பரபரப்பாக
எதிர்பார்க்கப்பட்ட ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 91.4 சதவிகித
மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். ப்ளஸ் 2 தேர்வில் 87.9 சதவிகித மாணவர்கள்
தேர்ச்சியடைந்துள்ளனர். 94.4 சதவிகித மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் எடுத்து ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆர்த்தியும், ஜஸ்வந்த்தும் முதலிடம் பிடித்துள்ளனர்.
ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வு
கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது. ப்ளஸ் 2
தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8
லட்சத்து 39,697 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர்
பள்ளியை சேர்ந்த இரண்டு பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். ஆர்த்தி என்ற
மாணவி 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் தமிழில் 199, ஆங்கிலத்தில்
197, கணிதத்தில் 200, இயற்பியலில் 199, வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் தலா
200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபள்ளியை சேர்ந்த ஜஸ்வந்தும், 1195 மதிப்பெண்கள்
பெற்று அவரும் முதலிடம் பிடித்துள்ளார். திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக்
பள்ளியில் படித்த பவித்ரா, 1194 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம்
பிடித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பேர்
3ம் இடம் பிடித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி வேணு பிரீத்தா 1193
மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தத் தேர்வு முடிவுகள் இன்று
காலை 10.31 மணிக்கு முதல் 11 மணிக்குள் வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகள், தங்களது
பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை,
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள
முகவரிகளில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இது தவிர, ஒவ்வொரு
மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும்
அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ, மார்க் ஷீட்டை www.dge.tn.nic.in என்ற
வெப்சைட்டில் இருந்து வரும் 19ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ள முடியும். மே
21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை
ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டலுக்கு விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர்கள் பயின்ற பள்ளி
வழியே விண்ணப்பிக்கலாம். தனியார் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்கள் வழியே
விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் வேண்டுவோர், மறு கூட்டலுக்கு இப்போது
விண்ணப்பிக்க கூடாது. அவர்களுக்கு பிறகு தேதி ஒதுக்கப்படும். இளநிலை பட்டப்
படிப்புகளில் சேருவதற்கும் பி.இ. உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளில் சேர
விண்ணப்பிக்கவும் தற்போதைக்கு தாற்காலிகச் சான்றிதழ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம்
என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் எடுத்து ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆர்த்தியும், ஜஸ்வந்த்தும் முதலிடம் பிடித்துள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:-
தமிழ்
1. வி.ஆர்த்தி (199 மதிப்பெண்கள்), ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
1. கே.எச்.ஜெஷ்வந்த் (199), ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
2. எஸ்.ஜெனிபர் ஜெயநந்தினி (199), கிரீன்பார்க் (பெண்கள்) மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பொதுப்பட்டி, நாமக்கல்.
3. கே.கீர்த்தனா (199), கிரீன்பார்க் (பெண்கள்) மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பொதுப்பட்டி, நாமக்கல்.
ஆங்கிலம்
1. எஸ்.சங்கீதா (198), ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஒசூர், கிருஷ்ணகிரி.
2. எம்.எஸ்.தர்மா (198), வேளாங்கண்ணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி.
3. எம்.அக்ஷயா (198), சிஷ்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, இனம்கரியாந்தல், திருவண்ணாமலை.
இயற்பியல்
1. வி.விக்னேஷ் (200), ஐடியல் மேல்நிலைப்பள்ளி, ஐடியல் நகர், ஈரோடு.
2. வி.ஆர்.தனுஷ் (200), ஸ்ரீ வித்யா மந்திரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
3. கே.வைஷ்ணவ் குமார் (200), ஸ்ரீ வித்யா மந்திரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
வேதியியல்
1. வி.விக்னேஷ் (200), ஐடியல் மேல்நிலைப்பள்ளி, ஐடியல் நகர், ஈரோடு.
2. வி.ஆர்த்தி (200), ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
2. கே.எச்.ஜெஷ்வந்த் (200), ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
3. எம்.கோபிகா ஸ்ரீ (200), வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பஞ்செட்டி, பொன்னேரி, திருவள்ளூர்.
3. ஆர்.அக்ஷயா (200), ஸ்ரீ விஜய் வித்யாலயா (பெண்கள்) மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
உயிரியல்

தாவரவியல்
1. டபிள்யூ.எஸ்.ஜெபிஷா லிவால்டு (200), எக்ஸல் மேல்நிலைப்பள்ளி, திருவட்டாறு, கன்னியாகுமரி.
2. எஸ்.லயோனல் லின்போர்டு (200), எக்ஸல் மேல்நிலைப்பள்ளி, திருவட்டாறு, கன்னியாகுமரி.
3. எஸ்.ஆலன் டேவிட் (200), எக்ஸல் மேல்நிலைப்பள்ளி, திருவட்டாறு, கன்னியாகுமரி.
விலங்கியல்
1. எஸ்.ஜி.நேஹா பரிவால் (200), தாய் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, டி.வாடிப்பட்டி, மதுரை.
2. டபிள்யூ.எஸ்.ஜெபிஷா லிவால்டு (200), எக்ஸல் மேல்நிலைப்பள்ளி, திருவட்டாறு, கன்னியாகுமரி.
3. ஆஷிகா பாலமுருகன் (200), ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, புதுவயல், சிவகங்கை.
