நோபல் பரிசு 2016 (NOBEL PRIZE -2016)
உலகின் மிக உயரிய பரிசாகக்
கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவர் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரெட் நோபல்
சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார். 1884ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கடைசி உயிலின் மூலம் தான் ஈட்டிய செல்வத்தில் பெரும்
பகுதியை தன் பெயரிலான அறக்கட்டளைக்கு வழங்கினார். இதன் மூலம் கிடைக்கிற வருவாயைக் கொண்டு
வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சிறப்பான சேவைகளையும்
கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துபவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.
உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர்
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவும் புகழடையவும் காரணமாக இருக்கிறார்ஆல்ஃபிரெட் நோபல்.
ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் பத்தாம் தேதி (DECEMBER-10) சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில்
நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறும். அதே நாளில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அமைதிக்கான
நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டுக்கான நோபல்
பரிசு அறிவிப்பு
மருத்துவத்துறைக்கான
நோபல் பரிசு :
ஜப்பான் செல்லியல் துறை பேராசிரியர் யோஷினேரி ஓஷிமி
உடல் செல்கள் தம்மை
தாமே அழித்து கொள்வது பற்றிய ஆட்டோபேஜி (AUTOPHAGHY) என்ற ஆய்வு மேற்கொண்டதற்காக யோஷினேரி ஓஷிமி
என்ற ஜப்பான் பேராசிரியருக்கு 2016ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோபேஜி என்று அழைக்கப்படும் செல்களின் அடிப்படைச் செயல்பாடுகளின் ஒரு முக்கியமான
அம்சத்தை கண்டுபிடித்தார் யோஷினேரி ஓஷிமி இந்த கண்டுபிடிப்பிற்காகவே அவருக்கு மருத்துவதுறைக்கான
நோபல் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ பல்கலைக்கழக செல்லியல் துறை பேராசிரியரான
யோஷினேரி ஓஷிமி மனித உடலில் உள்ள செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் முறை குறித்து
கடந்த 2014ல் புத்தகம் ஒன்றினை எழுதினார். அதில், ஆட்டோபேஜி முறை குறித்த விரிவான விளக்கங்கள்
மற்றும் அந்த துறை ஆய்வு குறித்த வரலாற்றினையும் அவர் பதிவு செய்திருந்தார்.
உயிரியல் துறையில் மிகப்பெரும் கிளையாக வளர்ந்துவரும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகளை சர்வதேச அளவில் மிகச்சில விஞ்ஞானிகளே மேற்கொண்டு வரும் நிலையில், அந்த துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நோபல் பரிசு கவுரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகள் மூலம் உடலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செல்களைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஜப்பானில் இருந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் 23ஆவது நபர் ஆவார்.
உயிரியல் துறையில் மிகப்பெரும் கிளையாக வளர்ந்துவரும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகளை சர்வதேச அளவில் மிகச்சில விஞ்ஞானிகளே மேற்கொண்டு வரும் நிலையில், அந்த துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நோபல் பரிசு கவுரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகள் மூலம் உடலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செல்களைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஜப்பானில் இருந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் 23ஆவது நபர் ஆவார்.
ஆட்டோபேஜி
ஆட்டோ என்ற கிரேக்கச்
சொல்லிற்கு செல்ப் என்று பொருள். பேஜி என்றால் சாப்பிடுதல். எனவே ஆட்டோபேஜி என்றால்
தன்னைத்தானே சாப்பிடுதல் என்று பொருள்.
இந்தக் கருத்தாக்கம் 1960களில் முன்னிலை பெற்றது.
அதாவது செல் தனது உள்ளடக்கங்களை சவ்வுகளுக்குள் அடக்கி தன்னையே சேதப்படுத்திக் கொண்டு
பை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி இதனை லைசோசோம் என்ற ஒரு அறைபோன்ற அமைப்புக்கு மறுசுழற்சிக்கு
அனுப்புகிறது. லைசோசோம் என்றால் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்கள், மற்றும் கொழுப்புகள்
ஆகியவற்றை சீரணிக்கும் ஒரு சிறப்புவாய்ந்த அறையாகும்.
நோபல் பரிசு செல்லின் முக்கிய அலகுகளை இது
கீழ்நிலைப்படுத்தும் பணிநிலையமாக செயல்படுகிறது
இதனைக் கண்டுபிடித்ததற்காக
1974ம் ஆண்டு மருத்துவ நோபல் பெல்ஜிய விஞ்ஞானி கிறிஸ்டியன் டி துவே என்பவருக்கு வழங்கப்பட்டது.
இவர்தான் ஆட்டோபேஜி என்ற ஒரு சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.
யோஷினேரி ஓஷிமி
1990ம் ஆண்டுகளில் யோஷினேரி ஓஷிமி ஈஸ்ட் மூலம் ஆட்டோபேஜியை
அடையாளம் காட்டும் முக்கிய மரபணுக்களை அடையாளம் கண்டார். இதே போன்ற ஒரு உயர் நுட்ப
செயல்பாடு நமது செல்களிலும் உள்ளது என்பதையும் யோஷினேரி ஓஷிமி நிறுவினார். அதாவது நம்
செல்கள் அதன் உள்ளடக்கங்களை எப்படி மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவாக
விளக்கியுள்ளார் ஓஷிமி. இதன் மூலம்தான் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு புதிய
வெளிச்சம் கிட்டியுள்ளது,
தன்னைத்தான் சாப்பிடும்
செல்கள்
நாம் பட்டினி கிடப்பதற்கு
நம் உடல் எப்படி தன்னை தகவமைத்துக் கொள்கிறது.
