நான் இணையத்தில் வாசித்த ,ரசித்த கட்டுரைகள், சுவையான தகவல்கள், குறிப்புகள், ஆகியவற்றை இவ்வலைதிரட்டி மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.
Wednesday, 27 July 2016
GREAT QUOTES OF -Dr APJ ABDUL KALAM
iam karthik , iam from tamil nadu india , now iam working in oman...
Rare Unseen Images Of -Dr APJ Abdul Kalam
iam karthik , iam from tamil nadu india , now iam working in oman...
Monday, 25 July 2016
கனவல்ல... எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்.....
கனவல்ல... எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்
உலக சரித்திரத்தில் ஒரு மனிதனின் மரணம் இதுபோல எல்லை, இன, மொழி வேறுபாடுகளைக்
கடந்து அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்குமா என்பது சந்தேகம்தான். நமது தலையங்கத்தில்
குறிப்பிட்டிருந்ததுபோல, இனம், மொழி, மதம், சாதி வேறுபாடுகள், பெரியவர் - சிறியவர்,
பணக்காரர் - ஏழை, படித்தவர் - பாமரர் என்கிற அத்தனை வேறுபாடுகளையும் மீறி, எந்தவொரு
பிரிவினருக்கும் மாறுபட்ட கருத்து இல்லாமல் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதர் ஒருவர்
நம்மிடையே வாழ்ந்தார் என்றால் அது ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக்கி உலக அரங்கில் தலைநிமிர வைத்தவர் என்பது மட்டுமல்ல அவரது பங்களிப்பு. இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின், மாணவச் செல்வங்களின் மனதில் "வல்லரசான வலிமையான பாரதம்' என்கிற நம்பிக்கையை விதைத்து, நாளைய தலைமுறையின் கனவுக் கதாநாயகனாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்பதுதான் அவரது தனிப்பெரும் சிறப்பு.
ஜூலை 27-ஆம் நாள், மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று காலமானார் என்கிற செய்தி ஒட்டுமொத்த உலகத்தை, குறிப்பாக, இந்தியத் திருநாட்டை ஒரு விநாடி ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அடுத்த மூன்று நாள்களும், ஆங்காங்கே படத்தை வைத்து அந்த பாரத ரத்தினத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர்களின் இதயம் வடித்த கண்ணீர் கடலளவு!
யாரும் சொல்லவில்லை. எந்தவித உள்நோக்கமோ காரணமோ கிடையாது. உணர்வால் உந்தப்பட்டு ஆட்டோ நிறுத்தங்கள், பெட்டிக் கடைகள், சிறு குடியிருப்புகள், குடிசைப் பகுதிகள் என்று எங்கு பார்த்தாலும் அவரது படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியதைப் பார்த்தபோதுதான், அடடா, எவ்வளவு பெரிய தாக்கத்தை இந்த மாமனிதர் இந்தியர்களின் மனதில் ஏற்படுத்தி இருக்கிறார் என்பது பலருக்கும் உரைத்தது.
ராமேசுவரத்துக்கு அவரது உடல் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஜூலை 29-ஆம் தேதி காலையில் இருந்தே ரயிலிலும், பேருந்திலும், இரு சக்கர வாகனங்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவ - மாணவியர் தங்கள் லட்சிய நாயகனுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வந்து குவிந்து கொண்டிருந்தார்கள், அதில் பலர் கைக்குட்டையால் தங்கள் வாயைப் பொத்தியபடி அழுது கொண்டிருந்த காட்சியைப் பார்த்திருக்க வேண்டும். அவருக்குக் குழந்தைகள் இருந்திருந்தால்கூட இப்படி அழுதிருக்க மாட்டார்கள் என்று நினைக்கத் தோன்றியது.
