வரிகள் (TAXES): ஒரு அறிமுகம்
வரிகள்
தான் ஒரு நாட்டின் வருமானத்திற்கு ஆதார புள்ளி ஆகும். இந்த வரிகளால் தான், ஒரு
அரசு தமது மக்களுக்கு பணியாற்ற, செயலாற்ற தேவையான நிதியினை பெறுகிறது. அதனால் தமது
எல்லைக்குட்பட்ட வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களின் மீதும், நிறுவனங்களின் மீதும்
வரிகளை விதிகிறது. தயாரிக்கப்படும் பொருட்களின் மீதும், இடத்தின் மீதும், நாம்
அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களின் மீதும் , ஏற்றுமதி, இறக்குமதி
பொருட்களின் மீதும் , மற்றும் இன்னும் பிற மறைமுக வரிகளும் விதிக்கப் படுகின்றன.
இவ்வாறு சேகரிக்கபட்ட வரிகளைக் கொண்டு தான், அரசு சிறந்த நிர்வாகத்தையும், சிறந்த
சேவையினையும் மக்களுக்கு வழங்குகிறது.
இவ்வாறு நம் மீது திணிக்கபடும் சில வரிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
இவ்வாறு நம் மீது திணிக்கபடும் சில வரிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
நேரடி,மறைமுக வரிகள் (Direct and Indirect Taxes)
வரி
வருவாய்களில் நேரடி வரி (Direct Tax) , மறைமுக வரி (Indirect Tax) என இருவகைகள்
உள்ளதாகப் பார்த்தோம். தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக
செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி (Corporate Income Tax), தனிநபர் வருமான வரி
(Personal Income Tax), சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.
பொருள்களை
உற்பத்தி செய்யும்போது செலுத்துகின்ற கலால் வரி (Excise Duty), இறக்குமதி /
ஏற்றுமதி செய்யும்போது செலுத்தப்படும் சுங்க வரி (Customs Duty), பொருள்களை
வாங்கும் போது செலுத்துகின்ற மதிப்பு கூட்டு வரி, தொழில் வரி (Service Tax)
போன்றவை மறைமுக வரிகளாகும்.
இதில்,
நேரடி வரிகளை மற்றவர்கள் மீது மாற்றவோ சுமத்தவோ முடியாது. உதராணமாக, ஒருவரின்
வருமானம் அதிகமாகும்போது அவர் அதிகமான நேர்முக வரிகளையும், வருமானம் குறைவாக
உள்ளவர்கள் குறைவான வரிகளையும் செலுத்துவார்கள். அதாவது, நேரடி வரிகள் ஒருவரின்
செலுத்தும் திறனுக்கேற்றவாறு மாறுபடும்.
ஆனால்,
மறைமுக வரி அரசால் ஒருவர் மீது விதிக்கப்பட்டாலும், அந்தச் சுமையை தாங்குபவர் வேறு
ஒருவராக இருப்பார். அதாவது, நீங்கள் ஏதாவது ஒரு பொருளை அல்லது சேவையினை
வாங்கும்போது, அதன் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் மீது விதிக்கப்பட்ட வரியின்
சுமை, இறுதி நுகர்வோர் ஆகிய உங்கள் மீது சுமத்தப்படும். இந்த வரிகள் பொருளின்
விலையோடு சேர்த்தோ (உ.தாரணம் பெட்ரோலின் விலை) அல்லது சிற்றுண்டி சாலை உணவு
பில்களில் சேவை வரி குறிப்பிடுவது போன்று தனியாகவோ குறிக்கப்பட்டிருக்கும். இந்த
வரி நீங்கள் வாங்கும் பொருளின் விலையினை கூடுதலாக்குகின்றது.
ஏழை
பணக்காரர் எல்லோரும் ஒரே விதமான மறைமுக வரிகளை செலுத்துவார்கள் என்பதால்,
பொருளாதாரத்தில் வருமான மறுபகிர்வுக்கு நேர்முக வரிகளை அதிகம் பயன்படுத்தவேண்டும்,
அதில்தான் வரி செலுத்தும் திறனுக்கேற்ப வரிவிகிதங்களை மாற்றி அமைக்க முடியும். எனினும்
இந்த நேர்முக வரிகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாத வண்ணம் வரிக்கொள்கைகளை
வடிவமைக்க வேண்டியதும் மிக முக்கியம்.
அதிகமாக
உழைத்து பொருள் ஈட்டுவோர் மீது அதிக வரிச் சுமையை ஏற்றிக்கொண்டே போனால், அவர்
மேலும் உழைப்பதற்கான ஊக்கம் இல்லாமலே போகும். மேலும் ஒரு பொருளாதாரம் வேகமாக
வளரும் போது நேர்முக வரியும் அதிகமாக வளர்வது அவசியம். நம் நாட்டின் மொத்த வரி
வருவாயில் 35 சதவீதம் நேர்முக வரிகளாகவும் 65 சதவீதம் (2010-11 நிதியாண்டில்)
மறைமுக வரிகளாகவும் பெறப்பட்டுள்ளன.
