தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் புதுப்புது வழிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்கின்றனர். இதுவரை தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் பறிமுதலான பணத்தின் மதிப்பு ரூபாய் 100 கோடியைதாண்டியுள்ளது.
இதுதேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் ஒருபெரியசாதனையாக கருதப்படுகிறது. நோட்டுக்கு ஓட்டுப் போடும் கலாச்சாரம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஆளுங்கட்சியினர் மற்றும் ஆண்ட கட்சியினர் கடந்த இரண்டுநாட்களாக தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஆதாரத்துடன் பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது.
பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு சென்னையில் மட்டும் 266 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. ஆனால் இதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. பறக்கும்படை, கண்காணிப்புக்குழு, இளைஞர் பாதுகாப்புகுழு, தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், பொது பார்வையாளர்கள், காவல்துறை பாதுகாவலர்கள், வருமானவரி அதிகாரிகள் தலைமையிலான கண்காணிப்புக் குழு என வரலாறு காணாத அளவிற்கு பெரும்படையினை தேர்தல்ஆணையம் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது.
பொதுமக்களும் தேர்தல் ஆணையத்தின் புகார்பிரிவுக்கு 24 மணிநேரமும் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை கெடுப்பிடிகளையும் தாண்டி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது போலவே நள்ளிரவு நேரங்களில் மின்வாரிய அதிகாரிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாசெய்கின்றனர். இதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையத்தினரோ, பறக்கும் படையினரோ எதுவும் செய்ய முடியவில்லை. பிறகு எதற்கு தேர்தல் ஆணையமும், பறக்கும் படையும்?
தேர்தலில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள்தானா? நம்முடைய தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழக்கலாமா? 48 ஆண்டுகால அதிமுக, திமுக ஆட்சியில் தமிழகம் கொள்ளைபோய் உள்ளது. இதைமாற்ற வேண்டுமென்றால், மாற்றம் வேண்டும்.
No comments:
Post a Comment