ஒரு மனிதன் உலகப் புகழ் பெற்றிருக்கலாம். ஆனால், உள்ளூரில் அவரை எள்ளிநகையாடவும், அவரது செயல்பாடுகளை விமர்சிக்கவும் நான்கு பேர் இல்லாமல் இருக்கமாட்டார்கள். ஆனால், ராமேசுவரம் நகரமே அவருக்காக அழுதது. புனிதத்தலமான ராமேசுவரத்துக்கு, புதிய பல பெருமைகளைத் தேடித் தந்த மண்ணின் மைந்தனின் மறைவுக்கு ஒவ்வொரு வீடும் துக்கம் அனுசரித்தது. பாரத ரத்தினத்தை, தேசத்தின் முதல் குடிமகனை ஈன்ற திருமண் என்கிற புதிய பெருமையை ராமேசுவரத்துக்குத் தேடித் தந்த தலைமகன் அல்லவா அவர்!
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றியவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
இந்திய குடியரசு தலைவராக பதவி ஏற்கும் முன்னர், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தார்.
குடியரசு தலைவராக இருந்த போது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு தான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிக மிக்கியமான பங்குவகிக்கும் என கூறியதோடு மட்டுமில்லாமல், மாணவர் மத்தியில் ஓர் எழுச்சி நாயகனாக திகழ்ந்தார். தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிறைய உரையாற்றியுள்ளார்.
இன்று இவரது மறைவை எண்ணி வருந்துபவர்களில் ஆராச்சியாளர்கள், அரசியல்வாதிகளை விட மாணவர்களும், இளைஞர்களும் தான் மிக அதிகம்
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
பிறப்பு: அக்டோபர் 15, 1931
மரணம்: ஜூலை 27, 2015
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்
15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்,
பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான
இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள
தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம்
ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.
பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய
பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு,
திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம்
ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை
என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள
எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி
அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல்
கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர்,
துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக
விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின்
மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு
முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக
செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில்
பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத்
தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம்
நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான
“பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா”
விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு
வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு
அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த
கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து
விலகினார்.
மரணம்:
அப்துல் கலாம் அவர்கள் ஜூலை
27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில்
பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.
விண்வெளி பொறியியல்:
1955 ஆம் ஆண்டு தன்னுடைய
"விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார்.
பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1960 ஆம் ஆண்டு வானூர்தி
அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி
வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய
ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில்
(ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில்
(SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
ரோகினி -1
1980 ஆம் ஆண்டு SLV -III
ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில்
ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
இவரது சாதனையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின்
மிகப் பெரிய விருதான "பத்ம பூஷன்" விருது வழங்கி கௌரவித்தது.
பொக்ரான் சோதனை:
இந்தியாவை அணு ஆயுத
வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில்
பணிபுரிந்துள்ளார். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி
ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1998ஆம் ஆண்டு நடந்த
பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார்.
பேராசிரியராக கலாம்:
சென்னை அண்ணா
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப்
பேராசிரியராகவும் பணியாற்றினார். அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின்
பிதாவாக போற்றப்படுகிறார் அப்துல் கலாம்.
குடியரசுத் தலைவர் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக
ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக
இருந்த இவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அனைவராலும் அன்போடு
அழைக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்த போதும் மிக எளிமையான வாழ்வு
வாழ்ந்தவர்.
எழுத்தாளர் அப்துல் கலாம்:
நாட்டின் நலனையும்,
மாணவர்களின் முன்னேற்றத்தையும் மட்டுமே கண்களாகப் பாவித்து அவற்றுக்காகவே தமது
வாழ்நாளை அர்ப்பணித்தவர். சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த கலாம், அக்னிச்
சிறகுகள், இந்தியா 2020, திட்டம் இந்தியா உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
மக்களுடன் மக்களாக
2007 ஆம் ஆண்டு குடியரசுத்
தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில்
போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார். ஆனாலும் கலாம் ஓய்வாக ஒரு
நிமிடம் கூட அமரவில்லை. நாடுமுழுவதும் பயணம் செய்து மக்களையும், மாணவர்களையும்
சந்தித்து இந்தியா வல்லரசாக வேண்டும் என்று தனது ஆசையை மக்களின் மனதில்
பதியவைத்தார்.
ஒரு கோடி மாணவர்கள்:
கடந்த 10 ஆண்டுகளில், நாடு
முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்களை சந்தித்து உரையாடியுள்ளார். அறிவார்ந்த
இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு, ஆற்றலை பயன்படுத்தி, 2020க்குள் அனைத்து
துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனதில்
உறுதி இருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்பதை மாணவர்களின் உள்ளங்களில்
பதியவைத்தவர் அப்துல் கலாம்.
