Tuesday, 7 June 2016

மண் மேலாண்மை

மண் மேலாண்மை:

மண்வளம்



மண்ணியிலாளர் உலகின் மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் பிரிக்கின்றனர்.இவ்வாறு அமைவதற்க்குக் காரணிகளாக மழைவெப்பம், மற்றும் காற்றோட்டம்போன்றவைகள் இருக்கின்றன.இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன
மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு அங்குல மண் உருவாதற்கு 300-1000 வருட காலம் தேவைப்படுகிறது. ஒரு செடி செழுமையுடன் வளர்ந்து அதிக மகசூல் தர வேண்டுமானால் அதற்கு ஏழு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவை 1.சூரிய ஒளி 2.கரியமில வாயு 3.ஆக்ஸிஜன் 4.தண்ணீர் 5.தாது உப்புகள் 6.மண் பிடிமானம் மற்றும் 7.மண்வெப்பம் இதில் முதல் மூன்றும் சூரிய மூலமும், காற்று மூலமும் பயிருக்கு கிடைத்துவிடுகிறது. மற்றைய ஐந்து தேவைகளும் மண்ணிலிருந்து தான் பெற்றாக வேண்டும். அதிகபடியான மழை, காற்று மற்றும் வெப்பம் ஆகிய தாக்குதல்களால் மண்ணிலுள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு மண் குறைவு ஏற்படுகிறது. எனவே மண் வள மேலாண்மை அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
உலகின் பரப்பளவில்இந்தியா ஏழாவது இடத்திலிருக்கிறது. இந்திய நாட்டின் பரப்பளவு 32,87,782 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இப்பரப்பளவில் ஏறத்தாழ 45 சதவீதம்வேளாண்மைக்குப் பயனாகிறது. உலகின் பெரும்பாலானப் பயிர்களை, இந்தியாவில் பயிரிடும் வகையில் இந்திய மண்ணின் தன்மையுள்ளது. ஏறத்தாழ அனைத்து வகை உலக மண்களும், இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன.

இந்தியாவின் மழைப் பொழிவுகள் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.இந்தியாவில், உலகிலேயே அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும் சிரபுஞ்சி (வருடத்திற்க்கு 1000 செ.மீ.வரை) இருக்கிறது. இராஜஸ்தான் பாலைவனத்தில் மிகக் குறைந்த அளவு மழைப்பொழிவு(வருடத்திற்க்கு10செ.மீ.) இருக்கிறது. இவ்விதம் மழைப்பொழிவுகள் வேறுபடுவதால், மண்ணின் வளமும் வேறுபடுகின்றன.
இந்திய நாட்டின் வெப்பம் பரவலாக 48 டிகிரி சென்டிகிரேடிலிருந்து, -40 டிகிரி சென்டிகிரேடு வரை நிலவுகிறது. இதனாலும், மண்ணின் தன்மையும், ஈரப்பசையும் வேறுபடுகின்றன. 
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 130 இலட்சம் எக்டேர் பரப்பளவு நிலமுள்ளது. இதில் ஏறத்தாழ 63 இலட்சம் வேளாண்மைக்கு ஏற்ற மண்வளத்தினைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 100 செ.மீ. மழைப்பொழிகிறது.இம்மழையளவில் ஐந்தில் ஒரு பங்கு நீர், மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது.
சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சிமுல்லை , மருதம்நெய்தல் மற்றும் பாலைஎன்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர். உலக வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும், தமிழ் நாட்டிலுள் உள்ளதென்று வேளாண் அறிஞர் உரைக்கின்றனர். தமிழகத்தின் மண்வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

தமிழ்நாட்டின் மண் பிரிவுகள்
1. செம்மண் (65 சதவீதம்)
2. கரிசல் மண் (12 சதவீதம்)
3. செம்பொறை மண் (3 சதவீதம்)
4. கடற்கரை மண் (7 சதவீதம்)

செம்மண் வகைகள்

1. இரு பொறை செம்மண் (30 சதவீதம்)
2. வளம் குறைந்த செம்மண் (6 சதவீதம்)
3. மணற்பாங்கான செம்மண் (6 சதவீதம்)
4. ஆழம் குறைந்த செம்மண் (2 சதவீதம்)
5. ஆழமான இருபொறை செம்மண் (8 சதவீதம்)



வடகிழக்கு மண்டலம்:
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை
மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண்

வடமேற்கு மண்டலம்
( தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் (பகுதி்) )
சுண்ணாம்புத்தன்மையுள்ள செம்மண்
சுண்ணாம்புத்தன்மையுள்ள கரிசல்மண்


மேற்கு மண்டலம்
( ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, கரூர் (பகுதி), நாமக்கல் (பகுதி), திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் (பகுதி) )
இருபொறை செம்மண், கரிசல் மண்காவேரி படுகை மண்தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் பகுதிகள்இருபொறை செம்மண், வண்டல் மண்
தெற்கு மண்டலம்
(மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி)
கடலோ வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண்
அருக மழை மண்டலம்
கன்னியாகுமரி
கடலோர உவர்தன்மையுள்ள வண்டல்மண், ஆழமான இருபொறை
மண்மலைத்தொடர் மண்டலம்
நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல்)
செம்பொறை மண்
வளமான மண்ணின் தன்மைகள்
  • செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் செடிக்கு கிடைக்கும் நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்”
  • வளமான மண், போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிஸியம், மாலிப்பிடினம், கந்தகம் மற்றும் துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்ககூடிய நிலையில் அமைந்திருக்கும் வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன், ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது
  • மண்ணின் கார் அமில தன்மை 6.0 முதல் 6.8 வரை இருப்பின் அவை வளமான மண்ணாகும்
  • மண் சரியான மண் அமைப்புடன் நன்கு வடியக் கூடிய நிலையில்  அமைந்துள்ள மண் “வளமான மண்”
  • வளமான மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு நன்மை செய்யும் பல்வேறு நுண்ணுயயிர்கள் காணப்படும்
  • வளமான மண் ஆழமான மண் அமைப்புடன் இருக்கும்

மண் பரிசோதணை:


பாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது, பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது மண்பரிசோதனை மூலம் மண்வளத்தினைக்கண்டறியலாம்
தாவரத்திற்க்கு மண்ணிலிருந்துநைட்ரஜன்பாஸ்பரஸ்பொட்டாசியம்சுண்ணாம்பு,மக்னீசியம்கந்தகம்,இரும்புமாங்கனீசுபோரான்தாமிரம்துத்தநாகம்குளோரின்மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறது

மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்
  • இரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும்
  • பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும்.
  • மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வளம் குன்றிவிடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.
  • மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம்
  • மண்ணின் வளத்தை பேணிக்காப்பதற்கு தேவையான அளவு அங்கக உரங்கள் மற்றும் கனிசமான இரசாயன உரங்கள் இடவேண்டும்
  • பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத் திறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைந்திட வேண்டும்
  • தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம்
மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்:
  • மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
    • அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்
    மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்:
    • நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
    • உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை
    • பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது

    மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை:
    • மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
    • மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில் எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.
    • இவ்வாறாக குறைநத பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
    • நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
    • பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.
    • வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 12 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.
    • சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி  மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.
    • பயிர் வகை
      மண் மாதிரி எடுக்கும் ஆழம்
      (அங்குலத்தில)
      (செ.மீ.)
      புல் மற்றும் புல் வெளி
      2

      6

      9

      12,24,36 அங்குல ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
      5
      நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறு தானிய பயிர்கள் (சல்லி வேர் பயிர்கள்)

      15
      பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் (ஆணி வேர் பயிர்கள்)

      22
      நிரந்தர பயிர்கள், மலைப் பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள்
      30, 60, 90 செ.மீ. ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
         



மண் பரிசோதனை ஆய்வகங்கள்
இடம்
முகவரி
கடலூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
கரும்பு அராய்ச்சி நிலைய வளாகம்
சேமமண்டலம்,
கடலூர் – 607 001
காஞ்சிபுரம்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சுபேட்டை
காஞ்சிபுரம் -631 502
வேலூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
குடியாத்தம் TK
மேலலத்து 638 806
வேலூர் மாவட்டம்
தர்மபுரி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வட்டாச்சியர் அலுவலக வளாகம்
தர்மபுரி – 638 702
சேலம்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
35/37, B 11 ராஜாராம் நகர் க்ராஸ்
வனியகலா கல்யாண மண்டபம் அருகில்
சேலம் – 636 007
கோயமுத்தூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
லாலி ரோடு,
அரசு தொழில்நுட்பக் கல்லூரி அஞ்சல்
கோயமுத்தூர் – 642 013
புதுக்கோட்டை
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
குடுமியான்மலை – 622104
புதுக்கோட்டை மாவட்டம்
ஈரோடு
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
41/74 பூங்குன்றனார் வீதி
கருங்கல்பாளையம்
ஈரோடு – 638 003
திருச்சி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காஜாமலை
திருச்சி – 620 020
மதுரை
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
52/வடக்கு சித்திரை வீதி
மதுரை -625 001
ஆடுதுறை
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
ஆடுதுறை – 612101
தஞ்சாவூர் மாவட்டம்
தேனி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
136/2, 2வது வீதி,
சடயல் நகர்
பங்களா மேடு (தெற்கு)
தேனி – 625 531
தேனி மாவட்டம்
 திண்டுக்கல்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
3,  கூட்டுறவு காலனி
திண்டுக்கல் – 624 001
சிவகங்கை
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம்
(TNSTC கிளை – அருகில்)
தோடி ரோடு
சிவகங்கை – 630 561
 பரமகுடி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பரமகுடி – 623 707
இராமநாதபுரம் மாவட்டம்
திருநெல்வேலி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
எண்.37, சங்கர் காலனி
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி -2
தூத்துக்குடி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
சாத்தூர் ரோடு
கோவில்பட்டி– 628 501
தூத்துக்குடி மாவட்டம்
நாகர்கோவில்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
20c, சுந்தரராஜன் காம்பவுண்ட்
இசக்கியம்மன் கோவில் வீதி
நாகர்கோவில் – 629 001
ஊட்டி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
ஊட்டி – 643 001
நாமக்கல்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
142 –H, கிஷோர் வளாகம்
(HDFC வங்கி எதிரில்)
சேலம் மெயின் ரோடு
நாமக்கல் – 637 001
திருவாரூர்
ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை வளாகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம் மேல்மாடியில்
திருவாரூர் – 610 001
திருவள்ளூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காக்களூர்
திருவள்ளூர் to ஆவடி ரோடு
திருவள்ளூர் – 602 003
பெரம்பலூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
93F/21A வெங்கடாசலபதி நகர்
புது பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் – 621 210
கிருஷ்ணகிரி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம்
ரகுபதி மருத்துவமனை அருகில்
கிருஷ்ணகிரி – 635 001
விருதுநகர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் காம்ப்ளக்ஸ்
விருதுநகர் – 626 001
கரூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
தில்லை நகர், ராஜ்னூர்
தான்தோனி
கரூர் – 639 003
அரியலூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வளஜனகரம்
அரியலூர் – 621 704
 நாகப்பட்டிணம்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சாயத்து யூனியன் வளாகம்
நாகப்பட்டிணம் – 611 001
விழுப்புரம்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம் முக்கிய திட்ட வளாகம்
விழுப்புரம் – 605 602
திருவண்ணாமலை
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
கோட்டம்பாளையம் ரோடு
வெங்கிகால்
திருவண்ணாமலை – 606 604



நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்
இடம்
முகவரி
திருவள்ளூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
நடமாடும்  மண் பரிசோதனை ஆய்வகம்
காக்களூர்
திருவள்ளூர் To ஆவடி ரோடு
திருவள்ளூர்
திருவண்ணாமலை
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காமண்பாளையம், வெங்கிகல்
திருவண்ணாமலை -  606 604
விழுப்புரம்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை அலுவலர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலுக வளாகம்
விழுப்புரம்
கிருஷ்ணகிரி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம்
ரகுபதி மருத்துவமனை அருகில்,
கிருஷ்ணகிரி – 635 001
திருப்பூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் விரிவாக்க மையம்
பல்லடம்
திருப்பூர்
ஈரோடு
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
41/74 பூங்குன்றனார் வீதி
கருங்கல்பாளையம்
ஈரோடு – 638 003
மதுரை
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
52/வடக்கு சித்திரை வீதி
மதுரை -  625 001
பெரம்பலூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
937/21A, வெங்கடாசலபதி நகர்
புதிய பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் – 621 210
கரூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
1/163/1, சேலம் மெயின் ரோடு
வெண்ணமலை
கரூர் மாவட்டம்
நாமக்கல்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
நாராயணம்பாளையம்
மோரூர் அஞ்சல், திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம் – 637 304
திருவாரூர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
19B, பெரிய மில் வீதி
திருவாரூர் – 610 001
பரமகுடி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பரமகுடி 623 707
இராமநாதபுரம் மாவட்டம்
தூத்துக்குடி
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் ஆராய்ச்சி நிலையம்
சாத்தூர் ரோடு
கோவில்பட்டி – 627 701
தூத்துக்குடி மாவட்டம்
நாகர்கோவில்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
20c, செளந்தரராஜன் காம்பவுண்ட்
இசக்கியம்மன் கோவில் வீதி
நாகர்கோவில் – 629 001
நாகப்பட்டிணம்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சாயத்து யூனியன் காம்பவுண்ட்
வெள்ளிபாளையம்
நாகப்பட்டிணம் – 611 001
விருதுநகர்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
No.  185 – ஸ்டேட் பாங்க் 2வது மாடி
மதுரை ரோடு
அருபுக்கோட்டை – 629 101
விருதுநகர் மாவட்டம்


மண் பரிசோதனை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம் (சோடேக்):


மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையிலும், மண் மற்றும் பயிர் மேலாண்மைக் கல்வி மையத்திலும் மண் பரிசோதனையைப் பற்றிய செயல்கள் இந்தத் துறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.
செயற்பாடுகள்
  1. மண் பரிசோதனை
  2. மண் பரிசோதனை செய்யப்பட்ட உரங்களை வெவ்வேறு பயிர்களுக்கு உபயோகிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது
  3. மண்ணின் தன்மையைக் கண்டறிதல் உதாரணம் உவர்த்தன்மை, களர்த்தன்மை மற்றும் அமிலத் தன்மை,
  4. நீர்ப்பாசன தண்ணீரின் தரத்தை மதிப்பீடு செய்தல்
  5. மண் மற்றும் பயிர் மேலாண்மைக்கு தொழில்நட்ப அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றது
பலன்கள்

  1. பயிர்களுக்கு சரிவிகித உரமிடுதலை உறுதிபடுத்தல்
  2. மண்வளத்தை பராமரித்தல்
  3. உரங்களை அதன் பயன்பாடு தெரியாமல் உபயோகிப்பதை தவிர்க்கவும் மற்றும் சுற்றுப்புறச்சூழலின் பாதுகாப்பும் அவசியம்
  4. ஒரு ரூபாய் முதலீடுக்கும் அதிக வருமானம்


மேலும் விபரங்களுக்கு அணுகவும்
மண் பரிசோதனை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம்
மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை
மண் மற்றும் பயிர் மேலாண்மைக் கல்வி மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோவை - 641 033
மின்னஞ்சல் : 
sottac@tnau.ac.in

sincere thanks to-  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
                                                    & wikipedia


karthikkn





No comments:

Post a Comment

Ads Inside Post