Monday 19 March 2018

உலக_சிட்டுக்குருவிகள்_தினம்....




உலக சிட்டுக்குருவிகள் தினம்....




சிட்டுக்குருவிகள் அருகிப்போனதற்கு காரணம் அலைபேசி கோபுரங்களே என்று இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம்பிக்கொண்டிருக்க போகிறீர்கள்.....

 சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச்20ம் தேதி  உலக_சிட்டுக்குருவிகள்_தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



செல்போன் அலைவரிசை கோபுரங்கள் காரணமாக சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சிட்டுக்குருவிகளை காப்பாற்றி முன்பு போல உலாவ விட பல முயற்சிகள் நடந்து வருகிறது



என்றாலும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது.
இதை உணர்ந்த டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.

சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன

இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.

மேலும் சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்றவையும் சிற்சிறு பூச்சிகள் புழுக்களும் ரசாயன உர பயன்பாட்டுக்கு மாறிய பின் வெகுவாக அழித்தது

  DDT என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகளின் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி. உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு இவ்வினம் வேரற்று போய் இவற்றின் அழிவுக்கு வித்திட்டது.


சிறுதானியங்களின்_பயன்பாடு_குறைந்துவிட்டதும் விவசாயத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் மிக முக்கியக் காரணங்கள். மேலும்
காற்று மாசு, ஒலி மாசு இவைகளும் ஒரு காரணம்செல்போன்_டவர்களின்_பாதிப்புகளை_விட_இத்தகைய_காரணங்களே சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்

இயற்கையை நேசிப்போம்..


ka6thikkn


No comments:

Post a Comment

Ads Inside Post