அதி நவீன
இன்சாட்-3டி.ஆர். செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது
இஸ்ரோ
ISRO's GSLV F5 rocket will put the INSAT-3DR |
இன்சாட்-3டிஆர்
செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 (GSLV-F5) ராக்கெட் இன்று வெற்றிகரமாக
விண்ணில் பாய்ந்தது. இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று (புதன்கிழமை) காலை
11.10 மணிக்கு தொடங்கியது.
ஆந்திர
மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து
இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய
விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தயாரித்துள்ள இந்த
இன்சாட்-3.டி.ஆர்.செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் மூலமாக இன்று மாலை
இந்திய நேரப்படி 4.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில்
இருந்து ஏவப்பட்டுள்ளது. மேலும், திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் செயற்கைக்கோள்
நிலைநிறுத்தப்பட்டது.
இந்த
இன்சாட் - 3 டிஆர் செயற்கைக்கோள் வானிலை நிலவரத்தை துல்லியமாக கணிக்க வல்லது. மேலும்,
பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான தகவல்களையும் வழங்கக்கூடியது இந்த செயற்கைக்கோள். இந்தியாவிலயே
தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இன்சாட்- 3 டிஆர் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது,
இஸ்ரோவின் புதிய மைல்கல்லாக கருத்தப்படுகிறது.
இது
இந்தியாவின் 10-வது 'ஜி.எஸ்.எல்.வி' ராக்கெட் ஆகும்
மாலை
4:10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை
விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், ராக்கெட் ஏவும் நேரம் 40
நிமிடம் தள்ளிவைக்கப்பட்டு 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்த
ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் செயற்கைகோள் 'இன்சாட்-3டிஆர்' வானிலை,
பருவநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
INSAT-3DR |
ராக்கெட்டில்
பொருத்தப்பட்டுள்ள 'இன்சாட்-3டிஆர்' செயற்கைக் கோள் மூலம் அதிநவீன வகையில் வானிலை தொடர்பான தகவல்கள், கடல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல்,
ராணுவத்துக்கு தேவையான தகவல்கள் உள்ளிட்டவற்றை
பெற முடியும். இந்திய பெருங்கடல், நிலப்பகுதிகளான இந்தியா, பூட்டான், மாலத்தீவு, நேபாளம்,
இலங்கை, தான்சான்யா உள்ளிட்ட நாடுகளின்
பருவநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
வானிலை
நிலவரத்தை துல்லியமாக கணிக்க வல்ல அதிநவீன தொழில் நுட்பத்துடன் 2,211 கிலோ எடையுடன்
இந்த இன்சாட்-3 D.R செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட
GSLV D5 மற்றும் D6 ஆகிய ராக்கெட்டுகளை போன்றே இதுவும் மொத்தம் 3 பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த
செயற்கைகோளின் எடை 2,211 கிலோ ஆகும். பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் 230 கிலோ
மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைகோளில் நவீன பேட்டரிகள்
மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏவப்பட்ட 17-வது நிமிடங்களில் கச்சிதமாக
தனக்கான சுற்றுப்பாதையை அடைந்ததுவிடும். அதன் பிறகு தானாகவே சூரிய ஒளி மூலம் 1700 வாட்ஸ் மின்சாரத்தை சக்தி உற்பத்தி செய்து இயங்கும் வகையில் தொழில்நுட்பம் உள்ளது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
உலகின்
சக்தி வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக உருவெடுத்து வரும் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட
கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் ஏவப்படும் இந்த செயற்கைகோள் இஸ்ரோ முயற்சியில் மற்றுமொரு
மைல்கல்லாக அமையும் என்பதில் மாற்றமில்லை.
KARTHIKKN
No comments:
Post a Comment