ஜி.எஸ்.எல்.வி (G.S.L.V)
இப்போது
நாம் தயாரித்துவரும் எடை மிக்க செயற்கைக்கோள்கள் அனைத்தும் தென் அமெரிக்காவில்
பிரெஞ்சு கயானாவில் உள்ள கூரூ விண்வெளிக் கேந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு,
ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்பட்டு
வருகின்றன. இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்தியாவின் அவ்வகை செயற்கைக்கோள்களை
கூரூவுக்கு எடுத்துச் செல்லும் செலவு, உயரே செலுத்தித் தருவதற்கு நாம் அளிக்கும்
கட்டணம் ஆகிய வகையில் செலவு அதிகம். ஆகவே, சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கும்
திட்டத்தில் இந்தியா ஈடுபட்டது.
பி.எஸ்.எல்.வி.
- ஜி.எஸ்.எல்.வி.என்ன வேறுபாடு?
உள்ளபடி
நம்மிடம் இரண்டு வகை ராக்கெட்டுகள் உள்ளன. ஒன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட். இது
பொதுவில் சுமார் 400 அல்லது 600 கி.மீ. உயரத்தில் இரண்டு டன்னுக்கும் குறைவான
செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் திறன்கொண்டது.
1993-ல்
தொடங்கி இதுவரை ஒரே ஒரு தோல்வியை மட்டுமே கண்டுள்ளது. 24 தடவை வெற்றி கண்டுள்ளது.
வெற்றி மேல் வெற்றியைக் குவித்துள்ள இந்த வகை ராக்கெட் மிக நம்பகமானது என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான், சில வெளி நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை
இந்த ராக்கெட் மூலம் செலுத்தச் செய்துள்ளன. இதன் திறன் இரண்டு டன் என்றாலும்,
இதுவரை அதிகபட்சமாக 1,850 கிலோ கிராம்வரைதான் இது சுமந்து சென்றிருக்கிறது.
ஆனால்,
இந்தியா சிறியசெயற்கைக்கோள்களை மட்டுமின்றி எடை மிக்க செயற்கைக்கோள்களையும்
தயாரித்துவருகிறது. இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள். எடை அதிகம் கொண்டவை.
உதாரணமாக, இந்தியா தயாரித்த ஜிசாட் -8 செயற்கைக்கோளின் எடை மூன்று டன். இவை
பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்தில் இருக்க
வேண்டியவை. இந்தவகை செயற்கைக்கோள்களை அந்த அளவு உயரத்துக்குக் கொண்டுசெல்ல
இந்தியாவிடம் இப்போதைக்கு சக்திமிக்க ராக்கெட் கிடையாது. ஆகவேதான்
ஜி.எஸ்.எல்.வி-யை நோக்கி நாம் கவனம் செலுத்துகிறோம்.
கிரையோஜெனிக் இன்ஜின் தரும் சாதகம்:
பி.எஸ்.எல்.வி.
ராக்கெட்டையே பெரிய அளவில் செய்தால் அது சக்திமிக்கதாகிவிடாதா என்று கேட்கலாம்.
அது சாத்தியமானதல்ல. ஒரு ராக்கெட்டில் அதிக உந்து திறனை அளிக்கின்ற இன்ஜினைப்
பொருத்தினால்தான் அது அதிக சக்தி பெறும். அந்த வகை இன்ஜின் கிரையோஜெனிக் இன்ஜின்
எனப்படுகிறது.
தண்ணீரை
ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ - ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய
முடியும். அதுதான்
கிரையோஜெனிக் ராக்கெட். என்ன
ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை வேண்டாம் மேலும் படியுங்கள்,
நீரை
ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப்
பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக்
ராக்கெட். இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல்
15-ம் தேதி புறப்பட்டு தடம் மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன்
வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது.
அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில்
பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை
எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட்
எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது
என்ன
பிரச்னைகள் அப்படி நம் வீட்டில் சமையல் காஸ் இருக்கிறது. அடுப்பைப் பற்ற வைத்ததும்
காஸ் (வாயு) எரிகிறது. ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல. நல்ல
அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில்
அடைத்திருக்கிறார்கள் ஆனால்,. வாயு வடிவில் நமக்கு சிலிண்டர் அவருவதாக இருந்தால்
வீடு கொள்ளாத அளவுக்குபெரிய சிலிண்டர் தேவைப்படும்
சமையல்
காஸ் போலவே ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி ஹைட்ரஜனைத்
ஒரு டாங்கிலும் ஆக்சிஜன் ஒரு டாங்கிலும் அடைத்து ராக்கெட் எஞ்சினில் இரு
வாயுக்களையும் சேர வைத்து எரியும்படி செய்யலாம். ஆனால் ஆக்சிஜன் வாயுவை வெறும்
அழுத்தத்தைப் பிரயோகித்துத் திரவமாக்க அங்கு மைனஸ் 183 செல்சியஸ் குளிர்வித்தால்
தான் அது திரவ நிலையை அடையும் அது போலவே ஹைட்ரஜன் வாயுவையும் மைனஸ் 253 செல்சியஸ்
குளிர் படுத்த வேண்டும்
ராக்கெட்டுக்குள்
கடும் குளிர்விப்பு நிலையில் திரவ வடிவில் உள்ள ஆக்சிஜனும் ஹைட்ரஜனும்
ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்ததும் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரியும்.
அப்போது 3,000 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் வெப்பம் தோன்றும். ஆகவே, இந்த
வெப்பத்தைத் தாங்கி நிற்க ராக்கெட் எஞ்சின் பகுதியும் விசேஷ கலப்பு உலோகத்தால்
தயாரிக்கப்படுகிறது
ஆக்சிஜன்,
ஹைட்ரஜன் வாயுக்களை நமக்குத் தெரியும். இந்த இரு வாயுக்களையும் தனித்தனியே
திரவமாக்கி, அந்த இரண்டும் சேர்ந்து எரியும்படி செய்தால் அது அதிக உந்து திறனை
அளிக்கும். ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 223 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது
திரவமாகிவிடும். ஹைட்ரஜன் வாயுவை இதேபோல மைனஸ் 253 டிகிரி அளவுக்குக்
குளிர்வித்தால் அது திரவமாகிவிடும். இந்த வாயுக்களை இவ்விதம் குளிர்விப்பது பெரிய
பிரச்சினை அல்ல. கடும் குளிர் நிலையில் இருக்கிற இந்த திரவங்களைப் பயன்படுத்தும்
ராக்கெட் இன்ஜினை உருவாக்குவதில்தான் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த இரண்டையும்
பயன்படுத்துகிற ராக்கெட் இன்ஜின் கிரையோஜெனிக் (கடும் குளிர்விப்பு நிலை) ராக்கெட்
இன்ஜின் எனப்படுகிறது.
ராக்கெட்
என்பது ஒன்றின்மீது ஒன்று பொருத்தப்பட்ட மூன்று அடுக்கு ராக்கெட்டாக அல்லது இரண்டு
அடுக்கு ராக்கெட்டாக இருக்கும். ராக்கெட்டின் முனையில் இடம்பெறும் அடுக்கானது
இவ்விதம் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டதாக இருக்கும்.
உலகில்
நான்கு டன் அல்லது ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்தும் சக்திமிக்க
ராக்கெட்டுகள் அனைத்திலும் கிரையோஜெனிக் இன்ஜின்களே பயன்படுத்தப்படுகின்றன.
இந்தவகை இன்ஜின்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தைக் காசு கொடுத்து
ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா 1990-களில் முயன்றது. ஆனால் அமெரிக்கா
குறுக்கிட்டு, ரஷ்யாவிடமிருந்து இத்தொழில்நுட்பம் கிடைக்காதபடி தடுத்துவிட்டது.
இந்நிலையில்,
இந்தியா கடந்த பல ஆண்டுகளாகப் பாடுபட்டு சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின்களை
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. இவ்வித
இன்ஜின்கள்குறித்து ஆராய்ச்சி நடத்தவும் மற்றும் இவற்றைச் செயல்படுத்தி
சோதிப்பதற்காகவும் ஒரு கேந்திரம் தமிழகத்தில் மகேந்திரகிரி என்னுமிடத்தில் உள்ளது.