அதே போல் கிருமித் தொற்றிற்கு வினையாற்றுவதை எப்படி செய்கிறது என்பது பற்றிய மிக முக்கியக் கண்டுபிடிப்பு இது என்று மருத்துவ அறிஞர்கள் வட்டம் கூறுகிறது. இந்த ஆட்டோபேஜி மரபணுக்களில் ஏற்படும் உருமாற்றம், திடீர் மாற்றம் எப்படி நோய்க்கு அடிப்படையாக விளங்குகிறது என்பது கண்டுபிடிக்கக் கூடியதே என்று தெரியவருகிறது.
அதே போல் கிருமித் தொற்றிற்கு வினையாற்றுவதை எப்படி செய்கிறது என்பது பற்றிய மிக முக்கியக் கண்டுபிடிப்பு இது என்று மருத்துவ அறிஞர்கள் வட்டம் கூறுகிறது. இந்த ஆட்டோபேஜி மரபணுக்களில் ஏற்படும் உருமாற்றம், திடீர் மாற்றம் எப்படி நோய்க்கு அடிப்படையாக விளங்குகிறது என்பது கண்டுபிடிக்கக் கூடியதே என்று தெரியவருகிறது.
புற்றுநோய்களுக்குக் காரணம்
இந்த ஆட்டோபேஜி தொடர்பான
செல் செயல்பாடுகள்தான் பல்வேறு நரம்பியல் மற்றும் புற்றுநோய்களுக்குக் காரணமாகிறது.
மனித செல்களுக்கு இணையான ஈஸ்ட்டின் செல்களை யோஷினேரி ஓஷிமி தனது ஆய்வுக்கு எடுத்துக்
கொண்டார். ஆனால் ஈஸ்ட்டின் செல்கள் மிகச்சிறியது என்பதால் நுண்ணோக்கியில் அவரால் அதன்
உள்ளமைப்புகளை வேறுபடுத்திப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆட்டோபேகி என்ற
செயல்பாடு ஈஸ்டில் இருக்கிறதா என்பதே அவருக்கு ஐயமாக இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து
விடாமுயற்சியுடன் அதில் ஆட்டோபேஜி இருப்பதற்கான சோதனைகளை மேற்கொண்டு கண்டுபிடிப்பில்
வெற்றி பெற்றார்.
ஈஸ்ட் மூலம் 1992ம் ஆண்டு தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார் யோஷினேரி
ஓஷிமி. ஈஸ்ட்டில் ஆட்டோபேகி செயல்பாடுகள் இருப்பதை மனித செல்களுக்குள் கண்டுபிடிப்பது
எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. ஆனால் இதனையும் தொடர் பரிசோதனைகள் மூலம் கடந்து
கண்டுபிடித்தார் யோஷினேரி ஓஷிமி. ஆட்டோபேஜி மரபணுக்களின் ஏற்படும் மாற்றங்களே மரபுசார்
நோய்களுக்குக் காரணமாகிறது.
ஆட்டோபேஜி என்ற செல்கள்
தன் உள்ளடக்கங்களை கீழ்நிலைப்படுத்தி மறுசுழற்சி செய்யும் நடைமுறைக்கு ஏற்படும் இடையூறுதான்
பார்கின்ஸன் நோய், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளிட்ட வயது முதிர்ந்தோருக்கான அனைத்து நோய்களுக்கும்
காரணம் என்பது தெரியவரவும் யோஷினேரி ஓஷிமியின் கண்டுபிடிப்புதான் காரணம். இந்த ஆட்டோபேஜியில்
ஏற்படும் தொந்தரவுகள்தான் புற்றுநோய்க்கும் காரணம். இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து ஆட்டோபேஜி
செயல்பாட்டை நோக்கிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன.
மருத்துவ உலகின் சாதனை
ஆட்டோபேஜி என்பது
50 ஆண்டுகளாக மருத்துவ உலகில் பேசப்பட்டு வருவதுதான். ஆனால் உடற்கூறியல் மற்றும் மருந்துகள்
ஆய்வில் இது பெரிய அளவில் தாக்கம் செலுத்தியது யோஷினேரி ஓஷிமியின் பாதை திறப்புக் கண்டுபிடிப்புக்குப்
பிறகே என்பதால் அவருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல்
பரிசு:
அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
2016ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான
நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
3 பேரும் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த டேவிட் தெளலஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டங்கன் ஹால்டேன், பிரவுன்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான
நோபல் பரிசு கிடைத்துள்ளது.