மக்களுடன் மக்களாக:
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும்
போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட
போவதில்லை என முடிவு செய்து விலகினார். ஆனாலும் கலாம் ஓய்வாக ஒரு நிமிடம் கூட
அமரவில்லை. நாடுமுழுவதும் பயணம் செய்து மக்களையும், மாணவர்களையும் சந்தித்து
இந்தியா வல்லரசாக வேண்டும் என்று தனது ஆசையை மக்களின் மனதில் பதியவைத்தார்.
திருக்குறள்தான்வழிகாட்டி:
எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று அப்துல் கலாம் கூறியுள்ளார்.
“அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண்.”
இந்த குறள்தான் தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது
என்று அவரே ஒரு மேடையில் பேசும் போது கூறியுள்ளார். இதன் பொருள் அறிவு என்பது
அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய
சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பதாகும். பூமிக்கு
மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை
அழிக்க இயலாது என்பது உண்மை
ஒருமுறை ராமேஸ்வரம் பள்ளியில்
பேசிய அவர், உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக
முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு
வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து,
வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில்,
உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான் என்று
கூறினார்.
இந்தியா 60 கோடி
இளைஞர்களைப் பெற்ற நாடு. மக்கள் தொகை தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமே.
உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல. உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு
காண்பது என்பது ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை நிறைவேற்றுவதை
லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட
வேண்டும்.
தோல்வியை தோல்வியடைச்
செய்யுங்கள்
தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும் என்று உறுதி படச் சொன்னவர் கலாம். வாழ்க்கையில்
லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால்,
எதிர்காலத்தில் மகானாக முடியும்.
விருதுகள்:
1981–பத்மபூஷன்
1990–பத்மவிபூஷன்
1997–பாரதரத்னா
1997–தேசியஒருங்கிணைப்புஇந்திராகாந்திவிருது
1998–வீர்சவர்கார்விருது
2000–ராமானுஜன்விருது
2007–அறிவியல்கவுரவடாக்டர்பட்டம்
2007–கிங்சார்லஸ்-IIபட்டம்
2008–பொறியியல்டாக்டர்பட்டம்
2009–சர்வதேசவோன்கார்மான்விங்ஸ்விருது
2009–ஹூவர்மெடல்
2010–பொறியியல்டாக்டர்பட்டம்
2012–சட்டங்களின்டாக்டர்
2012–சவராசம்ஸ்க்ருதிபுரஸ்கார்விருது
1981–பத்மபூஷன்
1990–பத்மவிபூஷன்
1997–பாரதரத்னா
1997–தேசியஒருங்கிணைப்புஇந்திராகாந்திவிருது
1998–வீர்சவர்கார்விருது
2000–ராமானுஜன்விருது
2007–அறிவியல்கவுரவடாக்டர்பட்டம்
2007–கிங்சார்லஸ்-IIபட்டம்
2008–பொறியியல்டாக்டர்பட்டம்
2009–சர்வதேசவோன்கார்மான்விங்ஸ்விருது
2009–ஹூவர்மெடல்
2010–பொறியியல்டாக்டர்பட்டம்
2012–சட்டங்களின்டாக்டர்
2012–சவராசம்ஸ்க்ருதிபுரஸ்கார்விருது
ஏ.பி.ஜேஅப்துல்கலாம்எழுதியநூல்கள்:
அக்னிசிறகுகள்
இந்தியா2012
எழுச்சிதீபங்கள்
அப்புறம்பிறந்ததுஒருபுதியகுழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
மாணவர்தலைவர்
மாணவர்கென்று ஓர் தலைவர் இருக்கிறார் என்றால் அது எப்போதும், அப்துல் கலாம் ஐயா அவர்கள் தான். அவர் மறைந்தாலும், அவர் ஏற்றிய எழுச்சி தீ மாணவர் மனதில் என்றும் எரிந்துக் கொண்டே தான் இருக்கும். கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டு எம். டிவி-யின் யூத் ஐகான் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
சுவிட்சர்லாந்து அரசாங்கம்
கௌரவம் நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களை, அவரது அறிவியல் அறிவை போற்றும் வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கௌரவம் செய்துள்ளது. இவர் சுவிட்சர்லாந்து சென்று வந்த நாளை, அவர்கள் அந்நாட்டின் அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறார்கள்.
