Monday 16 May 2016

இரயில் பெட்டிகளில் சோலார் பேனல்களை பொருத்தி சோதனை செய்ய திட்டம்

இந்திய ரயில்வே சூரிய சக்தியின் மூலம் இயங்க்க்கூடிய ரயிலை முதல்முறையாக சோதனைக்கு உட்படுத்தவுள்ளது.வடமேற்கு ரயில்வேயின் பி.ஆர். கோபால் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், சூரிய சக்தியின் மூலம் இயங்கக்கூடிய ரயிலின் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் செயல்படுத்த உள்ளது. இது ஒரு பயணிகள் ரயிலாக செயல்படும் என்றும் சோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் இது செல்லும் பாதை குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். இந்த மாற்று சக்தி பயன்பாடு ரயில்வே துறையின் ஒரு முன்னெடுப்பாகும் என்றும் இந்த ரயில் முழுவதுமே சோலார் பேணல்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இது குறித்து சர்மா மேலும் கூறுகையில், திட்டங்களின் படி இந்த ரயில்கள் வழக்கமான டீசல் என்ஜின்கள் மூலம் இயக்கப்படும், ஆனால் ரயிலின் உள்ளே பயன்படுத்தக்கூடிய மின்சாரத் தேவைகளான லைட்,ஃபேன் மற்றும் ஏசி போன்ற உபகரணங்களுக்கு சோலார் பேணல்கள் மூலம் சூரிய சக்தி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனுடைய லாபம் குறித்து கேள்விகளுக்கு, சோதனை ஓட்டம் முடிவடைந்த பின்னரே அது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

இந்திய ரயில்வேயின் முதல் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ரயில் இராஜஸ்தானின் ஜோத்பூரில் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.பயணிகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்விற்கு பின் சில தினங்களில் வெள்ளோட்டம் துவங்கப்படும்.இந்த பயணிகள் ரயிலின் பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தற்போது 50 பெட்டிகள்(Diesel Electric Multiple Unit – DEMU Coaches) வரை தயார் நிலையில் உள்ளன.ஒவ்வொரு பெட்டியின் மேற்கூரையிலும் 12 சூரிய ஒளி தகடுகள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேனலும் 300 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வல்லது.மொத்தம் 3.6 கிலோவாட் அதிகபட்சமாக உற்பத்தி செய்யலாம்.இதன் மூலம் ரயிலில் உள்ள விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கு தேவையான 1.6 கிலோவாட்டை சுலபமாக வழங்கலாம்.
சோலார் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 90,800 லிட்டர் டீசல் மிச்சம் பிடிக்கப்படும்.இதனால் 239 டன் அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடின் உற்பத்தி தவிர்க்கப்படும் வாய்ப்புள்ளது.சூரிய சக்தி மூலம் இயங்கும் திட்டம் நாட்டில் உள்ள அனைத்து ரெயில்களிலும் அமல்படுத்தப்பட்டால் சுமார் 450 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்படும்.சுமார் 11 கோடி லிட்டர் டீசல் பயன்பாடும் தவிர்க்கப்படும்.ஒரு பெட்டி மூலம் ஆண்டுக்கு 7200 யூனிட்டுக்கு அதிகமான மின்சாரம் சேமிக்கவும் சாத்தியம் உள்ளது.


இதற்கு முன் 2015-ல் சில இரயில் பெட்டிகளில் சோலார் பேனல்களை பொருத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.விரைவில் இத்திட்டம் மற்ற முக்கிய இரயில் நிலையங்களில் அமல் படுத்தப்பட உள்ளது.இதன் தயாரிப்பு நிறுவமானJakson Engineers Limited (JL) ஏற்கனவே 30 DEMU பெட்டிகளுக்கான சோலார் பேனல்களை சென்னைக்கும் 50 அமிர்த்சரசிற்கும் அனுப்பியுள்ளது.
ரயில்வேயின் 2016-17 வருடத்திற்கான பட்ஜெட் தாக்கலில் 5 வருடத்தில் மாற்று சக்தி மூலமாக 1000 மெகாவாட் உற்பத்தி செய்யபட்டும் என் குறிப்பிடபட்டிருந்தது.அதற்கான பணிகளும் செவ்வனே நடந்துக் கொண்டிருக்கிறது.இரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு வருகிறது, மேலும் லெவல் கிராசிங்கிலும் சோலார் பேனல்கள் பயபடுத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்கு முன்னரே இந்திய ரயில்வே துறையினர் மாற்று எரிசக்திகளான சி.என்.ஜி(அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), பயோ டீசல், மற்றும் மற்ற இயற்கை எரிவாயுக்களில் கவனம் செலுத்தி வருகிறது.ஆய்வுகளின் படி சூரிய சக்தியை ரயிலில் பயன்படுத்துவதன் மூலம் ஒரு வருடத்திற்கு டீசல்  செலவுகளில் 90,000 லிட்டர் குறைக்கலாம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளிப்பாடுகளில் 200 டன்கள் அளவிற்கு கட்டுப்படுத்தலாம். சி.என்.ஜி தில்லி பகுதியில் இருக்கும் ரோடக்-ரேவாரி செல்லக்கூடிய உள்ளூர் ரயில்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.சி.என்.ஜி மற்றும் டீசல் உள்ளிட்ட இரட்டை எரிபொருள் பயன்பாடு, எரிபொருள் மற்றும் பணத்தையும் சேமிக்கிறது. இந்த சூரிய சக்தி பயன்பாடு செலவுகளையும் குறைக்கிறது.

No comments:

Post a Comment

Ads Inside Post