக்குப் பின், ஒலிம்பிக்கில் பங்கேற்கவும் தகுதி பெற்றிருந்தார். இந்த நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர் -வீராங்கனைகளை ஒலிம்பிக் சங்கம் கவுரவமாக நடத்தவில்லை என டூட்டி சந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து டூட்டி சந்த் கூறுகையில், '' ஹைதராபாத்தில் இருந்து நான் தனியாகத்தான் ரியோடி ஜெனிரோ வந்தேன். எனது பயிற்சியாளர் என்னுடன் வரவில்லை. மேலாளர்கள், பயிற்சியாளர்களுக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. என்னுடன் சேர்த்து ஏராளமான வீரர் - வீராங்கனைகளுக்கு எகனாமி கிளாஸ் டிக்கெட்டுகளே வழங்கப்பட்டன. சுமார் 36 மணி நேரம் பயணம். என்னால் சரியாக உறங்கக் கூட முடியவில்லை. வீரர் வீராங்கனைகளை இப்படி நடத்தினால் ஒலிம்பிக்கில் எப்படி வெற்றி பெற முடியும்?
நாட்டுக்காக விளையாடுபவர்களுக்கு எகனாமி கிளாஸ் கொடுத்து விட்டு, பயிற்சியாளர்களுக்கு பிசினஸ் கிளாஸ் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.அடுத்த ஒலிம்பிக் போட்டியிலாவது இது போன்றத் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் '' என்றார்.

இந்திய விளையாட்டுத் துறையில் நிலவும் குறுக்கீடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ். 'தடகள வீராங்கனை சாந்திக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்தால் மட்டுமே, இந்தியா தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வீரர்கள் மத்தியில் உருவாகும்' என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
'அப்துல்கலாம் ஒலிம்பிக் திறனறிதல் மற்றும் வளர்ச்சி அகாடமி' சார்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் பொன்ராஜ்.
'அப்துல்கலாம் ஒலிம்பிக் திறனறிதல் மற்றும் வளர்ச்சி அகாடமி' சார்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் பொன்ராஜ்.
அந்தக் கடிதத்தில், " ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற சாந்திக்கு ஏற்பட்ட அவமானங்களைத் துடைக்கும் வகையில், ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆஃப் இந்தியா செயல்படவில்லை" எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசிய பொன்ராஜ், " தமிழக வீராங்கனை சாந்திக்கு நேர்ந்த அவமானத்தை சரி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் அளவுக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஊக்கப்படுத்துவதைப் போலவே, அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், 'இந்தியா நம்மை காக்கும்' என்ற நம்பிக்கையை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. அந்தளவுக்கு அரசாட்சி நிர்வாகம் பலவீனமடைந்து நிற்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற சாந்திக்கு அத்தெலெட்டிக் கூட்டமைப்போ, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமோ, விளையாட்டுத் துறை அமைச்சகமோ துணை நிற்கவில்லை. சாந்தியைப் போலவே பெண்மை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட தென் ஆப்ரிக்க வீராங்கனை செமன்யாவின் பின்னால் நின்று, ' பெண்மை சோதனை தவறானது' எனப் போராடி, இழந்த மெடலைத் திரும்ப வாங்கியது அந்த நாடு. அதைவிட மிகுந்த அவமானத்தைப் பெற்ற சாந்திக்குப் பின்னால் நிற்கவே இந்திய அரசு விரும்பவில்லை
இன்றுவரையில் சாந்திக்கு நடந்த பெண்மை தன்மைக்கான பரிசோதனை சான்றைக்கூட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாங்கவில்லை. ' அவர் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது' என எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், வெறும் வாய்மொழி உத்தரவிலேயே ஒரு வீராங்கணையைச் செயலிழக்கச் செய்த விளையாட்டு ஆணையமா, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களின் பின்னால் நிற்கும்? கடந்த 2015-ம் ஆண்டு, ஜூலை 27-ம் தேதி, டியூட்டி சந்த் வழக்கில், ' இனிமேல் ஆண்மை அல்லது பெண்மை பரிசோதனை முறையே கூடாது' எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம். ' பெண்மைதன்மை சோதனைக்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லையென்றால், இந்த விதியையே தள்ளுபடி செய்வோம்' எனக் கூறியிருக்கிறது.
இதை எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல், சாந்தி விவகாரத்தில் சர்வதேச சூழ்ச்சிக்குப் பணிந்து சென்ற இந்திய அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்திற்கு அப்போது தலைமையேற்று நடத்திய அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும். அதே அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும்தான், இன்றைக்கு மோடி தலைமையிலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவை வழிநடத்துகிறார்கள்.
எனவே, சாந்திக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்கும் வகையில் பிரதமர் நேரடியாகத் தலையிட வேண்டும். அப்போதுதான் இந்திய வீரர்களுக்கு தேசத்தின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். அதற்கேற்றார்போல, விளையாட்டுத் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கிராம அளவில் கண்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கும் வகையில் பயிற்சி தளம், உபகரணங்களை அளிக்க வேண்டும்.

