Thursday 12 May 2016

தமிழகத்தில் லோக் அயுக்தா எப்போது ...???

 ஜன் லோக்பால் மசோதா

ஜன் லோக்பால் மசோதா (Jan Lokpal Bill) அல்லது குடி மக்கள் காப்பு முன்வரைவு இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா.
ஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.


·         ஒட்டுமொத்த இந்தியாவை மட்டும் அல்லது உலகத்தார் அனைவைரையும் திரும்பி பார்க்க வைத்த அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்திதான் . இந்த  ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டால், அதற்கான முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளவது நமது அவசியமாகும் .
·         ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால்.
·         முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.
·         லோக்பால் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசின் முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது.
·         ஊழலுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல் இல்லாத லோக்பால் மசோதாவை தூக்கி எறிந்துவிட்டு,ஊழல் செய்யும் நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோரையும் விசாரிக்க வகை செய்யும் வலிமையான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி உருவாகியுள்ள இந்த இயக்கத்தில் ஹசாரே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மல்லிகா சாராபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
·         "ஊழலுக்கு எதிரான இந்தியா" (India against corruption) என்ற இந்த இயக்கத்தின் இணையதளத்தில், இந்தியாவில் நிலவும் ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு கோபத்தின் வெளிப்பாடே இந்த இயக்கம் என கூறப்பட்டுள்ளது.
·         இந்த ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம்,வேண்டுகோள்,அழுத்தம் கொடுக்கவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலை தடுத்து நிறுத்த ஒரு பயனுள்ள செயலாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
·         குடிமக்கள் பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஜன் லோக்பால் மசோதவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஹசாரே ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். நான்கு நாட்கள் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த ஆதரவை தொடர்ந்து மத்திய அரசு இறங்கி வந்தது.
·         லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்கு அரசு குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஈடாக சிவில் சமூகத்திலிருந்தும் ஒரு குழுவை அமைக்கவும், இந்த இரண்டு குழுக்களும் கலந்தாலோசோத்து லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு ஒப்புக்கொண்டது.
·         அதன் பின்னர் இரண்டு தரப்பும் பல முறை கூடி ஆலோசித்தும், ஹசாரே குழுவினர் வலியுறுத்தியபடி, நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகிய தரப்பினரை மசோதாவில் உள்ளடக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. இதனையடுத்து இருதரப்புமே தனித்தனியாக தங்களது கண்ணோட்டத்தில் தனித் தனி மசோதாக்களை உருவாக்கின.
·         இதனைத் தொடர்ந்து அந்த பல் இல்லாத மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில்தான், அந்த மசோதவை "ஜோக் பால் மசோதா" என்று ஹசாரே குழுவினர் விமர்சித்தனர். அதே சமயம் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக ஹசாரே அறிவித்தார்.
·         ஆனால் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னரே, காவல்துறை விதித்த நிபந்தனைகளை ஏற்கமறுப்பதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் கூறி அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. ஆனால் ஹசாரேவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்தியாவும் திரண்டதை பார்த்து மிரண்டுபோன காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு,அவரை விடுதலை செய்வதாக அறிவித்தது.