வல்லரசுஎன்னும்விதையைவிதைத்தவர்
இந்தியா 2020-ல் வல்லரசு நாடாக மாறும் என்று, நீண்ட நாள் வெறும் கனவாக எந்த தூண்டுதலும் இன்றி இருந்த ஓர் விஷயத்திற்கு, மாணவர் மற்றும் இளைஞர்கள் மூலம் உயிரோட்டம் அளித்து, பெரும் விதையை ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும் விதைத்தவர் அப்துல் கலாம் அவர்கள்.
அவரை பற்றி சில தகவல்கள்....
• நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர்
காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல்
வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார்
அப்துல் கலாம்.
• அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக
வெளி வந்துள்ளது.
• அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின்
வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
• இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை –
‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்தும்’’
• அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள்
எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது
பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
• அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு
டம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
• அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ
கீர்த்தனைகளில் சிலவற்றை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
• 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம்
வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
• இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ்
அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது
வடிவமைக்கப்பட்டவையாகும்.
போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய
நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டுபிடித்தவையாகும்.
அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
• அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான
சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
• சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில்
1950–க்களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை
வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
• அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது
பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு
செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து
இருப்பதை கண்டுபிடித்தார்.
அன்னல் ஒவ்வொரு நொடியும் நம்முடன்
வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கின்றார்.
அவருக்கு என்றுமே இறப்பு என்பதே இல்லை.
Labels:
#apj,
#Rskn,
அறிந்து கொள்வோம்,
கட்டுரைகள்
iam karthik , iam from tamil nadu india , now iam working in oman...
Sunday, 24 July 2016
DID YOU KNOW.?
ka6thikkn
iam karthik , iam from tamil nadu india , now iam working in oman...
inspirational quotes
ka6thikkn
iam karthik , iam from tamil nadu india , now iam working in oman...
Tuesday, 19 July 2016
ஜார்னா என்றொரு மாணவப் போராளி!
ஜார்னா என்றொரு மாணவப் போராளி!
JARNA JOSHI(SOCIAL ACTIVIST)
உலகில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 22 கோடி
குழந்தைத் தொழிலாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் கள் இந்தியர்கள். 2011 இந்திய
மக்கள் தொகைக் கணக்குப்படி 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் 43
லட்சம் பேர்.
குஜராத்தில் கல்லூரி மாணவி ஜார்னா ஜோஷி சொந்தக்காரர் வீட்டுக்குப்
போனார். வீட்டை ஒட்டியிருந்த தொழிற்சாலையில் விதவிதமான சத்தங்கள்.
10,15 வயதுகளில் உள்ள நிறைய சிறுமிகளை வண்டிகளில் அங்கே அதிகாலை
யில் அழைத்துவருவதும் இரவில் அங்கிருந்து அழைத்துச் செல்வதுமாக
இருந்திருக்கிறார்கள்.
ஜார்னாவுக்குச் சந்தேகம் வந்தது. நேரே போய் அந்தத் தொழிற்சாலையில்
வேலை கேட்டுச் சேர்ந்தார். அது கப் அன்ட் சாஸர்கள் தயாரிக்கும் ஆலை. கடும்
வெப்பத்தில் ஈவுஇரக்கமின்றிச் சிறுமிகளை வேலை வாங்கியிருக்கிறார்கள். ஜார்னா
இதுபற்றி முதல்வர் அலுவலகம் தொடங்கி எல்லா அரசு அலுவலகங்களுக்கும் புகார்களை
அனுப்ப ஆரம்பித்தார். கடைசியாக, அரசு தலையிட்டது. 11 சிறுவர்களும் 100 சிறுமிகளும்
மீட்கப்பட்டனர்.
