மறை நீர் (Virtual Water)
நீர் மனித வாழ்வில் இன்றியமையாதது.
மனித உடலில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் உள்ளது. உலகத்தில்
71% தண்ணீரிலே நிரம்பி வழிகின்றது. இன்னும் நிறைய கூறலாம் எப்படியும் அனைவரும் தண்ணீரின் பெருமைகளை தெரிந்து வைத்திருப்பார்கள், அதாவது, எப்படி நாம் சமுதாயத்தின் முன்னேற்றத்தை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு மற்றதையெல்லாவற்றிலும் தவற விட்டோமோ அதேபோல் நாம் தண்ணீரின் மறுபக்கத்தை பார்க்கத் தவறிவிட்டோம். எவ்வளவு தவறி விட்டோம் என்பதனை அறியாமல் அரசாங்கத்தின் மேல் பழியைபோட்டு விட்டு எதிர்காலமே இல்லாத வாழ்க்கையை நோக்கி பயணம் செல்வதையே குறியோட இருக்கிறோம்.
ஆதலால், அந்த வாழ்க்கை பயணத்தில் எங்கேனும் சிறு நேரம் கிடைத்தால் படிப்பதற்க்கு ஏதுவாக ஒரளவு நாம் காண தவறியதை இக் கட்டுரையின் மூலம் தெரிவிக்க முயன்றுள்ளேன்.
மறை நீர் (Virtual Water)
|
|
நீர் வர்ணங்கள் (color of water):
|
Fig 2
|
ஆம், தண்ணீர்க்கும் வர்ணங்கள் அடிப்படையில் பிரிவு உண்டு. அதில்,
· பச்சை நீர்(Green Water) - என்பது பயிர் விளைச்சலுக்கு உதவுது இவ்வகை நீர் ஆவியாகி மறுசுழ்ற்சிக்கு உதவும்.
· நீல நீர்(Blue Water) - என்பது மழை நீர் சேமிக்கப்பட்டு உள்ளவை, குளம்,நிலத்தடியில் இருப்பவை
· சாம்பல் நீர்(Grey Water)- என்பது தொழிற்ச்சாலையில்,வீட்டில் உபயோகப்படுத்தபடும் நீர். இதில் சிலவற்றை சுத்திகரிப்பு செய்து உபயோகப்படுத்தலாம். சுத்திகரிப்பு பயன்படாதவை கழிவு நீர ஆகும். இவை நிலத்தடி நீரில் கலந்து விஷமாக மாறுகிறது. இவை மாசு நீர் என்று குறிப்பிடுவதுண்டு.
இந்த வர்ணங்களிலேயே வராமல் மாயமாக இருந்து செயல்படும் இன்னொரு வகை நீர் தான் நம் தலைப்பான "மறை/மாய நீர்"(Virtual Water).
மறை/மாய நீர் ஒர் ஆய்வு:
மறை/மாய நீர் (Virtual Water) :
மறை நீர் பற்றி விவரிக்க தனியாக ஒரு தலைப்பு வேண்டுமா என்று நீங்கள் நினைத்தால். அதற்க்கு முன்பு, மூன்றாம் உலக போர் நீரினால் வரும் என்பது எல்லாருக்கும் தெரியும், ஆனால் அது மேல கூறப்பட்டுள்ள வர்ணங்களினால் அல்ல, யாருக்கும் தெரியாமல் காயை நகர்த்திக்கொண்டிருக்கும் "மறை நீரே" ஆகும். இப்பொழுது சொல்லுங்கள் இதற்க்கு தலைப்பு வேண்டும் அல்லவா. ஆனால் இத் தலைப்பை பற்றி முதன் முதலில் கண்டுபிடித்து கூறியவர்திரு.டோனி எலன், புவியியல் வல்லுநர் (Mr.Tony Allan,Geographer), இதை கண்டுபிடித்தற்க்காக "Stockholm Water Prize" என்னும் உயரிய விருதினை வழங்கினார்கள்.