·         ஆனாலும் உண்ணாவிரத போராட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தாத வரை சிறையிலிருந்து வெளியே வர மறுத்து தமது உண்ணாவிரதத்தை தொடங்கிய ஹசாரே, டெல்லி காவல்துறை நிபந்தனைகளை தளர்த்திய பிறகே நேற்று சிறையிலிருந்து வெளியே வந்து,தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு சிலர் ஹசாரேவின் இந்த உண்ணாவிரத போராட்டத்தை விமர்சிக்கிறார்கள்.உண்ணாவிரத போராட்டத்தினாலெல்லாம் நாட்டிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார்கள்.ஆனால் இப்படியே சொல்லிக்கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் இதனை அனுமதிப்பது? எதற்கும் ஒரு தொடக்கப் புள்ளி வேண்டாமா? அந்த தொடக்கப்புள்ளியாக ஏன் ஹசாரேவின் போராட்டத்தை பார்க்கக் கூடாது?
இந்த தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஜன் லோக்பால் மசோதாவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
1)
ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அளவில் "லோக்பால்" மற்றும் மாநில அளவில் "லோக்ஆயுக்தா" அமைக்கப்படும்.
2)
உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவை முற்றிலும் அரசின் சுயேட்சை அமைப்பாக இயங்கும்.அவர்களது விசாரணையில் எந்த ஒரு அரசியல்வாதி அல்லது அதிகாரியும் தலையிட முடியாது.
3)
ஊழல் புகாருக்கு ஆளாகும் நபர்களுக்கு எதிரான வழக்குகளை ஆண்டு கணக்கில் இழுத்தடிக்க முடியாது.வழக்கு குறித்த புலனாய்வு ஓராண்டு காலத்திற்குள்ளாகவும், வழக்கு விசாரணை ஓராண்டு காலத்திற்குள்ளாகவும் முடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டு காலத்திற்குள் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள்.
4)
ஊழல் மூலம் அரசாங்க கஜானாவுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பீடை, தண்டனை விதிக்கப்படும்போதே சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து பெறப்படும்.
5)
இது சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் உதவும் என்றால், அரசாங்க அலுவலகங்களில் ஒரு பணிக்காக ஒருவர் சென்றால்- உதாரணமாக சாதிச் சான்றிதழ் அல்லது ஓட்டுனர் உரிமம் பெறுவது- அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் செய்துகொடுக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் அந்த அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, புகார் தாரருக்கு இழப்பீடும் வழங்கப்படும்.
6)
எனவே பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் தங்களது ( வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு வேண்டி போன்ற )விண்ணப்ப மனு மீதான நடவடிக்கை உரிய காலத்திற்குள் எடுக்கப்படாமல் தாமதமானாலோ அல்லது காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்ய மறுத்தாலோ லோக்பாலை அணுகலாம்.லோக்பால் அமைப்பு ஒரு மாத காலத்திற்குள் அதனை செய்து தரும்.மேலும் ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் எடை குறைத்து வழங்கப்பட்டாலோ அல்லது பஞ்சாயத்து அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி நிதியை பயன்படுத்தி போடப்படும் சாலைகள் மோசமாக இருந்தாலோ அது குறித்து லோக்பாலிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
7)
அதே சமயம் லோக்பால் அமைப்பில் ஊழல்வாதிகளையும், பலவீனமானவர்களையும் உறுப்பினர்களாக அரசாங்கம் நியமித்தால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியும் எழலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.ஏனெனில் லோக்பால் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசியல்வாதிகளால் அல்லாமல் நீதிபதிகள், குடிமக்கள் மற்றும் அரசமைப்பு அதிகாரிகளால் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
8)
லோக்பாலில் இடம்பெற்றுள்ள ஒரு உறுப்பினர் ஊழல் செய்தால் என்ன செய்யலாம்? லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் வெளிப்படையாக நடைபெறும் என்பதால், புகாருக்கு ஆளாகும் லோக்பால் அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபணமானால் இரண்டு மாத காலத்திற்குள் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார்.
9)
தற்போதுள்ள ஊழல் தடுப்பு ஏஜென்சிகள் என்னவாகும்? மதிய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி), சிபிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவை லோக்பாலுடன் இணைக்கப்படும்.எந்த ஒரு அதிகாரி, நீதிபதி அல்லது அரசியலாவாதியையும் தன்னிச்சையாக விசாரித்து வழக்கு தொடரும் அதிகாரமும், அரசு எந்திரமும் கொண்ட முழு அதிகாரமிக்க அமைப்பக லோக்பால் திகழும்.
10)
ஊழலால் பாதிக்கப்பட்டு அதற்கு எதிராக குரல் கொடுப்பவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் கடமை லோக்பாலுக்கு உண்டு
.

