Tuesday 28 June 2016

பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?


பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை
ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?

BREXIT

பெரிய சச்சரவுகள் ஏதுமின்றி, ஒரு பிரிவு நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருது வெளியேற முடிவு செய்திருக்கிறது. இது, அந்த நாடு தான்தோன்றித் தனமாக தானே எடுத்த முடிவு அல்ல. அது மக்களிடம் வாக்கெடுப்பு நிகழ்த்தி, ஜனநாயக வழியில் பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறது. வாக்கெடுப்பில் 48.11 சதவீதம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்போமென்றும், 51.89 சதவீதம் பேர் வெளியேறுவோமென்றும் வாக்களித்து இருக்கிறார்கள். உண்மையில் இது பிரிட்டனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கடினமான காலம்தான்.

என்ன ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...?:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை அந்நாட்டின் பிரதமர் கேமரூன் விரும்பவில்லை. அவர், என் கருத்தைவிட, எதிர்க்கட்சிகளின் கருத்தை விட மக்கள் கருத்துதான் மிகவும் முக்கியம். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். தேசத்தின் பொருளாதாரம் வலிமையானதாகத்தான் இருக்கிறது. யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று சொல்லி இருப்பதோடு, தன் பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். 
இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டோனால்ட் டஸ்க், “ஒன்றியத்தில் மிச்சமுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் விவாதிப்போம். நான் கடந்த சில தினங்களாக ஒன்றியத்தில் உள்ள பிற நாட்டின் தலைவர்களுடன் பேசி வருகிறேன். அவர்கள் பிரிட்டன் வாக்கெடுப்பின் முடிவு என்னவாக வந்தாலும், நாம் இணைந்தே இருப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார். ஆனால், உண்மை அப்படியானதாக இல்லை. ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்தில் இப்போதே பிரிவினை கோஷம் கேட்க துவங்கிவிட்டது. 

ஃபிரான்ஸின் இடதுசாரி கட்சியை சேர்ந்த ஜியன் லக் மெலின்கன்,  “இது முடிவல்ல. இதுதான் துவக்கம். ஃபிரான்ஸில் இதுபோன்ற ஒரு வாக்கெடுப்பு நடந்திருந்தாலும், அதுவும் பிரிந்து செல்லவே விரும்பி இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

ஒரு பக்கம்  பிரிட்டனில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை விரும்பாத மக்கள், இந்த பிரிவினைக்காக பிரசாரம் செய்த போரிஸ் ஜான்சனை வசைபாடி இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்காட்லாண்ட் மக்களும், வட அயர்லாந்து மக்களும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பதைதான் விரும்பினார்கள். பிரிட்டனிலிருந்து தனியாக பிரிந்து செல்லும் வரை அதுதான் தங்களுக்கு பாதுகாப்பு என்று நம்பினார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் இருக்க வேண்டும் என பெரும் பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டார்கள். ஆனால், அது பயனற்றதாக ஆகிவிட்டது. 

ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?:
பிரிட்டன் ஏன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது என்பதை பார்க்கும் முன், ஏன் ஐரோப்பிய ஒன்றியம் உருவாகியது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தாய், ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு கூட்டமைப்பு. இது 1951 ம் ஆண்டு தோன்றியது. பிறகு 1957 ம் ஆண்டு ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம்,லக்ஷம்போர்க் (Luxembourg) மற்றும் நெதர்லாந்த் ஆகிய நாடுகள்  இணைந்து, இதை ஐரோப்பிய பொருளாதார சமூகமாக உருமாற்றின. 1973 ம் ஆண்டு,  இதில் பிரிட்டனும் சேர்ந்தது. இதன் நோக்கம் வணிக நலன்களாக மட்டும்தான் இருந்தது. அதாவது, இந்த நாடுகளுக்குள் தங்கு தடையற்ற வர்த்தகம்.