திரு.டோனி எலன் படி மறை நீர் என்பதாவது - ''கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இருப்பது இல்லை. அதேசமயம் அந்த நீர் கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. அதுதான் மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,300 கன மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது. அதாவது, ஒரு டன் தானியம், 1,000 டன் நீருக்குச் சமம்''
நன்றி: poovulagu.net)
நன்றி: poovulagu.net)
Add caption |
|
Fig 3
|
இந்த மறை நீர் என்றால் என்ன என்பதினை சூழலியல் எழுத்தாளர் தோழர். நக்கீரன் அவர்களின்படி -
"அரிசியை விளைவிக்க வேண்டுமானால் அதன் ரகத்திற்கு ஏற்ப தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ அரிசிக்கு 5000 லிட்டர் தண்ணீர் தேவை என்று சொன்னால், அந்த 5000 லிட்டர் தண்ணீர், அரிசியை எடுத்துப் பார்த்தால் இருக்குமா? என்றால், இல்லை. ஆனாலும் அந்த அரிசிக்குள் மறைமுகமாக 5000 லிட்டர் தண்ணீர் ஒளிந்திருக்கிறது. அது தான் மறை நீர்."
மறை/மாய நீர் என்றால் என்ன என்பதனை பார்த்தாகிவிட்டது. அடுத்து ஒரு சிறிய ஆய்வுடன் பார்ப்போம்.
மறை நீர் மறு அலசல்:
ஒரு முட்டை உருவாக்கத்திற்க்கு சராசரியாக 120 -150 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆச்சர்யமாக இருக்கிறதா? அட உண்மைதாங்க. இதற்கே ஆச்சிரியப்பட்டால் எப்படி? 2012 ம் ஆண்டில் வந்த நாளிதழில் ஒரு சிறு செய்தி.
அதாவது 2012ல் பறவைகளுக்கு Flu ஜுரம் இருப்பதாக தெரியவந்ததால் வரலாறு காணாத சரிவு ஜுன் மாதத்தில் நாமக்கலில் ஏற்பட்டதாம், அந்த சரிவினால் நாமக்கலில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் வெறும் 89லட்ச முட்டைகள் தானாம். அதே ஆண்டில் ஏப்ரல் மாதமும்,செப்டம்பர் மாத அதிகப்பட்சமாக ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் 415லட்சம். இப்ப நாம் இழந்த தண்ணீர் எவ்வளவு லிட்டர் என்பதனை நீங்களே கணக்கு போட்டு ஆச்சிரிய பட்டுக்கொள்ளுங்கள். சரி, ஏற்றுமதி பண்றோம், அதற்க்கான செலவை நாம் வாங்கிக்கொண்டா ஏற்றுமதி செய்தோம் இல்லையே மற்ற போட்டி நாடுகள் நிர்ணயக்கும் விலையை விட 40% குறைவாக தான் விற்கின்றோம். ஆனால் வெளிநாடுகளில்ருந்து இங்கு வந்து நம்ம தண்ணீரை எடுத்து ஏதோ அவர்களே இறக்குமதி செய்து கொடுக்குற மாதிரி 1லிட்டர் தண்ணீரை 20ரூ-30ரூ அளவு வரை விற்கிறார்கள்,அதையும் நாம் வாங்குகிறோம்.சரி நாம (தண்ணீர்ல வாங்கின) முட்டை மேட்டருக்கு வருவோம். இந்த மறை/மாயநீர் எந்த பொருள்களில் எவ்வளவு ஒளிந்திருக்கும் என்பதனை நாம் சாதாரணமா google search ல் பதிந்து தெரிந்து கொள்ளலாம். அதில் எவ்வளவு நாம் ஏற்றுமதி செய்கிறோம் என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் இரண்டு விஷயங்கள் மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்..
·
1 Pair of Jeans
= 900 gallons of water
·
1 Glass of Beer and
Wine = 20 gallons(Beer) & 32 gallons(Wine).