இதன் விளைவாக, பாராட்டு மட்டுமல்ல; ஜார்னாவுக்கு அடி, உதையும்
கிடைத்தது. ரௌடிகளை வைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஜார்னா அசரவில்லை.
உயிரோடு இருக்கும் வரை அநீதிக்கு எதிராகப் போராடுவேன் என்கிறார். உலகில்
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 22 கோடி குழந்தைத் தொழிலாளர்களில்
முதலிடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள். 2011 இந்திய மக்கள்தொகைக் கணக்குப்படி 5
முதல் 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் 43 லட்சம் பேர்.
இந்திய அரசியல் சாசனம் தீங்கு விளைவிக்கும் தொழில்களில் குழந்தைகளை
ஈடுபடுத்தக் கூடாது என்கிறது.1979-ல் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை பற்றி
விவாதிக்க குருபாதஸ்வாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின்படி, 1986-ல்
குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப் பட்டது.
1987-ல் 64 விதமான தீங்கு விளைவிக்கக்கூடிய தொழில்களில் உள்ள குழந்தைகளின்
மறுவாழ்வுக்காக முதன்முதலாக தேசியக் கொள்கை உருவாக்கப் பட்டது.
2014-ல் அமெரிக்கா, குழந்தைகளின் உழைப்பால் உருவாகும் பொருட்களைப்
பட்டியலிட்டு, அதைத் தயாரிக்கும் 74 நாடுகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத்
தடைவிதித்தது. அதில் இந்தியாவும் ஒன்று. பீடி, செங்கல், பட்டாசு, தோல் பொருட்கள்
தயாரிப்பு இப்படி 23 வகையான பொருட்கள் உற்பத்தியில் இன்னமும் குழந்தைகள் தங்களை
வந்து ஜார்னா போன்ற அக்காக்கள் மீட்பார்கள் என்று காத்திருக்கிறார்கள்.
Labels:
#Rskn
iam karthik , iam from tamil nadu india , now iam working in oman...
துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக்காரணம் என்ன?
துருக்கியில்
ராணுவப் புரட்சிக்குக்காரணம் என்ன?
துருக்கியில்
ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததைத் தொடர்ந்து வெடித்த வன்முறைகளில் இதுவரை
90 பேர் உயிரிழந்தனர். 1,154 பேர் காயமடைந்துள்ளதாக அரசு செய்தி ஊடகம் தெரிவித்தது.
தலைநகர்
அங்காராவில் கோல்பாசி மாவட்டத்தில் பொதுமக்கள் 42 பேரும், 17 போலீஸாரும் கொல்லப்பட்டதாகவும்
அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர துருக்கி நாட்டின் ஏவுகணைத்
தளத்தின் இரண்டு ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.
1563 பேர் கைது:
அரசுக்கு
எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் 1,563 பேரை அரசுப் படைகள் கைது
செய்துள்ளன. இந்தத் தகவலை சி.என்.என் துருக்கி தெரிவித்துள்ளது. கைதான ராணுவ
வீரர்களில் 29 பேர் கர்னல் பதவி அந்தஸ்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் அதிரடி:
துருக்கி
நாட்டை ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென
தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் அப்படி எதுவும் இல்லை என துருக்கி அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டபோதும் சில மணி நேரங்களில் பிரதமர் எர்டோகன் ராணுவக் கிளர்ச்சியை
ஒப்புக்கொண்டார். கிளர்ச்சியாளர்களிடமிருந்து தேசத்தைப் பாதுகாப்பதாக
உறுதியளித்தார்.
அரசு
ஊடகங்களை ராணுவம் முடக்கியது. அரசுத் தொலைக்காட்சியில் ராணுவத்தின் அறிக்கை
மட்டுமே ஒளிபரப்பப்பட்டது.
அந்த
ராணுவ அறிக்கையில், "துருக்கி ராணுவம் அரசு நிர்வாகத்தை முழுமையாக
கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் சட்டத்தை
நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத்
தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா. வேண்டுகோள்:
துருக்கி
மக்கள் அமைதி காக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள்
விடுத்துள்ளார். துருக்கி நிகழ்வுகளை ஐ.நா. கூர்ந்து கவனித்து வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டது
புரட்சிக்குக் காரணம்:
துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப்
புரட்சிக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன.