இது 1993 ம் ஆண்டு, மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம்  (Maastricht Treaty) மூலம் ஐரோப்பிய ஒன்றியமாக உருப்பெற்றது. இதில் 28 நாடுகள் இடம்பெற்றன. இந்த ஒப்பந்தம் ஏதோ ஓராண்டில் உருவானதல்ல. 1972 முதல் பல நாடுகளில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின்போது மக்களுக்கு சொல்லப்பட்டது, 'ஒன்றியமாக இணைந்தால் நம் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்' என்பது. இதில் முரண் என்னவென்றால், இந்த பிரிவினைக்கு ஆதரவு வேண்டி பிரசாரம் மேற்கொண்ட போரிஸ் ஜான்சனின் பயன்படுத்தியதும்  இதே பதத்தைதான். நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினால் நம் தேசத்தின் பொருளாதாரம் வலிமையடையும். என்றார். ஆக இணைந்த போதும், பிரிந்த போதும் சொல்லப்பட்டதற்கான காரணம் பொருளாதாரம். ஆனால், உண்மையில் அதுமட்டும் காரணமல்ல. 
ஏன் மக்கள் பிரிவினையை விரும்பினார்கள்...?:

brexit case of leaving  

பொருளாதார தேக்கம், பங்கு சந்தை வீழ்ச்சி என்பதையெல்லாம் கடந்து, பிரிட்டன் மக்கள் ஏன் பிரிந்து செல்ல விரும்பினார்கள் என்பதை ஆராய வேண்டும். அதை ஆராய்வதில்தான் பல இனங்கள் ஒன்றாக வாழும் தேசங்களின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.  

பூர்வீக பிரிட்டானிய மக்கள், தங்களின் வேலை வாய்ப்புகளை ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிற நாடுகளின் மக்கள் பறித்து கொள்வதாக எண்ணினார்கள். பிற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறும் மக்களால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று நம்பினார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், இது
முழு உண்மையும் இல்லை. ஆனால், இந்த எண்ணம்தான் இப்போதைய பிரிவினைக்கு காரணம். இந்த பிரிவினை கோஷம் உடனே ஏற்பட்டதல்ல... கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அங்கு கேட்கிறது. 


ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்து இருக்கும் வரை, பெரிதாக விசா கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை. ஒருவர் சுலபமாக நெதர்லாந்தில் இருந்தோ, ஃபிரான்சில் இருந்தோ பிரிட்டனிற்கு வேலை தேடி செல்லலாம். குறிப்பாக போலாந்திலிருந்தும், ரொமேனியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் பிரிட்டனுக்கு வேலை தேடிச் சென்றார்கள். துவக்கத்தில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட பிரிட்டன் மக்கள், நாளடைவில் தங்கள் வேலை வாய்ப்புகள் பறிபோவதாக கருதினார்கள். 

தேவேளை, நிறுவனங்களும் இதை பயன்படுத்திக்கொண்டன. பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு சம்பளமாக, மாதம் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பிறநாட்டினர் அதே வேலைக்கு ஐம்பாதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வரத் தயாராக இருந்தார்கள். இதை நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டன. இதனால் பிரிட்டனில் படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் தடுமாறினார்கள். 

இன்னொரு பக்கம், ஐரோப்பியா தன் கதவுகளை அகதிகளுக்காக திறந்தே வைத்திருந்தது. ஃபிரான்ஸ், நெதர்லாந்தில் குடியேறிய அகதிகள், கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டனை நோக்கி நகரத் துவங்கினார்கள்அதுபோல், ஆப்ரிக்காவிலிருந்தும் வேலை தேடி ஐரோப்பியா சென்றவர்களும், பிரிட்டனுக்கே சென்றார்கள். 

பிரெக்ஸிட் பொதுஜன வாக்குடுப்பிற்கு ஒரு நாள் முன்பு, ஜெர்மானிய தலைவர் ஏஞ்சலா மெர்கல், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் வரை பிரிட்டனால் வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்பவர்களை கட்டுப்படுத்த முடியாதுஎன்றார்
சிறுபான்மையினர் ஆகிவிடுவோமென்ற அச்சம்:


ஐரோப்பிய ஒன்றியம் 1993 ம் ஆண்டு அமைவதற்கு முன்பு, புலம் பெயர்பவர்கள் பிரிட்டனுக்கு பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. அப்போதெல்லாம் இந்தியாவிலிருந்துதான் பெரிய எண்ணிக்கையில் பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் உருவான பின், இந்த எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது. 1993 - 2014 காலகட்டத்தில் மட்டும், வெளிநாட்டில் பிறந்து பிரிட்டனில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 8.3 மில்லியன் ஆனது. இதை பிரிட்டானிய மக்கள் விரும்பவில்லை. அதாவது சொந்த தேசத்திலேயே  கொஞ்சம் கொஞ்சமாக சிறுபான்மையினர் ஆகிவிடுவோமோ என்ற மக்களின் அச்சம்தான் பிரிவினை வரை வந்து நிறுத்தி இருக்கிறது. 

இதுமட்டுமல்லாமல்குடியேறிகளால் தங்கள் தேசத்தின் கலாசாரம் சீரழிகிறது, சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்பதும் பிரிட்டன் மக்களின் குற்றச்சாட்டு. 

சொந்த நிலத்தில் சிறுபான்மையினர் ஆகிவிடுவோம், பிற இனத்தவர்களால் தம் வேலை வாய்ப்புகள் பறிப்போகிறது, கலாச்சாரம் சீரழிகிறது என்பது உண்மையில் பிரிட்டனின் அச்சம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் படர்ந்துள்ள அச்சம். ஏன்...? உலகம் முழுவதும் பல தேசங்களை இந்த அச்சம் பீடித்துள்ளது. பொருளாதார சரிவை ஆராய்வதைவிட, இதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
உள்நாட்டவர்களின் வேலை வாய்ப்பு பறி போவது, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவையும் பிரிட்டன் மக்களை ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டுமென்ற மனநிலைக்கு கொண்டு வந்தது. இதையடுத்தே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலு பெற்றது. 

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகல்!    


david cameron

 ரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவு பெருகியதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட்  கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்
ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உள்ளன. இந்த 28 நாடுகளும் உறுப்பு நாடு என்ற வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடியை ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கி வந்தன. பிரிட்டனும் அவ்வாறு செலுத்தி வந்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பொருளாதார சுமை ஏற்படுவதாகவும்  சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையும் இருப்பதாக பிரிட்டன் மக்கள் கருதினர்.
உள்நாட்டவர்களின் வேலை வாய்ப்பு பறி போவது, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவையும் பிரிட்டன் மக்களை ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டுமென்ற மனநிலைக்கு கொண்டு வந்தது. இதையடுத்தே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலு பெற்றது. 

ஆனால் இங்கிலாந்து பிரதமர் டேவிட்  கேமரூன் மட்டும் பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலேயே நீடிக்க வேண்டும் என்றும், வாக்கெடுப்பில் தோல்வி கண்டால்  பதவி விலகுவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி வாக்கெடுப்பில் தோல்வி கண்டதையடுத்து அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

லண்டன் டவுனிங் தெருவில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாசலில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய டேவிட்   கேமரூன்,  '' நான் பதவி விலகும் சமயம் வந்து விட்டது. புதிய பிரதமர் அக்டோபர் மாதத்தில் தேர்வு செய்யப்படுவார். தேசம் மற்றொரு இலக்கை நோக்கி செல்லும் போது, நான் தலைமை பதவியில் இருப்பது சரியானதாக இருக்காது'' என்றார். 

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முதல் பெரிய நாடு பிரிட்டன். யூனியனில் இருந்து வெளியேறுவதால் பிரிட்டனை சில விஷயங்கள் பெரிதும் பாதிக்கக்கூடும்ஐரோப்பிய யூனியனில்  உள்ள நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி வரி விதிப்பு கிடையாது. பிரிட்டனில் உற்பத்தியாகும் பொருட்களில் 50 சதவீதத்தை, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் ஏற்றுமதி வரி இல்லாமல் கொண்டு செல்லலாம். இனிமேல் வரி செலுத்த வேண்டியது இருக்கும். 