வரிகள் (TAXES)
வருமான
வரி INCOME TAX
ஒரு நாட்டின்
சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு குடிமகனும் , நிறுவனமும் வருமான வரி செலுத்த வேண்டும்
என தெரிவிக்கிறது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். அதிகம் வருமானம் ஈட்டும்
ஒருவர், அதிக வருமான வரியையும், குறைந்த வருமானமீட்டும் ஒருவர் , குறைந்த
வரியையும் செலுத்துகிறார்கள். மிக குறைந்த, வருமான வரம்பு எல்லையை தொடாதவர்கள் ,
வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரி சதவிகிதம் அவ்வப் போது மாறுபடும்,
அதன் வருமான வரம்பை பொறுத்து...
இப்படிபட்ட வருமான வரி, 1812 ல் அமெரிக்காவில் நடைபெற்ற போரின் போது தான் விதிக்கப் பட்டது. ஏனென்றால், போரினால் அமெரிக்காவிற்கு 100 மில்லியன் டாலர் கடன் ஏற்பட்டது. அதனை சரிகட்டும் விதமாகத்தான் இந்த வரி விதிக்கப் பட்டது. ஆனால் போர் முடிந்த பின்னர் அப்படியே நடைமுறையில் விடப்பட்டது. இதை தான் , இன்று அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன.
இப்படிபட்ட வருமான வரி, 1812 ல் அமெரிக்காவில் நடைபெற்ற போரின் போது தான் விதிக்கப் பட்டது. ஏனென்றால், போரினால் அமெரிக்காவிற்கு 100 மில்லியன் டாலர் கடன் ஏற்பட்டது. அதனை சரிகட்டும் விதமாகத்தான் இந்த வரி விதிக்கப் பட்டது. ஆனால் போர் முடிந்த பின்னர் அப்படியே நடைமுறையில் விடப்பட்டது. இதை தான் , இன்று அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன.
நிறுவன வரி
CORPORATE TAX
இது ஒரு நிறுவனத்தின் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். இதனின் வரிச்சதவிகிதம், அந்நிறுவனத்தின் லாப அளவில் ஏற்படும் வித்தியாசத்தைப் பொறுத்து மாறுபடும். நாட்டின் மத்திய அரசு மட்டுமல்லாமல், அதன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட நிறுவனங்களின் மீது வரிகளை விதிக்கும்.
இது ஒரு நிறுவனத்தின் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். இதனின் வரிச்சதவிகிதம், அந்நிறுவனத்தின் லாப அளவில் ஏற்படும் வித்தியாசத்தைப் பொறுத்து மாறுபடும். நாட்டின் மத்திய அரசு மட்டுமல்லாமல், அதன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட நிறுவனங்களின் மீது வரிகளை விதிக்கும்.
கலால் வரி EXCISE TAX
இது பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுக வரி ஆகும். இவை நேரடியாக பொருட்களின் மீது விதிக்கப் படாமல் உற்பத்தியாளர் மற்றும் வணிகர்கள் மீது விதிக்கப் படுகிறது.
சொத்து வரி PROPERTY TAX
உள்ளூராட்சி, நகராட்சி முதலியன அதன் எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் மேல், அதன் மதிப்பை பொறுத்து விதிக்கும் வரி ஆகும். இப்படி சேகரிக்கப் பட்ட வரிகளைக் கொண்டு தான், ஒரு நகராட்சி அதனுடைய சாலை, குடிநீர் மற்றும் பள்ளிகூட வசதிகளை ஏற்படுத்தி கொள்ளுகின்றன.
விற்பனை வரி SALES TAX
இந்த வரி வணிக விற்பனையாளர்களால் அரசுக்கு செலுத்தப்படும் வரி ஆகும். பொருட்களை விற்கும் போதும், இடத்தை விற்கும் போதும் இவ்வரி விதிக்கப் படுகிறது. பொருட்களின் மதிப்பை பொறுத்தும்,விற்பனையின் அளவை பொறுத்தும் இதன் வரி சதவிகிதம் மாறுபடும். உண்மையில் இந்த வரி, நுகர்வோர் மீது தான் விதிக்கப்படும் மறைமுக வரி. பொருள் வாங்கும் நுகர்வோருக்கு இந்த வரி பற்றி தெரிவதற்க்கு வாய்பில்லை. பின்னர், பொருளை விற்ற விற்பனையாளர், தான் விற்ற தொகையிலிருந்து கிடைத்த வரிப் பணத்தை எடுத்து அரசுக்கு செலுத்துகிறார்.