கம்ப்யூட்டர் சயின்ஸ்
1. எஸ்.ரேவதி (200), காந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, எம்.கண்டம்பாளையம், நாமக்கல்.
2. ஜெ.ரிது ஆவிலா (200), கே.வி.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.குளம், கோவை.
3. ஆர்.தமிழ் மலர் (200), இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.
பொருளாதாரம்
1. ஆர்.தேவிபிரியா (200), ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
2. ஏ.ஆர்.ஸ்ரீசரன் (200), ஸ்ரீ அகோபிலமடம் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.
3. ஜி.ராமலட்சுமி (200), எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர்.
வணிகவியல்
1. டி.ஜெ.சத்ரிய கவின் (200), குட் ஷெப்பர்டு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம், சென்னை.
2. எஸ்.ஸ்ருதி (200), குட் ஷெப்பர்டு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம், சென்னை.
2. ஜி.பவித்ரா (200), ஸ்ரீ நிகேதன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
3. ஜி.நவீன் (200), பாரதி வித்யாபவன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
3. என்.நிவேதிதன் (200), நியூ பிரின்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆதம்பாக்கம், சென்னை.
3. கே.சம்ரிதா (200), விமல் ஜோதி கான்வென்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சரவணம்பட்டி, கோவை.
கணக்கியல்

புள்ளியியல்
1. ஆர்.தேவிப்பிரியா (200), ஸ்ரீ விசாலாட்சி ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
2. ஏ.ஆர்.ஸ்ரீசரன் (200), ஸ்ரீ அகோபிலமடம் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.
3. ஜி.ராமலட்சுமி (200), எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர்.
வரலாறு
1. ஏ.திவ்ய பாரதி (200), அரசு மேல்நிலைப்பள்ளி, தாமரைப்பாளையம், ஈரோடு.
2. ஜி.ரச்செல் பிலோமினா (200), அரசு மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்.
3. கே.வைரமணி (200), உலகப்பர் மேல்நிலைப்பள்ளி, ராமச்சந்திராபுரம், புதுக்கோட்டை.
புவியியல்
1. ஏ.அகிலா (199), சுப்பையா வித்யாலயா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
2. அவுலா காவ்யா (198), லேடி ஏ.வி.எஸ்.ஆர். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.
3. என்.ஷிவதா (198), எல்.எப். (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, ராமன்புத்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி.
மைக்ரோ பயாலஜி
1. ஏ.ராயீகா சமான் (198), சி.எஸ்.ஐ. ஈவார்ட்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, புரசைவாக்கம், சென்னை.
2. ஜே.மோகனபிரியா (198), சி.எஸ்.ஐ. ஈவார்ட்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, புரசைவாக்கம், சென்னை.
3. ஆர்.ஜெசிந்தா (196), செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேசன் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர், சென்னை.
பயோ கெமிஸ்ட்ரி
1. எம்.திவ்யங்கா (198), ஸ்ரீ சங்கரா வித்யாஸ்ரமம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர், சென்னை.
2. தீபா கிறிஸ்டினா ஜெயராஜ் (197), ஸ்ரீ சங்கரா வித்யாஸ்ரமம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர், சென்னை.
3. வி.பொன் பிரவீனா (188), சாரா டக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை.
வர்த்தக கணிதம்
1. டி.ஜெ.சத்ரிய கவின் (200), குட் ஷெப்பர்டு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம், சென்னை.
2. ஜி.பவித்ரா (200), ஸ்ரீ நிகேதன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
2. எஸ்.ஸ்ருதி (200), குட் ஷெப்பர்டு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம், சென்னை.
3. கே.சம்ரிதா (200), விமல் ஜோதி கான்வென்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சரவணம்பட்டி, கோவை.
3. என்.நிவேதிதன் (200), நியூ பிரின்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆதம்பாக்கம், சென்னை.
3. ஜி.நவீன் (200), பாரதி வித்யாபவன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
சிறப்பு தமிழ்
1. கே.கல்பனா (193), ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.
2. ஜி.அட்சயா (191), ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.
3. ஆர்.குமார் (187), பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.
கம்யூனிகெட்டிவ் இங்கிலீஷ்
1. வி.அனு கிருபா (199), செயின்ட் இன்னேஷியல் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை.
2. ஏ.பாரதி மீனா (198), செயின்ட் இன்னேஷியல் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை.
3. எஸ்.பிரீடா செல்வ ஷீலா (198), ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் எஸ்.ஜே.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மகராஜா நகர், நெல்லை.
நர்சிங்
1. ஆர்.ஆரோக்கிய சுகந்தி (198), சி.எஸ்.ஐ. கார்லி மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், காஞ்சீபுரம்.
2. கே.சத்யா (196), இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, கடம்பூர், தூத்துக்குடி.
3. வி.ஐஸ்வர்யா (196), செயின்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாசரேத், தூத்துக்குடி.
ஹோம் சயின்ஸ்
1. பி.ஜெனிஷா (199), அருணாச்சலம் மேல்நிலைப்பள்ளி, திருவட்டாறு, கன்னியாகுமரி.
2. எஸ்.உமா மகேஸ்வரி (199), சாரா டக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கொட்டை, நெல்லை.
3. எம்.பொன்சுந்தரி (198), எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மெஞ்ஞானபுரம், தூத்துக்குடி.
No comments:
Post a Comment