Monday 16 May 2016

ஒளியை உமிழும் தன்மை கொண்ட சிமென்ட்(Solar-powered light-emitting cement)



மெக்சிகோ நாட்டிலுள்ள மிகோவாகேன் பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் இந்த சாலையை கண்டுபிடித்துள்ளனர்.
ஒளியை உமிழும் தன்மை கொண்ட சிமென்ட்(Solar-powered light-emitting cement)

ஒன்றை இந்த மிகோவாகேன் பல்கலைகழக பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் என்ன விசேஷம்?
இந்த பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் ஒளிரும் தன்மை கொண்ட சிமென்ட் பகல் நேரத்தில் சூரிய ஒளியிலிருந்து மின்சக்தியை சேமித்துக் கொண்டு இரவில் ஒளிரும்.
வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களை உறுத்தாத வகையிலும், கண் கூச்சத்தை ஏற்படுத்தாத அளவுக்கு இதன் நீலம் மற்றும் பச்சை வண்ணத்தின் ஒளிரும் தன்மையையும், பிரகாசத்தையும் கூட்டிக் குறைக்க முடியும்.
பொதுவாக நீங்கள் கடிகாரத்தில் பார்க்கும் ஒளிரும் தன்மையுடைய பொருட்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆயுட் காலம் கொண்டது. ஆனால், இந்த ஒளிரும் தன்மை கொண்ட சிமென்ட் நூறாண்டுகளுக்கும் மேலாக ஒளிரும் தன்மையை இழக்காது.

இந்த ஒளிரும் சிமென்ட்டை உருவாக்கும் திட்டத்தில் இடம்பெற்றிருந்த பொறியாளர் ஜோஸ் கார்லோஸ் ரூபியோ (Jose Carlos Rubio) கூறுகையில், " 9 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தை 
முன் இந்த திட்டத்தை கையிலெடுத்தோம். கடின முயற்சிக்கு பின் இந்த சிமென்ட்டை உருவாக்கியிருக்கிறோம். இந்த சிமென்ட்டுடன் நீர் கலக்கும்போது ஜெல் போன்று மாறிவிடும்.

மணல், களிமன் மற்றும் தூசுகளால் உருவாக்கப்படும் இந்த சிமென்ட் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும். இந்த சிமென்ட்டிற்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறது. உலக அளவில் இந்த சிமென்ட்டை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் இந்த பொறியாளர் குழு ஈடுபட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Ads Inside Post