வரலாற்று ரீதியாக அரசியலில் துருக்கிய ராணுவம்
குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க
வகையில் மதச்சார்பின்மை அரசியல் கொண்டது. ஜனநாயகம், அனைவருக்கும் இலவசக் கல்வி,
பெண்களுக்கான சம உரிமை, மேற்கத்திய பாணி வாழ்க்கை முறை ஆகியவற்றை தங்களது
கொள்கையாக வைத்துக் கொண்டுள்ள கீமலிசம் என்ற கொள்கையை ராணுவம் தூக்கிப்
பிடிக்கிறது. மேலும் இவைதான் அரசின் கொள்கையாகவும் இருக்க வேண்டும் எனக் கருதுவது
துருக்கிய ராணுவம்.
அதாவது, முஸ்தபா கீமல் அட்டாதுருக் என்பவர் அமல் செய்ததே அங்கு
கீமலிசம் என்று அழைக்கப்படுகிறது. சமூக, அரசியல், பண்பாட்டு மற்றும்
சமயத்துறைகளில் தாராளவாத சீர்த்திருத்தங்களை தங்களது கொள்கைக்கு விளக்கமாக
அளிப்பது கீமலிஸம். இதுதான் துருக்கிய ராணுவத்தின் கொள்கையும் ஆகும்.
2002-ஆம் ஆண்டு எர்டோகன் ஆட்சியைப் பிடித்த பிறகு ராணுவத்திற்கு அதன் கீமலிச கொள்கைக்காக கடும் சவால்களை ஏற்படுத்தினார். அடிப்படையில் எர்டோகனின் இஸ்லாமிய அரசு அடிப்படையில் மதச்சார்பின்மை கொள்கையைக் கடைபிடிக்கும் கீமலிசத்துக்கு எதிரானது.
2002-ஆம் ஆண்டு எர்டோகன் ஆட்சியைப் பிடித்த பிறகு ராணுவத்திற்கு அதன் கீமலிச கொள்கைக்காக கடும் சவால்களை ஏற்படுத்தினார். அடிப்படையில் எர்டோகனின் இஸ்லாமிய அரசு அடிப்படையில் மதச்சார்பின்மை கொள்கையைக் கடைபிடிக்கும் கீமலிசத்துக்கு எதிரானது.
எர்டோகன் தன் ஆட்சியில் ராணுவத்தின் செல்வாக்கைக் குறைக்க சிலபல நடவடிக்கைகளை மேற்கொண்டார். ராணுவ கோர்ட்டின் எல்லைகளை வகுத்தார். குடிமைச் சமூக கட்டுப்பாட்டின் கீழ் மூத்த/உயர் ராணுவ அதிகாரிகளை கொண்டு வந்தார். அதாவது, சமூகத்திலும் அரசிலும் ராணுவத்தின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்யும் திட்டங்களை அரங்கேற்றினார் எர்டோகன்.
கடந்த காலங்களில் 4 முறை ராணுவம் வெற்றிகரமாக ஆட்சியைப் பிடித்திருக்கும் வேளையில் எர்டோகனின் இத்தகைய நடவடிக்கைகள் ராணுவத்துக்கு கடும் சவால்களை ஏற்படுத்தின. ஆனால் மக்களிடையே புகழ்பெற்ற எர்டோகன் தனது ஆட்சியில் ஓரளவுக்கு பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருந்ததால் இவருக்கு செல்வாக்கு கூடியிருந்தது. இதனை வைத்துக் கொண்டு அவர் சில ராணுவ உயரதிகாரிகளை சதி வழக்கில் உள்ளே தள்ளினார்.
ஆனால் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி எர்டோகன் 2007-ல் அப்துல்லா குல் என்பவர் அதிபராவதற்கு ஆதரவளித்தார். இஸ்லாமியக் கட்சியுடன் குல்லுக்கு இருந்த தொடர்பு காரணமாக அவர் அதிபராவதை ராணுவம் எதிர்த்தது. ஆனால் எர்டோகன் எப்படியோ ராணுவத்தின் செல்வாக்கைச் சரிவடையச் செய்து, அரசியலில் அதன் செல்வாக்கை முறியடித்து தன்னுடைய சிவில் அரசின் அதிகாரத்தை பலமட்டங்களிலும் நிறுவினார் எர்டோகன்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இவையெல்லாம் மாற்றமடைந்தன. துருக்கி வெளியுறவு கொள்கையில் ஒரு சிந்தனை மாற்றம் ஏற்பட அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்தது, அதே வேளையில் எர்டோகனின் காட்டாட்சியின் போக்கு அதிகரிக்க எர்டோகனின் ஏ.கே. கட்சியின் செல்வாக்கு பலவீனமடைந்தது.
