இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த
செய்தியை
மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும்
ஒரு சிறிய விழிப்புணர்வை
ஏற்படுத்துங்கள்.
‘வேலியே பயிரை மேயுது’ என்பார்களே அதற்கு மிகச்சரியான உதாரணம் சீமைகருவேல். ஊழல், தீவிரவாதம், எதிரி நாட்டு படையெடுப்பு மட்டுமே ஒரு நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சீமைகருவேல் மரங்கள் போதும் எவ்வளவு வளமான நாட்டையும் பசுமை பாலைவனமாக்கி விடும். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு. இதன் ஆபத்தை உணர்ந்த உலகநாடுகள், தங்கள் பகுதிக்குள் எதிரிகளை நுழைய விடாமல் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்களோ அதே உணர்வில்தான் சீமைகருவேலையும் பார்க்கிறார்கள். அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகள் இதை நச்சு தாவரமாக அறிவித்திருக்கின்றன. இவ்வளவு ஏன் நமது அண்டை மாநிலமான கேரளாவில் சீமை கருவேல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த மரங்களை முற்றிலுமாக அழித்து, புதிதாக வளராத வகையில் பாதுகாத்து வருகிறார்கள். அப்படியென்னதான் இருக்கிறது இந்த தாவரத்தில்..?
பயிருக்கு வேலியாகவும், விறகு பயன்பாட்டுக்காகவும் 1950
ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன சீமைகருவேல் விதைகள். தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் காமராஜர், அவரது ஆட்சி காலத்தில் தொலைநோக்கு பார்வையில்லாமல் கொண்டுவரப்பட்டது தான் சீமைகருவேல் என்பது கசப்பான உண்மை.
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல....,
இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று
பார்பதுதான் அவசியம்.
அமெரிக்க தாவரவியல் பூங்கா வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி
பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட
போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின்
வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'
தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள்
இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'
மக்கள் சிறிதளவு கொண்டு வந்த விதை, இந்த 64 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. ''தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 25% இடத்தை ஆக்கிரமித்துள்ளது சீமைகருவேல்"
என்கிறார்கள் சூழலியல் வல்லுநர்கள். மரம் ஆக்சிஜனை வெளியிட்டு, நிழல் கொடுத்து, பல்லுயிர்கள் வாழும் சூழலை ஏற்படுத்த உதவ வேண்டும். ஆனால், சீமைகருவேல் இதில் எதையும் செய்வதில்லை. மாறாக, அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.
அதிக நைட்ரஜன் அமிலத்தை சுரந்து மண்ணை மலடாக்குவதுடன், மண்ணில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இதன் ஆழமான வேர்களும், உறுதியான பக்கவேர்களும் மழைநீர் நிலத்திற்குள் செல்வதை தடுக்கின்றன. மரம் 12 அடி உயரம் வரை வளரும். வேர் 175 அடி ஆழம் வரை வளரக் கூடியது. அதனால் தான் மற்ற அனைத்து தாவரங்களை விடவும் அதிக ஆழத்திற்கு சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது இந்த நச்சுத் தாவரம். மழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சு உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு மட்டும் நிற்காமல் நல்ல நீரை உவர்பாக மாற்றிவிடும். நிலத்தடி நீர் உவர்பாக மாறுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது
மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.
பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை
வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில
சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே
வறண்டு விடுகிறது...!
இந்த தாவரம் வளரும் இடங்களில் காற்று வெப்பமடைந்து மக்களை வறட்சியான மனநிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகளவில் இருக்கின்றன. இந்த மாவட்டங்களின் வறட்சிக்கும், மக்களின் மனநிலைக்கும், தரிசு நிலங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும் இந்த தாவரம் ஒரு முக்கிய காரணம். சமீபகாலமாக, சீமை கருவேல் நச்சு தாவரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதுடன், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.
