Thursday 12 May 2016

அரசு ஊழியர்கள் அவ்வளவு ஏமாளிகளா? திமுக தேர்தல் அறிக்கை குறித்து பரவும் வைரல்

திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது அளித்திருக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் கிடைக்கவிடாமல் செய்தது இதே திமுகதான் என அரசு ஊழியர்கள் பழைய நிகழ்வுகளை முகநூல், வாட்ஸ்அப் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்த செய்திகள் வைரலாக பரவி வருகிறது.

யாரை ஏமாற்ற இந்த அறிக்கை ?
2003 ல் அதிமுக திட்டத்தை அறிமுகம் செய்தது 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது திட்டத்தை இரத்து செய்யவில்லைCPS. சந்தா பிடிக்க 2009 ல் அரசாணை திமுக அரசுதானே வெளியிட்டது.
2007 ல் டில்லியில் முதலமைச்சர்கள் மாநாட்டில் திமுக சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த திட்டத்தை ஆதரித்துதானே பேசினார்.
2013 ல் CPS இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது திமுக CPS திட்டத்தை ஆதரித்துத்தானே வாக்களித்தது. தற்போது அளித்திருக்கும் தேர்தல் அறிக்கை யாரை ஏமாற்ற என்ற கேள்வியே எழுகிறது.
உண்மை என்ன ?
திமுக தேர்தல் அறிக்கை 2016 பக்கம் 89 ல் அரசு ஊழியர் .குடும்ப பாதுகாப்பு நிதி 1.50 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உண்மை என்ன?., , பிப்ரவரி மாதம் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் 1.50 லட்சம் 3 லட்சமாக உயர்த்தப்பட்டது .. வேலைநிறுத்த வெற்றியை திமுக மறக்கலாம். நாம் மறக்கக் கூடாது.
யாரை பரிசீலிக்கிறீர்கள் ?
திமுக தேர்தல் அறிக்கை பக்கம் 91ல் சத்துணவு பணியாளர்கள் பதவி மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டபூர்வமான ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறவில்லை,, khwhமாறாக பரிசீலிப்போம் என்றுதான் கூறியிருக்கிறார்கள். இந்த பரிசீலிக்கப்படும் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை கலைஞர் 2006- 11 லேயே சட்டமன்றத்திலேயே விளக்கியுள்ளார். அதாவது பரிசீலனை என்றால் பரிசீலித்து கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்லது ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று தெரிவிப்பதுதானாம் !
பழைய நினைவுகள் அழிவதில்லை.”
திமுக தேர்தல் அறிக்கை பக்கம் 94ல் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு,ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொண்ட ! உணவு கூடைத்திட்டம் (Food.BASKETFood.B SCHEME ) செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத் தில் பேசிய திமுக மருத்துவ அணியை சார்ந்த மருத்துவர் ! திமுக ஆட்சிக்கு வந்தால் ஊட்டச்சத்து நிறைந்த பாக்கெட் உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். பாக்கெட் உணவு குழந்தைகளின் உடல்நலத்திற்கு தீங்கா னது . மேலும் அங்கன்வாடி ஊழியர் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் ,, கொண்டது.. “நோக்கத்தை கொண்டு வரும் முன் பாதுகாப்போம்”
போராட்டமே தீர்வு
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக அதிமுகவும் போட்டிப்போட்டு தேர்தல் வாக்குறுதி அளித்துள் னர். 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுகவும் cpsயை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை.. , 2011ல் cps யை ரத்து செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளிக்கவில்லை. 2011ல் அதிமுக தேர்தலுக்கு முதல் நாள் cps யை ரத்து செய்வோம் என்றனர்.
அதிமுக சொன்னபடி cps யை ரத்து செய்யவில்லை. , cps யை ரத்து செய்யக்கோரி பிப்ரவரி 2016ல் நடைப்பெற்ற வேலைநிறுத்தமே திமுக அதிமுகவும் cps யை ரத்து செய்வோம் என்று போட்டி போட்டு வாக்குறுதி அளிக்கவைத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆக போராட்டமே தீர்வு.
எதுக்கு முன்னுரிமை 
எங்கள ஏமாத்துற இருக்கட்டும். ஜனங்களுக்காவது உண்மையாக இருங்கள்.
திமுக தேர்தல் அறிக்கை பக்கம் 127 @அதிமுக தேர்தல் அறிக்கை பக்கம் 26 ல் பேருந்து நிலையங்களில் இலவசமாக Wi -Fi வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். , பேருந்து நிலையங்களில் ஆண்கள் ஓண்ணுக்கு போக rs.3ம் இரண்டுக்கு போக rs.5ம் பெண்களுக்கு rs.5ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது . சிறுநீர் கழிப்பது அத்தியாவசியம் . முதலில் இலவசமாக சிறுநீர் கழிக்க வசதி ஏற்பாடு செய்யவும். பின்னர் wi -Fi இலவசமாக கொடுங்கள் . தில்லி மாநகர் முழுவதும் சுத்தமான இலவச கழிப்பறை உள்ளது.சென்னை கோயம்பேட்டில் இலவச கழிப்பறை உள்ளது. முதலில் தேவை இலவச கழிப்பறை வசதி பின்னர் Wi Fi வரட்டும்.
article from-theekkathir.in-(2016/05/12)

No comments:

Post a Comment

Ads Inside Post