PHASE OF MATTER |
குவான்டம் மேட்டர் குறித்த
ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதுவரை அறியப்படாத பருப்பொருள்
மூலக்கூறுகள் ஆய்வில் இவர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வுகள் பல புதிய தகவல்களைத் தருவதாக
அமைந்துள்ளது. இதற்காகவே இவர்களுக்கு நோபல் கிடைத்துள்ளது. இயற்பியல் நோபல் பரிசு இயற்பியலுக்கான
நோபலின் ஒரு பகுதி அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஜே.தவ்லெஸ்
என்பவருக்கும், இன்னொரு பாதி அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி டங்கன் ஹால்டேன்
மற்றும் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜே.மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் என்பவருக்கும்
பகிர்ந்து வழங்கப்படுகிறது. குவாண்டம் கோட்பாடு குவாண்டம் கோட்பாட்டின் கீழ் வரும்
பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக
இவர்களுக்கு நோபல் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் ஆய்வில் இவர்கள் மேற்கொண்ட பாதைதிறப்பு ஆய்வுகளுக்காகவே தற்போது இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் இத்தகைய அறியப்படாத, வழக்கத்திற்கு மாறான பருப்பொருள் எடுக்கும் வழக்கத்துக்கு மாறான கட்டங்கள் அல்லது நிலைகள் பற்றிய அரிய ஆய்வாகும் இது. அதாவது அதிமின்கடத்திகள் அதிநீர்மங்கள் , காந்தப்புல படிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய மிகவும் சிக்கலான கணிதவியல் மாதிரிகளைப் பயன்படுத்தினர். இவர்களது கண்டுபிடிப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நியூட்ரினோ - குவாண்டம் கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் நியூட்ரினோக்கள் குறித்த
ஆய்வுகளுக்காக டகாகி கஜிதா மற்றும் ஆர்தர் பி.மெக்டோனல்டு ஆகியோருக்கு வழங்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. குவான்டம் மேட்டர் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு
கிடைத்துள்ளது. இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் ஆய்வில் இவர்கள் மேற்கொண்ட
புதிய ஆய்வுகள் பல புதிய தகவல்களைத் தருவதாக அமைந்துள்ளது. இதற்காகவே இவர்களுக்கு நோபல்
கிடைத்துள்ளது.
PHASE OF TRANSITION |
இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் ஆய்வில் இவர்கள் மேற்கொண்ட பாதைதிறப்பு ஆய்வுகளுக்காகவே தற்போது இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் இத்தகைய அறியப்படாத, வழக்கத்திற்கு மாறான பருப்பொருள் எடுக்கும் வழக்கத்துக்கு மாறான கட்டங்கள் அல்லது நிலைகள் பற்றிய அரிய ஆய்வாகும் இது. அதாவது அதிமின்கடத்திகள் அதிநீர்மங்கள் , காந்தப்புல படிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய மிகவும் சிக்கலான கணிதவியல் மாதிரிகளைப் பயன்படுத்தினர். இவர்களது கண்டுபிடிப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
TOPOLOGY |
தாவீது இயேம்சு தூலீசு (David James Thouless)
பிறப்பு: செப்டம்பர் 21, 1934) பிரித்தானிய
திண்மநிலை இயற்பியலாளர். இவர் 2016 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைதன்கன் ஃகால்டேன், சான் கோசுட்டர்லிட்சு ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார். திண்மநிலையில் இடவியல் நிலைமாற்றம் (topological
phase) பற்றிய கொள்கைய கண்டுபிடிப்புகளுக்காக இவர் நோபல் பரிசைப் பெற்றார்.
இவர் 1990 இல் உவுல்ஃபு பரிசை (Wolf Prize) இவர் செய்த சீருறா இருதிரட்சி திண்ம நிலைப்
பொருள்கள் பற்றிய ஆய்வுகளுக்காக வென்றார்.
தூலீசு கேம்பிரிட்சில் உள்ள விஞ்செசுட்டர்
கல்லூரி, திரினிட்டி சாலையில் இளநிலை (BA) பட்டம் பெற்றார், பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில்
புகழ்பெற்ற நோபல் பரிசாளர்அன்சு பேத்தின்[4] கீழ்
முனைவர்ப்பட்டம் பெற்றார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலியில் முதுமுனைவர்
பதவியிலும் அதன் பின்னர் இங்கிலாந்தில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கணித இயற்பியல்
துறையில் பேராசிரியராகவும் இருந்தார். அதன் பின் 1980 இல் அமெரிக்காவில் சியாட்டிலில்
இருக்கும் வாசிங்கடன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார்.
தூலீசு இங்கிலாந்தின் வேந்தியக் குமுகத்தின்
பேராளராகவும், அமெரிக்க இயற்பியற் குமுகத்தின் பேராளராகவும், அமெரிக்க கலை அறிவியல்
அக்காதெமியின் பேராளராகவும் அமெரிக்க தேசிய அறிவியல் அக்காதெமியின் உறுப்பினரகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1990 இல் பெற்ற உவுல்ஃபு பரிசும், 1993 இல் பெற்ற
திராக்கு பரிசும் (Dirac Prize), 2000 இல் பெற்ற இலார்சு ஆன்சாகர் பரிசும், 2016 இல்
பெற்ற இயற்பியல் நோபல் பரிசும் குறிப்பிடத்தகுந்தவை.
பிரெடரிக்கு தன்கன் மைக்கேல் ஆல்டேன்(Frederick Duncan Michael Haldane)
வேந்தியக் குமுகப் பேராளர்
FRS, பிறப்பு: செப்டம்பர் 14, 1951) ஒரு பிரித்தானிய இயற்பியலாளர். இவர் ஐக்கிய அமெரிக்காவில்
பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் இயூச்சீன் ஃகிகின்சு இயற்பியல் பேராசிரியராக
(Eugene Higgins Professor of Physics) இருக்கின்றார். கனடாவில் வாட்டர்லூவில் உள்ள
பெரிமீட்டர் இயற்பியல் கழகத்தில் வருகைதரு சிறப்புறு ஆய்வுத்தலைவராகவும் இருக்கின்றார்.
