#Deforestation (காடழிப்பு)
Borneo Still Burning
Borneo Still Burning
#Sumatran_island & #Borneo_forest
சுமாத்திரா அல்லது சுமத்திரா உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 470,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.
இத்தீவு ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலமாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன
மிக அரிய வகை உயிரினங்கள் (ஒராங்குட்டான்,சுமத்திர காண்டாமிருகம், பிக்மி யானைகள்) தங்களின் வாழிடங்களை இழந்து, இந்த காடுகள் அழிப்பின் போது உயிரிழந்தும் வருகிறது.
காடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன இதுலிருந்து வெளியேறும் புகையால், இங்கு உள்ள மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்
காடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன இதுலிருந்து வெளியேறும் புகையால், இங்கு உள்ள மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்
இந்த நிகழ்வுகளில் பிரதானமான இருப்பது ஒன்றுதான்
#பாமாயில் (palm oil)
ஆம் , கோடிக்கணக்கான வர்த்தகத்தை கொண்டுள்ள இந்த பாமாயில் விளைவிப்பிற்காக தான் இந்த காடழிப்பு நடைபெற்று கொண்டிருக்கின்றது,
தெற்கு களிமன்டன் ஒரு அசாதாரண சூழலியல் பகுதி, இப்பகுதியில்
உள்ள காடுகள் (Peat swamp forest) என்று அழைக்கப்படுகிறது, அதாவது பீட் (peat-கரி ) சதுப்பு நிலம் ஆகும்
ஒரு அரிய நிலப்பரப்பு வகையை சேர்ந்தது, இந்த காடுகளை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழக்கூடிய
( {Endemic_animals} ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது குறிப்பிட்ட சூழலில் மட்டுமே வாழக்கூடியவை)) ஒராங்குட்டான் போன்ற 400 மேற்பட்ட அரிய வகை உயிரினங்களின் வாழ்வாதாரம் மிகப்பெரும் கேள்விக்குளாகியுள்ளது,
போர்னியோ காடுகளில் பிக்மி யானைகள் விஷம் வைத்து கொள்ளப்பட்டது
இங்கு வளரக்கூடிய மரங்களின் வளர்ச்சி என்பது மற்ற நிலப்பகுதி மரங்களின் வளர்ச்சியை அடைவதற்கு எடுத்து கொள்ளும் காலம் அதிகம், ஆனால் இவற்றின் மதிப்பு பல மடங்கு.
விஷம் வைத்து கொள்ளப்பட்ட தாய்யானை தாயை பறிகொடுத்த யானையின் குட்டி |
வன விலங்கு மீட்பு குழு மீட்டு சென்ற
போது
|
வன விலங்கு மீட்பு குழு மீட்டு சென்ற போது |
இங்கு வளரக்கூடிய மரங்களின் வளர்ச்சி என்பது மற்ற நிலப்பகுதி மரங்களின் வளர்ச்சியை அடைவதற்கு எடுத்து கொள்ளும் காலம் அதிகம், ஆனால் இவற்றின் மதிப்பு பல மடங்கு.
இந்த கரி மண் அதிகளவு கார்பனை உள்ளடக்கியது இம்மண்ணை நாம் சிதைப்பது அல்லது காடுகளை தீக்கிரையாக்குவது என்பது கார்பன்-டை ஆக்சைடு உமிழ்வுக்கு வித்திட்டு புவி வெப்பமடைதலுக்கு காரணியாக மாறும்
(இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது)
இவற்றை எளிதாக அழித்து விளைநிலமாக மாற்றலாம் ஆனால் கரிமண் சதுப்பு நில உருவாக்கம் பெற என்பது பல நூற்றாண்டுகள் பிடிக்கும் இவைகள் இயற்கையின் பொக்கிஷம் போன்றது.
1996ல் இந்தோனேசியா அரசு Mega Rice Project என்ற திட்டத்திற்காக கரி சதுப்பு நிலத்தை நெல் விளைவிக்கும் நிலமாக மாற்றுவதற்கு 1மில்லியன் ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டது, இதில்1996-1998க்குள் 4000 கிமீ பாசனத்திற்காகவும், வடிகாலுக்காகவும், காடழிப்பு செய்யப்பட்டது, சாலை, தொடர்வண்டிக்கான இருப்புப்பாதை என அரசு சட்டரீதியாக செய்யப்பட்ட காடழிப்பு , பின்னர் சட்ட விரோதமாக தொடர்ந்தும் செய்யப்பட வழிவகுத்தது இதன் விளைவாக 1991ல் 64% இருந்த வனப்பகுதி 48% மாக குறைந்தது
மழைப்பொழிவின் போது இந்த காடுகள் நீரால் சூழப்பட்டிருக்கும், காடழிப்பு காரணமாக மழை நீர் வடிந்து நிலம் வறண்டு காணப்படுகிறது.....
இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமாண Mega Rice Project என்பது மாபெரும் தோல்வி என்பதை பின்னர் இந்தோனேசியா அரசு அறிவித்தது அத்திட்டமும் கைவிடப்பட்டது. (www.environmentandsociety.org/arcadia/carbon-bomb-indonesias-failed-mega-rice-project )
நீரின்றி உலர்ந்த கரிச்சறுகுகளினால் தீக்கிரையாக ஆரம்பித்தது,
பீட் சதுப்பு நிலம் சிதைத்து அமில வினையாகி ஆற்றில் கலக்க ஆரம்பித்ததன் விளைவாக மீன்பிடிப்பும் குறைந்தது.
போர்னியோ உலகின் மூன்றாவது பெரிய தீவு,
1985 முதல் 2005 வரை உள்ள கணக்கெடுப்பில் சுமார் 850,000 ஹெக்டேர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளது,
தொடர்ந்து இது போன்ற ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் 2020 திற்குள் மூன்றில் ஒரு பங்கு காடுகள் மட்டுமே எஞ்சி இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
தொடர்ந்து இது போன்ற ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் 2020 திற்குள் மூன்றில் ஒரு பங்கு காடுகள் மட்டுமே எஞ்சி இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
Palm oil ற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ஏனெனில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் ஒன்றிலாவது இந்த Palm oil கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.
ஆயிரக்கணக்கான அப்பாவி உயிரினங்களின் மரண ஓலமும், ரத்த சாயமும் இந்த பாம் ஆயிலில் கலந்திருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்...?
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் பெயரளவில் மட்டுமே கடைபிடித்து கொண்டிருக்கின்றன....
வல்லரசு நாடுகள் வர்த்தக அரசியலுக்கு போர்னியா பகடைக்காயாக இருந்து கொண்டிருக்கிறது.
ka6thikkn
No comments:
Post a Comment