சேவை வரி SERVICE TAX
அரசும், உற்பத்தி நிறுவனங்களும் அவை வழங்கிய சேவையின் அடிப்படையில் நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
ஏற்றுமதி வரி EXPORT TAX
உள் நாட்டில் உற்பத்தியான பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப்படும் வரி ஆகும். இவ்வரியை ஏற்றுமதி நிறுவனங்களால் செலுத்த்ப் படுகிறது.
இறக்குமதி வரி IMPORT TAX
வெளி நாட்டில் உற்பத்தியான பொருளை நம் நாட்டில் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு விதிக்கப் படும் வரி ஆகும். இவ்வரியை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால்
செலுத்தப் படுகிறது. இதனை சுங்க தீர்வை அல்லது சுங்க வரி எனலாம்.
மதிப்பு கூட்டபட்ட வரி VALUE ADDED TAX - VAT
இது நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும். பொருள் உற்பத்தியின் போது ஒவ்வொரு நிலையிலும் , அதன் மதிப்பிற்கு ஏற்றாற் போல் வரி விதிக்கப்படும். இப்படி கூட்டப் பட்ட வரிகளானது, பொருள் விற்பனைக்கு வரும் போது, அதனை நுகர்வோர் மீது விதிக்கப் படுகிறது. இத்தகைய வரி முன்பு மேலை நாடுகளில் மட்டும் தான் இருந்தது. தற்பொழுது இந்தியாவிலும் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
சொத்து
மதிப்பு வரி AD VALOREM TAX
Ad valorem எனப்படும் இவ்வார்த்தை (Latin) லட்டின் மொழியிலிருந்து உருவானது. இதன் அர்த்தம் According to Value என ஆங்கிலத்தில் கொள்ளப்படும். இதனை நாம் சொத்து மதிப்பு வரி எனலாம்.
ஒருவர் தான் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை பொறுத்தோ அல்லது இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை பொறுத்தோ விதிக்கப் படும் வரி - சொத்து மதிப்பு வரி எனப்படும்.
இத்தகைய வரி தான் ஒரு நகராட்சிக்கு அல்லது நாட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறது.
Ad valorem எனப்படும் இவ்வார்த்தை (Latin) லட்டின் மொழியிலிருந்து உருவானது. இதன் அர்த்தம் According to Value என ஆங்கிலத்தில் கொள்ளப்படும். இதனை நாம் சொத்து மதிப்பு வரி எனலாம்.
ஒருவர் தான் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை பொறுத்தோ அல்லது இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை பொறுத்தோ விதிக்கப் படும் வரி - சொத்து மதிப்பு வரி எனப்படும்.
இத்தகைய வரி தான் ஒரு நகராட்சிக்கு அல்லது நாட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறது.
வருமான குவிப்பு வரி ACCUMULATED EARNINGS TAX
ஒரு நிறுவனம் தன் வருமானத்திற்கு அதிகமான வருமானத்தை ஈட்டுவதாக கொள்வோம். அந்த வருமானத்தை அந்நிறுவனம் தன்னிடத்தே வைத்திருக்க முயலுமானால் அதற்கு அரசு வரி விதிக்கிறது. இதனை வருமான குவிப்பு வரி எனலாம்.
எனவே நிறுவனங்கள் இந்த வரியை கொடுக்காமலிருக்க லாப பங்கீடை( Divident) வழங்குகிறது. இவ்வாறு வழங்குவதால் நிறுவனங்கள், அரசுக்கு குறைந்த அளவிலேயே வரியை செலுத்துகிறது.
வரிகள்
சம்பந்தமான அறிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
வரி DUTY
அரசு சில பொருட்களின் மீதும், வியாபார பரிவர்த்தனைகளின் போதும், வழங்கும் சேவையினை பொறுத்தும் சுமத்தும் வரி தான் இந்த டூட்டி ( Duty) எனும் சுமை வரி. இதனை ஒருபோதும் தனிநபர்களின் மேல் சுமத்தப்படுவதில்லை. மாறாக பல்பொருள் பரிவர்த்தனைகளின் போதும், நிதி பரிவர்த்தனைகளின் போது மட்டும் தான் விதிக்கப்படுகிறது
அரசு சில பொருட்களின் மீதும், வியாபார பரிவர்த்தனைகளின் போதும், வழங்கும் சேவையினை பொறுத்தும் சுமத்தும் வரி தான் இந்த டூட்டி ( Duty) எனும் சுமை வரி. இதனை ஒருபோதும் தனிநபர்களின் மேல் சுமத்தப்படுவதில்லை. மாறாக பல்பொருள் பரிவர்த்தனைகளின் போதும், நிதி பரிவர்த்தனைகளின் போது மட்டும் தான் விதிக்கப்படுகிறது
.