2016 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை சான்
கோசுட்டர்லிட்சு,தாவீது தூலீசு ஆகியோருடன்
சேர்ந்து வென்றுள்ளார்.
இவர் இலண்டலில் புனித பவுல் பள்ளையில்
படித்தார், பின்னர் கேம்பிரிட்சில் கிறித்துவின் கல்லூரியில் படித்தார். திண்மநிலை
இயற்பியல் துறையில் பலவகையான அடிப்படையான ஆய்வுக் கண்டுபிடிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.
குறிப்பாக இலூத்திங்கர் நீர்மம், ஒற்றைத் திரட்சி தற்சுழற்சிச் சங்கிலிகள், பின்ன குவாண்டம்
ஃகால் விளைவு முதலானவற்றைச் சுட்டலாம். இலண்டனின் வேந்தியக் குமுகத்தின் பேராளராகவும்,
அமெரிக்கக் கலை அறிவியல் அக்காதெமியின் பேராளராகவும், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின்
பேராளராகவ்வும், ஐக்கிய இராச்சியத்தின் இயற்பியல் கழகத்தின் பேராளராகவும் அமெரிக்க
அறிவியல் முன்னேற்றத்துக்கான கழகத்தின் பேராளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1993 இல் அமெரிக்க இயற்பியல் குகுகத்தின் பக்கிலி பரிசு என்னும் ஆலிவர் பக்கிலி திண்மநிலைப்
பரிசை வென்றுள்ளார்; 1984-88 காலப்பகுதியில் ஆஃபிரடு பி. சுலோன் நிறுவனத்தின் ஆய்வுப்
பேராளராகவும், 2008 ஆம் ஆண்டு இலாரன்சு தலைவராகவும் இருந்திருக்கின்றார், 2012 இல்
திராக்குப் பதக்கத்தையும் 2016 இல் நோபல் பரிசையும் வென்றுள்ளார்.
சான் மைக்கேல் கோசுட்டர்லிட்சு (John Michael Kosterlitz)
2016 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை தாவீது தூலீசு (David
Thouless), தன்கன்
ஃகால்டேன் ஆகியோருடன்
சேர்ந்து வென்றார். இவர்பிரௌன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில்
பேராசிரியராக இருக்கின்றார். பிரித்தானியராகிய இவர் இடாய்ச்சுலாந்திலிருந்து வெளியே
குடியேறிய இடாய்ச்சுலாந்திய இயூதப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். இவருடைய தந்தையார்
ஃகான்சு வால்டர் கோசுட்டர்லிட்சு முன்னோடியான உயிர்வேதியியலாளர். தாயார் ஃகான்னா கிரேசோர்னர்
(Hannah Gresshorner)
சான் மைக்கேல் கோசுட்டர்லிட்சு கேம்பிரிட்சு
பல்கலைக்கழகத்தில் கான்வில் மற்றும் கெயசுக் கல்லூரியில் (Gonville and Caius
College) இளநிலைப் பட்டமும் (B.A), முதுநிலைப் பட்டமும் (M.A) பெற்றார். 1969 ஆண்டு
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பிரேசனோசுக் கல்லூரியில் (Brasenose College) டி.ஃபில்
(D.Phil.) என்னும் முனைவர்ப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் சில முதுமுனைவர் பதவிகளில்
இருந்தபின்னர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் 1974 இல் விரிவுரையாளராகச் சேர்ந்து பின்னர்
இரீடராகவும் (Reader) இருந்தார். பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தாவீது தூலீசு அவர்களுடனும்
பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்திலும் முதுமுனைவராக இருந்துள்ளார். 1982 முதல் அமெரிக்காவில்
பிரௌன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார். பின்லாந்தில் உள்ள
ஆல்டோ பல்கலைக்கழகத்தில் (Aalto University) வருகைதரு ஆய்வுப் பேராளாராக இருக்கின்றார்.
இவருடைய ஆய்வு இயற்பியலில் திண்மநிலைக்
கொள்கைகளைப் பற்றியது. இருதிரட்சி (இரு பரிமாண)ப் பொருட்கள், ஒருதிரட்சிப் பொருள்கள்
முதலானவற்றைப் பற்றியது இவருடைய ஆய்வு. குறிப்பாக நிலைமுக மாற்றம் (phase
transitions), சீருறா அமையம் (random systems), ஒரே தற்சுழற்சியுடைய எதிர்மின்னி அணுக்கநிலை
(electron localization), சீருறா நுண்காந்த உறைநிலை (spin glass), நிலைபெயர் நிகழ்ச்சிகளாகிய
உருகுதல், உறைதல் ஆகியவை இவருடைய ஆய்வுத்துறையில் சேரும்.
கோசுட்டர்லிட்சு 1981 ஆம் ஆண்டு பிரித்தானிய
இயற்பியல் கழகத்தின் மாக்சுவல் பதக்கமும் பரிசும் பெற்றார். 2000 இல் அமெரிக்க இயற்பியல்
குமுகத்தின் இலார்சு ஆன்சாகர் பரிசை வென்றார்- குறிப்பாக இது கோசுட்டர்லிட்சு-தூலீசு
நிலைமாற்றம் (Kosterlitz–Thouless transition) என்னும் கண்டுபிடிப்புக்காக. 1993 முதல்
அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் பேராளராக (Fellow) இருக்கின்றார்.
