Sunday 7 August 2016

அமெரிக்காவில் முதலீடு செய்தால் 'கிரீன் கார்டு'.. முண்டியடித்து ஓடும் 1,200 இந்தியர்கள்..!

அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கும் சீனர்




முன்னொரு காலத்தில் சீனர் வறியவர் ஆக இருந்திருந்தாலும் இப்போது அங்கு பெருமளவு செல்வந்தர் உள்ளனர். அவ்வகை செல்வந்தர் எவ்வாறு அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கிறார்கள் என்பதை விபரித்து New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு வீடுகளும் இவ்வகையில் செல்வந்த சீனர்களால் கொள்வனவு செய்யப்படுகிறது.
.
தற்போது சராசரியாக சீன நாட்டவர் கொள்வனவு செய்யும் அமெரிக்க வீடு ஒன்று $831,800 பெறுமானம் கொண்டதாகும் என இக்கட்டுரை கூறுகிறது. அதேவேளை இந்திய நாட்டவர் கொள்வனவு செய்யும் அமெரிக்க வீடுகளின் சராசரி விலை $460,200 ஆகும்.
.
2014 ஆண்டு March முதல் 2015 ஆண்டு March வரையான ஒரு வருட காலத்துள் சீன நாட்டவர் $28.6 பில்லியனுக்கு ($28,600,000,000) அமெரிக்காவில் வீடுகளை கொள்வனவு செய்துள்ளனர். உலக அளவில் இவ்வகை கொள்வனவுகளுக்காக கடந்த வருடம் June முதல் இந்த வருடம் June வரையான ஒரு வருட காலத்துள் $590 பில்லியன் பணம் சீனாவை விட்டு வெளியேறி உள்ளதாம். அத்துடன் 69% சீன நாட்டவர் வீடுகளை 100% பணம் கொடுத்தே கொள்வனவு செய்கிறார்களாம். ஆனால் சாதாரண அமெரிக்கர் வீடு கொள்வனவு செய்யும் போது சுமார் 10% முதல் 30% வரையான பணத்தை செலுத்தி மிகுதியை கட்டுமானமாக மாதாந்தம் செலுத்துவர்.
.
இவ்வாறு அமரிக்க வீடுகளை சீன நாட்டவர் கொள்வனவு செய்வதை அறிந்த பல வீடு விற்பனையாளர் அமெரிக்க வீடுகளை சீன மொழி Web களின் மூலம் சீனாவிலேயே விளம்பரம் செய்கிறார்களாம். அதில் ஒன்று www.leju.comஆகும்.
.
அன்னியர் வீடுகளை கொள்வனவு செய்வதால் எதிர் காலத்தில் உருவாகக்கூடிய இடர்பாடுகளை எண்ணி சில நாடுகள் இவ்வகை கொள்வனவுகளை தடுக்க அல்லது குறைக்க சட்டங்கள் வரைவதுண்டு. Hong Kong, சிங்கப்பூர் ஆகியன வெளிநாட்டவர் வீடுகளை கொள்வனவு செய்யும்போது மேலதிகமாக 15% வரியை அறவிடுகின்றன. ஆனால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இவ்வகை தடை இல்லை.
.
அத்துடன் அமெரிக்காவின் பல்கலைக்களகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 31% அளவானோர் சீன பிரசைகள் ஆவர். இவர்களின் பயன்பாட்டுக்கும் பெற்றோர் வீடுகளை கொள்வனவு
.
அமெரிக்காவின் EB-5 என்ற விசாக்களின் 86% பங்கையும் சீன நாட்டவரே பெற்றுள்ளனர். EB-5 என்ற விசா $500,000 முதல் $1,000,000 பணத்தை அமெரிக்காவில் முதலிட்டு, அதன் மூலம் குறைந்தது 5 பெயர்களுக்கு வேலைவாய்ப்பை வலுங்குவோருக்கு கொடுப்பதாகும். இவ்விசா உள்ளோர் 2 வருடத்தில் அமெரிக்காவின் green cardஐ பெறலாம்.


அமெரிக்காவில் முதலீடு செய்தால் 'கிரீன் கார்டு'.. முண்டியடித்து ஓடும் 1,200 இந்தியர்கள்..!