மறைமுக வரி HIDDEN TAXES
இந்த மறைமுக வரிகள் நுகர்வோரின் அறிவுக்கு தெரியாமலே , அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய வரிகள், நுகர்வோருக்கு எதனால் விதிக்கப்படுகிறது என்பதை ஒருபோதும் தெரிவிக்கப் படுவதில்லை.
மறைமுக வரி HIDDEN TAXES
இந்த மறைமுக வரிகள் நுகர்வோரின் அறிவுக்கு தெரியாமலே , அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய வரிகள், நுகர்வோருக்கு எதனால் விதிக்கப்படுகிறது என்பதை ஒருபோதும் தெரிவிக்கப் படுவதில்லை.
உதாரணம் : மதிப்பு கூட்டப் பட்ட வரி, விற்பனை வரி
வெகுமதி
வரி GIFT TAX
ஒரு அரசு, தன் குடிமகன் ஒருவர், மற்றொருவருக்கு விலை உயர்ந்த பொருளை வெகுமதியாக கொடுத்தால் அதன் பேரில் ஒரு வரி விதிக்கிறது. அது தான் இந்த வெகுமதி வரி. இந்த வரியை வெகுமதி வழங்குபவர் தான் கொடுக்க வேண்டும். அத்தோடு அல்லாமல், பரிசு பெற்றவரும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வரி செலுத்த வேண்டும். இந்த வரி , சில சமயங்களில் சாதனை புரிந்த இந்தியருக்கு வழங்கப்பட்ட பரிசின் போது விலக்கப் படுகிறது.
1. டெண்டுல்கர்க்கு கிடைத்த பெர்ராரி (Ferrari) கார் மீது 2. ரவி சாஸ்திரி கிடைத்த (Audi) கார் மீது வரிவிலக்கு அளிக்கப்பட்டது
ஒரு அரசு, தன் குடிமகன் ஒருவர், மற்றொருவருக்கு விலை உயர்ந்த பொருளை வெகுமதியாக கொடுத்தால் அதன் பேரில் ஒரு வரி விதிக்கிறது. அது தான் இந்த வெகுமதி வரி. இந்த வரியை வெகுமதி வழங்குபவர் தான் கொடுக்க வேண்டும். அத்தோடு அல்லாமல், பரிசு பெற்றவரும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வரி செலுத்த வேண்டும். இந்த வரி , சில சமயங்களில் சாதனை புரிந்த இந்தியருக்கு வழங்கப்பட்ட பரிசின் போது விலக்கப் படுகிறது.
1. டெண்டுல்கர்க்கு கிடைத்த பெர்ராரி (Ferrari) கார் மீது 2. ரவி சாஸ்திரி கிடைத்த (Audi) கார் மீது வரிவிலக்கு அளிக்கப்பட்டது
வரிகள்
சம்பந்தமான அறிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
அபராதம் LEVY
அரசுக்கு கட்ட வேண்டிய வரியை காலம் தாழ்த்தி கட்டினால் அதன் மீது விதிக்கப்படும் கட்டணம் தான் அபராதம் ஆகும்.
உதாரணம் : குடிநீர் வரி, மின்சார வரி, டெலிபோன் வரி போன்ற வரிகளை காலம் தாழ்த்தி செலுத்தினால் ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப் படும் என்பது நமக்கு வரும் மாதகட்டண சீட்டில் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த அபராதம் (Levy) லெவி எனப்படும்.
முத்திரை தீர்வு STAMP DUTY
ஒரு இடம் அல்லது மனை வாங்கும் போது, அதை (Document) பத்திரமாக மாற்ற , அந்த இடத்தின் மதிப்பிற்கேற்றார் போல , நாம் வாங்கும் முத்திரை தாளுக்கு செலுத்தும் தொகை தான் இந்த முத்திரை தீர்வு.
காலண்டர் வருடம் CALENDER YEAR
ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை உள்ள காலம் காலண்டர் வருடம்.
வரி ஆண்டு TAX YEAR
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் , தங்களின் வருடாந்திர கணக்கு வழக்குகளை சமர்பிக்க தேர்ந்துதெடுக்கும் ஏதேனும் 12 மாதங்கள் அடங்கிய வருடம் வரி ஆண்டு எனப்படும்.
உதாரணம் : ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை.
பிஸிகல்
ஆண்டு FISCAL YEAR
ஒரு நிறுவனம் தன் வருட கணக்குகளுக்காக உபயோகப்படுத்தும் வருடத்தின் ஏதாவது 12 மாதங்கள். அவை காலண்டர் வருடமாகவும் இருக்கலாம் அல்லது வரி ஆண்டாகவும் இருக்கலாம்.