கிரையோஜெனிக்
இன்ஜின்களை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. ராக்கெட் இன்ஜினில் இந்த இரு
திரவங்களையும் தனித்தனித் தொட்டிகளில் அதே குளிர் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கொஞ்சம் விட்டால் இரண்டும் ஆவியாகிவிடும். ஆகவே, ராக்கெட் கிளம்புவதற்குச் சற்று
முன்னர்
தான் இந்த
இரு திரவங்களையும் நிரப்புவர். ராக்கெட் கிளம்புவதற்குள் எப்படியும் கொஞ்சம்
ஆவியாகிவிடும் என்பதால், சற்று அதிகமாகவே நிரப்புவர். இந்த இரு
தொட்டிகளிலிருந்தும் திரவ ஆக்சிஜனும் திரவ ஹைட்ரஜனும் குறிப்பிட்ட விகிதத்தில்
இன்ஜின் அறைக்கு வர வேண்டும். தொட்டிகளிலிருந்து இன்ஜின் அறைக்கு இவற்றைச்
செலுத்துவதற்கான பம்புகள், வால்வுகள், மோட்டார்கள் ஆகியவை கடும் குளிர் நிலையைத்
தாங்கும் திறன்கொண்ட விசேஷ உலோகங்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். கடும்
குளிர்நிலையில் சாதாரண உலோகங்கள் பொடிப் பொடியாகிவிடும் அல்லது
உருக்குலைந்துவிடும்.
இன்ஜின்
அறையில் இரண்டும் கலந்துஎரியும்போது பயங்கர வெப்பம் தோன்றும்.அந்த வெப்பத்தினால்
இன்ஜின் அறையின்உலோகத்தால் ஆன சுவர்கள் உருகிவிடக்கூடாது. இப்படிப் பல
பிரச்சினைகள். இவற்றையெல்லாம் சமாளித்து இந்தியா உருவாக்கிய கிரையோஜெனிக்
இன்ஜினைத் தரையில் நிலையாக வைத்து நடத்திய பரிசோதனைகளில் பல தடவை வெற்றி
காணப்பட்டுள்ளது.
எடைமிக்க
செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்குப் பொதுவில் மூன்றடுக்கு ராக்கெட்
பயன்படுத்தப்படும். சில நாடுகள் இரண்டு அடுக்கு ராக்கெட்டுகளைப்
பயன்படுத்துகின்றன. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூன்று அடுக்கு ராக்கெட்
ஆகும்.
இதில்
மூன்றாவது அடுக்கில் பொருத்துவதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின்
உருவாக்கப்பட்டது.முந்தைய அனுபவங்கள் இந்தியா சொந்தமாகத் தயாரித்த கிரையோஜெனிக்
இன்ஜினை (மூன்றாவது அடுக்கில்) பொருத்தி 2010-ம் ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி.
ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டின்
முகப்பில் 2,220 கிலோ எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த ராக்கெட் தோல்வியில் முடிந்தது. மூன்றாவது அடுக்கிலான கிரையோஜெனிக்
இன்ஜின் செயல்படாமல் போனதே தோல்விக்குக் காரணம்.
இதன்
பிறகு, அதே ஆண்டு டிசம்பரில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே செலுத்தப்பட்டது.
அப்போது வேறு காரணங்களால் அது திசை மாறியபோது, கடலுக்கு மேலாக நடு வானில்
அழிக்கப்பட்டது. பிறகு, 2013 ஆகஸ்டில் மறுபடி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைச் செலுத்த
எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ராக்கெட்டை உயரே செலுத்துவதற்கு சுமார் ஒரு மணி
நேரம் இருந்த சமயத்தில், ராக்கெட்டிலிருந்து ஏதோ ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு
ராக்கெட்டைச் செலுத்துவது ரத்துசெய்யப்பட்டது.
இப்படியான
பின்னணியில்தான் வருகிற 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி இந்திய நேரப்படி
மாலை 04:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
தகவல்
தொடர்பு செயற்கைக்கோள்களை ஏன் 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த
வேண்டும் என்று கேட்கலாம்.பல வீடுகளில் மாடியில் டி.வி. நிகழ்ச்சிகளைப் பெறுவதற்காகக்
கிண்ண வடிவ ஆன்டெனா பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை
தென்கிழக்கு அல்லது
தென்மேற்கு
திசையை நோக்கி அமைந்திருக்கும். இந்த ஆன்டெனா ஒன்றின் மையத்திலிருந்து அது நோக்கி
இருக்கும் திசையை நோக்கிக் கற்பனையாகக் கோடு கிழித்தால், அது உயரே இருக்கின்ற ஒரு
செயற்கைக்கோளில் போய் முடியும்.
அந்தக்
குறிப்பிட்ட செயற்கைக்கோளிலிருந்துதான் அந்த ஆன்டெனா சிக்னல்களைப் பெறுகிறது.
