Monday, 9 May 2016

‘அக்ஷய திரிதியை’அன்று நகை வாங்கினால் நம் வீட்டில் செல்வம் பொங்கும் என்றொரு நம்பிக்கை. இது சரியானதா?



நம்மில் பலருக்குத் தெரிந்ததெல்லாம் அக்ஷய திரிதியை அன்று கடைக்குப் போய் நகை வாங்குவதுதான்
முதலில்அக்ஷய திரிதியைஎன்றால் என்னவென்று பார்ப்போமே. ‘அக்ஷயஎன்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்றொரு பொருளுண்டு. அக்ஷய பாத்திரம் தமிழிலக்கியங்களிலும் உண்டு. மணிமேகலைக்கு பசிப்பிணி போக்கும்அட்சய பாத்திரம்கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
திரிதியைஎன்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்று நாள் கழித்து வரும் நாள். ‘அக்ஷய திரிதியைஎனபது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.
வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.
இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளையுகாதிஎன்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் காதிதான். ‘மாலோடு’ ‘திருசேர்ந்து, மஹாவிஷ்ணுதிருமால்ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.
அட்ஷய திருதியை தினத்தன்றுதான் இறைவன் விஷ்ணு அக்ஷய பாத்திரத்தை திரவுபதிக்கு கொடுத்தார் என்பதால், இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் மேலும் பெருகும் என்பது சமீபகாலமாக சம்பிரதாயமாகி விட்டது

அக்ஷய திருதியை! முன்னெப்போதும் கண்டிராத முக்கியத்துவத்தை அன்மித்த சில வருடங்களாகப்பெற்றிருக்கிறது
அக்ஷய திருதியை பரபரப்பு தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் 
ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமாகவே களை கட்டிவருகிறது
கிறிஸ்மஸ் காலத்தில் சாண்டாகிளசை சிவப்பு வர்ணத்தில் 
மாற்றியமைத்த மேலைத்தேய வணிகச் சமூகத்தின் பாதிப்பாக
தமிழக்தைத் தாக்கத் தொடங்கியிருக்கும் எண்ணற்ற கலாச்சார 
மாற்றங்களின் நிகழ் காட்சியாகவே அட்சய திருதியை 
ஆர்ப்பாட்டங்களைக் காணவேண்டியுள்ளது என மாற்றுச் 
சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் கவலை 
கொள்கின்றார்கள்




WGC எனப்படும் உலக கோல்ட் கவுன்சிலும் அப்படித்தான் உணர்ந்திருக்கிறது போலும். இந்தியாவில் அக்ஷய திருதியை நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்கி கோலாகலமாக கொண்டாடுவதை அறிந்து இந்திய தபால் துறையுடன் ஒரு tie up வைத்துள்ளது. அதன்படி அக்ஷய திருதியை அன்று தங்கம் வான விரும்புவோர் அந்தந்த ஊர் தபால் அலுவலகத்தில் சுமார் இரண்டு கிராமிலிருந்து தங்க காசுகள் வாங்கிக் கொள்ளலாம்.அதுவும் சுத்தமான தங்கம்..இரண்டு கிராம் தங்க காசு வாங்கினால் 6% டிஸ்கவுன்ட். இந்த திட்டத்திற்கு அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்று .உலக தங்க கவுன்சிலின் இந்தியா ,மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய பிரிவின் மேலாண்மை இயக்குனர் கூறுகிறார்
மேலும், ''தங்க தொழில் துறைக்கான சந்தை மேம்பாட்டு அமைப்பு முதலீடு, ஆபரணம் மற்றும் தொழில நுட்பப் பிரிவுகளில் செயலாற்றுவதுடன் ..அரசுகளுடனும் தொடர்புகளில் ஈடுபட்டு தங்கத்தின் தேவையைத்தூண்டி தங்கத்தின் தலைமைத்துவ நிலையை அளிப்பதே எங்கள் நோக்கம். உலகின் முன்னணி மற்றும் மிக நவீன சிந்தனை கொண்ட, தங்கச் சுரங்க நிறுவனங்களையும் உள்ளடக்கிய, உறுப்பினர்களின் சங்கமாக செயலாற்றும் உலக தங்க கவுன்சில் u .k வைத் தலைமையிடமாக கொண்டு இந்தியா, மற்றும் தூரக் கிழக்கு நாடுகள்..ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தூய்மையான தங்கம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும், இந்த முக்கியமான தினத்தின் போது வாங்கி அணியப் 
படுகிறத் தங்கம் வற்றாத செல்வம், மற்றும் அதிஷ்டத்தைக் 
குறிக்கிறது, அதோடு தங்கம் வாங்குவது என்பது நீண்டகால முதலீட்டுக்கான யுக்திகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவேதான் நாங்கள் இந்திய தபால் துறையுடன் டை அப் வைத்துக் கொண்டோம்...இதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே !என்று கூறுகிறார்


இப்போது புரிகிறதா அட்சயதிருதியை முக்கியத்துவம் எந்தப்புள்ளியிலிருந்து தொடங்குகிறது என்று. அட்சய திருதியையில் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லன தரும், புண்ணிய காரியங்களை மக்கள் செய்து வந்தால் மங்கள் உண்டாகும் என மகான்கள் கூறி வந்த நம்பிக்கை மறக்கப்பட்டு, தங்க நகை வாங்கும் வழக்கத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இதுபோதாதா இந்த வணிகப் பெருஞ்சமூகத்துக்கு, மக்களின் மோகத்தை மேலும் தூண்டுவதைப் போல நகைக்கடை விளம்பரங்கள், அட்சய திருதியைத் தள்ளுபடி, முன்பதிவு என அல்லோலப்படுத்துகிறது.
வசதி படைத்த மக்கள் தாங்கள் விரும் தங்கத்தை வாங்க முடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால், முடிகிற காரியமா இது ?. தங்கத்தில் மட்டுமல்ல அமைதியிலும், எளிமையிலும் கூட இலக்சுமியைக் காண முடியும். நம்மை விட ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்கையில், அவர்கள் முகங்களில் காணும் புன்னகை கூட அக்ஷய திருதியைப் பலன் தரும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இல்லாதவர்க்கு உதவாத நாள் எதுவாக இருந்தால் என்ன..?


No comments:

Post a Comment

Ads Inside Post