ஒரு நிறுவனம் தன் வருட கணக்குகளுக்காக உபயோகப்படுத்தும் வருடத்தின் ஏதாவது 12 மாதங்கள். அவை காலண்டர் வருடமாகவும் இருக்கலாம் அல்லது வரி ஆண்டாகவும் இருக்கலாம்.
முடிவு வருடம் TERMINAL YEAR
வருமான வரி செலுத்தும் ஒருவர் இறந்த வருடத்தை குறிக்கும் ஆண்டு முடிவு வருடம் எனப்படும்.
பிடித்தம் DEDUCTION
வருமான வரி செலுத்தும் போது அதில் காட்டப்படும் வருமானம் என்பது நிகர வருமானத்திலிருந்து மொத்த செலவைக் கழித்து மீதியுள்ள தொகை தான் , வருமானமாக காட்டப்படும். இப்படி மொத்த செலவை நிகர வருமானத்திலிருந்து பிடிப்பதற்கு பிடித்தம் என்கிறோம். இதனால் வருமான வரி குறைவாக செலுத்தப்படுகிறது.
ஒதுக்கீடு WRITE OFF
ஒரு நிதி நிறுவனம், ஒரு சிறு தொழில் செய்பவருக்கு கடன் வழங்குவதாக கொள்வோம். வாங்கியர், ஏதோவொரு காரணத்தினால் திவாலாகி விட்டால், அவரால் கண்டிப்பாக கடனை திருப்பி அளிக்க முடியாது.
அந்நிலையில் நிதி நிறுவனம், இப்படி திரும்பி வராக் கடனை, தன் கணக்கில் செலவாக காண்பித்து ஒதுக்கீடு செய்கிறது.இதனை தான் ஒதுக்கீடு என்கிறோம்.
முதலீட்டு லாபம் CAPITAL GAIN
நாம் வாங்கிய ஒரு பொருள் அல்லது இடம், அதன் முதலீட்டு விலையை விட அதிக மதிப்பில் அல்லது அதிக விலையில் இருந்தால் அதை முதலீட்டு லாபம் எனலாம். இந்த லாபத்தை, நாம் பொருளை அல்லது இடத்தை விற்றால் மட்டுமே அடையலாம்.
முதலீட்டு நட்டம் CAPITAL LOSS
நாம் வாங்கிய ஒரு பொருள் அல்லது இடம், அதன் முதலீட்டு விலையை விட குறைந்த மதிப்பில் அல்லது குறைந்த விலையில் இருந்தால் அதை முதலீட்டு நட்டம் எனலாம்.
திரும்ப பெறும் நிதி REFUND
ஒருவர் , அரசுக்கு அதிக அளவில் வருமான வரி செலுத்திய பின்பு, அரசு அவரது கணக்கை சரிபார்த்து , அதிக வரி செலுத்தி இருந்தால் , நியாயமான வரியை மட்டும் எடுத்து கொண்டு மீதியை ஒரு காசோலையாக பணத்தை திரும்ப அளிக்கிறது.
இப்படி திரும்ப அளிக்கும் தொகையை தான் திரும்பப் பெறும் நிதி (Refund) என்கிறோம்.
உபரி கட்டணம் SURCHARGE
ஒரு அத்தியாவசிய பொருள் அல்லது வாகனம் வாங்கும் போது கூடுதலாக ஒரு உபரி தொகை அல்லது உபரி வரி சேர்க்கப் பட்டிருக்கும். இதை உபரி கட்டணம் எனலாம்.
வரி ஏய்ப்பு TAX EVASION
வரி ஏய்ப்பு என்பது மிக பெரிய குற்றம் ஆகும்.
ஒருவர் அல்லது நிறுவனம் தான் கட்ட வேண்டிய வரி கட்டாமல் அல்லது கட்டுவதை தவிர்த்து வந்தால் , அது வரி ஏய்ப்பாக கருதப்பட்டு, அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும் , மிக பெரிய அபராத தொகையையும் விதிக்கும்.
வரி விடுமுறை TAX HOLIDAY
தொழிற் துறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணத்தில் அரசு கொடுக்கும் ஒரு சலுகை. சில சமயங்களில் அரசு. வரியில் தள்ளுபடி அல்லது வரியே இல்லாமல் செய்வது போல சலுகைகளை வழங்கும். இதனால் அந்நிறுவனங்கள் நல்ல பலனடைந்து , அதன் வளர்ச்சியை பெருக்கும்.
அரசு, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து , வெளி நாட்டு முதலீட்டாளர்களைக் கவரும்.
ஆண்டறிக்கை ANNUAL REPORT
1929 ம் ஆண்டு அமெரிக்க பங்குசந்தை பெரும் சரிவை அடைந்தது. அப்போது ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதில் அனைத்து நிறுவனங்களும் தங்களின் நிதி நிலை பற்றிய அறிக்கையை ஆண்டுகொருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்றது.