இந்நிலையில், ராமநாதபுரம் இருக்கிற வறட்சிக்கு இந்த தாவரமும் ஒரு காரணம். விவசாயம் குறைஞ்சு போனதால், வாழ்வாதாரத்துக்காக இந்த தாவரங்களை வெட்டி, விறகாகவும், கரியாகவும் விற்றுவருகிறார்கள். இது, இவர்களுக்கான நிரந்தர தீர்வாக இருக்காது என்பதால் முதல் கட்டமாக, விவசாய நிலங்களில் உள்ள சீமைகருவேல் மரங்களை அழித்து, அதை மறுபடியும் விவசாய பூமியாக மாற்றி, விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள், இடுபொருட்கள், விதைகள் கொடுத்து அவர்களை மீண்டும் உழவுத் தொழிலில் ஈடுபட வைக்க வேண்டும்
இதன் மூலம் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 600 க்கும் மேற்பட்ட குளங்களில் உள்ள சீமைகருவேலை ஒழிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மரங்களை வேரோடு அழிப்பதற்கான பணிகள் முடுக்கி விடபட்டுள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் சீமைகருவேல் இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறும்"
ராமநாதபுரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த நச்சு தாவரத்தை வேரோடு அழிக்கும் முயற்சியில் அரசை மட்டும் எதிர்பார்க்காமல் நாமே களத்தில் இறங்கினால் இன்னும் சில ஆண்டுகளில் சீமை கருவேல் என்னும் சூழலுக்கு எதிரான வில்லனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம்
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்.
Related articles
சமீபத்தில்
முகநுலில் படித்த ஒரு அருமையான பகிர்வு
டாக்டர்.அப்தூல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை:
பறவைகள் தங்களின் எச்சம் மூலம் பத்து இலட்சம் மரங்களை உருவாக்குகிறது... அதன் எச்சத்தில் இயற்கையாகவே மரங்களை வளர்க்கும் சக்கி இருக்கிறது...
ஆதனால் நாம்
வெறும் விதைகளை மட்டுமே விதைத்தால் அந்த விதை வளருமா என்று தெளிவாக கூறமுடியாது....
இந்த பிரச்சினையை
தீர்க்க தான் விதைப்பந்து...
செய்முறை
:
√. பல்வேறு விதைகளை சேகரித்துக் கொள்ளவும்... நாம்
சாப்பிடும் பழங்களில் உள்ள விதைகளும் சேர்த்து தான்.....
√. ஒரு காகித பையில் விதைகளை சேகரித்து வைக்கவும்...
ஏன் காகித பை என தோன்றுகிறதா? விதையில் உள்ள ஈரப்பதத்தை அது ஈர்த்துக் கொள்ளும அதனால்
தான்...
√. செம்மண் மற்றும் சாணம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து
சப்பாத்தி மாவு மாதிரி செய்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்..
√. அந்த உருண்டையில் ஒரு விதையை வைத்து நிழலிலே
காய வைக்கவும்...
√. பேருந்து மற்றும் வண்டியில் செல்லும் போது அதை
விதைத்து விட்டு போகலாம்... மழை வரும் வரை பந்தில உள்ள சாணமும் செம்மண்ணும் விதைக்கு
தேவையான சக்தியை தரும்....
√. மழைத்துளி பட்டவுடன் இந்த விதையானது வளர தொடங்கி
விடும்....
விதைக்கும
போது ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்...
''விதைத்துக்கொண்டே இரு வளர்ந்தால் மரம், இல்லையென்றால் மண்ணிற்கு உரம்'' என்று....
''விதைத்துக்கொண்டே இரு வளர்ந்தால் மரம், இல்லையென்றால் மண்ணிற்கு உரம்'' என்று....
குறிப்பு
: மாட்டு சாணம் கிடைக்காதவர்கள் விதைகளை எங்களிடம் அனுப்பிவிடுங்கள். ஒவ்வொரு மாவட்டத்தில்
எங்கள் குழு உங்கள் இடம் வந்து விதை பந்து அல்லது விதைகளை பெற்றுக்கொள்வோம்..
சமுதாய பணியில்
டாக்டர்.அப்தூல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை.
டாக்டர்.அப்தூல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை.
(Reg no.84/2015)
Call 9629998597, 9994147003, 9566465243
Call 9629998597, 9994147003, 9566465243
இவர்களின் முயற்சியும் ,கனவும் மெய்ப்பட வாழ்த்துவோம்
நீங்களும் இவர்களை முகநூலில் பின் தொடர்ந்து உங்களின்
ஆதரவையும் பங்களிப்பையும் தர வேண்டுகிறேன்
Thanks -Karthikeyan
No comments:
Post a Comment