ஐரோப்பிய யூனியனின் முக்கிய வர்த்தகப் பகுதியாக பிரிட்டன் இருப்பதால்கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதன் மூலம் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படலாம். பிரிட்டனை விட்டு பெரிய பெரிய  நிறுவனங்கள் வெளியேறவும் வாய்ப்புள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதே பிரிட்டனின் பலம் என கருதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பிரிட்டனுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்காமல் கூட போகலாம்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் 

பிரிட்டன்... ஆட்டம் காணும் பங்குச் சந்தை!


பிரெக்ஸிட் பின்னணியும் விளைவும்...!

இங்கிலாந்து எனப்படும் பிரிட்டன், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவாகியுள்ள அமெரிக்கா, வளர்ந்து வரும் இந்தியா உட்பட 52 நாடுகளை ஆண்டிருக்கிறது என்பது வரலாறு. இத்தகைய மாபெரும் வரலாறு கொண்ட இங்கிலாந்து இன்று, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு வெளியேறலாமா வேண்டாமா என தனது நாட்டு மக்களிடமே வாக்கெடுப்பு நடத்தியதில், வெளியேறுவதை ஆதரித்து அதிகமானோர் வாக்களித்துள்ளனர். 

பிரிட்டனுக்கு என்னதான் பிரச்னை?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945-57 காலகட்டத்தில் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான கூட்டமைப்பாக, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணையத் தொடங்கின. இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி மற்றும் கிரீஸ் உட்பட 28 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளன.

அந்த நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம், தொழில் கொள்கைகளை வகுத்து அதற்கேற்ப ஒன்றிணைந்து ஒரே கூட்டமைப்பாக செயல்படுகின்றன. யூரோ என்ற பொது கரன்சியை, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்துகின்றன, ஒரே ஒரு நாட்டைத் தவிர. ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின் மக்கள், ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குள் விசா இன்றி பயணம் செய்யவும், எந்த நாட்டிலும் தங்கி பணியாற்றவும் முடியும்.

பிரிட்டனுக்கு என்னதான் பிரச்னை?

ஆரம்பத்திலிருந்தே,  ஐரோப்பிய யூனியனில் இருந்து தனித்து செயல்படுவதை இங்கிலாந்து வழக்கமாக வைத்திருந்தது. எனவேதான் யூரோ நாணயத்தை ஏற்காமல் தன்னுடைய பவுண்ட் நாணயத்தையே பயன்படுத்தி வந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், வலுவான நாடுகள் என்று பார்த்தால் இங்கிலாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட சில நாடுகள் உள்ளன. இவை தவிர பிற நாடுகளில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளோ, தொழில் வளமோ, வளர்ச்சியோ இல்லை. இந்த நிலையில் இந்த நாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமையையும் சுமக்க வேண்டியிருந்தது

பிரிட்டனில் கணிசமான தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் இருப்பதால் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் ஐரோப்பிய யூனியனில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல நாடுகளில் இருந்தும் மக்கள் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் பிரிட்டனின் சொந்த மக்களுக்கு அவர்களுடைய நாட்டிலேயே வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் பிரிட்டன் மக்கள், வெளிநாட்டினர் தங்களுடைய வாய்ப்புகளைப் பறிப்பதை விரும்பவில்லை. இதன் விளைவுதான்  பிரிட்டன் வெளியேற்றம்.

பிரெக்ஸிட், வெற்றியடைந்த பிரிட்டன்!



இங்கிலாந்து பிரதமராக கேமரூன் பதவி ஏற்றப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த விவாதம் தொடங்கியது. அப்போதே அதற்கான வாக்கெடுப்பு ஜூன் 23 ம் தேதி என்று குறிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 23 அன்று ( நேற்று) வாக்கெடுப்பு நடந்தது.

இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து, பிரிட்டன் வாக்காளர்கள் 1 கோடியே 57 லட்சம் பேர் வாக்களித்திருக்கின்றனர். இறுதியாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெற்றிகரமாக வெளியேறிவிட்டது. அது எதிர்பார்த்த விடுதலையை அடைந்துவிட்டது.

