Sunday 15 May 2016

சர்க்கரை உற்பத்தியில் இந்தியா 2வது இடம்...

சர்க்கரை என்று சொல்லும்போதே இனிக்கிறது. இனிப்புகள், மிட்டாய்கள், ஐஸ் கிரீம் மற்றும் பெரும்பாலான உணவுகள் நம்மை ஈர்ப்பதாய் உள்ளன. உங்களை அடிமையாக்கச் செய்யும் இந்தச் சுவைதான் உணவுத் தொழிலின் அடிப்படையும் கூட. அதனால் தான் நாம் விரும்பும் பெரும்பாலான உணவுகள் அதிக அளவு சர்க்கரையைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன. இந்த நவீன யுகத்திற்கு ஏற்றார்போல நோக்கம் எதுவுமே வியாபாரமும் இலாபம் சம்பாதிப்பதும் தான். உணவுகளில் சர்க்கரையைச் சேர்ப்பது மக்களை இந்த உணவுகளை அதிகம் விரும்பச் செய்வதோடு அதற்கு அடிமையாகவும் ஆக்கிவிடுகிறது. ஆம் நீங்கள் சர்க்கரைக்கு அடிமையாகக் கூடும். போதை அல்லது மதுவைப் போல் இல்லையென்றாலும் ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது சர்க்கரை. உலகில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானது கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் நாங்கள் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளை அவை உற்பத்தி செய்யும் கரும்பின் அளவைப் பொருத்துப் பட்டியலிட்டுள்ளோம்.

8. பிலிப்பைன்ஸ் உற்பத்தி: 3,18,74,000 டன்கள்
7. கொலம்பியா உற்பத்தி: 3,48,76,333 டன்கள்
6. மெக்ஸிகோ உற்பத்தி : 6,11,82,076 டன்கள்
5. பாகிஸ்தான் உற்பத்தி: 6,37,49,900 டன்கள்
4. தாய்லாந்து உற்பத்தி: 10,00,95,580 டன்கள்
3. சீனா உற்பத்தி: 12,82,00,912 டன்கள்
2. இந்தியா உற்பத்தி: 34,12,00,000 டன்கள் (சூப்பர்)
1.பிரேசில். உற்பத்தி : 76,80,90,444 டன்கள்



வருங்காலச் சந்ததிகள் தாம் என்ன உண்ணுகிறோம் என்பது குறித்துக் கவனமாக இருப்பார்கள் என்றும் உணவு உற்பத்தி செய்யும் பெருநிறுவனங்களின் வலையில் சிக்காமல் இருப்பார்கள் என்றும் நம்புவோம். எனவே இந்த நாடுகளில் சர்க்கரை உற்பத்தி வரும் காலங்களில் குறையும் என எதிர்பார்க்கலாம். இயற்கை சர்க்கரைக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. உதாரணமாகப் பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரை விட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்டுகள் போன்ற மற்ற சத்துக்களுடன் நமக்குக் கிடைக்கிறது. இதனால் சர்க்கரை மெதுவாக உறின்சப்படுவதால் இது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. ஆனால் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை எந்த ஒரு சத்தும் இல்லாததால் உடல் அதனை உடனடியாக உறிஞ்சுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவையும் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. இதுபோன்று கட்டுக்கடங்காமல் திடீரென்று உயரும் மற்றும் குறையும் சர்க்கரை அளவிற்குப் பெயர்தான் டயபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய். துரதிருஷ்டவசமாக, இது சர்க்கரை தொடர்பான குறைபாடு மட்டுமல்ல. அதிக அளவில் சர்க்கரை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கவும், இதய நோய்களை உண்டாக்கவும் ஏன் புற்றுநோய்க்கும் கூடக் காரணமாக அமைந்துவிடுகிறது. பற்சொத்தையும் சர்க்கரை அதிகம் உண்பதால் ஏற்படும் ஒரு சிறிய குறைபாடு. எனவே மக்களே சர்க்கரையையும் இனிப்புகளையும் பார்க்கும்போது இதையெல்லாம் நினைவுல வச்சுகுங்க.

No comments:

Post a Comment

Ads Inside Post