சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் சூரியனை மையமாக வைத்து பிற கோள்கள் தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டு வருகின்றன. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சில கோள்கள், சூரியனுக்கு அருகில் கடந்து செல்லும் அரிய வானியல் நிகழ்வுகளை நம்மால் காண முடியும். இந்த வகையில் வரும் மே 9ம் தேதி புதன் கோள், தன் சுற்று வட்டப் பாதையில் சூரியனைக் கடந்து செல்லும்
காட்சிகளை நம்மால் நேரடியாக காண முடியும். சூரியனுக்கு அருகில் சிறிய கரும்புள்ளிபோல்
புதன் கோள் கடந்து செல்வதைப் போல் காண முடியும்.
இந்தக் காட்சியை
ஜப்பானின் ஒரு சில பகுதிகளைத் தவிர, ஆசியக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து
தெளிவாகக் காண முடியும். அத்துடன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிரீன் லேண்ட், தென் அமெரிக்கா,
வட அமெரிக்கா, வடக்கு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் இருந்தும் இந்தக்
காட்சியைக் காண முடியும்.
புதன்கோள்
:
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக
அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும்.
இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது
இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும்
அறியப்படவில்லை இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின்பெயிரிடப்பட்டுள்ளது.
இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from
the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு
காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன்
கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு
சரியான தருணம்.
புதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால்
மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது;
கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் 700 K (427 °C; 800 °F) ஆகவும்
இரவுநேரத்தில் 100 K (−173 °C; −280 °F) ஆகவும் உள்ளது. முனையங்களில்
(துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக 180 K (−93 °C; −136 °F) கீழுள்ளது.
புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ 1⁄30 பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின்
வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது c பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள்
ஏற்படுவதில்லை. புதன்ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை
விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது.
புதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய
ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது
சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக்
கொள்கின்றது. சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து
காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில்
இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும்.
தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன்
கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும்
வளிமண்டலம்
அற்று உள்ளது. ஆனால்,
புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு
காந்தப்புலமும் புதனுக்கு உண்டு.
புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும்.
இந்தியாவில்
1999-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி, 2003-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி, 2006-ம் ஆண்டு
நவம்பர் மாதம் 8-ந்தேதி இந்த அரிய நிகழ்வு நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அரிய
நிகழ்வு நடக்கிறது.
அடுத்து
எப்போது?
ஒரு நூற்றாண்டுக்கு
8 முறைதான் புதன்கோள் சூரியனை கடந்து செல்லும். அடுத்து 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி
இந்த நிகழ்வை காணலாம். அதன் பின்னர் 2032-ம் ஆண்டு நவம்பர் 13-ந்தேதி தான் புதன்கோள்
சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும்.
.
No comments:
Post a Comment