குறிப்பு:1 gallon = 3.7 Litre;
மேலே எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்று சொன்னது கலிபோர்னியாவில் உள்ள ஆர்ஞ்சு கெளன்ட்டி என்னும் அமைப்பு அவர்கள் நிலத்தடி நீர் பாதுக்காப்புக்காக 1933லேயே இதை ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் மறை நீர் பற்றி அப்ப அவர்கள் யோசித்தார்களா என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ]
மறை நீர் பொருளாதாரம்:
மறை நீர் பொருளாதாரம் தத்துவத்தை எனக்கு புரிந்தவரை சொல்வது என்றால் - "எதை ஏற்றுமதி செய்தாலும் அதில் மறை நீர் இன்றியமையாதது, இதுவரை நடந்த ஏற்றுமதி நன்றாகவே நடந்தது, இனி நடக்கபோவதை தடுக்காமல் இருந்தால்,மறை நீர் ஏற்றுமதி இன்னும் நன்றாகவே நடக்கும், இன்று நீ அழாமல் இருக்கலாம் நாளை கண்டிப்பாக அழுதே தீர வேண்டும், எதை இயற்கை கொடுத்ததோ அதை நீ இழந்துவிட்டாய், எதை உன் நாட்டிவளத்திற்க்காக் இயற்கை கொடுத்ததோ அதை விணடித்துவிட்டாய், எதை நீ எடுத்துக்கொண்டிருந்தாயோ அது எதிர்காலத்தில் குறைந்துவிடும், எதை மற்றவருக்கு கொடுத்தாயோ அது இனி திரும்ப வராது, இதனையும் மீறி தொடர்ந்தால், எது இன்று உன்னிடம் இருக்கிறதோ அது மற்றொரு நாள் மற்றவர்களிடம் மட்டுமே இருக்கும், இது மறைநீர் ஏற்றுமதியின் நியதியாகும்."
மறை நீர் வர்த்தகம்:
வர்த்தகத்தை பொறுத்தவரை இதை நாம் ஏற்றுமதி/இறக்குமதி பார்வையில் பார்க்க வேண்டியதாக உள்ளது. அது சரி உலக நாடுகள் எல்லாமே இவ்வாறு வர்த்தகம் செய்துக்கொண்டுதானே இருக்கிறது நமக்கு மட்டும் என்ன வந்தது என்று நினைத்தால் சற்றே கிழ்கண்ட மேப்பை பாருங்கள்.
|
Fig 4
|
Fig:4 ல் பல வர்ணங்கள் அந்தந்த நாட்டின் நீர் சுழற்சியினால் (Hydrologic Cycle) நமக்கும் கிடைக்கும் நன்னீர் சேமிப்பு அளவாகும். இதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது என்பதை நம் நாட்டின் மேல் இருக்கும் வர்ணத்தைக்கொண்டு அறிந்து கொள்ளலாம். மேல் படத்தின் குறிப்பின்படி நமக்கு கிடைக்கும் அளவு 1450m3 - 1550m3 க்குள் இருக்கும் என்று கணக்குக்கொள்ளலாம். ஏனென்றால் 2010ஆம் ஆண்டு நமக்கு கிடைத்த அளவு 1519m3 மட்டுமே. இந்த நீர் சுழ்ற்சி அளவானது இந்தியாவில் குறைந்து கொண்டேதான் இருக்கிறது. இது 1990ல் - 2209m3 லிருந்து 2001 - 1820m3 ஆக குறைந்து தற்போது 2010ல் 1519m3 என ஆகிவிட்டது. இதே வேகத்தில் செல்லுமே ஆனால் 2025ல் 1200m3 ஆக குறைந்து 2050ல் 1000m3 விட குறைய வாயப்புள்ளது என எச்சரிக்கை செய்கிறார்கள் வல்லுனர்கள்.
எல்லா நாடுகளும் ஏற்றுமதி செய்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் அவங்களுக்கு வராத பிரச்சனை நமக்கும் மட்டும் எப்படி வந்தது என்றால் அதற்க்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று மக்கள் தொகை. மக்கள் தொகை பெருகும் போது அதற்க்கான நீர் தேவைகளும் அதிகரிக்கும், பல நாடுகளில் மக்கள் தொகை இந்தியாவை போல் இல்லாத போதிலும் அவர்கள் ஏற்றுமதி செய்யும் "மறை நீர்" அளவுக்கு அவர்கள் இறக்குமதி செய்து விடுகிறார்கள். அப்ப இந்தியா? இந்தியாவின் நிலையை ஒரு ஒப்பிட்டு மூலம் காண்போம் .