வேதியியலுக்கான நோபல் பரிசு
3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
வேதியியல் துறைக்கான
நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வேதியியல்
விஞ்ஞானி Jean-Pierre Sauvage, பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானி J
Fraser Stoddart மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி Bernard L Feringa
ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது..
மூலக்கூறு சார்ந்த பல்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் வடிவமைப்பு ஆராய்ச்சியில் புதிய சாதனை நிகழ்த்தியதற்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மூலக்கூறு சார்ந்த பல்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் வடிவமைப்பு ஆராய்ச்சியில் புதிய சாதனை நிகழ்த்தியதற்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பிறப்பு:
மே 24, 1942 ஓர்இசுக்காட்டுலாந்திய வேதியியல் அறிஞர். இவர் தற்பொழுது (இதுகாறும் 22 மார்ச்சு 2014) அமெரிக்காவின் வடகிழக்குப்
பல்கலைக்கழக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார் இவர் பெருமூலக்கூற்று வேதியியல் (supramolecular
chemistry) துறையிலும் நானோதொழினுட்பத் துறையிலும் ஆய்வு செய்கின்றார்.
இசுட்டோடார்ட்டு அவர்கள் புறவயமாக மாட்டுண்ட மூலக்கூற்றுக் கட்டமைப்புகள் அமைப்பதிலும், அதுவும் பயன்திறன்மை முறையில் அமைப்பதிலும் புகழீட்டியுள்ளார். இவற்றுள் மூலக்கூற்றுப் போரோமிய வளையங்கள்,
காட்டனேன்கள் (catenanes), உரோட்டாசேன்
(rotaxane) குறிப்பிடத்தக்கன.
மூலக்கூறுகளைத் தானாகவுணர்ந்து தாமாக கட்டமைத்துக்கொள்ளும் தன்மைகளைப் பயன்படுத்தி இவை அமைகக்ப்பெறுகின்றன.
இந்த இடவியல் அமைப்புகளைப் பயன்படுத்தி மூலக்கூறு தொடுப்பிகள் (molecular switches),
மூலக்கூற்று நகர்வியக்கிகள் (motor-molecules) செய்யமுடியும் எனக் காட்டியுள்ளார். இவருடைய ஆய்வுக்குழு இவற்றைப் பயன்படுத்தி நானோ நுண்மின்கருவிகளையும், நானோ மின்னகர்விய ஒருங்கியங்களையும் (nanoelectromechanical systems, NEMS) செய்துகாட்டியுள்ளது
இசுட்டோடார்ட்டு அவர்கள் புறவயமாக மாட்டுண்ட மூலக்கூற்றுக் கட்டமைப்புகள் அமைப்பதிலும், அதுவும் பயன்திறன்மை முறையில் அமைப்பதிலும் புகழீட்டியுள்ளார். இவற்றுள் மூலக்கூற்றுப் போரோமிய வளையங்கள்,
இசுட்டோடார்ட்டு அறிவித்த மூலக்கூற்றுப் போரோமிய வளையங்களின் கட்டமைப்பு |
பெருவளையத்துடனான (cyclobis(paraquat-p-phenylene) macrocycle) உரோட்டோக்சேன் (rotaxane) கட்டமைப்பு. |
மூலக்கூறுகளைத் தானாகவுணர்ந்து தாமாக கட்டமைத்துக்கொள்ளும் தன்மைகளைப் பயன்படுத்தி இவை அமைகக்ப்பெறுகின்றன.
பெருவளையத்துடனான (cyclobis(paraquat-p-phenylene) macrocycle) காட்டனேனின் (catenane) கட்டமைப்பு |
இந்த இடவியல் அமைப்புகளைப் பயன்படுத்தி மூலக்கூறு தொடுப்பிகள் (molecular switches),
மூலக்கூற்று நகர்வியக்கிகள் (motor-molecules) செய்யமுடியும் எனக் காட்டியுள்ளார். இவருடைய ஆய்வுக்குழு இவற்றைப் பயன்படுத்தி நானோ நுண்மின்கருவிகளையும், நானோ மின்னகர்விய ஒருங்கியங்களையும் (nanoelectromechanical systems, NEMS) செய்துகாட்டியுள்ளது
பிறப்பு: மே 18, 1951) ஓர் கரிம வேதியியலாளர். இவர் மூலக்கூற்று நானோ நுட்பியலிலும்
ஒரே நிலைமுகம் கொண்ட தூண்டலியலிலும் (homogenous catalysis) சிறப்பான ஆய்வுக்குவியம்
கொண்டவர். இவர் நெதர்லாந்தில் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் இசுற்றாடிங்குக் கழகத்தில்
வேதியியல் துறையில் மூலக்கூற்று அறிவியல் பிரிவில் யாக்கோபசு வான்.ட்டு கோஃபு
(Jacobus Van't Hoff) சிறப்பெய்திய பேராசிரியராக இருக்கின்றார். இது தவிர நெதர்லாந்திய
வேந்திய அறிவியல் அக்காதெமியில் பேராசிரியராகவும் அறிவியல் ஆயத்தின் தலைவராகவும் இருக்கின்றார்.
இவர் 2016 ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை மூலக்கூற்று இயந்திரங்களுக்காக இழான் பியர் சோவாழ்சு, பிரேசர் இசுட்டோடார்ட்டு ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார்.