2011-ல் சிரியாவில் முதன் முதலாக நெருக்கடி தோன்றிய போது சிரியா
அதிபர் பஷார் அல் அசாத்தின் ராஜினாமாவைக் கோரிய முதல் உலகத் தலைவரானார் எர்டோகன்.
அதன் பிறகு சிரியாவில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு கடுமையாக ஆதரவளித்தார்
எர்டோகன். இது அவர் மீதான எதிர்ப்புக்கு அடித்தளமாக அமைந்தது. இவரது இஸ்லாமிய
கிளர்ச்சியாளர்களுக்கான ஆதரவினால் சிரியாவில் சிவில் யுத்தம் மேலும் விரிவும்
ஆழமும் அடைந்தது. இதனால் துருக்கிக்கு பெரிய அளவில் சிரியாவிலிருந்து அகதிகள்
குவிந்தனர். இரண்டாவதாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற ஐஎஸ்-ன் செல்வாக்கும் அதிகரித்தது.
ஐ.எஸ். தற்போது எப்போதாவது துருக்கியையும் தாக்கி வருகிறது.
மேலும், சிரியாவின் துருக்கியில் செல்வாக்கு ரஷ்யாவின் விரோதத்தைப் பெற காரணமாக அமைந்தது. துருக்கியின் மீது ரஷ்யாவின் பொருளாதார தடைகள் துருக்கியை பெரிதும் பாதித்தது. கடைசியாக மேலும் மோசமாக துருக்கி உள்நாட்டு இனப்பதற்றங்களும் சிரியா நெருக்கடியுடன் தொடர்புடையதானது.
மேலும், சிரியாவின் துருக்கியில் செல்வாக்கு ரஷ்யாவின் விரோதத்தைப் பெற காரணமாக அமைந்தது. துருக்கியின் மீது ரஷ்யாவின் பொருளாதார தடைகள் துருக்கியை பெரிதும் பாதித்தது. கடைசியாக மேலும் மோசமாக துருக்கி உள்நாட்டு இனப்பதற்றங்களும் சிரியா நெருக்கடியுடன் தொடர்புடையதானது.
நாட்டின் தென்மேற்கு பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மீது
எர்டோகன் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். அதாவது ஐஎஸ்-க்க்கு எதிராக பெரிய
அளவில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் எழுச்சியுற்ற போது எர்டோகன் குர்திஷ்
கிளர்ச்சியாளர்கள் மீது கண்மூடித்தனமான அடக்கு முறையை ஏவிவிட்டார். குர்திஷ்
கிளர்ச்சியாளர்களுக்கு சர்வதேச ஆதரவு பெருகியது. மேலும் அவர்களது அரசியல் பிரிவு
எர்டோகனின் ஏ.கே. கட்சிக்கு அரசியல் ரீதியாக சவால் அளித்தது.
இதனையடுத்து ஐஎஸ், குர்திஷ் கிளர்ச்சியாளர்களினால் நாட்டின் பாதுகாப்புக்கு, குறிப்பாக கிழக்குப் பகுதியில், ஏற்பட ராணுவத்துடன் வெள்ளைக் கொடி காட்டி சமாதானம் மேற்கொள்ள முயற்சி செய்தார் எர்டோகன். ராணுவம் இல்லாமல் எர்டோகன் அங்கு என்ன செய்து விட முடியும்? எர்டோகனின் விமர்சகரும் இஸ்லாமிய கல்வியியல் பண்டிதருமான ஃபெதுல்லா குலென் என்பவர் கீமலிச ராணுவத்துடன் சேர்ந்தார். குலெனிய பிரிவை எர்டோகன் “இணை அரசியல் அமைப்பு” என்றே வர்ணித்தார்.