மறை நீர் வர்த்தகத்தில் இந்தியாவும் சீனாவும்:
நாம் முன்பு பார்த்தது போல மறைநீர் வர்த்தகத்தில் பொறுத்தமட்டும் நாம் நமக்கு இணையாக நினைக்ககூடிய மக்கள் தொகை கொண்ட ஒரே நாடு சீனா மட்டுமே. அதனால்தான் என்னவோ CSIR என்னும் விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் இருநாடுகளில் உள்ள மறை நீர் வர்த்தக்த்தை ஒப்பிட்டு ஒரு ஆய்வு அறிக்கை சமர்க்கிப்பட்டுள்ளது. இனி அதில் வருவதாவது,
நீர் இருப்பு 1960ல் 4098m3 லிருந்து - 2010ல் 1519m3 ஆக குறைந்துள்ளது, அதேபோல் சீனாவிலும் ஆண்டு வரை தண்ணீரின் இருப்பு நிலை 4113m3 லிருந்து 2051m3 ஆக குறைந்துள்ளது, இது சிறிய அளவு வித்தியாசமாகவே தெரிந்தாலும் இந்தியாவின் நீர் தேவை சீனா வை விட அதிகமாகவே உள்ளது. அதேபோல், மறை நீர் வர்த்தகத்தில் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியைவிட அதிகமாக உள்ளது ஆனால் சீனாவில் இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக உள்ளது. இதில் இந்தியா 1990ம் ஆண்டுக்கு பிறகு 1.5% அதிகமாக ஏற்றுமதி செய்வதாகவும் அந்த அறிக்கையில் உள்ளது. அதாவது 13மில்லியன் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடியது. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த மறை நீர் வர்த்தகம் ஒன்றே போது நமக்கு நீர் நெருக்கம் உருவாக்கும் என்று திட்டவட்டமாக கூறுகிறது அந்த அறிக்கை. அதோடு மட்டுமில்லாமல் ,
"Water: Towards a Culture of Responsibility" என்னும் புத்தகத்தில், "இந்தியாவில் 1 hectare நெல் உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீரில் சீனா இரண்டு மடங்கு அதிகமான் நெல் உற்பத்தியை செய்துவிடும்" என்று குறிப்பிட்டுள்ளது. இது இந்தியா எந்த அளவுக்கு தண்ணீர் சுத்தகரிப்பு விஷயத்தில் சீனாவைவிட பின் தங்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.
மேற்க்கூறப்பட்ட அறிக்கையை பார்க்கும் போது இந்திய அரசு தனது ஏற்றுமதி/இறக்குமதி நிலையை மாற்றவேண்டும் என தோன்றுகிறது. ஆனால், மாற்றம் இந்திய அரசு மட்டும்தான் செய்யவேண்டுமா என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும்!
நீர் பற்றாக்குறை:
National Institute of Hydrology நீர் பற்றாக்குறையை பின்வருவனவற்றை காரணம் ஆக பட்டியலிடுகிறது.
· மக்கள் தொகை முன்னேற்றம்
· தொழிற்சாலை முன்னேற்றத்தினால் ஏற்படும் தண்ணீர் தேவை
· மக்களின் சுற்றுப்புற தூய்மைகேட்டினால் உருவாகும் மாசு நீர்
· சுலபமாக தண்ணீர் கிடைக்கூடிய இடங்கள் எல்லாம் டேப் (tap) செய்தது
· உயர் தர நவீன சொகுசு வாழ்க்கை மேல் உள்ள மோகம்
மேற்கூறியவற்றை
உற்று கவனித்தால் நீர் பற்றாக்குறை காரணம் இந்திய அரசை விட மக்களே முதற்காரணமாகத் தெரிகிறது. ஐந்தில் மூன்று காரணங்கள் மக்களை சார்ந்தே இருக்கிறது, இது ஒரு வகையில் உண்மையாகத்தான் தோன்றுகிறது. நாம் அன்னிய நாட்டின் பொருள்களின் மேல் உள்ள நாட்டம் அதிகமாகும் போது அரசு அதனை இறக்குமதி செய்துதானே ஆக வேண்டும். தவற என பார்த்தால் இரு பக்கமும் உள்ளது. அதனால் அரசின் மேல் பழியை போட்டு நாம் இங்கு நன்னீரை உறிஞ்சுவமேயானால் அது சுயநலவாதியின் சிந்தனையாக மட்டுமே தெரிகிறது, இது ஒவ்வொரு தனி மனிதனின் பொதுநலம் கருதி ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். தனி மனித ஒருவனால் ஆயிரக்கணக்கில் நம் நாட்டின் உயிர் நாடியான தண்ணீரை சேமிக்க முடியுமா? கண்டிப்பாக "மறை நீர்" உபயோகத்தை ஒரளவு குறைத்தாலே போதும் என்பதே பல வல்லுனர்களின் முடிவு.