சிக்னல்கள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்பவை. ஆகவே, ஆன்டெனாவும் செயற்கைக்கோளும்
எப்போதும் ஒன்றை ஒன்று பார்த்தபடியே இருந்தாக வேண்டும். ஆணியடித்து நிறுவப்பட்ட
ஆன்டெனா போலவே வானில் அந்த செயற்கைக்கோளும் ஒரே இடத்தில் நிலையாக இருக்க வேண்டும்.
ஆனால், எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். நிலையாக
இருக்க முடியாது. ஆனால், அது நிலையாக இருப்பது போன்று செய்ய முடியும்.
பூமி
தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள ஒருநாள் ஆகிறது. சரியாகச் சொன்னால், 23 மணி 56
நிமிஷம் 4 வினாடி ஆகிறது. ஆகவே, பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இருக்கின்ற ஒரு
செயற்கைகோள் ஒன்று பூமியைச் சுற்ற மிகச்சரியாக அதே நேரத்தை எடுத்துக்கொண்டால், அது
பூமியைச் சுற்றவும் செய்யும்; ஒரே இடத்தில் இருப்பதுபோலவும் ஆகிவிடும். அந்த
அளவில் ஒரு செயற்கைக்கோள் 35,786 கி.மீ. உயரத்தில் இருக்கும்படி செய்தால், அது
பூமியை ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக மேலே குறிப்பிட்ட நேரத்தை
எடுத்துக்கொள்ளும். இது இயற்கையின் நியதி. ஆகவேதான் தகவல் தொடர்பு
செயற்கைக்கோள்கள் அந்த அளவு உயரத்துக்குச் செலுத்தப்படுகின்றன.
பி.எஸ்.எல்.வி.
ராக்கெட் மூலம் ஜிசாட்-14 போன்ற செயற்கைக்கோள்களை 35 ஆயிரம் கிலோ மீட்டர்
உயரத்துக்குச் செலுத்த முடியாதா என்று கேட்கலாம். ஏற்கெனவே கூறியபடி அதன்
திறன்
சுமாரானது. மேலும், அதிக உயரத்துக்கு அது செல்ல வேண்டுமானால், அது ஏற்றிச்
செல்லும் சுமையைக் குறைத்தாக வேண்டும்.
ஏன் முடியாது?
“பி.எஸ்.எல்.வி.
ராக்கெட் மூலம் 2008-ல் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பினோமே, அதே
ராக்கெட் மூலம் அண்மையில் செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பி சாதனை புரிந்தோமே?”
என்றும் கேட்கலாம். இந்த இரண்டுமே 1,400 கிலோ கிராம் எடைக்குக் குறைவு. இந்த
இரண்டையும் பி.எஸ்எல்.வி. ராக்கெட் சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டு
சென்று, பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றும்படி செய்தது. இது அந்த ராக்கெட்டின்
திறனுக்கு உட்பட்டதே.
இவை உயரே
சென்ற பின்னர், விசேஷ உத்திகளைப் பின்பற்றி - இயற்கையின் சக்தியைப் பயன்படுத்தி -
சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பிவைத்தோம். வேறுவிதமாகச் சொன்னால்,
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டானது அவற்றை நேரடியாகச் சந்திரனுக்கோ செவ்வாய்க்கோ
அனுப்பிவிடவில்லை. சக்திமிக்க ராக்கெட் அப்போது நம்மிடம் இருந்திருக்குமானால்,
அவற்றை நேரடியாகவே சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பியிருக்க
முடியும்.எனினும், சுமாரான திறன்கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்தி விசேஷ உத்திகளைக்
கையாண்டு நாம் சாதனை படைத்தோம் என்பது பெருமைக்குரிய விஷயமே.
ஒரு
ராக்கெட் அதிகத் திறன் கொண்டதாக இருந்தால்தான் அது அதிக உயரத்துக்குச் செல்லும்.
அதிக வேகத்துடன் பாயும். அத்துடன் அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாகச்
செலுத்தும்.
இப்போது
செலுத்தப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி. (மார்க் 2) ராக்கெட்கூட நமக்குப் போதாது.
ஆகவேதான் இதைவிட இன்னும் திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட்
உருவாக்கப்பட்டது.
ஜி. எஸ்.
எல். வி MK III ஒரு
செயற்கைக்கோள் ஏவுகணை.
செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத விண்கலமாகும். இது ஜி. எஸ். எல். வி ஏவுகணை கடிலும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை
அகும்.
