Monday 20 June 2016

பிஎஸ்எல்வி சி34 - 20 "சாட்டிலைட்ஸ்".. அடுத்த சாதனைக்கான கவுண்ட் டவுன்.. ஸ்டார்ட்ஸ்!

       பிஎஸ்எல்வி சி34 - (PSLV-C34)


ஒரே அடியில் 20 "சாட்டிலைட்ஸ்" அடுத்த சாதனைக்கான கவுண்ட் டவுன்.. ஸ்டார்ட்ஸ்!



PSLV C34
PSLV C34 On Launch Pad



ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிற 22-ஆம் தேதி, 20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான 48 மணி நேர கவுண்ட் டவுன் இன்று தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  மொத்தம் 20 செயற்கைகோள்களாகும். வரும் 22ம் தேதி காலை 9.25 மணிக்கு பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் புறப்பட்ட 26வது நிமிடம் 30வது வினாடியில் அனைத்து செயற்கைகோள்களும் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்

Fully Integrated PSLV -C34 

இந்த 20 செயற்கைக்கோள்களில் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 17 செயற்கைக்கோள்களும் அடங்கும். பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் மூலம், வரும் 22-ஆம் தேதி காலை 9.25 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டா 2-ஆவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. பிஎஸ்எல்வி சி-34 நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்எல் வகையில் 14- ஆவது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர் என இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது. கார்டோசாட் 2 – ஒரு பார்வை: பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் சுமந்து செல்லவுள்ள முதன்மை செயற்கைக்கோள் இதுவாகும். இதன் முக்கியப் பணி, பூமியை படமெடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இந்தச் செயற்கைக்கோளின் எடை 727.5 கிலோ கிராம். பூமியிலிருந்து 505 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். இதில், 986 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள். இந்தோனேசியாவின் லெபன்-ஏ3 (120 கி.கி.), ஜெர்மனியின் பிரோஸ் (130 கி.கி.), கனடாவின் எம்3எம்சாட் (85 கி.கி.), ஜிஎச்ஜிசாட்-டி (25.5 கி.கி.), அமெரிக்காவின் ஸ்கைசாட் ஜென்2-1 (110 கி.கி.), டவ் வகையை சேர்ந்த 12 (ஒவ்வொன்றும் 4.7 கி.கி.) என 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 
PSLC - C34
panoramic view of fully integrated pslv-c34 with all the 20spacecrafts being moved to second launchpad

இந்தியாவில் இருந்து…
. இந்தியாவின் இந்தியன் பல்கலைக்கழகம் / அகாடமிக் இன்ஸ்டிடியூட்: சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சத்யபாம்சாட் (1.5கி), புனே பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஸ்வயம் (1 கி.கி.) ஆகிய 2 செயற்கைக்கோள்கள் உள்பட மொத்தம் 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
தொலையுணர்வு செயற்கைக்கோள்
இந்தியா விண்ணில் ஏவியுள்ள தொலையுணர்வு செயற்கைக்கோள்களில் “கார்டோசாட் 2
12-ஆவது செயற்கைக்கோள் என்றாலும், பல விதங்களில் இது வித்தியாசமானது.
தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் (Remote Sensing Satellites) தொடர்பாக நாம், கால் பதித்து 20 ஆண்டுகள் ஆகின்றன. கார்ட்டோகிராபி என்பது பூமியின் பரப்பை, சார்ட் ஆக வரைதலைக் குறிக்கும். இந்த கார்டோசாட்டின் பெரிய உபயோகமாக இதுதான் கருதப்படுகிறது.


இரண்டரை மீட்டர் விட்டத்தில் (spatial resolution) இருக்கும் எந்த ஒரு பொருளையும் விண்ணிலிருந்து முப்பரிமாணத்தில் 30 கிலோ மீட்டர் பரப்பளவில் கறுப்பு வெள்ளை படங்களாக எடுக்கும் இதன் இரு கேமராக்கள். இந்த கேமராக்களை செயற்கைக்கோளின் சுழற்சியையொட்டி கோணங்களை மாற்றி ஒரே பொருளை இரு வேறு கோணங்களில் படமெடுத்து 3-டி படங்களை தர கட்டுப்பாட்டு அறைக்கு பெற்றுக் கொள்ளலாம். சூரியனின் சுழற்சியையொட்டி இந்த செயற்கைக் கோள் சுழலும் என்பதால், தர கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள முடியாத நேரங்களில் இப்படங்களை 120எஆ அளவில் சேமிக்கவும் வசதி உள்ளது. உலகிலேயே முதன் முறையாக ஓடுதளத்தில் ஸ்டாரியோ இமேஜிங் வசதியுள்ள செயற்கைக்கோள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தரமான படங்களை அமெரிக்காவிலிருந்து ஏகப்பட்ட விலைகொடுத்து வாங்கி வந்த நாம், இதன் மூலம் மிகக் குறைந்த விலையிலேயே இவற்றைப் பெற முடியும். இந்தத் தொலையுணர்வு செயற்கைக்கோளை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நீர்வள மேம்பாடு, காடுகள் அழிக்கப்படுவதைக் கணித்து ஆவன செய்தல், மக்கள் குடியிருப்புகள் தொடர்பான திட்டமிடுதல்களைச் செம்மைப்படுத்துதல் போன்ற பணிகளை சிறப்பாகச் செய்யலாம். பெரு நகர மேம்பாட்டில் இப்போது நுழைந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இவை பெரும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 34 ராக்கெட் இந்த 20 செயற்கைக் கோள்களையும் ஒரே சமயத்தில் தாங்கி நாளை (ஜூன் 22) காலை சரியாக 9.26-க்கு விண்ணில் பாயவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டைச் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவின் கார்டோசேட்-2 செயற்கைக்கோள் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 19 செயற்கைக்கோள்கள் 560 கிலோ எடை கொண்டவை. இந்த 20 செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு கொண்டு செல்லும் பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட்டின் எடை 1,288 கிலோ ஆகும். 

  இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ தொலைவில் சூரியனுடன் ஒத்தியங்கும் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.

  இதற்கு முன்பே இஸ்ரோ 2008-ம் வருடம் ஒரே சமயத்தில் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தனது சாதனையை தானே முறியடிக்கும் வகையில், 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது.

Karthikkn

No comments:

Post a Comment

Ads Inside Post