விளையாட்டு ஆணையத்தில் நடக்கும் அரசியல், சாதி, மதம், பணம், செல்வாக்கு ஆகியவை நுழையாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். மேலும், அப்துல்கலாம் ஒலிம்பிக் திறனறிதல் வளர்ச்சி அகாடமிக்கு சாந்தியை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, கிராமங்களில் உள்ள சாதனை வீரர்களைக் கண்டறிந்து தயார்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.
கோபி சங்கர்- மூன்றாம் பாலினத்தவருக்காக ‘சிருஷ்டி' மதுரை’ என்ற அமைப்பை நடத்தி வரும்கிறார். மனித இனத்தில் ஆண், பெண்ணைத் தவிர 25 வகைப் பாலினங்கள் இருப்பதாக ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார்
இவர் சமீபத்தில் கையில் எடுத்திருப்பது புதுக்கோட்டை சாந்தி விவகாரத்தை...
தடகளப்போட்டியில் சாதனைகள் படைத்த சாந்தி, சர்வதேச அளவில் இழந்த அங்கீகாரத்தை திரும்ப பெற வேண்டியும், அவர் வழிகாட்டுதலில் தமிழகத்தில் பெரிய அளவிலான தடகள பயிற்சி மையத்தை துவக்கி ஏழை எளிய பிள்ளைகளை பெரிய வீரர்களாக்க வேண்டும் என்றும் ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
நாம் கோபிசங்கரிடம் பேசினோம்.
‘’மதுரை செல்லுரை சேர்ந்த நான் ராமகிருஷ்ண மடத்தில் துறவியாக பயிற்ச்சி எடுத்து வரும்போதுதான் சமூக விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்ததும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அழகியல் மற்றும் நுண்கலை பட்டப்படிப்பில் சேர முடிவெடுத்தேன். அங்கு விண்ணப்ப படிவத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்தது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த நான் என்னுடைய அடையாளத்தை மறைத்துப் படிப்பில் சேர விரும்பவில்லை. உடனே காரியத்தில் இறங்கினேன், பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்னை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நான், அது தொடர்பாக பல பல்கலைக்கழக கருத்தரங்குகளிலும் பேசியிருக்கிறேன். 2 வருடங்களுக்கு முன், கல்கத்தா அருகே ஒரு பல்கலைக்கழக கருத்தரங்கில் பங்கேற்றபோது, அங்கு வந்திருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டது. கல்வி நிலையங்களில் மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்னையை அந்த மாணவர்களிடம் தெரிவித்தேன்.
தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மூன்றாம் பாலினத்தவரைச் சேர்க்க 4 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வந்துவிட்ட நிலையை டெல்லி மாணவ பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினேன். 'நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள பிரபலாமான மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்னமும் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமை மறுக்கப்படுவது வேதனை தருகிறது' என முறையிட்டேன். அது மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. மாணவர் பேரவையினர் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் விண்ணப்பப் படிவத்தில் ஆண், பெண்ணைத் தவிர, பிறர் என்ற வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதனால், நான் மட்டுமின்றி நிறைய மாணவர்கள் தங்கள் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்து படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றவர்,
‘’என் போன்றவர்களின் உயர் கல்விக்கு தடையாக இருந்த மாற்றுப்பாலினர் என்ற அடையாளத்தை எந்த இடத்திலும் அங்கீகரிக்க வைக்க, என்னால் முடிந்தது. ஆனால், இதே பாலின பிரச்னைதான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த புதுக்கோட்டை சாந்தி சவுந்திரராஜனனின் வாழ்க்கையை சில காலங்களுக்கு முன்பு புரட்டி போட்டது. ஆசிய அளவிலான தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்ப்பெண்ணான சாந்தி, தேசிய அளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சர்வதேச போட்டிகளில் 11 பதக்கங்களையும் வென்றார். 2006ல் தோஹாவில் நடந்த ஆசிய அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற பிறகுதான், அவருக்கு பாலியல் அடையாளத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
பாலினப் பரிசோதனை செய்த மருத்துவக்குழுவினர் அவரது உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாகக் கூறியதால், அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாதபடி தடையும் விதிக்கப்பட்டது.
அதற்குப்பின் அவர் பலவித நெருக்கடிகளுக்கும் அவமானத்துக்கும் உள்ளானார். மத்திய மாநில அரசு விளையாட்டு அமைப்புகள் அவரை கைவிட்டன. சாதனை படைத்தபோது தமிழக அரசு வழங்கிய ரூ.15 லட்சம் பரிசுத்தொகையை வைத்து தன் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் ஒரு தடகளப் பயிற்சி மையத்தைத் தொடங்கியவர், ஏழை, எளிய குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தார். ஆனால், வறுமை காரணமாக அந்த மையத்தை அவரால் நடத்த முடியாமல் போய்விட்டது. வெறுத்துப்போய் அவர் செங்கல் சூளையில் வேலை செய்தார். மனதளவில் நொறுங்கிப்போனார்.