இது
விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்வதாக இருக்கலாம். இந்தராக்கெட்
18 டிசம்பர் 2014 அன்று விண்ணில்செலுத்தி சோதிக்கப்படஇருக்கிறது.
இதன்எடை
630 டன்> இதனை ஒரு ராக்கெட் என்று சொன்னாலும் உண்மையில் இது நான்கு
ராக்கெட்டுகளின்தொகுப்பு.
இது சுமார்
ஒன்றரை டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியது. ஜி.எஸ்.எ.ல்.வி. மார்க் 3 ராக்கெட்
வெற்றி பெற்றால் பெரிய செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தேசெலுத்த
முடியும். எதிர்காலத்தில் இந்த ராக்கெட் மூலம் இந்தியவிண்வெளி வீரர்களையும்
விண்வெளிக்கு அனுப்ப முடியும்
இது
இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன்
எடைகொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்டது.
நமக்கு இப்போது அந்த அளவு எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே
செலுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது.
தகவல்
தொடர்பு செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகின்றன.
முதலாவதாக, நாம் டி.வி-யில் பார்க்கிற நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள் மூலமாகத்தான்
நம்மை வந்தடைகின்றன. பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். ஆனால், இவ்வித
செயற்கைக்கோள்கள் மேலும் பல பணிகளைச் செய்கின்றன. பங்குச்சந்தை வர்த்தகம் இவை
மூலம்தான் நடைபெறுகின்றன. பல தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்புப் பணிகள்
இவற்றின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. ஒரு மருத்துவமனையில் நடக்கின்ற அபூர்வமான அறுவைசிகிச்சையை
வேறு மருத்துவமனைகளில் நேரடியாகக் காண உதவுகின்றன. கல்வித் துறையிலும் இவற்றின்
பங்கு உள்ளது. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இல்லாவிடில், நாட்டில் பல முக்கியப்
பணிகள் ஸ்தம்பித்துவிடும் என்ற நிலை உள்ளது.
நாட்டில்
தகவல் தொடர்புத் தேவைகள் அதிகரித்துவருகின்றன. பொருளாதார நடவடிக்கைகள்
அதிகரித்துவருகின்றன. ஆகவேதான் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் இவ்வித
செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்படுகின்றன. இப்போது பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே
இந்தியாவைப் பார்த்த மாதிரியில் நம் தலைக்குமேலே 35 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில்
13 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டுவருகின்றன. ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்தான் அதிக
எண்ணிக்கையில் உள்ளன. ஆனாலும் இது போதவில்லை.
இதில்
இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுள்
சுமார் 12 ஆண்டுகள். ஆகவே, ஏற்கெனவே உயரே உள்ள ஒரு செயற்கைக்கோளின் ஆயுள்
முடிந்துவிட்டால், அந்த இடத்தை நிரப்பப் புதிதாக ஒன்றைக் காலாகாலத்தில்
செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, நாட்டில் புதிது புதிதாக டி.வி. சேனல்கள்
தோன்றிவருகின்றன. அத்துடன் கிண்ண வடிவ ஆன்டெனாக்கள் மூலம் டி.வி. சேனல்களை
அளிக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன. இவை தகவல் தொடர்பு
செயற்கைக்கோள்களில் தங்களுக்கு மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்க வேண்டும் என்று
வற்புறுத்திவருகின்றன. வேறு தரப்பினரும் இவ்விதம் கோருகின்றனர்.
தகவல் தொடர்பு
செயற்கைகோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர் என்னும் கருவிகளே கீழிருந்து டி.வி.
நிறுவனங்கள் போன்றவை அனுப்பும் சிக்னல்களைப் பெற்று, அவை இந்தியா முழுவதிலும்
கிடைக்கும்படி செய்கின்றன.
இப்பிரச்சினையைச்
சமாளிக்கும் நோக்கில்தான் இஸ்ரோ நிறுவனம் மேலும் அதிகஎடைகொண்ட, மேலும் அதிக
டிரான்ஸ்பாண்டர்களைக்கொண்ட செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.
உதாரணமாக, 1995-ல் செலுத்தப்பட்ட இன்சாட்-2 சிசெயற்கைக்கோளின் எடை 2,106 கிலோ
கிராம். 2003-ல் செலுத்தப்பட்ட 3 ஏ செயற்கைக்கோளின் எடை 2,950 கிலோ கிராம்.
