Monday, 19 March 2018

உலக_சிட்டுக்குருவிகள்_தினம்....




உலக சிட்டுக்குருவிகள் தினம்....




சிட்டுக்குருவிகள் அருகிப்போனதற்கு காரணம் அலைபேசி கோபுரங்களே என்று இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம்பிக்கொண்டிருக்க போகிறீர்கள்.....

 சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச்20ம் தேதி  உலக_சிட்டுக்குருவிகள்_தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



செல்போன் அலைவரிசை கோபுரங்கள் காரணமாக சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சிட்டுக்குருவிகளை காப்பாற்றி முன்பு போல உலாவ விட பல முயற்சிகள் நடந்து வருகிறது



என்றாலும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது.
இதை உணர்ந்த டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.

சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன

இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.

மேலும் சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்றவையும் சிற்சிறு பூச்சிகள் புழுக்களும் ரசாயன உர பயன்பாட்டுக்கு மாறிய பின் வெகுவாக அழித்தது

  DDT என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகளின் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி. உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு இவ்வினம் வேரற்று போய் இவற்றின் அழிவுக்கு வித்திட்டது.


சிறுதானியங்களின்_பயன்பாடு_குறைந்துவிட்டதும் விவசாயத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் மிக முக்கியக் காரணங்கள். மேலும்
காற்று மாசு, ஒலி மாசு இவைகளும் ஒரு காரணம்செல்போன்_டவர்களின்_பாதிப்புகளை_விட_இத்தகைய_காரணங்களே சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்

இயற்கையை நேசிப்போம்..


ka6thikkn


Tuesday, 31 October 2017

SAVE NANNILAM EXIT_ONGC






save Nannilam







Save nannilam

ka6thikkn


Tuesday, 24 October 2017

The proboscis monkey (புரோபோக்ஸிஸ் குரங்கு அல்லது நீள் மூக்கு குரங்கு)

புரோபோக்ஸிஸ் குரங்கு அல்லது நீள் மூக்கு குரங்கு  
The proboscis monkey or Long Nosed monkey


#Endangered_animals
#proboscis_monkey
#Borneo_island
#Labuk_Bay_Proboscis_Monkey_Sanctuary -
Sandakan, Sabah, #Malaysia
புரோபோக்ஸிஸ் குரங்கு அல்லது நீள் மூக்கு குரங்கு  The proboscis monkey (Nasalis larvatus) or Long Nosed monkey. இது முதனி( primates) குடும்ப வகையை சார்ந்தது
முதனி (primates)


முதனி (Primate) என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும் பிரிவில் மனிதர்கள் உட்பட,கொரில்லா, சிம்ப்பன்சி,ஒராங்குட்டான், கிப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள்,தேவாங்கு,புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன,
முதனிகளுக்கு அறிவு அதிகம். இவைகளின் மூளை மொத்த உடல் எடையோடு ஒப்பிடும் பொழுது மற்ற விலங்குகளைக் காட்டிலும் பெரும்பாலும் அதிகமானது.முதனிகளின் கைகளும் கால்களும் சிறப்பாக மற்ற விலங்குகளில் இருந்து மாறுபடுகின்றன. கைகளிலே, கட்டை விரலானது மற்ற நான்கு விரல்களுக்கும் எதிர்தாற் போலவும், மரக்கிளைகளைப் பற்றுவதற்கு ஏற்றாற் போலவும் அமைந்துள்ளன. கை கால்களின் விரல் நகங்கள் பெரும்பாலும் தட்டையாக உள்ளன மற்ற உயிரினங்களைக் காட்டிலும் முதனிகளின் தனித்துவம், அவற்றின் சமூகப் பண்புகள்.



சேய் பாதுகாப்பு (maternal care) மற்றும் பெற்றோர் மீதான சார்பு. முதனிகளின் மூளை அளவும் அறிவுத்திறன் மற்ற விலங்குகளை விட அதிகம், அதே போல் அவற்றின் வளர்ச்சிக் காலம் அதிகம். இதன் காரணமாக பிறந்து நீண்ட காலம் வரை அவை பெற்றோர் அல்லது பிற மூத்த முதனிகளைச் சார்ந்து வாழுகின்றன. முதனிகளின் தாய்மைப் பண்பு ஒரு குமுகப் பண்பு (social trait) என்றும் வெறும் விலங்கின உள்ளுணர்வு (animal instinct) சார்ந்த இயல்பான ஒன்று இல்லை என்றும் ஃகாரி ஃகார்லோவின் ( Harry Frederick Harlow ) இரீசசுக் குரங்குகள் மீதான ஆய்வுகள் தெரிவிக்கின்றன்.

போர்னியோ ஒராங்குட்டான் இனத்தை போன்ற ஒத்த தோற்றமுடையது,
ஆசிய குரங்கு இனங்களிலேயே பெரிய தோற்றம்  கொண்ட இனங்களில் இதுவும் ஒன்று ,

ஆண் குரங்கு சுமார் 68-72cm உயரமும் , 16-22.5 கிலோ எடையும் கொண்டது,
பெண் குரங்கு 53-62cm உயரமும் , 8-15 கிலோ எடையும்
கொண்டது, நீண்ட மூக்கையும் , பெரிய வயிறுயையும் கொண்டிருப்பதால் இவற்றை இந்தோனிஷியர்கள் "டச்சு குரங்கு" என்று கூறுவர் .
இது ஒரு உட்பிரதேசத்திற்குரிய உயிரி (endemic creature)

(#Endemism or Endemic என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்)

இவை தென்கிழக்கு ஆசிய தீவான  போர்னியா தீவுகளில் மட்டுமே காணப்படும் உட்பிரதேச உயிரி.
மலேஷியா, இந்தோனிஷியா, புரூனே மத்தியில்
#போர்னியா_தீவு (#Borneo_Island) அமைந்துள்ளது

இந்த தீவின் சபா மாநிலத்தில் உள்ள  சண்டாக்கன் கடலோர பகுதியில்
லபூக் பே நீளமூக்கு குரங்குகள் சரணாலயம் 
(Labuk bay proboscis monkey sanctuary)  அமைக்கப்பட்டுள்ளது.
இது மாங்குரோவ் காடுகள் , சதுப்பு நிலங்களும் சூழப்பட்ட பகுதியாகும்.

#Labukbay_proboscis_monkey_sanctuary


1994ஆம்  வருடம்  இந்த சரணாலயம் அமைந்தள்ள 400 ஏக்கர் நிலபரப்பு வணிக வளர்ச்சிக்காக ஒருவரால்  கையகப்படுத்தப்பட்டது , இந்த இடத்தை பார்வையிட வந்த அவரிடம் அங்குள்ளவர்கள் , இந்த அரிய வகை உயிரினத்தை பற்றியும் , இந்த காடுகளை அழித்தால் அவற்றின் வாழ்வாதாரம் பறிபோகும் என்பதையும் கூறினர்,
இதைப்பற்றிய சூழ்நிலையை உணர்ந்தவர்  உடனே இத்திட்டத்தை கைவிட்டார்.
பின்னர் இப்பகுதியை பாதுகாப்பிற்காக சரணாலயமாக மாற்றப்பட்டது.



செம்பட்டியல் அல்லது சிவப்புப் பட்டியல் (#Red_list) என்பது ஒருஉயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும்.
#பன்னாட்டு_இயற்கைப்_பாதுகாப்புச்_சங்கம்
(International Union for Conservation of Nature)

 என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளைபட்டியலிடுகின்றது. இவற்றில் இது #அரிய_வகை_உயிரினங்களின்_பட்டியலில்_சேர்க்கப்பட்டுள்ளது.


நன்றி
ka6thikkn


Ads Inside Post