இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள்
அமைப்பு (Indian
Regional Navigation Satellite System (IRNSS)
இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (Indian Regional Navigation Satellite
System (IRNSS)) என்பது இந்தியப் பகுதிக்காக தற்சார்பு இடஞ்சுட்டி அமைப்பை உருவாக்கும் பொருட்டு ஏழு செயற்கைக்கோள்களை புவி ஒத்திணைவு வட்டப்பாதையில் செலுத்தும் திட்டமாகும். இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இத்திட்டத்தை செயல்படுத்து. இந்திய அரசின் முழுமையான கட்டுபாட்டின் கீழ் இத்திட்டம் நடைபெறுகிறது. அமெரிக்காவின் இடஞ்சுட்டி வசதியை கார்கில் போரின் போது பயன்படுத்தியதில் ஏற்பட்ட சிரமங்களின் காரணமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு அதில் நான்கு செயற்கைக்கோள்கள் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும்.
இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் மூலம் உருவாக்கும் இடஞ்சுட்டி அமைப்பு, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் இரகசிய இராணுவப் பயன்பாடு என இருவகையில் பயன்பாட்டிற்கு வரும்.
இத்திட்டத்திற்காக 28 மே 2013 அன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய செயற்கைக்கோள் வழிநடத்து மையம்பெங்களூருவில் இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதன்படி நாடெங்கும் 21 நிலையங்கள் அமைத்து தகவல்களை கண்காணிக்க வழி செய்யப்பட்டது. செயற்கைக்கோள், தரையில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவிகள் மேலும் பயன்பாட்டுக் கருவிகள் அனைத்தும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 1,420 கோடி ரூபாய்கள்
ஏப்ரல் 2010 திட்ட அறிக்கையின்படி முதல் செயற்கைக்கோளை 2011 இறுதியில் செலுத்த ஆரம்பித்து ஒட்டுமொத்தத் திட்டமும் 2015 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் தாமதமடைந்து 2016 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி,
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி
ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ (IRNSS-1A)
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ (IRNSS-1A) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இதுபோல் இவ்வரிசையில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது இச்செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் 125 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாக்கியது. இசஞ்சுட்டும் அமைப்பில் தன்னிறைவு அடையும் பொருட்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து 1 சூலை 2013 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இச்செயற்கைக்கோள் முதலில் 26 சூன் 2013 அன்று ஏவத் திட்டமிடப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாய் தாமதமாகியது
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி
(IRNSS-1B)
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி (IRNSS-1B) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் இரண்டாவது ஆகும். இதற்கு முன்னர் 01.ஜூலை 2013ம் ஆண்டு 18மணி 11 நிமிடங்களுக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ (IRNSS-1A) விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா என்னும் இடத்திலிருந்து 04.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி (IRNSS-1C)
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி (IRNSS-1C) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். இதுபோல் இவ்வரிசையில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது
இச்செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியது. இடஞ்சுட்டும் அமைப்பில் தன்னிறைவு அடையும் பொருட்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து 15 அக்டோபர் 2014 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி
(IRNSS-1D)
ஐஆர்என்எஸ்எஸ் 1-டி (IRNSS-1D) என்பது இந்திய பிராந்திய ஊடுருவல் துணைக்கோள் வரிசையில் நான்காவதாக ஏவப்படுவதாகும். இதற்கு முன்னர் இதேபோல்ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி, என்று மூன்று வகைகள் ஏவப்பட்டு பயண்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் திகதியில் ஏவப்பட வேண்டிய இது தொழில் நுட்பக்காரணங்களினால் மார்ச் 28ஆம் திகதி மாலை 5 மணி 19 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் இக்கோள்புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும். இச்செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியான ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி27 மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ (IRNSS-1E)
ஐ ஆர். என். எஸ். எஸ். - 1இ (IRNSS-1E) என்பது மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பின் ஐந்தாவது செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக்கோள் 1425 கிலோகிராம் மேலேற்றல் எடை கொண்டது
ஆந்திர பிரதேச மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து 20 சனவரி 2016 ஆம் ஆண்டு, இ.சீ.நே. 09:31 மணிக்கு, பி. எஸ். எல். வி. - சி31ஏவுகலத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக துணை புவியிணக்க இடமாற்று சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர், செயற்கைக்கோளிலுள்ள திரவ புவிச்சேய்மைநிலை இயக்கியின் உதவியுடன் புவியிணக்கச் சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப் (IRNSS-1F)
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் வழிகாட்டி
செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி., சி32 ராக்கெட் மூலம் இஸ்ரோவால் இன்று வியாழக்கிழமை
10, மார்ச்-2016 மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. 1,425 கிலோ எடை கொண்ட செயற்கைகோளானது
முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இதன் செயல்பாட்டை செல்லிடப்பேசி நிறுவனங்கள்
ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளன.