இத்துடன் ஒப்பிட்டால் 2012-ல் செலுத்தப்பட்ட ஜிசாட் -10 செயற்கைக்கோளின் எடை 3,455
கிலோ கிராம். இவற்றில் இடம்பெற்ற டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக
அதிகரித்துவந்துள்ளது. இன்சாட் 2 சி செயற்கைக்கோளில் 20 டிரான்பாண்டர்களே இடம்
பெற்றிருந்தன. ஆனால், ஜிசாட்- 10 செயற்கைக்கோளில் 30 டிரான்ஸ்பாண்டர்கள்
இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும் ஏரியான் ராக்கெட் மூலமே செலுத்தப்பட்டவை.
அடுத்த சில
ஆண்டுகளில் செலுத்தப்பட இருக்கும் ஜிசாட்-11 செயற்கைக்கோள் நாலரை டன்
எடைகொண்டதாகவும் 40 டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டதாகவும் விளங்கும். ஒருவேளை இது இந்தியாவின்
ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படலாம்.
எடைமிக்க செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திறன் இஸ்ரோவிடம் உள்ளது.
அன்றுமுதல்
இன்றுவரை இது விஷயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சுமார் 40 ஆண்டுகளுக்கு
முன்னர் நிறுவப்பட்ட இஸ்ரோ, ஆரம்பம் முதல் ஒரு தெளிவான கொள்கையைப் பின்பற்றி
வந்துள்ளது. அதாவது, செயற்கைக்கோள் தயாரிப்பையும் ராக்கெட்டுகளை உருவாக்குவதையும்
ஒன்றோடு
ஒன்று முடிச்சுப்போட்டுக்கொள்ளவில்லை. சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கிய
பின்னரே, பெரிய செயற்கைக்கோள்களைத் தயாரிப்பது என்ற கொள்கையைப் பின்பற்றவில்லை.
இஸ்ரோ உருவாக்கிய ஆர்யபட்டா என்னும் முதல் செயற்கைக்கோளின் எடை 360 கிலோ கிராம்.
அதைச் செலுத்த அப்போது இந்தியாவிடம் ராக்கெட் கிடையாது. 1975-ல் ஆர்யபட்டா
ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது.
அதற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து 1980-ம் ஆண்டில் இந்தியா உருவாக்கிய எஸ்.எல்.வி.
என்னும் எளிய ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரோகிணி செயற்கைக்கோளின் எடை 30 கிலோ
கிராம்.
இதன் முதலிரு பயணங்கள், 18 ஏப்ரல்
2001 அன்று ஜிசாட்-1 செலுத்தப்படுவதற்கும் 8 மே 2003 அன்று ஜிசாட்-2
செலுத்தப்படுவதற்கும், பயன்பட்டன; இவையிரண்டுமே மேம்பாட்டுப் பயணங்கள் தாம். முதல்
பயன்தரத்தக்க பயணம் 20 செப்டம்பர் 2004 அன்று ஜீயெசெல்வி எப்01 - ஆல்
மேற்கொள்ளப்பட்டு எடியுசாட் தொடர்புத் துணைக்கோளை புவியிசைவு சுற்றுப்பாதையில்
செலுத்தியது. அனைத்து
ஜி.எஸ்.எல்.வி பயணங்களும் சிறீஅரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி
மையத்தில் இருந்து ஏவப்பட்டன.
பயணம்
|
வகை
|
ஏவு நாள்/காலம் (UTC)
|
ஏவுதளம்
|
தள்ளுசுமை
|
தள்ளுசுமை நிறை
|
குறிப்புகள்
|
|
D1
|
GSLV
Mk.I(a)
|
18 ஏப்ரல் 2001
10:13 |
முதல் தளம்
|
GSAT-1
|
1,540 கிகி
|
தோல்வி. இது ஒரு மேம்பாட்டுப் பயணம், மேல் பகுதி முழுமையாக செயல்படாததால் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை விடவும் குறைவான உயரத்தில் தள்ளுசுமை செலுத்தப்பட்டது.