தனி மனித மறை நீர் சேமிப்பு:
ஒரு சராசரி வேலைக்கு போகும் ஒர் மனிதன் தன் அன்றாட தேவைக்கு ஒரு நாளைக்கு தனக்காக உட்கொள்ளும் நீர் தவிர்த்து வெறும் உபயோகப்படுத்தும் தண்ணீர் அளவு கிட்டதட்ட 80
gallon - 100 gallon (~300லிட்டர்) வரை. இது சராசரி அளவே ஆகும் தங்களின் அன்றாடம் உபயோகப்படுத்தும் அளவை நீங்கள் கீழே குறிப்புகள் பகுதியில் கொடுக்கப்பட்ட இணையதளங்களில் பார்த்து ஒரளவு கணித்துக்கொள்ளலாம். இதை தவிர்த்து நன்னீர் சேமிப்பு மக்கள் தொகையினால் ஏற்றத்தினால் குறைகிறது என்பது ஒருபுறம், மறு பக்கம் அன்னிய மோகத்தினால் நாம் கடைபிடிக்கும் நவீன சொகுசு வாழ்க்கை முறை மூலமாக "மறை நீரை" எவ்வாறெல்லாம் நாம் விணடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டே ஆகவேண்டும். உதாரணமாக, 1995ன் வாழ்க்கை முறையிலும், 2015ன் ஆண்டின் வாழ்க்கை முறையிலும் உள்ள மறை நீரின் அளவை வைத்தே நாம் எவ்வாறு நன்னீர் சேமிப்பில் காலை வாருகிறோம் என்பதை உபயோகப்படுத்தும் பொருட்களின் மறைநீர் வைத்தே ஒப்பிட்டு கணிக்கலாம், உதாரணமாக, இன்றைய அன்றாட வாழ்க்கைக்கு உதவும் "Mobile phone" உபயோகத்திலேயே தெரிந்து கொள்ளலாம். ஒரு சிறு "Mobile phone" உருவாக்க தேவைப்படும் நீரின் அளவு 1300லிட்டர் ஆகுமென்றால் இன்று நாம் உபயோகப்படுத்து நவீன வகை "Smart Phone" பற்றி கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் நம் ஒவ்வொருவரும் குறைந்தப்பட்ச 2-3 Mobile phone களை உபயோகப்படுத்துகிறோம். அடுத்ததாக, ஒரு "car" உருவாக்க நமக்கு தேவைப்படும் அளவு 1,50,000 லிட்டர் முதல் 3,00,000 லிட்டர் வரை. இதற்க்கான மறை நீர் அளவு அந்தந்த காரின் நவினத்தை பொருத்து மாறுபடுகிறது. இது தெரியாமல் நாம் 4பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்க்கு ஒரு கார் என்பதைவிட ஒரு குடும்ப உறுப்பினர்க்கு ஒரு கார் வாங்குவதுதான் குறிக்கோளாக வைத்துக்கொண்டிருக்கிறோம், இந்த ரீதியில் பார்த்தோமேயானால் நாம் ஒவ்வொருவரும் வரம்பு மிறி தண்ணீரை வீணடிப்பு செய்துக்கொண்டேதான் இருக்கிறோம். இப்பொழுது யோசியுங்கள் நம்மை விடவா நமது அரசாங்கம் தண்ணீரை ஏற்றுமதியில் வீணடித்துக்கொண்டிருக்கிறது?..இத்தகைய வரம்புமீறிய வாழ்க்கை முறை நமக்கு தேவையா? இந்த உதாரணங்கள் உங்களை உபயோகப்படுத்த வேண்டாம் என்பதற்க்காக அல்ல, ஆனால் வரம்பு மீறிய உபயோகம் வேண்டாம் என்பதே. உங்கள் ஒவ்வொரு வரம்பு மீறிய நடவடிக்கையும் நீங்கள் உங்கள் எதிர்க்கால சந்ததியினரின் வாழ்க்கையினை பாழாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைப்பு இருந்தாலே போதும் நீங்கள் வரம்பு மீறும் தவறை செய்ய மாட்டீர்கள். நாம் செய்வது வரம்பு மிறிய நடவடிக்கை என்பதை ஒற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி.