லோக்பால் மசோதா


லோக்பால் மசோதா 2011 அல்லது லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011 என்பது இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட மசோதா ஆகும். ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் இம்மசோதா முன்மொழியப்பட்டதாகும்.
இம்மசோதா டிசம்பர் 22, 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது, பின்பு 27 டிசம்பர் 2011 ல் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011 நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா டிசம்பர் 29, 2011 ல் நிராகரிக்கப்பட்டது. பின்பு 21 மே 2012 ல் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்த பின் மாநிலங்களவையில் இம்மசோதா 17 டிசம்பர் 2013 ல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 18 டிசம்பர் 2013 ல் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேறியது.


லோக்பால் பின்னணி:

'லோக்பால்' என்னும் சொல், லஷ்மி மால் சிங்வி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. 'லோக்' என்றால் மக்கள் என்றும் 'பலா' என்றால் மக்களை காப்பவர்கள் என்றும் சமசுகிருதத்தில் அர்த்தமாகும மொராஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் 1986 ல் தன் 'Problems of Redressal of Citizen's Grievances' எனும் அறிக்கையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் சிறப்பு அதிகாரமிக்க அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
லோக்பால் மசோதா மக்களவையில் 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவையின் 4 வது அமர்வு முடிவடைந்ததால் லோக்பால் மசோதா காலாவதியானது. பின்னர் 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. 28 Oct 2011 43 வருடம் கழித்து மீண்டும் 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 2013 டிசம்பர் 17,18 ல் இரு அவைகளிலும் நிறைவேறியது. மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல், தமிழ் தி இந்து நாளிதழ், டிசம்பர் 19,2013

தனியார் நிறுவனங்கள் குறித்த திருத்தங்கள்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் லோக்பால் சட்டமுன்வடிவு இறுதியாக நிறை வேற்றப்படுவதற்கு முன்பாக அதன் மீது நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோக்பால் புலனாய்வின் வரையறைக்குள், தனியார் நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக பொது-தனி யார்-ஒத்துழைப்பு என்னும் பெயரில் மேற் கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுச் சொத்துக்களை அல்லது அரசு மற்றும் பொதுத் துறை நிதி நிறுவனங்களிடமிருந்து நிதிபெறும் ஏற்பாடுகளைக் கொண்டுவரக்கூடிய விதத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அந்தத் திருத்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் 11 பேர் அவையில் இருந்தபோதிலும், இதற்கு 19 வாக்குகள் கிடைத்தன. இதன் பொருள் இடதுசாரி அல்லாத வேறுசில மாநிலங் களவை உறுப்பினர்களும் இதனை வரவேற்றிருக்கிறார்கள் என்பதாகும். ஆயினும் இந்தத் திருத்தம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. தனியார் கம்பெனிகள் மீதான சோதனைகள் எதையும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோ விரும்பவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டியது.

லோக்பால் மசோதாவின் முக்கிய கூறுகள்:

டிசம்பர் 18 2013 அன்று நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய கூறுகள் கீழே வருமாறு:
1.   மத்தியில் லோக்பால், மாநி லங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு
2.   தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள்.
3.   லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும்.
4.   பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் (தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள முதல் 4 பேர் பரிந்துரையின்பேரில்) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற்ற தேர்வுக்குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமிப்பு.
5.   லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர்.
6.   விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.
7.   ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படு வர்.
8.   நேர்மை, நாணயம் மிக்க ஊழி யர்களுக்கு உரிய பாதுகாப்பு
9.   லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஐ,உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.
10. சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்.
11. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு
12. லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.
13. ஊழல் வழியில் சேர்த்த சொத்துக் களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறை கள் உள்ளடங்கும்.
14. ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.
15. லோக்பால் சட்டமாக அறிவிக்கை செய்யப்பட்டதிலிருந்து 365 தினங்களுக்குள் மாநில சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை அமைப்பது கட்டாயம்.


மேலும் காண்க: (related articles)


ஊழலுக்கு எதிரான இந்தியா (இயக்கம்)(India Against Corruption, IAC)


ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption, IAC) இந்தியாவில் ஊழலுக்கு எதிரான அமைப்புகளில் முழுமையான மாற்றங்களைக் கோரும் ஓர் மக்கள் இயக்கமாகும். ஜன் லோக்பால் மசோதாவை[1] இந்திய அரசு சட்டமாக்கிட வேண்டுமென்று கட்டாயப்படுத்த பல சிறப்புமிகு குடிமக்கள் ஒன்றுசேர்ந்துள்ளனர். இந்த இயக்கத்தில் பல சமயத் தலைவர்கள், தகவல் பெறும் உரிமை போராளிகள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் இணைந்துள்ளனர்




ஊழலுக்கு எதிரான உத்தி:

ஆங்காங்கின்ஊழலுக்கு எதிரான தன்னிச்சை ஆணையத்தினால்  (Independent Commission Against Corruption)  தூண்டப்பட்டு அதனைப்போன்ற ஜன் லோக்பால் சட்டமுன்வரைவு ஒன்றினை இந்த இயக்கதினர் தயாரித்துள்ளனர். இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும் அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது.