அதன் படி அந்த ஆண்டறிக்கையில் கீழ்கண்ட அம்சங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. அவைகள் பின்வருமாறு,
நிதி நிலை பற்றிய முக்கிய அம்சங்கள் பங்குதாரர்களுக்கு அனுப்பபட்ட கடிதங்கள் அனைத்து விவரங்கள், வரைவுகள், புகைப்படங்கள் நிர்வாகத்தின் விவாதங்கள், மற்றும் ஆராய்ச்சிகள் நிதி நிலை அறிக்கைகள் பற்றிய குறிப்புகள் தணிக்கையாளர் அறிக்கை நிதி பற்றிய அடிப்படை விவரங்கள் நிறுவன நிர்வாகிகள், இயக்குனர்கள் மற்றும் நிறுவனம் பற்றிய செய்திகள்/ தகவல்கள்..
சரக்கு மற்றும் சேவை
வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான மசோதா கடந்த டிசம்பர் 19-ம் தேதி அன்று
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசும் இந்த மசோதாவை வரும் மார்ச்
2016-க்குள் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த ஜிஎஸ்டி மசோதா
எப்படிப்பட்டது, இந்த மசோதாவைக் கொண்டுவருவதில் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்,
இதனால் தொழில் துறையினருக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன லாபம் கிடைக்கும்,
இந்தியாவின் ஜிடிபியில் இந்த மசோதா என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற
கேள்விகள் முக்கியமானவை. இந்த கேள்விகளுக் கான பதிலைப் பார்ப்போம்.
ஜிஎஸ்டி (GST) என்றால் என்ன..?
பொருட்களின்
உற்பத்தி, விற்பனை ஆகியவை மீது பலவித வரிகள் விதிக்கப்படுகின்றன. இறக்குமதி
செய்யப்பட்ட பொருட்கள் மீது சுங்க வரி, பொருள் உற்பத்தி மீது கலால் வரி, சேவைகள்
மீது சேவை வரி ஆகியவை மத்திய அரசால் விதிக்கப்படுகின்றன. பொருள் விற்பனை மீது வாட்
வரியை மாநில அரசு விதிக்கின்றது. சாராயம் மீதான கலால் வரியையும் மாநில அரசுகள்
விதிக்கின்றன. சொத்துகள் பரிவர்த்தனை மீது முத்திரைத் தாள் வரியை மாநில அரசு
விதிக்கின்றது.
இவை தவிர,
சில உள்ளாட்சி அமைப்புகளும் பொருட்களை தங்கள் எல்லைக்குள் எடுத்துவர நுழைவு வரி
விதிக்கின்றன. இப்படி நுகர்வு எனப்படும் ஒரு வரி அடிப்படையின் மீது, பல முனைகளில்
பல அரசுகளால் பல்வேறு விகிதங்களில் வரி விதிக்கப்படுவது, வரி கட்டமைப்புகளை
சிதைத்து வரிச்சுமையினை பெருக்கி பொருளாதரத்தில் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
இந்தக்
குறைகளை களைந்து, மேலே சொன்ன நுகர்வின் மீது மத்திய மாநில அரசுகள் விதிக்கும் பல
விதமான மறைமுக வரிகளை ஒன்றிணைத்து ஒரே வரியாக்கும் ஒரு பெரும் வரி சீர்திருத்த
முயற்சிதான் GST ஆகும். நாம் கூட்டாட்சியமைப்பில் உள்ளதாலும், மத்திய மாநில
அரசுகளின் பல வரிகள் ஒன்றிணைக்கப்படுவதாலும், இந்த வரி மத்திய, மாநில அரசாங்கங்கள்
இருவராலும் ஒரே நேரத்தில், மத்திய GST, மாநில GST என்று விதிக்கப்படும்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மிகக்குறைந்த விகிதம், மற்ற பொருள்களுக்கு நிலையான
விகிதம் என்று இரண்டு முக்கிய வரி விகிதங்கள் இருக்கும்.
இந்த
பெரும் வரி சீர்திருத்தத்தின் முதல் கட்டமாகத்தான், வாட் எல்லா மாநிலங்களிலும்
அமல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்திற்கு செல்ல பல சவால்கள் உள்ளதென்றாலும்,
மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட ‘மாநில நிதி அமைச்சர்கள் குழு’ இது
பற்றி தொடர்ந்து விவாதித்து வருகின்றது.