மூலக்கூறு அளவினான மகிழுந்து. நானோ மகிழுந்து. இவ்வண்டியின் சக்கரங்கள் கரிமக் கூண்டு (C60 ) போன்ற புல்லரீன் மூலக்கூறு |
மூலக்கூறு அளவினான மகிழுந்து. நானோ மகிழுந்து. இவ்வண்டியின் சக்கரங்கள்
கரிமக் கூண்டு (C60 ) போன்ற புல்லரீன் மூலக்கூறு
இவருடைய மூலக்கூறு அளவினதாகிய தொடுப்பி
(switch), புறவயமாக நகரும் அமைப்புடைய மூலக்கூறு போன்ற ஆய்வின் பயனாய் மின்னாற்றலால்
நிறம் மாறக்கூடிய கருவி, மருந்தை செலுத்தக்கூடிய, ஒளியின் இயக்கத்தால் நிலைமாறக்கூடிய,
புரத ஓடை (protein channel) போன்ற பற்பல ஒளியியக்கத்தால் மூலக்கூறளவில் மாற்றம் செய்யக்கூடிய
முற்றிலும் புதிய இயக்கங்களை அமைக்க இயலுகின்றது
(பிறப்பு அக்டோபர் 21, 1944) ஓர் பிரான்சிய
வேதியியல் ஆய்வாளர். இவர் பிரான்சில் இசுற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார்.
தனி அணுக்கள் மூலக்கூறுகளைத் தாண்டி மூலக்கூறுகளுக்கிடையே நிலவக்கூடிய மெலிவான விசைகளைக்
கொண்டு மூலக்கூறுகளால் அமைக்கக்கூடிய ஒருங்கியம் குறித்து நுண்ணிய மூலக்கூறு இயந்திர அமைப்புகள் பற்றிய துறையில்
ஆய்வு செய்கின்றார்.
இவருடைய ஆய்வுகளுக்காக 2016 ஆம் ஆண்டின் வேதியியல் நோபல் பரிசு இவருக்கும் அமெரிக்கராகிய பிரேசர் இசுட்டோடார்ட்டு (Fraser Stoddart) என்பாருக்கும் இடச்சு ஆய்வாளர் பென் பெரிங்கா (Bernard L. Feringa) என்பாருக்கும் வழங்கப்பெற்றது.
இரண்டு செப்பு அணுக்களுடன் அமைந்த முடிச்சு மூலக்கூற்றின் உள்ளமைப்பு |
இவருடைய ஆய்வுகளுக்காக 2016 ஆம் ஆண்டின் வேதியியல் நோபல் பரிசு இவருக்கும் அமெரிக்கராகிய பிரேசர் இசுட்டோடார்ட்டு (Fraser Stoddart) என்பாருக்கும் இடச்சு ஆய்வாளர் பென் பெரிங்கா (Bernard L. Feringa) என்பாருக்கும் வழங்கப்பெற்றது.
சோவாழ்சு பாரீசு நகரில் அக்டோபர்
21, 1944 இல் பிறந்தார். இலூயி
பாசுச்சர் பல்கலைக்கழகத்தில்இழான் மாரீ இலேன் (Jean-Marie
Lehn) வழிகாட்டலில் முனைவர்ப் பட்டம் பெற்றார். முனைவர்ப்பட்ட ஆய்வில் முதன்முறையாக
கிறிப்டாண்டு எனக்குறிக்கப்பெறும் பல்லீந்தணைவிகளை
உருவாக்கிக் காட்டினார். இழான் மாரீ
இலேன் இத்துறையில் வல்லுனர். இவர் 1987 இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்.
சோவாழ்சு நிறைய ஆய்வுக்கட்டுரைகள்
எழுதிப் புகழ்பெற்றவர். மின்வேதிய முறையில் கரிம ஈராக்சைடு (கார்பன்-டை-ஆக்சைடு,
CO2) சிதைவு, ஒளிச்சேர்க்கை வினைய நடுவம் (photosynthetic reaction center)[2] ஆகிய துறைகளில் ஆய்வு செய்திருக்கின்றார். மூலக்கூறுகள் ஒன்றோடொன்று
இயந்திரவகையாக பிணையும் விதமாக அமைப்பது பற்றியும் நிறைய ஆய்வு செய்திருக்கின்றார்.
கயிற்றில் முடிச்சுகள் போடுவதுபோல மூலக்கூறுகளில் முடிச்சுகள் போல அமைக்கும் விதங்களையும்
ஆய்வு செய்திருக்கின்றார்[3]. மூலக்கூற்று முடிச்சுகளை நாட்டேன் (knotane) என்றும்
குறிக்கப்பெறுகின்றது.
அமைதிக்கான நோபல் பரிசு
கொலம்பிய அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸ்
கொலம்பியாவில் 50 ஆண்டு காலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த கொலம்பிய அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸுக்கு இந்த ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பிய அதிபராக உள்ள இவர் 1951ல் பிறந்தவர். 65 வயதாகும் இவர் உலகின் சிறந்த விருதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2016ம் ஆண்டிற்கான இந்த விருதுக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணங்களை நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
அதில், 50 ஆண்டு காலமாக
கொலம்பியால் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. இதில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம்
பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வளவு பேரை பலி கொண்ட உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஜூவான் மானுவல்
சாண்டோஸ் என்று கூறப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தால் தேர்தெடுக்கப்படும்
5 பேர் கொண்ட கமிட்டியே நோபல் பரிசைப் பெறும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வருகிறது.
அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசை பெற கொலம்பிய அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸ்
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபால் பரிசை துனீசிய
தேசிய பேச்சுவார்த்தைக் குழு பெற்றது. 2011ம் ஆண்டு துனீசிய அதிபர் பென் அலியை ஆட்சிப்
பீடத்திலிருந்து வெளியேற்றிய 'ஜாஸ்மின் புரட்சி'க்குப் பிறகு பன்முக ஜனநாயகத்தை துனீசியாவில்
கட்டமைக்க துனீசிய தேசிய பேச்சுவார்த்தைக் குழுவின் பங்களிப்பு அபரிமிதமானது என்பதால்
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பொருளாதாரத்திற்கான
நோபல் பரிசு
KARTHIKKN
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இலக்கியத்துக்கான
இந்த ஆண்டின் நோபல் பரிசு மக்கள் பாடகரும், பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு வழங்கப்பட்டிருப்பது
பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. அவர் நாவலாசிரியரோ சிறுகதையாசிரியரோ நாடகாசிரியரோ
இலக்கியக் கவிஞரோ கிடையாது. பாப் பாடல்கள் எனப்படும் வெகு மக்கள் இசை வடிவத்துக்குப்
பாடல்கள் எழுதி பிரபலமானவர்.
“அமெரிக்கப்
பாடல் மரபுக்குள் புதுவிதமான கவிதை வெளிப்பாடுகளை உருவாக்கியதற்காக” என்று கூறி நோபல்
பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
1993-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை டோனி மாரிஸன் பெற்று 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்கருக்கு இப்போதுதான் இந்தப் பரிசு கிடைக்கிறது.
1993-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை டோனி மாரிஸன் பெற்று 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்கருக்கு இப்போதுதான் இந்தப் பரிசு கிடைக்கிறது.
மின்னசோட்டா
மாகாணத்தின் டுலுத் நகரில் 1941-ல் பிறந்தவர் பாப் டிலன். பதின்பருவத்தில் பல்வேறு
இசைக் குழுக்களில் பங்கேற்றார். அமெரிக்க நாட்டுப்புற இசையின் மீதும் புளூஸ் இசையின்
மீதும் அவருக்கு அதிக நாட்டம். நவீன கவிஞர்கள், பீட் தலைமுறையின் கவிஞர்கள் போன்றோர்
டிலன் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள்.
1961-ல்
நியூயார்க்குக்கு இடம்பெயர்ந்தவர் கிரீன்விச் கிராமத்தில் உள்ள கிளப்களில் நிகழ்ச்சிகள்
நடத்தினார். இசைப்பேழைத் தயாரிப்பாளர் ஜான் ஹாமண்டுடனான சந்திப்பால் ‘பாப் டிலன்’ (BOB DYLAN) என்ற
பெயரில் தனது முதல் ஆல்பத்தை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட
‘பிரிங்கிங்
இட் ஆல் பேக் ஹோம்’,(BRINGING IT ALL AT HOME) ‘ஹைவே 61 ரீவிஸிட்டட்’, (HIGHWAY 61 REVEALED)
‘ப்ளட் ஆன் த ட்ராக்ஸ்’ (BLOOD ON THE ROCKS)
‘ஓ மெர்ஸி’, (OH MERCY)
‘டைம் அவுட் ஆஃப் மைண்ட்’ (TIMES OUT OF MIND)
ஆல்பங்கள் விற்பனையிலும் சக்கைப்போடு போட்டதுடன் அவற்றின்
இசையும் பாடல்களும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தன.
மக்களின்
வாழ்க்கையிலிருந்து எளிய சொற்கள், தனது சமகாலப் பிரச்சினை குறித்த அவரது கோபம் போன்ற
பண்புகள் அவரைத் தனித்துவம் கொண்ட பாடலாசிரியராக நிலைநிறுத்துகின்றன.
பொருளாதாரத்திற்கான
நோபல் பரிசு
இங்கிலாந்தில் பிறந்த ஆலிவர் ஹார்ட்டுக்கும்
(68) பின்லாந்தைச் சேர்ந்த பெங்ட் ஹோம்ஸ்ட்ரோமுக்கும் (67) ஒப்பந்தக் கோட்பாட்டுக்குப்
பங்களித்த வகையில் பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன வாழ்க்கையில் வாடகை ஒப்பந்தம், வேலை
ஒப்பந்தம், காப்பீட்டு ஒப்பந்தம் என்று தீராத ஒப்பந்தங்களைச் சுற்றி வாழ்கிறோம். இவை
பல நுணுக்கங்களைக் கொண்டவை. அந்தந்த நாடு மற்றும் சமூகத்தில் நிலவும் சட்டங்கள் மற்றும்
நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை.
சில ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தம்
இடும் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தனிநபரைவிட அதிகத் தகவல்கள் தெரிந்திருக்க
சாத்தியமுண்டு. ஆரோக்கியக் காப்பீட்டு நிறுவனங்கள் அதற்கு உதாரணம். ஆரோக்கியமான நபர்களை
உள்ளடக்குவதை விட, ஆரோக்கியப் பிரச்சினைகள் அதிகமுள்ள நபர்களை உள்ளடக்குவதாக ஆகிவிடுகிறது.
நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒப்பந்தத்தில்
உள்ள மேலாளர்கள், நிறுவனத்தின் பங்குதாரர்களின் வருவாய்க்கு உதவுவதை விட தங்கள் வருவாயை
அதிகப்படுத்துவதில் நாட்டம் செலுத்துவது தற்கால யதார்த்தமாகி வருகிறது. முதலீட்டு வங்கியாளர்கள்,
தங்கள் ஆண்டு ஊக்கத்தொகையைச் சம்பாதிப்பதற்காக அதிகபட்சமான துணிகரத்தில்(ரிஸ்க்) ஈடுபட்டதே
2008-ல் அமெரிக்கா சந்தித்த பெரும் பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணம்.