இந்தியாவின் பிரத்யேக செயற்கைக்கோள்
வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள
எஸ்.பி.எஸ். (Standard Positioning System) முறையை செல்லிடப்பேசியில் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளை
இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள நிலையில். இப்போது அதற்கான செயலியைத் தயாரிக்கும்
பணியில் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், அமெரிக்காவின் ஜி.பி.எஸ்.
(Global Positioning System) வழிகாட்டியை நாம் பயன்படுத்தாமல், நமது நாட்டின் பிரத்யேக
எஸ்.பி.எஸ். வழிகாட்டியை பொதுமக்கள் பயன்படுத்தும் வாய்ப்பு அடுத்த ஆண்டு, மார்ச் மாதத்துக்குள்
உருவாகலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஏ முதல்
ஜி வரையிலான செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்ணில் ஏவப்பட்டு
வருகின்றன. இதுவரை ஐ.ஆர்.என்.எஸ். 1 ஏ,பி,சி,டி,இ செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள
5 செயற்கைக்கோள்களும் நாள்தோறும் 18 மணி நேரத்துக்கு தங்களது பணிகளைச் செய்து வருகின்றன.
இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் 1,500 கி.மீ. சதுர பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல்
எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும்
செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். இந்தச் செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்காக
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவையாகும்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களின்
6-ஆவது செயற்கைக்கோள் வியாழக்கிழமை ஏவப்படுகிறது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி 7-ஆவது செயற்கைக்கோள்
மார்ச் இறுதியில் விண்ணில் ஏவப்படும் வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர்
தெரிவித்தார். இந்த வகையான எஞ்சிய செயற்கைக்கோள்களையும் இந்தியா விண்ணில் செலுத்துவதன்
மூலம், இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் கடல், சாலை, நிலப்
பரப்புகளையும் கண்காணிக்க முடியும். இதன்பிறகு, இந்தியா முழுமைக்குமான செயற்கைக்கோள்
வழிகாட்டியை உருவாக்கிவிட முடியும்.
மென்பொருள் தேவை: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.
ஏழு செயற்கைக்கோள்களும் முழுமையாக தகவல்களை வழங்கத் தொடங்கியதும், அந்தச் சேவையை செல்லிடப்பேசியில்
பயன்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டும். இதற்காக இந்தியா மற்றும் உலகளாவிய
செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளுடன் இஸ்ரோ ஆலோசித்தது.
அமெரிக்காவின் ஜிபிஎஸ் சேவைக்குப்
பதிலாக இந்தியாவின் எஸ்பிஎஸ் சேவையை செல்லிடப்பேசி இயங்குதளங்களில் பொருத்தும் வகையில்
மென்பொருளை உருவாக்குமாறு அந்த அதிகாரிகளிடம் இஸ்ரோ கேட்டுக் கொண்டது. இதையடுத்து,
அதற்கேற்ற செயலியை உருவாக்கும் முதல் கட்டப் பணியில் செல்லிடப்பேசி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் செல்லிடப்பேசிக்கான
எஸ்பிஎஸ் வழிகாட்டி மென்பொருள் உருவாக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச்சில் அது செயல்பாட்டுக்கு
வரும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எஸ்பிஎஸ் உருவாக்கப்பட்டதன் நோக்கம், நமது
நாட்டின் தகவல் வழிகாட்டிகளை அமெரிக்காவின் ஜிபிஎஸ் மூலம் தருவதை நிறுத்துவதற்காகவே.
கடல் எல்லையை அறிய முடியும்: ஐ.என்.ஆர்.எஸ்.எஸ்.
செயற்கைக்கோள்களின் எஸ்பிஎஸ் வழிகாட்டி மூலம் கடல் எல்லைகளை துல்லியமாகக் கண்டறிய முடியும்.
இதன்மூலம், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் பிரச்னைக்குத் தீர்வாகவும் இது
அமையும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான், இலங்கைக் கடற்கரைப் பகுதிகளை இந்தச் செயற்கைக்கோள்கள்
முழுமையாகக் கண்காணிக்கின்றன. எனவே, இந்த எஸ்பிஎஸ் வசதி முழுமையான செயல்பாட்டுக்கு
வந்ததும், மீனவர்களின் படகுகளில் ரிசீவர்கள் பொருத்தப்படும். அவை, இந்திய எல்லையில்
மீனவர்கள் இருக்கிறார்களா அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா எனச் சுட்டிக் காட்டிவிடும்.