உற்பத்தி
மற்றும் சேவைகள் இடையே வரிச்சுமையைச் சமமாக பகிர்ந்தளிக்கவும், வரி விகிதத்தை
குறைத்து வரி அடித்தளத்தை விரிவுபடுத்தி, வரி சிதைவுகளை குறைக்கவும், நிர்வாக
சுமைகளை எளிமையாக்கவும், GST உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், மாநில
அரசுகளுக்கு தங்களின் நிதி சுயசார்பினை (Fiscal Autonomy) இழந்துவிடுவோமோ என்ற
அச்சமும் நிலவுகின்றது.,
சரக்கு
மற்றும் சேவை வரி விதிப்பு என்பது புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் சிக்கலானது. தற்போது
ஒரு பொருளையோ அல்லது சேவையையோ தயாரித்து விற்கும்போது, அதற்கு கலால் வரி, சேவை
வரி, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டு செல்ல நுழைவு வரி, மாநில
அரசுக்கு கட்டவேண்டிய வாட் வரி என பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரே
பொருளுக்கு பல இடங்களில் பலவகையான வரிகளைக் கட்டுவது சிரமம் தரும் விஷயமாகவே
இருந்து வருகிறது. இப்படி பல இடங்களில் வரி கட்டுவதைவிட, இந்த அனைத்து வரிகளையும்
ஒன்று சேர்த்து, சரக்கு மற்றும் சேவை வரி என்கிற பெயரில் ஒரே வரியாக மத்திய
மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்துவதுதான் ஜிஎஸ்டி.
இந்தியாவில் சொத்து வரி, வருமான வரி, சுங்கச்சாவடி வரி, கலால்
வரி, விற்பனை வரி மற்றும் சுங்க வரி என பல வகையான வரிகள் உள்ளது.
கலால் வரி
மற்றும் விற்பனை வரிக்கு இடையேயான அடிப்படை வேறுபாட்டையும் அவைகளை யார்
கட்டுவார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.
கலால் வரி என்றால் என்ன?
நம்
நாட்டிற்குள் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்கள் உற்பத்தியின் மீது
விதிக்கப்படும் வரி தான் கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி. தயாரிக்கப்பட்ட
நிலையில் உள்ள பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது, பொருளின்
தயாரிப்பாளரால் இது செலுத்தப்படும். இருப்பினும் சுங்க வரிக்கும் இதற்கும்
சம்பந்தமில்லை. சுங்க வரி என்பது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருளை நம்
நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கட்டவது.விலக்கு அளிக்கப்பட்டுள்ள சில பொருட்களை
தவிர அனைத்து பொருட்களின் மீதும் கலால் வரி வசூலிக்கப்படும். இந்தியாவில் மூன்று
வகையான மத்திய கலால் வரிகள் விதிக்கப்படுகிறது அவை:
1,அடிப்படை
கலால் வரி,
2,கூடுதல்
கலால் வரி,
3சிறப்பு
கலால் வரி.
விற்பனை வரி
என்றால் என்ன?
விற்பனை
வரி என்பது பொருளை வாங்கும் வாடிக்கையாளரால் கட்டப்படும் வரியாகும். நாம் ஒரு பொருளை
வாங்குவதற்கு கட்டப்படும் தொகை இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும்: ஒன்று பொருளின் விலை,
மற்றொன்று அந்த பொருளின் மீது விதிக்கப்பட்டுள்ள வரி. அதனால் நாம் ஒரு பொருளை வாங்கும்
போது இந்த இரண்டு தொகையையும் தெரிந்தோ தெரியாமலோ சேர்த்து தான் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் கொள்முதல் மற்றும் விற்பனையின் மீது விற்பனை வரி வசூலிக்கப்படும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு அளவில் விற்பனை வரியை வசூல் செய்வார்கள். அதுவே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விற்பனை மற்றும் கொள்முதல் நடக்கையில் மத்திய விற்பனை வரி வசூலிக்கப்படும். GST சட்டம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டால் விற்பனை வரி மற்றும் சுங்க வரி உட்பட பல வரிகளை நெறிப்படுத்தும். நாடாழுமன்ற குளிர்கால தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படலாம்.
ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் கொள்முதல் மற்றும் விற்பனையின் மீது விற்பனை வரி வசூலிக்கப்படும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு அளவில் விற்பனை வரியை வசூல் செய்வார்கள். அதுவே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விற்பனை மற்றும் கொள்முதல் நடக்கையில் மத்திய விற்பனை வரி வசூலிக்கப்படும். GST சட்டம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டால் விற்பனை வரி மற்றும் சுங்க வரி உட்பட பல வரிகளை நெறிப்படுத்தும். நாடாழுமன்ற குளிர்கால தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படலாம்.
இது GDP-யை மேம்படுத்தி நாட்டிலுள்ள வரிகளை நெறிப்படுத்தும் என
நம்பப்படுகிறது
மொத்த உள்நாட்டு
உற்பத்தி(GrossDomesticProduct)
ஒரு
நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே
அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product - GDP). ஜி.டி.பி யை கணக்கிடுவது
மிகவும் கடினமான செயலாகும். இன்று வரை அதை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. ஆனால்,
இந்த கணக்கிடும் முறையை செம்மைப்படுத்துவது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
ஏன் ஜி.டி.பி யை நாம் கணக்கிட வேண்டும்?