|
|
D2
|
GSLV Mk.I(a)
|
8 மே 2003
11:28 |
முதல் தளம்
|
GSAT-2
|
1,825 கிகி
|
வெற்றி. இதுவும் ஒரு மேம்பாட்டுப் பயணம்
|
|
F01
|
GSLV Mk.I(b)
|
20 செப்டம்பர் 2004
10:31 |
முதல் தளம்
|
EDUSAT
|
1,950 கிகி
|
வெற்றி. இதுவே முதல் செயல்பாட்டுப் பயணம்
|
|
F02
|
GSLV Mk.I(b)
|
10 சூலை 2006
12:08 |
இரண்டாவது தளம்
|
INSAT-4C
|
2,168 kg
|
தோல்வி. விரிசின் பாதை திசைமாறியதால் ஊர்தி, துணைக்கோள் இரண்டுமே அழிக்கப்பட்டன
|
|
F04
|
GSLV Mk.I(b)
|
2 செப்டம்பர் 2007
12:51 |
இரண்டாவது தளம்
|
2,160 கிகி
|
முழுமையான வெற்றியல்ல. விரிசின் குறை-செயல்பாட்டினால் புவிநெடுந்தொலைவு குறைவாகவும் சாய்வு அதிகமாகவும் ஆகின. இருப்பினும் தள்ளுசுமை நிர்ணயிக்கப்பட்ட புவிநிலை இடைப்பாதையில் நிறுத்தப்பட்டது.
|
||
D3
|
GSLV Mk.II
|
15 ஏப்ரல் 2010
12:57 |
இரண்டாவது தளம்
|
GSAT-4
|
2,220 கிகி
|
தோல்வி.
|
|
F06
|
GSLV Mk.I
|
25 திசம்பர் 2010
10:34 |
இரண்டாவது
|
2,130 கிகி
|
தோல்வி காரணம் ஆய்வில் உள்ளது.
|
||
திட்டத்திலுள்ள ஏவுதல்கள்
|
|||||||
F05
|
GSLV Mk.I]
|
2011
|
GSAT-6
|
||||
D5
|
Mk.II
|
2014(05.01.2014)4:18 pm IST
|
இரண்டாவது தளம்
|
GSAT-14
|
1,980 கிகி
|
வெற்றி.
|
சாதனை
ஜி.எஸ்.எல்.வி., - டி(G.S.L.V-D5)
ஜி.எஸ்.எல்.வி., - டி5 செலுத்து
வாகனம் நீண்ட
முயற்சிக்குப் பின்னர் இந்திய விஞ்ஞானிகள் 05.01.2014 அன்று வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தி சாதனை படைத்துள்ளார்கள். இதன் மூலம் உலக நாடுகளில் கிரயோஜெனிக் தொழில்நுட்பம் கொண்டு செயற்கைக் கோள்களை ஏவும் நாடுகளில் இந்தியா 6 வது
இடத்தில் உள்ளது. இந்த செலுத்து வாகனம் 3 நிலைகளைக்கொண்ட இது, 1982 கிலோ எடைகொண்ட
14 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றது. இதன் திட்ட மதிப்பு 350 கோடி ஆகும். 20
ஆண்டுகள் ஆய்வில் 2 கட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்தியா சாதனை புரிந்தது
ஜி.எஸ்.எல்.வி – டி6
(G.S.L.V-D6)
விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்தில்
இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து
வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)
தகவல் தொடர்பு மேம்பாட்டுக்கான ‘ஜி
சாட்–6’
செயற்கைகோளை சுமந்தப்படி ‘ஜி.எஸ்.எல்.வி’ – டி6 ராக்கெட்
சென்னையை அடுத்த
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து
‘ஜி.எஸ்.எல்.வி – டி6‘ ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.
இதற்கான இறுதிக் கட்ட ஆயத்த பணிகள் எனப்படும் 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’
26/08//2015 காலை 11.52 மணிக்கு தொடங்கியது.
திட்டமிட்டபடி, 27/08/2015 மாலை 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2–வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்
ஏவப்பட்டது. 2,117 கிலோ எடை கொண்ட ஜி சாட்–6 செயற்கைகோளை சுமந்து கொண்டு
ஜி.எஸ்.எல்.வி – டி6 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது.வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது தகவல் தொடர்பு மேம்பாட்டுக்காகவும், காலநிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்காகவும் ‘ஜி சாட்–6‘ என்ற செயற்கைகோளை இந்திய
விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள்.
இந்த செயற்கை கோளை, ராக்கெட்டின் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தபட்டு இருந்த ‘கிரையோஜெனிக்’ என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட
உயரத்துக்கு கொண்டுசென்று புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.