இதே எச்சரிக்கை கடலோரக் காவல் படைக்கும் தெரிவிக்கப்படும். இதன்மூலம், கடல் எல்லைப்
பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
·
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி (IRNSS-1G)
இஸ்ரோவின் இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பானது மொத்தம் ஏழு
செயற்கைகோள்களை கொண்டு சிறந்த துல்லியம் மற்றும் இலக்கு நிலையை வழங்கும் திறன் கொண்டதாகும்
பொருத்துதல் துல்லியமான நிகழ் நேர பொருத்துதல் வழங்கும் படி இந்த செயற்கைகோள்
வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மற்றும் இந்தியாவை சுற்றி 1,500 கிமீ தூரம்
வரை துல்லியமான சேவையை வழங்கும்.
இந்தியாவின் இடஞ்சுட்டி செயற்கைகோள் கிட்டத்தட்ட அமெரிக்காவின் புவியிடங்காட்டியுடன் ஒத்ததாகும். அமெரிக்கா மொத்தம் 24, ரஷ்யாவின் குளோனஸ் 24, ஐரோப்பாவின் கலிலியோ 27 மற்றும் சீனாவின் பெய்டோ 35
இந்தியாவின் இடஞ்சுட்டி செயற்கைகோள் கிட்டத்தட்ட அமெரிக்காவின் புவியிடங்காட்டியுடன் ஒத்ததாகும். அமெரிக்கா மொத்தம் 24, ரஷ்யாவின் குளோனஸ் 24, ஐரோப்பாவின் கலிலியோ 27 மற்றும் சீனாவின் பெய்டோ 35
புவி சார்ந்த ஊடுருவல், வான்வழி மற்றும் கடல் ஊடுருவல், பேரழிவு மேலாண்மை, வாகன
கண்கானிப்பு மற்றும் கப்பற்படை மேலாண்மை, மொபைல் போன்களுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட
இதர சேவைகளை இந்தியாவின் புவியிடங்காட்டி அமைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் ஆறாவது வழிசெலுத்தல் செயற்கைக்கோள் மார்ச்
10 ஆம் தேதியும், ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, ஜூலை 1, 2013, ஐஆர்என்எஸ்எஸ்-1பி ஏப்ரல் 4,
2014, ஐஆர்என்எஸ்எஸ்-1சி அக்டோபர் 16, 2014 மற்றும் ஐஆர்என்எஸ்எஸ்-1இ ஜனவரி 20,
2016 இல் முறையே விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ அதிகாரிகள் அளித்த தகவலின் படி
12 ஆண்டு கால ஆயுள் கொண்ட இந்த ஏழு செயற்கைகோள்களின் மொத்த செலவு ரூ.1,420 கோடி என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா நாடுகளை தொடர்ந்து சொந்த புவியிடங்காட்டி சேவையை வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா நாடுகளை தொடர்ந்து சொந்த புவியிடங்காட்டி சேவையை வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. - சி33, இந்தியாவின் ஏழாவது வழிசெலுத்தல் செயற்கைக்கோள்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி (navigation satellite IRNSS-1G) சுமந்து கொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்
( Satish Dhawan Space Centre) இருந்து
(28 ஏப்ரல் 2016) சரியாக மதியம் 12.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது..!
வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்த இந்த செயற்கைகோள் ஏவுதல் ஆனது வழக்கமான ஒரு இஸ்ரோ
சாதனை மட்டுமில்லாது, ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் சாதனையாகும்..!
1,425 கிலோ எடையுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி செயற்கைக்கோள் வெளியீட்டு கவுண்ட்
டவுன் ஆனது கடந்த ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை இரவு 9.20-க்கு தொடங்கியது. 51.30 மணி
நேர கவுண்ட் டவுனின் போது பல்வேறு நிலைகளில் ராக்கெட் ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும்
ப்ரோபலன்ட் நிரப்புதல் பணிகளெல்லாம் நடைப்பெற்றன.
இது இந்தியாவின் தனிப்பட்ட அமைப்பு (civil domain) கொண்ட, வெறும் ஏழே செயற்கைகோள்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும் ( regional navigation satellite system)
இது இந்தியாவின் தனிப்பட்ட அமைப்பு (civil domain) கொண்ட, வெறும் ஏழே செயற்கைகோள்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும் ( regional navigation satellite system)
செலுத்தப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி செயற்கைக்கோள் ஆனது வெற்றிகரமாக துணை
ஜியோ சின்க்ரோனஸ் ட்ரான்ஸ்பர் சுற்றுப்பாதைக்குள்
(
sub-Geosynchronous Transfer Orbit) நுழைந்து விட்டது.