ஒரு
நாட்டின் வளர்ச்சிநிலையை தெரிந்துகொள்ள ஜி.டி.பி.யைவிட சரியான குறியீடு இதுவரை
கணக்கிடப்படவில்லை. உலக நாடுகள் எல்லாமே ஒரே மாதிரியான ஜி.டி.பி கணக்கிடும்
முறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளும் ஜி.டி.பி கணக்கிடும் அனுபவங்களை
பகிர்ந்துகொள்வதால் இதை கணக்கிடும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு எல்லா
நாடுகளிலும் ஒரே முறையில் ஜி.டி.பி கணக்கிடப்படுவதால் ஒரு நாட்டின் வளர்ச்சியை
மற்றொரு நாட்டின் வளர்ச்சியுடன் ஒப்பிடுவது எளிதாகியுள்ளது.
கணக்கிடும்
முறைகள் :
பொதுவாக GDP -யை மூன்று விதமாக கணக்கிடலாம்
1.Output
approach - உற்பத்தி முறை
2.Expenditure
approach - செலவின முறை
3.Income
approach - வருமான முறை
இதில் உற்பத்தி முறை என்பது , நேரடியான முறை , ஒவ்வொரு
துறையின் கீழ் , ஓர் ஆண்டில் எவ்வளவு உற்பத்தி செய்துள்ளது என கணகிடல் முறையாகும்
. செலவின முறை
என்பது , ஓர் தனிமனிதன் எவ்வளவு செலவு செய்தது பொருட்களை வாங்குகிறான் என்பதாகும்
.வருமான முறை என்பது ஓர் பொருளை உற்பத்தி செய்வதான் மூலம் , அந்த பொருளை உற்பத்தி செய்த
உற்பத்தியாளருக்கு கிடைக்க பெரும் வருமானத்தை கொண்டு கணக்கிடும் முறையாகும் . இந்தியாவில் செலவின முறை கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தியை
கணகிட்டு வருகின்றனர் . செலவின முறை கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடுதல்
GDP=consumption+investment+(government spending)+(exports-imports) GDP= C+I+G+(X-M)
Where,
C
stands for consumption which includes personal expenditures pertaining to food,
households, medical expenses, rent, etc
I stands
for business investment as capital which includes construction of a new mine,
purchase of machinery and equipment for a factory, purchase of software,
expenditure on new houses, buying goods and services but investments on
financial products is not included as it falls under savings
G stands
for the total government expenditures on final goods and services which
includes investment expenditure by the government, purchase of weapons for the
military, and salaries of public servants
X stands
for gross exports which includes all goods and services produced for overseas
consumption
M
stands for gross imports which includes any goods or services imported for
consumption and it should be deducted to prevent from calculating foreign
supply as domestic supply
GDP Growth By Country-2015
Sorted By Average % GDP Growth
Country
|
2006
|
2007
|
2008
|
2009
|
2010
|
2011
|
2012
|
2013
|
2014
|
2015
|
Avg. %
|
United Kingdom
|
2.8
|
3.4
|
-0.8
|
-5.2
|
1.7
|
1.1
|
0.3
|
1.7
|
3.2
|
2.7
|
1.1
|
United States
|
2.7
|
1.8
|
-0.3
|
-2.8
|
2.5
|
1.6
|
2.3
|
2.2
|
2.2
|
3.1
|
1.5
|
Australia
|
2.7
|
4.5
|
2.7
|
1.5
|
2.2
|
2.6
|
3.6
|
2.3
|
2.8
|
2.9
|
2.8
|
Russia
|
8.2
|
8.5
|
5.2
|
-7.8
|
4.5
|
4.3
|
3.4
|
1.3
|
0.2
|
0.5
|
2.8
|
Korea
|
5.2
|
5.5
|
2.8
|
0.7
|
6.5
|
3.7
|
2.3
|
3.0
|
3.7
|
4.0
|
3.7
|
Singapore
|
8.9
|
9.1
|
1.8
|
-0.6
|
15.2
|
6.1
|
2.5
|
3.9
|
3.0
|
3.0
|
5.3
|
India
|
9.3
|
9.8
|
3.9
|
8.5
|
10.3
|
6.6
|
4.7
|
5.0
|
5.6
|
6.4
|
7.0
|
China
|
12.7
|
14.2
|
9.6
|
9.2
|
10.4
|
9.3
|
7.7
|
7.7
|
7.4
|
7.1
|
9.5
|
ka6thikkn
No comments:
Post a Comment