அதாவது, ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 17 நிமிடம் 4 வினாடிகளில்,
பூமியில் இருந்து 214.35 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதும், ராக்கெட்டில் இருந்து
செயற்கை கோள் வெற்றிகரமாக பிரிந்தது. அந்த உயரத்தில் செயற்கை கோள் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 214.35
கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 925 கிலோ மீட்டர் தொலைவிலும்
செயற்கை கோள் பூமியை சுற்றி வருகிறது.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் இந்தியாவின் 9–வது ‘ஜி.எஸ்.எல்.வி’. ராக்கெட் ஆகும். இதில் அனுப்பப்பட்ட 2
ஆயிரத்து 117 கிலோ கிராம் எடை கொண்ட ‘ஜி சாட்–6‘, செயற்கைகோள் வரிசையில் 12–வது செயற்கைகோள் ஆகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்‘
என்ஜின் உதவியுடன் ராக்கெட் செலுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு
ஜனவரி 5–ந் தேதி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின்
பொருத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்போது
மீண்டும் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
ஜி சாட்–6 செயற்கைகோளில் ‘எஸ்.பேண்ட்’ (S-BAND)தொலைத்தொடர்பு வசதிக்காக இஸ்ரோ புதிதாக 6
மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ
தயாரித்த ஆன்டெனாக்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் போன்ற
மிகச்சிறிய மின்னணு சாதனங்களிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும்
முழுமையாக பெற்று தரும் வசதியை இந்த ‘ஆன்டெனா’ ஏற்படுத்தி தரும். மேலும்
தகவல்தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இது
பேருதவியாக இருக்கும். இது இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையாகும்.
ஜி.எஸ்.எல்.வி., - டி(G.S.L.V-D5)
ஜி.எஸ்.எல்.வி., - டி5 செலுத்து வாகனம் நீண்ட முயற்சிக்குப் பின்னர் இந்திய விஞ்ஞானிகள் 05.01.2014 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளார்கள். இதன் மூலம் உலக நாடுகளில் கிரயோஜெனிக் தொழில்நுட்பம் கொண்டு செயற்கைக் கோள்களை ஏவும் நாடுகளில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது. இந்த செலுத்து வாகனம் 3 நிலைகளைக்கொண்ட இது, 1982 கிலோ எடைகொண்ட 14 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றது. இதன் திட்ட மதிப்பு 350 கோடி ஆகும். 20 ஆண்டுகள் ஆய்வில் 2 கட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்தியா சாதனை புரிந்தது
திட்டமிட்டபடி, 27/08/2015 மாலை 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2–வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 2,117 கிலோ எடை கொண்ட ஜி சாட்–6 செயற்கைகோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி – டி6 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது.வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது தகவல் தொடர்பு மேம்பாட்டுக்காகவும், காலநிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்காகவும் ‘ஜி சாட்–6‘ என்ற செயற்கைகோளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள்.
இந்த செயற்கை கோளை, ராக்கெட்டின் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தபட்டு இருந்த ‘கிரையோஜெனிக்’ என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டுசென்று புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.
அதாவது, ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 17 நிமிடம் 4 வினாடிகளில், பூமியில் இருந்து 214.35 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதும், ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள் வெற்றிகரமாக பிரிந்தது. அந்த உயரத்தில் செயற்கை கோள் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 214.35 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 925 கிலோ மீட்டர் தொலைவிலும் செயற்கை கோள் பூமியை சுற்றி வருகிறது.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் இந்தியாவின் 9–வது ‘ஜி.எஸ்.எல்.வி’. ராக்கெட் ஆகும். இதில் அனுப்பப்பட்ட 2 ஆயிரத்து 117 கிலோ கிராம் எடை கொண்ட ‘ஜி சாட்–6‘, செயற்கைகோள் வரிசையில் 12–வது செயற்கைகோள் ஆகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்‘ என்ஜின் உதவியுடன் ராக்கெட் செலுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி 5–ந் தேதி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்போது மீண்டும் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
ஜி சாட்–6 செயற்கைகோளில் ‘எஸ்.பேண்ட்’ (S-BAND)தொலைத்தொடர்பு வசதிக்காக இஸ்ரோ புதிதாக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ தயாரித்த ஆன்டெனாக்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் போன்ற மிகச்சிறிய மின்னணு சாதனங்களிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும் முழுமையாக பெற்று தரும் வசதியை இந்த ‘ஆன்டெனா’ ஏற்படுத்தி தரும். மேலும் தகவல்தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இது பேருதவியாக இருக்கும். இது இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையாகும்.
No comments:
Post a Comment