இதனையடுத்து ஐஎஸ், குர்திஷ் கிளர்ச்சியாளர்களினால் நாட்டின் பாதுகாப்புக்கு, குறிப்பாக கிழக்குப் பகுதியில், ஏற்பட ராணுவத்துடன் வெள்ளைக் கொடி காட்டி சமாதானம் மேற்கொள்ள முயற்சி செய்தார் எர்டோகன். ராணுவம் இல்லாமல் எர்டோகன் அங்கு என்ன செய்து விட முடியும்? எர்டோகனின் விமர்சகரும் இஸ்லாமிய கல்வியியல் பண்டிதருமான ஃபெதுல்லா குலென் என்பவர் கீமலிச ராணுவத்துடன் சேர்ந்தார். குலெனிய பிரிவை எர்டோகன் “இணை அரசியல் அமைப்பு” என்றே வர்ணித்தார்.
கடந்த சில வாரங்களில் துருக்கிய அரசு தனது அயலுறவுக் கொள்கையில்
சில மாற்றங்களைச் செய்தது. விளாதிமிர் புதினைச் சந்தித்தார் எர்டோகன், மேலும்
இஸ்ரேலுடன் தனது உறவை இயல்பு நிலைக்குத் திருப்பினார். மேலும் முக்கியமாக
அந்தர்பல்டி விவகாரமாக சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவையும் காட்டினார் எர்டோகன்.
இதனோடு நிறுத்தாமல் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவ வீரர்கள் மீது சட்டம் பாயாமல் தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டார் எர்டோகன்.
ஆனால், இவரது இந்தத் திடீர் மாற்றம் ராணுவத்தினர் மத்தியில் உண்மையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. ஏதோ ஒருவிதத்தில் எர்டோகன் மீது ராணுவத்துக்கு சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது. எர்டோகனும் ராணுவத்தை திருப்தி செய்யும் நடவடிக்கையில் முற்று பெற முடியவில்லை.
இதனையடுத்து, இன்று ராணுவம் எர்டோகனை அகற்ற ராணுவப் புரட்சியில் ஈடுபட்டது. இது குறித்து எர்டோகன் தனது தொடக்க எதிர்வினையில் குறிப்பிடும்போது, “இணை அரசியல் அமைப்பு’ காரணம் என்றார். ஆனால் குலென் என்பவரது ஆலோசனை சார்ந்து இந்த புரட்சி நடந்திருந்தால் அது இப்போதை விட பெரிதாகவே இருந்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதனோடு நிறுத்தாமல் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவ வீரர்கள் மீது சட்டம் பாயாமல் தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டார் எர்டோகன்.
ஆனால், இவரது இந்தத் திடீர் மாற்றம் ராணுவத்தினர் மத்தியில் உண்மையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. ஏதோ ஒருவிதத்தில் எர்டோகன் மீது ராணுவத்துக்கு சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது. எர்டோகனும் ராணுவத்தை திருப்தி செய்யும் நடவடிக்கையில் முற்று பெற முடியவில்லை.
இதனையடுத்து, இன்று ராணுவம் எர்டோகனை அகற்ற ராணுவப் புரட்சியில் ஈடுபட்டது. இது குறித்து எர்டோகன் தனது தொடக்க எதிர்வினையில் குறிப்பிடும்போது, “இணை அரசியல் அமைப்பு’ காரணம் என்றார். ஆனால் குலென் என்பவரது ஆலோசனை சார்ந்து இந்த புரட்சி நடந்திருந்தால் அது இப்போதை விட பெரிதாகவே இருந்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ராணுவக் கிளர்ச்சியாளர்கள் தங்கள் அறிக்கையில் கூறும் போது, “மனித உரிமைகள், மதச்சார்பின்மையைக் காக்க அரசை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்” என்று கூறியிருப்பது கீமலிச கொள்கையை அடிப்படையாகக் கொண்டதே. எது எப்படியிருந்தாலும் துருக்கியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் குழப்பமாகும் இது.
KARTHIKKN
Labels:
#Rskn
iam karthik , iam from tamil nadu india , now iam working in oman...
Subscribe to:
Posts (Atom)