அன்னா அசாரேயின் பங்காற்றல்:

சமூக சேவகர் அன்னா அசாரே ஜன் லோக்பால் சட்ட முன்வரைவை அமலாக்கக்கோரி 5 ஏப்ரல்,2011 முதல் காலவரையற்ற உண்ணாநோன்பில் இருந்தார். நான்கு நாட்களில் அவரது போராட்டத்திற்கு குவிந்த மக்கள் ஆதரவின் பின்னணியில் நடுவண் அரசு தான் சட்டமாக்க விருக்கும் லோக்பால் சட்டமுன்வரைவிற்கு மாற்றாக வைக்கப்படும் ஜன் லோக்பால் வரைவை விவாதித்து ஓர் இணக்கமான சட்டமுன்வரைவை மழைக்கால நாடாளுமன்றத் தொடருக்கு முன்னர் வழங்கிட மக்கள் பிரதிநிதிகள், அரசுத் தரப்பு பிரதிநிதிகளைக் கொண்ட 10 பேர் அடங்கிய கூட்டுக் குழு அமைக்க அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டதை யடுத்து தனது உண்ணாநோன்பை ஏப்ரல் 9, 2011 அன்று முடித்துக் கொண்டார்.
" மக்களால் இயற்றப்பட்ட ஜன் லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா சட்ட முன்வரைவினை சட்டமாக்காத நடுவண் அரசிலோ மாநில அரசிலோ பதவியில் உள்ள எந்தக் கட்சிக்கும் நான் வாக்களிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்."
இந்திய வாக்களிப்பு உறுதிமொழி

ஊழலுக்கு எதிரான வாக்கு வங்கி:

ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம் ஊழலுக்கு எதிரான வாக்குவங்கி ஒன்றையும் நிறுவ முயன்று வருகிறது(Vote For India). இந்திய குடிமக்களை தங்கள் இணையதளத்தில் பதிந்து லோக்பால் சட்டமாக்காத எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதிமொழி எடுக்க வேண்டுகின்றனர்.

அரசியல் ஆதரவு:

ஜன் லோக்பால் சட்ட வரைவிற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இடது முன்னணியைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி, பி பிரதான், அபனி ராய் ஆகியோரும் ஜனதா தளம் (எஸ்) எச் டி தேவகௌடா, தெலுங்கு தேசத்தின் மைசூரா ரெட்டி, இராட்டிரிய லோக் தளத்தின் ஜயந்த் சௌதரி ஆகியோரும் ஆதரவு தெரிவிக்கும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளனர்.
இந்த இயக்கத்தில் பங்குபெறும் சிறப்புமிகு குடிமக்கள்
·         அண்ணா அசாரே
·         கிரண் பேடி
·         பாபா ராம்தேவ்
·         ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
·         மெகமூத் மதானி
·         பேராயர் வின்சென்ட் எம் கன்செஸ்ஸௌ
·         சுவாமி அக்னிவேஷ்
·         சைய்யது ரிஸ்வி
·         அதுல் கௌசால்
·         ம்படி ஷமூன் காஸ்மி
·         மல்லிகா சாராபாய்
·         நீதியரசர் டி எஸ் டேவடியா
·         பிரதீப் குப்தா
·         அர்விந்த் கேஜ்ரிவால்
·         கமல் காந்த் ஜஸ்வால்
·         மேதா பட்கர்
·         சுனிதா கோதரா
·         பி ஆர் லல்லா
·         தேவிந்தர் சர்மா
·         சுபாஷ் சந்திர அகர்வால்
·         விசுவாஸ் உதாகி
·         சாயேத் ஷா ஃபசுலுர் ரஹ்மான் வைசி
·         சாந்தி பூசண்
·         பிரசாந்த் பூசண்


No comments:

Post a Comment

Ads Inside Post