Thursday 14 July 2016

கடலில் அலைகள் தோன்றுவது ஏன்?

நாம வாழுற இந்த உலகத்துல சில விஷயங்கள் இருக்கு. நாம இருந்தாலும் இல்லைன்னாலும் அது பாட்டுக்கு நடந்துகிட்டேதான் இருக்கும். உதாரணமா சொல்லனும்னா, இந்த சூரியன் காலையில் எழுவதையும் மாலையில் மறைவதையும் சொல்லலாம். அதேமாதிரி, பூக்கள் மலர்வது, வண்டுகள் அதில் தேன் எடுப்பதுன்னு இப்படி நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

அப்படிச் சொல்லிக்கிட்டே போகும்போது உருவாகுற பட்டியல்ல எத்தனை விஷயங்களுக்கு நம்ம பகுத்தறிவுத் திறனை பயன்படுத்தி காரணம் அல்லது விளக்கங்கள் சொல்ல முடியும்னு பார்த்தா கணக்கு போட்டுச் சொல்ல வேண்டிய அவசியமெல்லாம் இருக்காது. ஏன்னா, ஒரு சராசரி மனிதனோட (நம்ம) அறிவுக்கு எட்டியதுன்னு பார்த்தா மிகச் சொற்பம்தான். அப்படிப்பட்ட அன்றாட நிகழ்வுகளில் ஒன்றான, ஆனால் ஏன் அது நிகழ்கிறது என்பதற்க்கான காரணம்/விளக்கத்தை நாம் பெரிதாக அலட்டிக்கொண்டு யோசிக்காமல் கடந்துசெல்லும் ஒரு விஷயம்தான் கடலில் தோன்றும் அலைகள்!

கடலில் அலைகள் தோன்றுவது ஏன்?



ஓதம் (அலை) (Tide) என்பது நிலவு, சூரியன் போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும். 

கடல் அலைகள், சாதாரணமானது இல்லை. மேலோட்டமா பார்ப்பதற்கு வேண்டுமானால் அலைகள், சாதாரணமாக தெரியலாம். ஆனால், கலிலியோவுக்கே தண்ணிக்காட்டி இருக்கு இந்த அலைகள். அதாவது, அலைகள் தோன்றுவது பற்றி ஒரு கோட்பாட்டை கலிலியோ நிறுவி, அது விளங்காத ஒரு கோட்பாடா ஆகிப்போச்சு என்று கூறுவார்கள்.
கடல் அலைகள் தோன்றுவது, பூமி, நிலவு மற்றும் சூரியனுக்கு இடையிலான ஈர்ப்பு சக்தியினால்தான். அலைகள் உருவாவதில் இம்மூன்று கிரகங்களுக்கும் பங்குண்டு என்றாலும், அலைகள் உருவாவதில் அதிக பங்கு நிலவுக்குத்தான்! பூமி மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியானது, கடலைப் பொங்கச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.
நகர்ந்து கொண்டே, இடம்மாறிக் கொண்டே இருக்கும் எந்தவொரு பொருளும், தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும்இனர்ஷியாஎன்னும் உலகின் மாறா நிலைப்பு தன்மையினால், உலகச் சமுத்திரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, ஒரு முறை தோற்றுவிக்கப்படும் அலையானது தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறது அறிவியல்!

இந்த இனர்ஷியா (Inertia) என்னும் இயல்பானது, சமுத்திரத்தை நிலவின் ஈர்ப்பு விசையின் திசையில் தொடர்ந்து நகரச் செய்யும் என்று கூறப்படுகிறது. பூமி சுற்றிக்கொண்டிருக்கும்போதே, கடல் இருமுறை எழும்புகின்றனவாம். முதல்முறை, நிலவை பூமி நெருங்கி வரும்போதுஅடுத்து, பூமி, நிலவுக்கு மிகத்தொலைவில் இருக்கும்போது என இருமுறை கடல் எழும்புகின்றன. இதனை அமெரிக்காவின் மசாச்சு செட்ஸ் நகர கடல் ஆய்வு நிறுவனமான, வுட்ஸ் ஹோல் ஆய்வுக்கூட (Wood’s Hole Oceanographic Institution) ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகின் புவியியல் அமைப்பு, அலைகளை பல வகையில் பாதித்தாலும், பூமியின் பல இடங்களில் 24 மணி நேரம் 50 நிமிடங்களில், இரண்டு ராட்சத உயர்ந்த அலைகளும் (high tides) இரண்டு தாழ்ந்த அலைகளும் மட்டுமே தோன்றுகின்றனவாம்கொசுறா ஒரு 50 நிமிஷம் ஏன் என்று கேட்டால், பூமியை தினமும் நிலவு சுற்றிவரும்போது, நிலவு எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த சொச்ச 50 நிமிடங்கள் (The extra 50 minutes is caused by the distance the moon moves each day as it orbits Earth).

சூரியனும் அலைகளும்!



அலைகள் ஏன் ஓய்வதில்லை என்பதற்கு நிலவு மட்டுந்தான் காரணம் என்று கருதினால், நாங்களும் இருக்கிறோம் என்கிறது சூரியன். அதாவது, சூரியனின் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளுக்கு சூரிய அலைகள்னு (Solar tides) பெயர். ஆனால், நிலவினால் ஏற்படுகிற அலைகளைவிட, சூரிய அலைகள் சக்தி குறைந்தவை.
நிலவைவிட 27 மடங்கு சூரியன் பெரியது என்றாலும், நிலவிருக்கும் தூரத்தைவிட 390 மடங்கு அதிக தொலைவில் இருக்கிறது சூரியன். அதனால், நிலவுக்கிருக்கும் அலைகள் உருவாக்கும் சக்தி, ஆற்றலில் (tide-generating forces, TGFs) 46% மட்டுமே சூரியனுக்கு இருக்கிறது என்று, தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் (National Oceanic and Atmospheric Administration, NOAA) கூறுகிறது.


அமாவாசை எனப்படும் முழு இருட்டு இரவு நாளிலும் பௌர்ணமி எனப்படும் முழு நிலா இரவு நாளிலும் கடல் வழமையை விட அதிக பெருக்குடனும் அதிக அலைவீச்சும் மற்றைய நாட்களைவிட வழக்கத்துக்கு மாறான இரைச்சலுடனும் காணப்படும். இந்த நேரங்களில் வளி மண்டல அழுத்தம், கடலின் நீரோட்டம் போன்ற மற்றைய காரணிகள் ஓரே திசையில் இருக்கும்போது ஓதச் செயற்பாடுகளின் வலிமையும் அதிகமாக இருக்கும்.


1595 ஆம் வருடம், விண்வெளி விஞ்ஞானி திரு.கலீலியோ கலீலி அவர்கள், அலைகள் தோன்றுவதற்க்கான காரணங்களை விளக்க முயன்று ஒரு கோட்பாட்டை உருவாக்கியபோது, நிலவை கோட்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறிவிட்டாராம் அவர். மாறாக, பூமி சூரியனைச் சுற்றி வருவதையும், உலக சமுத்திரங்களின் இனெர்ஷியாவை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டார் கலீலியோ!

ஆனால், கடந்த 1687 ஆம் வருடம், இயற்பியல் விஞ்ஞானி திரு.சர் ஐசாக் நியூட்டன் அவர்கள்தான் அலைகள் தோன்றுவதற்க்கான காரணம் ஈர்ப்பு விசை என்று சரியாக கணித்தார்.


Karthikkn

No comments:

Post a Comment

Ads Inside Post