ஆனால், இதேபோன்ற பிரச்னையில் சாந்தியைப்போலவே ஆப்ரிக்காவில் மோன்யோ என்ற பெண்ணிடம் பதக்கம் பறிக்கப்பட்டது. ஆனால், அந்த நாட்டை சேர்ந்தவர்கள், தொடர்ந்து போராடினார்கள். அந்த பெண்ணை தங்கள் நாட்டின் கவுரவமாக பார்த்தார்கள். பறிக்கப்பட்ட பதக்கத்தை திரும்ப வழங்கவில்லை என்றால், தங்கள் நாடு உலகில் எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளாது, தூதரக உறவு வைத்துக்கொள்ளாது என்று அந்த பெண்ணுக்காக நின்றார்கள். இதில் ஆதிக்க நாடுகளின் சதி உள்ளது என்று தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டார்கள். கடைசியில் அவருக்கு பதக்கம் திரும்ப வழங்கப்பட்டது. விளையாட விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. ஆனால், அதுபோல் சாந்திக்காக நம்நாட்டில் யாரும் குரல் கொடுக்கவில்லை. காரணம், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான்.
இதில் கேரள விளையாட்டு வீரர்களின் அரசியலும் இருக்கிறது. இன்று இந்தியாவில் செயல்படும் முக்கியமான விளையாட்டு பயிற்சி மையங்கள் கேரளாவில்தான் அதிகம் உள்ளன. மத்திய விளயாட்டு துறை உயரதிகாரிகளாக மலையாளிகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர். சாந்தி அங்கு சென்று முறையிட்டபோதேல்லாம் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இன்று பல நாடுகளில் விளையாட்டு கல்லூரிகளில் சாந்தியை பற்றி பாடம் வைத்திருக்கிறார்கள். பல விளையாட்டு கழகங்களில் சாந்தியின் படத்தை வைத்திருக்கிறார்கள். விக்கிப்பீடியாவில் தாய், சவுமி மொழியில் சாந்தியை பற்றி தகவல் உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு இடத்திலும் சாந்தியின் பெயர், அவரின் சாதனையை வரவிடாமல் செய்துள்ளனர். விளையாட்டின் மேல் கோபப்பட்டு கஷ்டமான கூலி வேலைகள் பலவற்றை பார்த்து வந்த சாந்தி, தன் வாழ்க்கை இப்படியே போய்விடக்கூடாதென்றும், தன்னுடைய விளையாட்டு நுணுக்கங்கள் மற்றவர்களுக்கு சென்று சேரவேண்டுமென்று பெங்களுர் பயிற்சி மையத்தில் தேர்வு எழுதி, தடகளப் பயிற்சியாளரானார்.
மத்திய விளையாட்டு ஆணையம், போனால் போகிறதென்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மத்திய விளையாட்டு மையத்தில் தற்காலிகப் பயிற்சியாளராக பணி கொடுத்திருக்கிறார்கள். மிகவும் குறைவான சம்பளம். சொந்த ஊரை விட்டு, இங்கு தங்கி பயிற்சி கொடுத்து வருகிறார். இந்த வேலையை நிரந்தரமாக்க சொல்லி பலமுறை கேட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வானதி சீனிவாசன் மூலமாக டெல்லியில் விளையாட்டுத்துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டோம். சாந்திக்காக உதவுவதாக சொன்னார்கள். ஆனால், அங்குள்ள கேரளா அதிகாரிகள் இதற்கு தடையாக இருக்கிறார்கள். அதனால் ஒரு முடிவெடுத்து விட்டோம், பொதுமக்களிடம் சாந்தியின் பிரச்னையை விளக்கி, குறைந்தபட்சம் ஒரு ரூபாய் என்ற கணக்கில் நன்கொடை வசூலிக்கப்போகிறோம். மொத்தம் இருபதுகோடி வேண்டும். அதை வைத்து தென் மாவட்டத்தில் சாந்தியின் தலைமையில் தடகளபயிற்சி மையம் துவக்க உள்ளோம். ஏழை,எளிய கிராமப்புற திறமைசாலிகளுக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்து, சாந்தி பயிற்சி கொடுப்பார். அவரிடம் பறிக்கப்பட்ட பதக்கங்கள் அவரிடம் பயிற்சி எடுத்தவர்கள் மூலம் பெறப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்’’ என்றார்.
நாம் மயிலாடுதுறையில் இருக்கும் சாந்தியிடம் பேசினோம்.
‘’ஆமாம் சார், சிருஷ்டி அமைப்பு எனக்கு உதவுகிறார்கள். எனக்கு ஏற்பட்ட அநீதியை அவர்கள் எல்லோரிடமும் விளக்குகிறார்கள். தரமான பயிற்சி மையத்தை உருவாக்கவேண்டும். நான் இப்போதும் பல வீரர்களை உருவாக்கி வருகிறேன். மாநில, தேசிய அளவில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இவர்கள் மூலம் சர்வதேச தடகளப் போட்டியில் நிச்சயம் கோல்ட் ( Gold) அடிப்பேன்’’ என்றார் சோகத்திற்கிடையிலும் தன்னம்பிக்கையுடன்.
thanks to -vikatan

No comments:
Post a Comment