சராசரி தேவைக்கு தண்ணீரை உபயோகபடுத்துபவர்கள் எத்தனை பேர் மழை பெய்யும் போது அந்த மழைநீரை சேமிக்கிறோம்?, இல்லை குறைந்த பட்சம் அதற்க்கான முயற்சியாவது எடுத்திருப்போமா? அப்படியே எடுத்து இருந்தாலும் அது அவர்கள் இதுவரை உபயோகப்படுத்திய(அவசியமுள்ள) தண்ணீரின் அளவாவது சேமித்து இருக்கிறோமா? என்பதே என் கேள்வி. இதில் இல்லை என்பவர்கள் வரம்புமீறியவர்கள்தான். ஆதலால் இனியாவது சேமிக்க முயற்சிசெய்வோம்.
குறைந்தபட்சம் மறைநீர் பொருள்களின் தண்ணீர் மதிப்பை தெரிந்து கொண்டு, ஒரளவாவது தான் உபயோகப்படுத்தும் அளவை குறைக்க அவரவர் வாழ்க்கை பயணத்தில் முயற்சி செய்வோம். ஒவ்வொரு தனி மனித முயற்சி பிறகு கூட்டு முயற்சியாக மாறும், பிறகு அவை நாட்டின் முயற்சியாக வெளிவரும். வீணாக அரசாங்கத்தின் மீது பழியை போடுவதை விட நாம் நம் மீது பழியை போட்டு முடிந்த அளவு "மறை நீர்" அதிகம் உள்ள பொருள்களை புறந்தள்ளவாவது முயற்சிப்போம். அது மட்டுமில்லாமல் தண்ணீரின் முக்கியத்துவத்தை இன்றைய இளைய சமூகத்தினருக்கு புரியவைப்போம். இனியும் தயங்கினால் 2050ல் உங்கள் பேரன்,பேத்தி (அ) கொள்ளு பேரன், பேத்திகள் தண்ணீருக்காக படும் அவலநிலையை நம் கண்களாலேயே பார்க்க நேரிடும். ஆதலால்,
" நம் நன்னீரை சேமிப்போம் நமக்காக அல்ல நம் எதிர்கால சந்ததியனருக்காக."
[ இந்த கட்டுரையில் வரும் புள்ளிவிவரங்கள் எல்லாவற்றிருக்கும் ஆதாரம் கிழே கொடுக்கப்பட்டுள்ள உள்ள இணையமுகவரிகளிலே ,சம்பந்தபட்ட்வர்களின் சொற்பொழிவிலோ ,புத்தகத்திலோ, அமைப்புகளின் அறிக்கைமுக்கியமான இணையமுகவரிகள்:
·
http://www.teachersofindia.org/ta
- குழந்தைகளுக்கு நீர், சுற்றுசுழல் முதலியவைகளை எளிதில் தமிழில் புரியவைக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இணையதளம்.
·
http://www.ocwd.com/ConservationEducation/WaterFacts.aspx
- தண்ணீரின் முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு ஆங்கில இணையத்தளம்
·
http://www.visai.in/2014/09/16/do-we-have-a-sense/
- மறை நீர்,மாசு நீர்,தொழிற்சாலைகளின் கழிவு நீர் பற்றின விரிவான விளக்கம் தருகிறார் தோழர்.நக்கிரன் அவர்கள்.
·
https://water.usgs.gov/edu/qa-home-percapita.html
- நாம் உபயோகிக்கும் தண்ணீர் அளவு மற்றும் கணிப்பு இந்த முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
·
http://stephenleahy.net/2014/10/07/sneak-peak-of-my-new-book-your-water-footprint/
- இத்தளத்தில் உள்ள புத்தகம் எவ்வாறு தனி மனிதன் மறை நீர் உபயோகத்தின் அளவையும், மாற்றுப்பொருட்கள் மூலம் குறைக்கமுடியும் என்பதனையும் விளக்குகிறது.
·
http://tamil.thehindu.com/general/environment/ஐம்பூதங்களைக்-காப்போம்/article5675055.ece - இதில் இயற்கையின் முக்கியத்துவம் குறித்து வல்லுனர்களின் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
களிலோ சரி பார்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment