Thursday 30 June 2016

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம் - சிறப்பு பகிர்வு


தேசிய மருத்துவர்கள் தினம் - 


சிறப்பு பகிர்வு




தேசிய மருத்துவர் தினம் -(NATIONAL DOCTORS DAY)
 1 ஜூலை - (July-1)

இந்தியாவில் மருத்துவர் தின வரலாறு

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம்  தேதி நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது ,மருத்துவர் தினம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
இந்தியா பல பிரபலமான மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. அவர்களுள் ஒருவரே புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்). அவரது நினைவைப் போற்றும் வண்ணமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 அவருக்குப் புகழாரம் சூட்ட, 1991-ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவர் பல நிறுவனங்களையும் மருத்துவ மனைகளையும் தொடங்கி இந்திய சமுதாய வளர்ச்சிக்காகப் பல நன்மைகளை ஆற்றினார்.
மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல் அமைச்சராக  இருந்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்). 1882-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார். (1948-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 1962 ஜூலை 1-ஆம் தேதி வரை) 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக திறம்பட பணியாற்றி உள்ளார். மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவை செய்ததால், மத்தியஅரசு 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பிடன் சந்திரராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.



உலகம் முழுவதும் மருத்துவம் ஓர் உன்னதமானத் தொழிலாகக் கருதப்படுகிறது. சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் செவிலியர், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பலரின் கூட்டு முயற்சி அடங்கி இருந்தாலும் அக்குழுவை வழிநடத்திச் செல்பவர் மருத்துவரே. இந்தியச் சூழலில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும் குறிப்பாகக் கிராமப் புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை மிகவும் அதிகமாகும். மருத்துவர்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது நாட்டின் இன்றியமையாதத் தேவையாக உள்ளது. நாட்டிற்கு மருத்துவர்களின் பங்களிப்பைப் போற்றும் வண்ணமாகப் பல நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவர் தினத்தைக் கடைபிடிக்கின்றன. இந்தியாவில் இது ஜூலை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறர் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அமைய மருத்துவர்கள் தங்களது சிறந்த முயற்சியை அளிக்கின்றனர்.
இந்நாளின் நோக்கங்கள்


நமது வாழ்க்கையில் மருத்துவர்கள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை வெளிக்காட்ட
மருத்துவர்களின் சுயநலமற்ற சேவைக்கும், தனிநபருக்கும் சமுதாயத்திற்கும் அவர்கள் வழங்கும் பங்களிப்பிற்கும் நன்றி பாராட்ட.
 ருத்துவ சேவைகளையும், சுகாதாரப் பராமரிப்பையும் சார்ந்த அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளைக் கொண்டாடப் பல நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளும் ஒழுங்குசெய்யப் படுகின்றன. பள்ளிகளும் கல்லூரிகளும், மருத்துவம் சார்ந்த கலந்துரையாடல்களையும், புதிர்ப் போட்டிகளையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றன. நோயாளிகள் தங்கள் மருத்துவர்களை வாழ்த்திப் பாராட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர்.
பல அமைப்புகள் இலவச சுகாதார முகாம்களை நடத்தி இந்நாளைக் கொண்டாடுகின்றன.
மக்களின் வாழ்க்கை நலம் பேணிப் பாதுகாக்கும் மருத்துவர்களின் பங்களிப்பைப் பாராட்ட சிறந்த நேரம் தேசிய மருத்துவர் தினத்தைக் கடைபிடிக்கும் இந்நாளே ஆகும்.


ka6thikkn

No comments:

Post a Comment

Ads Inside Post