Thursday 12 May 2016

பிரதமர் மோடி கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் பழங்குடி இன குழந்தைகளின் இறப்பு விகிதம், சோமாலியாவை விட அதிகமாக இருப்பதாக கூறியது கேரள மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பிரதமருக்கு எதிராக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.  கேரள மக்களை பிரதமர் மோடி அவமதித்து விட்டதாக முதல்-மந்திரி உம்மன்சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் சிறிது அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், கேரளாவின் உண்மைத்தன்மைக்கு எதிராக கூறிய கருத்துகளை அவர் திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தனது முகநூலில் (பேஸ்புக்) அவர் கூறுகையில், பிரதமரின் வார்த்தைகளால் கேரள மக்களின் சுய மரியாதைக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே பிரதமர் அமைதி காக்காமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கேரள மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது நடக்காது. பிரதமர் தனது கருத்தை திரும்ப பெறுவார் என கேரளவாசிகள் இன்னும் நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த ஒப்பீட்டுக்கு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Ads Inside Post