அமெரிக்க வர்த்தகச் சந்தையில் நேரடியாக முதலீட்டையும், தொழில்நுட்பம் சார்ந்த வெளிநாட்டவர்களை ஈர்க்கும் நோக்குடன் இந்நாட்டு அரசு, அமெரிக்காவில் முதலீடு செய்வோருக்கு அமெரிக்கக் குடிமக்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்படும் கிரீன் கார்டு வழங்கும் திட்டம் உள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் அமெரிக்காவிற்குக் குடிபெயர விரும்பும் 1,200 இந்தியர்கள் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக ஈமிக்ரேஷன் ஆலோசகர் தெரிவித்துள்ளார். எப்போதும் இல்லாத வகையில் இம்முறை அதிகமானோர் இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அமெரிக்கக் கனவு இந்தியாவும், இந்திய மக்களும் எவ்வளவு உயர்ந்தாலும் அமெரிக்கக் கனவு அவர்களிடம் இருக்கும் இன்னும் விலகவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு ஆதாரமாக அமெரிக்க அரசின் கிரீன் கார்டு திட்டமான EB-5 விசா-வை பெற சுமார் நடப்பு நிதியாண்டில் 1,200 இந்தியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
EB-5 விசாவை பெற விண்ணப்பம் செய்தவர்கள் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5 மில்லியன் (ரூ.33.595 கோடி) - 8 மில்லியன் (ரூ.53.752 கோடி) டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும். 
2015ஆம் நிதியாண்டில் அதாவது அக்டோபர் 1,2014ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 30 2015ஆம் தேதி வரையிலான காலத்தில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு சுமார் 111 பேருக்கு EB-5 விசாவை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் நிதியாண்டு அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரையில்.
அமெரிக்கக் கனவு என்பது இந்தியர்கள் மட்டும் தான் உள்ளது என்று நீங்கள் தப்பு கணக்குப் போட்டுவிடக்கூடாது. உலகின் 90 சதவீத நாட்டு மக்களுக்கு அமெரிக்கக் கனவு இருக்கிறது. இக்கனவை காசுக்கொடுத்தும் நினைவாக்கும் திட்டமே இந்த EB-5 விசா திட்டம். ஆனால் நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு அமெரிக்க அரசு அதிகளவிலான ஆதரவும் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

2015ஆம் ஆண்டில் சீனா நாட்டவர்களுக்கு 8,156 பேருக்கும், வியட்நாம் நாட்டவர்களுக்கு 280 பேருக்கும், இந்திய மக்களுக்கு 111 பேருக்கும், தென் கொரியா நாட்டவர்களுக்கு 116 பேருக்கும், பிரிட்டன் 84 பேருக்கும், பாகிஸ்தான் 29 பேர்க்கும், நைஜீரியா 45 பேருக்கும், எகிப்த் நாட்டழர்களுக்கு 36 பேருக்கும் அமெரிக்க அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு EB-5 விசா வழங்கி கிரீன் கார்டு அளித்துள்ளது.
இந்தியாவில் அமெரிக்கச் சந்தைக்கு நிகராக ஸ்டார்ட் அப் சந்தை விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில் EB-5 விசா பெற விண்ணப்பம் அளித்த 1200 பேரும் இந்தியாவிலேயே முதலீடு செய்து நம் நாட்டிலேயே வர்த்தகம் செய்யலாம்.
ஆனால் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிராம்ப் மற்றும் ஹில்லாரி கிளிண்டன் மத்தியிலான போட்டி அதிபயங்கரமாக உள்ளது. இந்நிலையில் பிரிட்டன் - ஐரோப்பிய பரிவின் மூலம் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் இப்படித் தான் இருக்கும் எனச் சில கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பிரிட்டன் மக்களைப் போலச் சுயநலமாக அமெரிக்க மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை மட்டும் பாதுகாக்கும் தலைவருக்கு அதிகளவில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் டொனால்டு டிராம்ப் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

ஒருவேளை டொனால்டு டிராம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்.. 

இந்தியர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post