51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும்,  48.2 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் வித்தியாசம் மிகக்குறைந்த அளவே இருந்தாலும்,  பெரும்பான்மை அடிப்படையில் பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

பிரிட்டனின் இந்த வெற்றி யாருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இல்லை. ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் அந்த நாடுகளுக்கிடையில் மிகப்பெரிய வர்த்தக மற்றும் பொருளாதார இடைவேளி உருவாகும். மேலும் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்னை, புலம்பெயர்ந்தவர்கள் பாதிப்பு, பாதுகாப்பு போன்ற பல பிரச்னைகள் உருவாகும்.

மேலும் நாணய பரிமாற்றத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து இந்திய சந்தையில் செய்யப்படும் முதலீட்டு அளவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும். உலக நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும்.

உலகச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக 11.30 மணி அளவில் இந்தியச் சந்தைகள் சென்செக்ஸ் 3.7 சதவிகிதமும், நிஃப்டி 3.8 சதவிகிதம் சரிந்துள்ளன.

ஹாங்செங், ஷாங்காய், டவ்ஜோன்ஸ் உட்பட அனைத்து ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக நிக்கி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்ட
து


இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?




பிரிட்டன் வெளியேறுவதால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு, சந்தைகள் எப்படி செயல்படும் ,

"நம் நாட்டிலிருந்து பல நிறுவனங்கள் அங்கு தொழில் செய்து வருகின்றன. சுமார் 800 இந்தியர்கள் தங்களது வர்த்தகத்தை இங்கிலாந்தில் செய்து வருகின்றனர். இந்நிறுவனங்களில் சுமார் 1,10,000 பேர் பணியாற்றுகின்றனர். பிரிட்டன் வெளியேற்றத்தால் அங்குள்ள தொழில்கள் பாதிக்கப்படுவதோடு, இந்தியச் சார்ந்த அனைத்து வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கும்.

பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கும். இதனால் பணவீக்கம் அதிகரித்துப் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு 15-20 சதவீதம் வரை கடுமையாகப் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக நாடுகளின் நாணய பரிமாற்றத்தில் ஸ்திரத்தன்மை சீர்குலையும் என்பதால் நிச்சயம் உலகச் சந்தைகளில் இது எதிரொலிக்கும். பொருளாதாரம், பங்குச் சந்தை இரண்டிலும் இதன் தாக்கம் தெரியும்.

இன்று மட்டும் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் இறங்கியுள்ளது. இது மேலும் தொடர வாய்ப்புள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று ரூ. 68 ஐ தாண்டியுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டிலும் சீனாவுக்குப் பெரும் பாதிப்பு உள்ளது"



ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென பிரிட்டன் வாக்களித்திருக்கிறது. சரி இனி என்ன நடக்கும்?
உடனடியாக ஒன்றும் மாறாது. அடுத்து என்ன செய்வது என அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும்.
ஐரோப்பிய ஒன்றிய முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து பிரஸ்ஸல்ஸில் நெருக்கடிகால கூட்டங்கள் கூட்டப்படும்.
அப்படியானால் அதிகாரப்பூர்வ வெளியேற்றம் எப்போது ஆரம்பிக்கும் என்பதே பலரின் கேள்வி?
லிஸ்பன் ஒப்பந்தம் 50 ஆவது பிரிவு அதற்கான நடைமுறையை விளக்குகிறது.
அதன்படி, வெளியேறுவதற்கான முறையான அறிவிப்பை கொடுத்த நாளிலிருந்து வெளியேறுவதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசமிருக்கிறது.
அது எப்போது நடக்குமென தெரியவில்லை.
பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் புது ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
முதலாவது வர்த்தகம். ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க விரும்பினால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய விதிகள், கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய நாட்டைச் சேர்ந்தவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டியும் வரலாம்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்கனவே வாழும் பிரிட்டிஷ் மக்களின் நிலைமை மற்றும் பிரிட்டனிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்குடிகளின் நிலைமை குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டும்.
ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் உருவானபின், இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் இயற்றிய சட்டங்கள் அனைத்தையும் பிரிட்டன் சட்டங்களாக புதுப்பிக்க வேண்டும்.

KARTHIKKN

No comments:

Post a Comment

Ads Inside Post