இதேபோன்ற மற்ற நாடுகளின் மூன்று உலக பதிப்புகள் அவற்றின் இராணுவங்களின் மூலம்
உலகளாவிய வணிக பாதுகாப்பு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் ( இந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் அமைப்பு) ஆனது அதிக
துல்லியம் மற்றும் அதிக அளவிலான இந்திய கட்டுப்பாட்டில் ஜிபிஎஸ் வசதியை பயனர்களுக்கு
வழங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதாவது இந்திய வட்டாரத்தில் 20 மீட்டர் அதிக அளவிலான துல்லியத்தை வழங்கும் என்றும்,
அது இந்திய பிராந்தியம் முழுவதும் சுமார் 1500 சதுர கிலோமீட்டர் அளவு நீட்டிக்கப்படும்
என்றும் நம்பப்படுகிறது.
நன்கு அறியப்பட்ட ஜிபிஎஸ் ஆனது அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமானதாகும், அதே
போல் ரஷ்யாவிற்கு ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ் , சீனாவின் தனது பெய்டோ மூலம் க்ளோபல் சிஸ்டம்
தனை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறது.
ஐரோப்பாவின் க்ளோபல் சிஸ்டம் ஆன கலிலியோவில், ஒவ்வொரு நாடுகளின் 28 முதல்
35 செயற்கைக்கோள்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன
இந்தியாவின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் ஆனது, வான் - கடல் - ஏனைய நாடுகளுக்கு இடையே
ஆன கப்பல் போக்குவரத்து ஆகியவைகளை ஒரு நிலையான 24/7 சேவையாக அன்றாட பயன்பாட்டுக்கு
ஏற்ற வண்ணம் செயல்படுத்தும்.
மேலும் இது மறைகுறியாக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இந்திய ராணுவம்
மற்றும் ஏவுகணை தொடர்பான திட்டங்களுக்கும் உதவ இருக்கிறது.
அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில், அனைத்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக்கோள்களும்
நிலைபெற்றுவிடும் என்றும், சமிக்ஞைகள் மற்றும் செயல்திறன் சரிபார்க்கப்பட்ட பின்பு
பயன்படுத்தபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் செயற்கைகோளின் இரண்டு உதிரி பாகங்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணில்
செலுத்தும் தயார் நிலையில் இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள கண்காணிப்பு நிலையங்களின் முழு-நீள தரைக்கட்டுப்பாட்டு மையம் (ground control centre) ஆனது பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கண்காணிப்பு நிலையங்களின் முழு-நீள தரைக்கட்டுப்பாட்டு மையம் (ground control centre) ஆனது பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவின் ஜி.பி.எஸ். (Global Positioning System) வழிகாட்டியை
நாம் பயன்படுத்தாமல், நம் நாட்டின் பிரத்யேக எஸ்.பி.எஸ். வழிக்காட்டியை பொது மக்கள்
பயன்படுத்தும் சூழ்நிலை விரைவில் உருவாகும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
செல்லிடப்பேசியில் எஸ்.பி.எஸ். வழிகாட்டி-நோக்கம் என்ன?
நாட்டின் தகவல்கள் வழிகாட்டிகளை அமெரிக்கா ஜிபிஎஸ் மூலம் தருவதை நிறுத்தும்
நோக்கத்துடன்தான், எஸ்.பி.எஸ், வழிகாட்டி மென்பொருள் உருவாக்கப்படுகிறது.
மீனவர்களின் எல்லைப் பிரச்னையை தீர்க்கலாம்: பாகிஸ்தான், இலங்கைக் கடற்கரை பகுதிகளை இந்தச் செயற்கைகோள்கள் முழுவதுமாக கண்காணிக்கின்றன. எனவே, எஸ்.பி.எஸ். வசதி முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும், மீனவர்களின் படகுகளில் ரிசீவர்கள் பொருத்தப்படும். இந்திய எல்லையில் மீனவர்கள் இருக்கிறார்களா அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா எனச் சுட்டிக் காட்டிவிடும். இதே எச்சரிக்கை கடலோர காவல் படைக்கும் தெரியவரும். இதன் மூலம் மீன் பிடித்தல் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
மீனவர்களின் எல்லைப் பிரச்னையை தீர்க்கலாம்: பாகிஸ்தான், இலங்கைக் கடற்கரை பகுதிகளை இந்தச் செயற்கைகோள்கள் முழுவதுமாக கண்காணிக்கின்றன. எனவே, எஸ்.பி.எஸ். வசதி முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும், மீனவர்களின் படகுகளில் ரிசீவர்கள் பொருத்தப்படும். இந்திய எல்லையில் மீனவர்கள் இருக்கிறார்களா அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா எனச் சுட்டிக் காட்டிவிடும். இதே எச்சரிக்கை கடலோர காவல் படைக்கும் தெரியவரும். இதன் மூலம் மீன் பிடித்தல் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
Ka6thikkn
No comments:
Post a Comment