இதுபோன்ற பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு
ஒப்பந்தக் கோட்பாடு உதவுகிறது. ஒப்பந்தத்தில் ஈடுபடும் சகல தரப்பினரின் நலன்களையும்
உள்ளடக்கிய ஒப்பந்தத்தை வடிவமைப்பதை இது சாத்தியப்படுத்துகிறது.
நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களுக்கான
ஊக்கத்தொகை அடிப்படையிலான குறுகிய கால நலன்களை முன்னிட்டு நிறுவனத்தின் நீண்டகால ஆரோக்கியத்துக்குக்
குந்தகம் ஏற்படுத்தாத வகையில் உருவாக்க வேண்டிய ஒப்பந்தங்களுக்கான கோட்பாட்டை ஹோல்ம்ஸ்ட்ரோம்
தனது ஆய்வுக்கட்டுரைகள் வழியாக வெளியிட்டார்.
பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தல், இணைத்துக்கொள்ளுதல்,
பெரு நிறுவன உரிமைத்துவம் தொடர்பான கட்டுரைகளை ஹார்ட் எழுதியுள்ளார்.
பொதுக் கொள்கைகளும் தனியார் சந்தையில்
ஒப்பந்தங்களும் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கான புதிய சிந்தனைகளை சாத்தியப்
படுத்தியதுதான் இவர்களின் பங்களிப்பு என்று நோபல் நினைவுப் பரிசுக் குறிப்பு கூறுகிறது.
பென்
ஹொம்ஸ்சுடொரோம் (Bengt Robert Holmström)
பென் ஹொம்ஸ்சுடொரோம் (Bengt Robert Holmström) (பிறந்த ஆண்டு 1949) [பின்லாந்தை]ச்] சேர்ந்த ஒரு
பொருளாதார நிபுணர். தற்போது இவர் மஸ்ஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். 2016 ஆம்
ஆண்டின் பொருளாதாரதிற்கானநோபல் பரிசு ஆலிவர் ஹார்ட்டுடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது
ஹொம்ஸ்சுடொரோம் பின்லாந்துதில் உள்ள ஹெலன்ஸ்கியில் பிறந்தார்.
இவர் கணிததில் இளநிலை அறிவியல் பட்டம் ஹெல்சிங்கிப்
பல்கலைகழகதில் பெற்றார்.
1975 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் ஸ்டான்போர்ட்
பல்கலைக்கழகம்தில் பெற்றார்.
முனைவர் பட்டம்ஸ்டான்போர்ட் வணிக பட்டதாரி பள்ளியில் பெற்றார். 1994 ஆம் ஆண்டு முதல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் ஆசிரியராக உள்ளார்.
2016 ஆம் ஆண்டின் பொருளாதாரதிற்கான நோபல் பரிசு ஆலிவர்
ஹார்ட்டுடன் இணைந்து ஒப்பந்த கோட்பாடுடிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலிவர் சைமன் ஹார்ட் (Oliver Simon Hart)
ஆலிவர் சைமன் ஹார்ட் (Oliver Simon Hart, பிறப்பு: அக்டோபர்
9, 1948) இங்கிலாந்தில் பிறந்துஅமெரிக்காவில் வாழும் பொருளாதார நிபுணர் ஆவார். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்பொருளியலில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
இவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கானபொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பென் ஓம்சுடொரொமுடன் இணைந்து
வழங்கப்பட்டது.
ஆலிவர் ஹார்ட் பிளிப் ஹார்ட், ரூத்
மேயர் தம்பதியர்க்கு மகனாக இலண்டனில் பிறந்தார். இவரின் தாய், தந்தை இருவரும் யூத இனத்தை
சார்ந்தவர்கள். இவரது தந்தை நோபல் மொன்டகு குடும்பத்தை சார்ந்தவர். இவரது மூதாதையர்
முதல் பெரொன் சாமுவேல் மொன்டகு ஆகும்.
ஹார்ட் கேம்பிரிட்ச் கிங்க்ஸ் கல்லூரியில்கணிதத்தில் இளநிலை பட்டம்
1969 ஆம் ஆண்டு பெற்றார். இதன் பின் பொருளியலில் முதுகலை பட்டம் வாரிக் பல்கலைக்க்ழகத்தில்
1972 ஆம் ஆண்டு பெற்றார். பொருளாதாரதில் முனைவர் பட்டம் பிரின்ஸ்டனில் 1974
ஆம் ஆண்டு பெற்றார். 1993 ஆம் ஆண்டு முதல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில்பொருளியலில் பேராசிரியராக இருக்கிறார்.
ஹார்ட் ஒப்பந்தக் கோட்பாட்டுக்காக 2016 ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான
நோபல் நினைவுப் பரிசு வென்றார்.
ஹார்ட் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார்.
அவர் ரிட்டா பி. கோல்ட்சுபெர்கை திருமணம் செய்துள்ளார். இவரது மனைவி ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில்
இலக்கியத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் Motherland:
Growing Up With the Holocaust என்கின்ற
புத்தகம் எழுதியுள்ளார்.
thanksKARTHIKKN
No comments:
Post a Comment